search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ் மோதல்"

    தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் 10-ம் வகுப்பு மாணவன் அரசு பஸ் மோதி பலி மயிலாடுதுறை அருகே பரிதாபம்

    மயிலாடுதுறை:

    தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் 10-ம் வகுப்பு மாணவன் விபத்தில் பலியான சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு அக்களூர் பகுதியை சேர்ந்தவர் சந்துரு. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் சக்திவேல் (வயது 15). இவர், மயிலாடுதுறையில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் சக்திவேலும் அவருடைய நண்பர் பிரித்திவிராஜும் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். மயிலாடுதுறை அருகே திருவாரூர் மெயின்ரோடு பேச்சாவடி பகுதியில் வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் திடீரென சக்திவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இந்த விபத்தில் சக்திவேல், பிரித்திவிராஜ் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சக்திவேலை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். காயமடைந்த பிரித்திவிராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து சக்திவேலின் தாய் ஜெயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்திவேல் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளதால் இன்று (திங்கட்கிழமை) தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அவர் விபத்தில் பலியானது அவரது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    மேட்டூர் அருகே மொபட் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர், சமத்துவபுரம் அருகே உள்ள பாரதியார் நகரை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 28). கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு மொபட்டில் மேட்டூரில் இருந்து நாட்டாமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் மேட்டூரை நோக்கி வந்து கொண்டிருந்தது. இரவு சுமார் 8 மணி அளவில் நாட்டாமங்கலம் காளியம்மன் கோவில் அருகே சென்றபோது சசிகுமார் மொபட்டும், அரசு பஸ்சும் திடீரென நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    இதில் மொபட்டில் இருந்து வாலிபர் சசிகுமார் தூக்கிவீசப்பட்டு பஸ்சின் அடிபகுதியில் சிக்கி பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    விபத்து ஏற்பட்டதையடுத்து பஸ் உடனே அந்த பகுதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் பயணிகள் அனைவரும் பஸ்சில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டு, அந்த வழியாக சென்ற வேறு பஸ்களில் அவர்கள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மேட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான சசிகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர். இன்று காலையில் ஆஸ்பத்திரியில் அவரது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். 
    சின்னமனூர் அருகே அரசு பஸ் மோதி பள்ளி மாணவன் பலியானான்.
    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் சீலையம்பட்டி அருகில் உள்ள வேப்பம்பட்டியை சேர்ந்த குணசேகரன் மகன் ராமு (வயது10). இவன் அங்குள்ள ஊராட்சி தொடக்க பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று சீலையம்பட்டி செல்லும் சாலையில் தனது நண்பருடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக வந்த மணல் லாரி மாணவனின் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான்.

    இதுகுறித்து குணசேகரன், ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் லாரியை ஓட்டி வந்த ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆதிநாராயணன் என்பவரை கைது செய்தனர்.

    குழித்துறையில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த 4 வயது சிறுவன் பலியானான். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

    நாகர்கோவில்:

    திருவட்டார் அருகே பிலாங்காலை பகுதியைச் சேர்ந்தவர் புல்பாஸ், (வயது 38). இவர் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இவரது மனைவி மேரி ஜெலஸ்டின் (32). இவர்களது மகள் அக்ஷ்யா (10), மகன் அக்ஷித் (4).

    இவர்கள் 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றனர். குழித்துறை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற அரசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் புல்பாஸ், மேரி ஜெலஸ்டின், அக்ஷ்யா, அக்ஷித் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். மேரி ஜெலஸ்டினுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    விபத்து பற்றி தகவல் அறிந்ததும், களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான மேரி ஜெலஸ்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    படுகாயம் அடைந்த மற்ற 3 பேரையும் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அக்ஷித் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. விபத்து குறித்து களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    உசிலம்பட்டி அருகே அரசு பஸ் மோதியதில் மூதாட்டி உயிரிழந்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உசிலம்பட்டி:

    உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூரைச் சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மனைவி லட்சுமி (வயது 61).

    இவர் இன்று காலை அங்குள்ள மதுரை சாலையை கடக்க முயன்றார். அப்போது மதுரையை நோக்கி அரசு பஸ் வேகமாக வந்தது.

    அந்த பஸ் எதிர்பாராத விதமாக சாலையை கடந்த லட்சுமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து செக்கானூரணி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உச்சிப்புளி அருகே நடந்து சென்ற தொழிலாளி மீது அரசு பஸ் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள சாத்தக்கோன்வலசையைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது44). கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று பிரப்பன்வலசைக்கு நடந்து சென்றார்.

    தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது ராமேசுவரத்தில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமக குமரேசன் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த குமரேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமா வழக்குப்பதிவு செய்து கமுதி கோவிலாங்குளத்தைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் வழிவிட்டான் என்பவரை கைது செய்தார்.

    வத்தலக்குண்டு அருகே இன்று அதிகாலை அரசு பஸ் மோதியதில் 5 பெண்கள் நசுங்கினர்.

