என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் மே 21ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
- இதில் பங்கேற்க ராகுல் காந்தி வரும் 21-ம் தேதி தமிழகம் வருகிறார்.
சென்னை:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் மே 21-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தில் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூருக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு விடுதலைப் புலிகளால் குண்டு வைத்து கொல்லப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.
- தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
- தமிழ்நாட்டிலும் முதல் நாள் வெளியிட்டு மறுநாள் தியேட்டர்களில் படம் ஓடவில்லை.
புதுடெல்லி:
விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.
இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி திரையுலகில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியது. இப்படம் குறித்து வாதம் விவாதங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் நடந்துவந்தன. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தை தெரியப்படுத்தி வந்தனர்.
இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டிலும் முதல் நாள் வெளியிட்டு மறுநாள் தியேட்டகளில் படம் ஓடவில்லை.
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள நேரடி, மறைமுக தடையை எதிர்த்து திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, தடை விதித்தது குறித்து மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், திரைப்படம் எதிர்கொண்ட விமர்சனம், அறிமுகம் இல்லாதவர்களின் நடிப்பு, போதுமான வரவேற்பின்மை ஆகியவற்றால் திரையரங்க உரிமையாளர்களே கடந்த மே 7-ம் தேதி முதல் திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாக தோன்றுகிறது. விளம்பரம் தேடும் நோக்கில் மனுதாரர் மனுதாக்கல் செய்துள்ளதால் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கான தடையை நீக்கி உத்தரவிட்டது.
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்காள அரசு விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்த சுப்ரீம் கோர்ட், படம் திரையிடும் திரையரங்குகளில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.
- பீகாரில் நடந்து வரும் நிதிஷ்குமார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.
- அரசு நடத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு பாட்னா ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.
புதுடெல்லி:
பீகார் மாநிலத்தில் நடந்து வரும் நிதிஷ்குமார் அரசு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. முதல் கட்ட கணக்கெடுப்பு முடிந்து 2-வது கட்ட பணி நடந்து வருகிறது.
இதற்கிடையே, சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி, 'சமத்துவத்துக்கான இளைஞர்கள்' என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அதில், வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என கூறப்பட்டிருந்தது. மனுதாரர் தரப்பு வக்கீல் முகுல் ரோஹத்கி வாதத்துக்குப் பிறகு மனுவை ஏற்றுக்கொள்ள நீதிபதிகள் மறுத்து விட்டனர். பாட்னா ஐகோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர். அந்த மனுவை தாக்கல் செய்த 3 நாட்களுக்குள் பரிசீலித்து, முடிவு செய்யுமாறு பாட்னா ஐகோர்ட்டுக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து, பாட்னா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த பாட்னா ஐகோர்ட், பீகாரில் நிதிஷ்குமார் அரசு நடத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து பாட்னா ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் அரசு தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், அரசியலமைப்பின் 15 மற்றும் 16-வது பிரிவின் கீழ் சாதி அடிப்படையிலான தரவுகளை சேகரிப்பது அரசியலமைப்பு ஆணை என்றும், சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடை விதிக்கப்பட்டால் முழு பயிற்சியும் பாதிக்கப்படும். எனவே தடையை நீக்க வேண்டும் என கோரப்பட்டது.
இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்புக்கு தடைவிதித்த பாட்னா ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வ்ழக்கின் விசாரணையை ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
- ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
- இந்த ரெயில் ஒடிசாவின் பூரியில் இருந்து மேற்கு வங்காளத்தின் ஹவுரா வரை செல்லும்.
புவனேஷ்வர்:
ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் ஒடிசா மாநிலத்தின் பூரியில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா வரை செல்லும்
மேலும், 8,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரெயில்வே திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஹவுரா மற்றும் பூரி இடையே மத, கலாச்சார மற்றும் ஆன்மீக இணைப்பை மேலும் வலுப்படுத்தும். தற்போது நாட்டில் 15 வந்தே பாரத் ரெயில்கள் செயல்பட்டு வருகின்றன. அவை இணைப்பு மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டையும் மேம்படுத்துகின்றன என தெரிவித்தார்.
- பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
- இந்தக் கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார்.
சென்னை:
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஒன்றிணைந்துள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று மாலை நடைபெற உள்ள இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
- மேற்கு வங்காளத்தில் பட்டாசு ஆலை ஒன்று சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தது.
