இந்தியா

அமைதி தூதுவரான பிரதமர் மோடி ஏன் மணிப்பூர் செல்லவில்லை?: காங்கிரஸ்

Published On 2024-08-31 10:17 GMT   |   Update On 2024-08-31 10:17 GMT
  • பாராளுமன்ற தேர்தலில் மணிப்பூரில் பா.ஜ.கவை காங்கிரஸ் வீழ்த்தியது.
  • மணிப்பூர் முதல் மந்திரி பைரேன் சிங் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் என்றார்.

புதுடெல்லி:

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் மெய்டி மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையிலான இனக்கலவரத்தில் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

கலவரம் ஏற்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரில் செல்ல வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். உலகம் முழுவதும் பிரதமர் சென்றுவிட்டார். கிட்டத்தட்ட 16 மாதங்கள் கடந்துவிட்டன. மணிப்பூரில் அமைதி இல்லை. நல்லிணக்கம் இல்லை. இயல்பு நிலை இல்லை.

முதல் மந்திரி பைரேன் சிங் எந்த உலகில் வாழ்கிறார் என தெரியவில்லை. அவர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். அவர் எதன் அடிப்படையில் இயல்பு நிலை நிலவுவதாக கூறுகிறார் என தெரியவில்லை.

பிரதமர் உக்ரைனுக்குப் போயிருக்கிறார். ரஷ்யாவுக்குப் போயிருக்கிறார். போலந்துக்குப் போயிருக்கிறார். அவர் நாடுமுழுவதும் சென்றிருக்கிறார்.

உலகின் பிற நாடுகளுக்குச் சென்றாலும் மணிப்பூருக்குச் செல்ல சில மணிநேரம் கூட அவருக்கு நேரமோ விருப்பமோ கிடைக்கவில்லை. பாராளுமன்ற தேர்தலில் மணிப்பூரில் பா.ஜ.கவை காங்கிரஸ் வீழ்த்தியது. அவர்கள் நல்ல வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். பிரதமர் மணிப்பூர் செல்லவேண்டும் என நான் நினைக்கிறேன். அதுதான் மிக முக்கியமான தேவை.

பிரதமர் மோடி 16 மாதமாக மணிப்பூர் செல்லாதது ஏன்? மாநிலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை காங்கிரஸ் விரும்புகிறது என தெரிவித்தார்.

Tags:    

Similar News