உள்ளூர் செய்திகள்

முஹர்ரம் திருநாளை அனுசரிக்கும் இஸ்லாமியச் சகோதர சகோதரிகளுக்கு வாழ்த்துகள்... அண்ணாமலை

Published On 2024-07-17 08:02 GMT   |   Update On 2024-07-17 08:02 GMT
  • இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் தியாகப் பெருநாள்.
  • அனைவர் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

சென்னை:

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் தியாகப் பெருநாளான, முஹர்ரம் திருநாளை அனுசரிக்கும் இஸ்லாமியச் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தமிழக பா.ஜ.க. சார்பாக நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் புனித நாளில், சமத்துவமும், சகோதரத்துவமும் பெருகவும், அனைவர் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News