- இந்தப் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5 பேர் பலியாகினர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தின் புர்பா மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள எக்ரா நகரில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இங்கு பலர் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் பட்டாசு ஆலை நேற்று வழக்கம்போல் இயங்கி கொண்டிருந்தது. அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் அந்த வீடு தரைமட்டமானது. விபத்து குறித்த தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர்.
இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
- காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளார்.
- ஜூன் 4-ம் தேதி நியூயார்க் மெடிசன் சதுக்கத்தில் அமெரிக்கவாழ் இந்தியர்களைச் சந்தித்து உரையாடுகிறார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யான ராகுல் காந்தி அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக வெளியான செய்தியில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி வரும் 31-ம் தேதி அமெரிக்கா செல்கிறார். அங்கு ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார்.
கலிபோர்னியா, வாஷிங்டன் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் ராகுல் காந்தி ஜூன் 4-ம் தேதி நியூயார்க்கில் உள்ள மெடிசன் சதுக்கத்தில் அமெரிக்கவாழ் இந்தியர்களைச் சந்தித்து உரையாடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேறினார்.
ரோம்:
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3-வது சுற்றில் செர்பிய வீரர் ஜோகோவிச், பிரிட்டிஷ் வீரர் கேமரூன் நூரியுடன் மோதினார்.
இந்தப் போட்டியில் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.
இதேபோல, மற்றொரு போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், செர்பியாவின் லாஸ்லோ ஜெரியுடன் மோதினார். இதில் காஸ்பர் ரூட்
6-1, 6-3 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
- ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் மே 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஜி7 உச்சி மாநாடு நடக்கிறது.
- அதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
வாஷிங்டன்:
ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் மே 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஜி7 குழும (வளர்ந்த நாடுகள்) வருடாந்திர உச்சி மாநாடு நடக்கிறது. அதில், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஜி7 மாநாட்டுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். அதை ஏற்று, மோடி பங்கேற்கிறார்.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில், கடன் நெருக்கடிக்கு மத்தியில் ஜி-7க்கு பிந்தைய ஆசிய சுற்றுப்பயணத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரத்து செய்தார். அவர் அவர் குவாட் மாநாட்டுக்கு ஆஸ்திரேலியா செல்லமாட்டார் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேறினார்.
ரோம்:
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 3-வது சுற்றில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், குரோசிய வீராங்கனை டோனா வெகிக்குடன் மோதினார்.
இந்தப் போட்டியில் ஸ்வியாடெக் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா, செக் வீராங்கனை கரோலினா முசோவாவுடன் மோதினார். இதில் படோசா
6-4, 7-6, 6-2 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
- வங்கக்கடலில் உருவான மோக்கா புயல் வங்காளதேசம், மியான்மர் இடையே கரையை கடந்தது.
- மோக்கா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மியான்மரில் பலியானோர் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்தது.
நெய்பியிடாவ்:
வங்க கடலில் உருவான மோக்கா புயல் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது.
இந்த அதிதீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளை பந்தாடியது. புயல் கரையைக் கடந்தபோது வங்காளதேசம், மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்களில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இதேபோல், மியான்மரின் கியெவுக்பியு நகர் உள்பட பல கடலோர பகுதிகள் புயலால் கடும் பாதிப்பை சந்தித்தன. அங்கும் புயல், மழை, வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், மியான்மரில் மோக்கா புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது அங்குள்ள ராக்கென் மாகாணத்தில் மட்டும் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அதிபர் ஜெலன்ஸ்கி நாடு திரும்பினார்.
- உக்ரைன் மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பும், அரசியல் ஆதரவும் கிடைத்துள்ளது என்றார்.
கீவ்:
ரஷியாவுக்கு எதிரான போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை வழங்கி வருகின்றன.
இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்துப் பேசினார். அப்போது உக்ரைனுக்கு ஏவுகணைகள், டிரோன்கள், போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதாக ரிஷி சுனக் உறுதியளித்ததாக ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய ஜெலன்ஸ்கி, ரெயிலில் கீவ் நகருக்குச் சென்றார். அப்போது ரெயிலில் இருந்தபடியே அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் மூலம் உக்ரைன் மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பும், அரசியல் ஆதரவும் கிடைத்துள்ளது என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்