செய்திகள்

வங்காளதேசத்தில் தொடரும் போதை மாபியா என்கவுண்டர் - நூற்றுக்கும் அதிகமானோர் சுட்டுக்கொலை

Published On 2018-05-29 10:23 GMT   |   Update On 2018-05-29 10:23 GMT
வங்காள தேசத்தில் அதிகரித்து வரும் போதை மருந்து உபயோகத்தை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கையில் இதுவரை 105 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். #Bangladesh #Drugencounter
டாக்கா:

வங்காளதேசத்தில் ‘யாபா’ எனப்படும் தடை செய்யப்பட்ட போதை மருந்துகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அண்டை நாடான மியான்மரில் இருந்து இந்த போதை மருந்துகள் கடத்தப்பட்டு, விற்கப்படுகிறது. போதை மருந்து விற்பனையாளர்கள் அதிகம் இளைஞர்களையே குறிவைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வகை போதை மருந்துகளை ஒழிக்க அந்நாட்டு அரசு பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது. அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் உத்தரவின் அடிப்படையில், ஆயிரக்கணக்கான போதை மருந்து வியாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த போதை மாபியாவை ஒடுக்க சிறப்பு அதிரடிப்படையும் அமைக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 14 நாட்களில் போதை மருந்து வியாபாரிகள் பலர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாள் இரவில் நடத்தப்பட்ட சோதனையில் மட்டும் சுமார் 12 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், போதை மருந்துகளை தடுப்பதற்கான நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது.

இந்த என்கவுண்டர்களுக்கு வங்காள தேச மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Bangladesh #Drugencounter
 
Tags:    

Similar News