டாஸ்மாக் ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்டு
- பாட்டில் ரூ.5 கூடுதலாக விற்க தடை
- ரூ.11,800 அபராதம்
திருப்பத்தூர்:
வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகம் 2-ஆக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் வேலூர்,திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் ஒரே நிர்வாகத்தில் கீழ் செயல்பட்டு வருகின்றன.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 39 மது கடைகளும்,வேலூர் மாவட்டத்தில் 68 கடைகளும் இயங்கி வருகின்றன.
இதில் பெரும்பாலான கடைகளில் மதுபாட்டில்களுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரை கூடுதலாக பணம் பெறுவதாக மது பிரியர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இதுகுறித்து மாவட்ட டாஸ்மார்க் மேலாளர் பூங்கொடி கூறியதாவது
அரசு டாஸ்மாக் மதுக்கடைகளில் மது பாட்டில்களில் குறிப்பிட்டுள்ள விலையை விட அதிகம் கொடுக்க வேண்டாம் என கடைகளில் ஆய்வுக்குச் செல்லும் பொழுது மது வாங்க வருபவர்களிடம் நேரடியாக தெரிவித்துள்ளோம்.
கடந்த மாதம் 8-ந் தேதி முதல் ஜூன் 20 -ந் தேதி வரை வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ரூ.5 கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில பாட்டிலுக்கு ரூ.5 கூடுதலாக பெற்ற ஊழியர்களுக்கு தலா ரூ.5900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ரூ.10 அதிகமாக பெற்று மது விற்பனை செய்தவர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலா ரூ.11,800 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
குடியாத்தம் பகுதியில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.கந்தனேரி டாஸ்மாக் கடையில் வாடிக்கை யாளர்களை அவமதித்ததாக கடை ஊழியர் ஒருவர் ஒடுகத்தூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றார்.