செய்திகள் (Tamil News)

தீபாவளி கூட்ட நெரிசலை குறைக்க தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்

Published On 2018-11-01 13:02 GMT   |   Update On 2018-11-01 13:02 GMT
தீபாவளி கூட்ட நெரிசலை குறைக்க தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்படும் என் தெற்கு ரெயில்வே அறிவித்தது. #SouthernRailway
தீபாவளி பண்டிகை வருகிற செவ்வாய்க்கிழமை (நவம்பர் 6-ந்தேதி) கொண்டாடப்பட இருக்கிறது. திங்கட்கிழமை விடுமுறை விட்டால், சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறையாகி, மக்கள் சொந்த ஊர் சென்று தீபாவளி கொண்டாடுவார்கள் என்பதால், தமிழக அரசு திங்கட்கிழமை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது.

இதனால் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் குடும்பத்தோடு சொந்த ஊர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசு ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.

தெற்கு ரெயில்வேயும் பல்வேறு சிறப்பு சலுகைகளை அளித்துள்ளது. சிறப்பு ரெயில்களையும் இயக்குகிறது. இந்நிலையில் தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கும், நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயிலை இயக்குவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரெயில் சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு வருகிற 3-ந்தேதி மற்றும் 5-ந்தேதிகளில் காலை 9.30 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு 4-ந்தேதி மற்றும் 7-ந்தேதிகளில் காலை 7.10-க்கு புறப்படுகிறது.
Tags:    

Similar News