கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்: கேப்டன் இல்லாத டி20 அணியை அறிவித்த ஆஸ்திரேலியா

Published On 2024-10-28 09:23 GMT   |   Update On 2024-10-28 09:23 GMT
  • டி20 தொடரில் யார் கேப்டன் என்பது குறிப்பிடப்படவில்லை.
  • வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க், ஹசில்வுட் ஆகியோர் இந்த டி20 அணியில் இடம் பெறவில்லை.

பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்ல உள்ளது. முதலில் ஒருநாள் தொடரும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 தொடரில் யார் கேப்டன் என்பது குறிப்பிடப்படவில்லை.

இந்த டி20 அணியில் மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா ஆகியோர் மட்டுமே சீனியர் வீரர்களாக உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க், ஹசில்வுட் ஆகியோர் இந்த டி20 அணியில் இடம் பெறவில்லை. ஒருநாள் தொடரில் பேட் கம்மின்ஸ் கேப்டனாக உள்ளார்.

ஆஸ்திரேலியா டி20 அணி:-

சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், கூப்பர் கோனோலி, டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா.

ஆஸ்திரேலிய ஒருநாள் அணி:-

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபோட், கூப்பர் கானொலி, ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா.

Tags:    

Similar News