பொய்கை விநாயகர் கோவிலில் பாலாலய பூஜை
- சோழவந்தானில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரையை ஆண்ட பிற்கால மன்னரால் கட்டப்பட்ட பொய்கை விநாயகர் கோவில் உள்ளது.
- இந்தக் கோவில் மிகவும் சேதமடைந்து காணப்பட்டது.
சோழவந்தான்
சோழவந்தானில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரையை ஆண்ட பிற்கால மன்னரால் கட்டப்பட்ட பொய்கை விநாயகர் கோவில் உள்ளது.இந்தக் கோவில் மிகவும் சேதமடைந்து காணப்பட்டது.
பக்தர்கள் முயற்சி காரணமாக தமிழக அரசு கோவிலை புணரமைத்து திருப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தது. இதற்கான பாலாலயம் பூஜை இன்று நடந்தது. இதையொட்டி அதிகாலையில் யாகம் வளர்க்கப்பட்டு கோவை காமாட்சிபுரி ஆதீனம் சக்தி பீடம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் முன்னிலையில் புனித நீர் குடங்கள் எடுத்து மகா அபிஷேகம் நடைபெற்று பாலாலயம் பூஜை நடைபெற்றது.
இவ்விழாவில் பேரூராட்சி சேர்மன் ஜெயராமன்,இந்து அறநிலைத்துறை துணை ஆணையர் சுவாமிநாதன்,ஆய்வாளர் ஜெயலட்சுமி,செயல்அலுவலர் இளமதி, முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் முருகேசன்,அய்யப்பன் உள்படபலர் கலந்து கொண்டனர்.பாண்டுரங்க பஜனை மண்டல குழு சார்பாக பக்தி பாடல் இன்னிசை கச்சேரி நடந்தது.ஸ்ரீ சிவலிங்கேஸ்வர ஸ்வாமி பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கி பிரசாதம் வழங்கினார்.