உள்ளூர் செய்திகள்

விழாவில் கலந்துகொண்ட அறங்காவலர் குழு தலைவர் சோனா வள்ளியப்பா உள்ளிட்ட நிர்வாகிகள்.

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம்

Published On 2022-10-31 09:12 GMT   |   Update On 2022-10-31 09:12 GMT
  • நேற்று கந்த சஷ்டியை முன்னிட்டு சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள சுகவன் சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், உற்சவம், ஆராதனை நடைப்பெற்றது.
  • பின்னர் முருகப்பெருமான் சூரசம்ஹாரம் செய்வதற்கு அம்பாளிடம் வேல் பெற்றுக்கொண்டார்.

சேலம்:

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி தினசரி பூஜை நடைப்பெற்றது வந்தது. நேற்று கந்த சஷ்டியை முன்னிட்டு சுகவனேஸ்வரர் கோவிலில் உள்ள சுகவன் சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், உற்சவம், ஆராதனை நடைப்பெற்றது.

பின்னர் முருகப்பெருமான் சூரசம்ஹாரம் செய்வதற்கு அம்பாளிடம் வேல் பெற்றுக்கொண்டார். இதனைதொடர்ந்து மாலை முருகன் திருவிதீ உலா நடைப்பெற்றது. பின்னர் சூரபத்மனை முருகபெருமான் வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்த நிகழ்வில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சோனா வள்ளியப்பா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News