இந்தியா (National)

5-வது சம்மனையும் புறக்கணித்தார் கெஜ்ரிவால்: கைது செய்ய திட்டம் என ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

Published On 2024-02-02 05:04 GMT   |   Update On 2024-02-02 07:21 GMT
  • அமலாக்கத்துறையின் நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது. சட்டவிரோதமானது.
  • பிரதமர் மோடியின் திட்டம் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து டெல்லி அரசை கவிழ்க்க வேண்டும் என்பதுதான் என குற்றச்சாட்டு

டெல்லி மாநில முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இருந்து வருகிறார்.

டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் விசாரணை நடத்துவதற்காக இன்று அமலாக்கத்துறையின் தலைமை அலுவலகத்தில் ஆஜராகும்படி ஜெக்ரிவாலுக்கு 5-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால், இன்று ஆஜராகாமல் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்துள்ளார். இதற்கிடையே அரவிந்த கெஜ்ரிவாலை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கு முன்னதாக ஜனவரி 19-ந்தேதி ஆஜராக 4-வது முறையாக சம்மன் அனுப்பியிருந்தது. அப்போது அவர் ஆஜராகவில்லை. இதனால் இன்று ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது.

இதற்கு முன்னதாக கடந்த வருடம் நவம்பர் 2-ந்தேதி, டிசம்பர் 21-ந்தேதி மற்றும் கடந்த மாதம் 3-ந்தேதி ஆகிய தேதிகளிலும் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது குறிப்படத்தக்கது.

அமலாக்கத்துறையின் நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது. சட்டவிரோதமானது. பிரதமர் மோடியின் திட்டம் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து டெல்லி அரசை கவிழ்க்க வேண்டும் என்பதுதான். அது நிகழ நாங்கள் விடமாட்டோம் என ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

சிபிஐ கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியது. ஆனால் அவர் மீது எந்த குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News