செய்திகள்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தும் ஜிஎஸ்டி வரியை தமிழக அரசு எதிர்ப்பதா? - தமிழிசை கண்டனம்

Published On 2018-05-22 09:23 GMT   |   Update On 2018-05-22 09:41 GMT
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தும் ஜிஎஸ்டி வரியை தமிழக அரசு எதிர்ப்பதா? என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்து உள்ளார். #petrol #diesel #TamilisaiSoundararajan

ஆலந்தூர்:

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜி.எஸ்.டி.யின் கீழ் பெட்ரோல் விலையை கொண்டு வந்தால் மாநில அரசின் வருவாய் குறைந்து விடும் என்று மாநில அரசு எண்ணுகின்றது. ஜிஎஸ்டியின் கிழ் கொண்டு வரப்பட்டுள்ள அனைத்து பொருள்களிலும் மாநில அரசுக்கு வருவாய் அதிகரித்துள்ளது. எனவே பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி.ன் கீழ் கொண்டு வர மாநில அரசு அனுமதி கொடுக்க வேண்டும்.

தனது தேர்தல் அறிக்கையிலேயே தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என்று கூறிய குமாரசாமியின் பதவி ஏற்பு விழாவில் தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கருப்பு சட்டை அணிய தயாரா?

நீண்ட நாள் கோரிக்கையான காவிரி விவகாரத்தில் ஒரு நிரந்தர தீர்வு கொண்டு வந்தது மத்திய அரசு. அதை அரசியல் லாபத்திற்காக தி.மு.க., மத்திய அரசை குற்றம்சாட்டி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #petrol #diesel #TamilisaiSoundararajan

Tags:    

Similar News