இந்தியா (National)

முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் உடலுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய சல்மான் கான்

Published On 2024-10-13 14:52 GMT   |   Update On 2024-10-13 14:52 GMT
  • முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் நேற்றைய தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
  • பாபா சித்திக்கின் இழப்பை அவரது நெருங்கிய நண்பரான சல்மான் கானால் தாங்கிக்கொள்ள முடியவில்லை

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மும்பையில் நேற்றைய தினம் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

48 வருட காலமாக காங்கிரசில் இருந்துவந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஆட்சியில் பங்கு வகிக்கும் அஜித் பவார் தேசியவாத கட்சிக்குத் தாவினார்.

பாந்த்ரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள தனது மகன் ஜீஸ்ஹான் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போது பாபா சித்திக்கை மர்ம நபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

பாபா சித்திக்கின் மரண செய்தியை கேட்ட அவரது நெருங்கிய நண்பர் சல்மான் கான் பிக்பாஸ் படப்பிடிப்பை பாதியிலேயே உடனடியாக ரத்து செய்து விட்டு மருத்துவமனைக்கு விரைந்தார்.

அவரது நெருங்கிய நண்பரான சல்மான் கானால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. பாபா சித்திக்கின் மரண செய்தியை கேட்டதில் இருந்தே சல்மான் கானால் தூங்க முடியவில்லை.

இந்நிலையில் பலத்த பாதுகாப்புடன் பாபா சித்திக் வீட்டிற்கு சென்ற சல்மான் கான் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது கண்களில் கண்ணீருடன் மிகவும் சோகமான முகத்தோடு சல்மான் கான் காணப்பட்டார்.


Tags:    

Similar News