ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: முதல்முறையாக பைனலுக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி
- இன்று நடந்த அரையிறுதியில் ஜப்பானை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி இறுதிக்கு முன்னேறியது.
- இந்திய பெண்கள் அணி வரலாற்றில் முதல் முறையாக ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிக்கு முன்னேறியது.
சிலாங்கூர்:
ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவில் உள்ள சிலாங்கூரில் நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பானை 3-2 என்ற கணக்கில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதன்மூலம் வரலாற்றில் முதல்முறையாக ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் பதக்கத்தை இந்திய அணி உறுதி செய்துள்ளது.
இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் முதல் சுற்றிலும், இந்தியா 2, 3வது சுற்றிலும், ஜப்பான் 4வது சுற்றிலும் வென்றது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது சுற்றில் இந்தியாவின் அன்மோல் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றார். இதன்மூலம் அரையிறுதியில் இந்தியா 3-2 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.
இந்திய மகளிர் அணிக்கு பதக்கம் உறுதியாகிவிட்ட நிலையில் நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் தாய்லாந்தை எதிர்கொள்கிறது.