இந்தியா (National)

அசாமில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆக உயர்வு

Published On 2024-07-08 02:29 GMT   |   Update On 2024-07-08 02:29 GMT
  • குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் 22 லட்சத்து 74 ஆயிரத்து 289 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
  • பிரம்மபுத்ரா நதியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கவுகாத்தி:

அசாமில் வெளுத்து வாங்கிய மழையால் மாநிலத்தில் 28 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் 22 லட்சத்து 74 ஆயிரத்து 289 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மழைக்கு ஏற்கனவே 70 பேர் பலியான நிலையில், நேற்று மேலும் 8 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.

269 நிவாரண முகாம்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பிரம்மபுத்ரா நதியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாய அளவை தாண்டி நீர் ஓடுவதால் கரையோர மக்களுக்கு மீண்டும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மற்ற நதிகளிலும் வெள்ளப்பெருக்கால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதற்கிடையே வெள்ள பாதிப்புகளை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று நேரில் பார்வையிடுகிறார். லத்திபூர் பகுதிக்கு சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிகிறார்.

Tags:    

Similar News