    திண்டுக்கல்:

    வத்தலக்குண்டு அருகே அய்யம்பட்டியை சேர்ந்த பெண்கள் சிலர் செங்கட்டாம்பட்டிக்கு 100 நாள் வேலை பணிக்காக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து கம்பம் நோக்கி வந்த அரசு பஸ் நடந்து சென்று தொழிலாளர்கள் மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் கிருஷ்ணவேணி (வயது 45), லட்சுமி (45), திருத்தணி (42), பொன்னுத்தாய் (60), விஜயா (9) ஆகிய 5 பேர் உடல் நசுங்கினர். இவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கிருஷ்ணவேணியின் உடல் நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    விபத்து குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

    பேரையூர்:

    மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் சங்கரபாண்டி. இவரது மகன் சிவமனோஜ் (வயது 25). இவர் டி.கல்லூபட்டி பி.ஆர்.நகரில் தங்கி செல்போன் டவர் பராமரிப்பு பணியை செய்து வந்தார். நேற்று சிவமனோஜ் மோட்டார் சைக்கிளில் வன்னி வேலாம்பட்டி விலக்கு பகுதியில் சென்றார்.

    அப்போது மதுரையில் இருந்து ராஜபாளையம் சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோதியது.

    இந்த விபத்தில் சிவமனோஜ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிவ மனோஜ் பரிதாபமாக இறந்தார். டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளிக்குடி அருகே உள்ள மொச்சிகுளத்தை சேர்ந்த வர் ராமர் (வயது 60). இவர் காட்டுப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாடு சாலையை கடந்தது. அதனை பிடிக்க ராமர் சென்றபோது. அந்த வழியே வந்த கார் அவர் மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த ராமர், சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளான காரை ஒட்டி வந்த மொச்சிகுளத்தை சேர்ந்த நெடுமாறனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோட்டில் நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் மில் தொழிலாளி பலியானார்.

    ஈரோடு:

    ஈரோடு, கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம்(வயது 24). தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாக வில்லை.

    சண்முகம் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    திருநகர் காலனி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக சண்முகம் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சண்முகம் மோட்டார் சைக்கிள் நொறுங்கியது. பலத்த காயம் அடைந்த சண்முகம் உயிருக்கு போராடினார்.

    இது குறித்து கருங்கல் பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த சண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சண்முகம் நள்ளிரவு 1.30 மணிக்கு பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தஞ்சை அருகே அரசு பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருவையாறு:

    தஞ்சை அருகே உள்ள மணக்கரம்பையைச் சேர்ந்தவர் மரியதாஸ். இவரது மகன் ஸ்டாலின்ராஜ் (வயது27). கூலி தொழிலாளி.

    அதே பகுதியைச் சேர்ந்தவர் கோபால் மகன் இளையராஜா (26).

    இந்நிலையில் 2 பேரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் தஞ்சை கடை வீதிக்கு வந்திருந்தனர். பின்னர் கடைகளில் பொருட்கள் வாங்கி கொண்டு மணக்கரம்பைக்கு திரும்பினர். அப்போது மணக்கரம்பையை நோக்கி அம்மன்பேட்டை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிரே தஞ்சையை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளும் அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட ஸ்டாலின்ராஜ், மற்றும் இளையராஜா பலத்த காயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் 2 பேரையும் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து தஞ்சை நடுக்காவேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பூரில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் அரசு பஸ் மோதி பனியன் கம்பெனி சூப்பர் வைசர் பலியானார்.

    திருப்பூர்:

    திருப்பூர் அருகே உள்ள ராக்கியாபாளையம் பிரிவை சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகன் கார்த்திக் (27). திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வந்தார். இவர் இன்று காலை 10.30 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். திருப்பூர் வலம்பாலம் என்ற இடத்தில் சென்ற போது சேலத்தில் இருந்து திருப்பூருக்கு அரசு பஸ் வந்தது. இதனை மேட்டூரை சேர்ந்த டிரைவர் முருகன் ஓட்டி வந்தார். இந்த பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இதில் கார்த்திக் பஸ் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் பலியானார். இதனால் அப்பகுதி பொதுக்கள் ஆத்திரம் அடைந்தனர். அங்கு 200-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் பஸ்சை முற்றுகையிட்டனர். டிரைவரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் பரபரப்பு உருவானது. இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினார்கள். பின்னர் பஸ் மோதி பலியான சூப்பர் வைசர் கார்த்திக் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பஸ் டிரைவர் முருகன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    மதுரை அருகே மொபட் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பெண் தலையாரி படுகாயம் அடைந்தார். ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மதுரை:

    மதுரை மேலவாசல் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி கீதா (வயது 36). இவர் சிவகங்கை மாவட்டம்,காளையார் கோவிலில் தலையாரியாக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று கீதா தனது மொபட்டில் மேலூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த அரசு பஸ் மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

    இந்த விபத்தில் கீதா படுகாயம் அடைந்தார். அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து தல்லாகுளம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×