இந்தியா (National)

பாபா சித்திக் கொலை வழக்கு.. கைது செய்யப்பட்டவருக்கு வரும் 21-ம் தேதி வரை போலீஸ் காவல்

Published On 2024-10-13 14:37 GMT   |   Update On 2024-10-13 14:53 GMT
  • பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.
  • பாபா சித்திக் கொலைக்கு பிரபல தாத்தா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது.

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் நேற்றைய தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

48 வருட காலமாக காங்கிரசில் இருந்துவந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஆட்சியில் பங்கு வகிக்கும் அஜித் பவார் தேசியவாத கட்சிக்குத் தாவினார்.

பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள தனது மகன் ஜீஸ்ஹான் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில் பாபா சித்திக் கொலை வழக்கில் தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் (19), குர்மாயில் பல்ஜித் சிங் (23) ஆகிய 2 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த இருவருடன் இணைந்து குற்றத்தில் ஈடுபட்ட 3 ஆவது நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இருவரும் இன்று உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ராஜேஷ் காஷ்யப் தனக்கு வயது 17 என்று தெரிவித்தார். இதனையடுத்து காஷ்யப்பின் உண்மையான வயதை அறிய அவருக்கு எலும்பியல் பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் பல்ஜித் சிங்கிற்கு அக்டோபர் 21 ஆம் தேதி போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாபா சித்திக் கொலைக்கு பிரபல தாத்தா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல ரவுடிகளுடன் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்பு உள்ளது.

இருப்பினும், இந்த கொலையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருப்பதை போலீசார் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

Tags:    

Similar News