விளையாட்டு
மலேசிய ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறி இந்திய ஜோடி சாதனை
- ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது.
- இதில் தென் கொரிய ஜோடியை இந்திய ஜோடி வீழ்த்தியது.
கோலாலம்பூர்:
மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் தென் கொரியாவின் காங் மின் ஹியுக்-சியோ சியுங் ஜே ஜோடியுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி 21-18, 22-20 என்ற செட் கணக்கில் தென் கொரிய ஜோடியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
மலேசிய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய ஜோடி சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.