search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயின் பறிப்பு"

    • செயினை பறிக்க விடாமல் எழிலரசி போராடினார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரைச் சேர்ந்தவர் எழிலரசி. இவர் இன்று காலை வேப்பிலை மாரியம்மன் கோவிலுக்குச் சென்றுவிட்டு மணப்பாறை பட்டி சாலை வழியாக தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    உதயம் தியேட்டர் அருகே செல்லும்போது இவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென இவரது கழுத்தில் அணிந்து இருந்த ஏழு சவரன் தாலி செயினை பறிக்க முயன்றார். செயினை பறிக்க விடாமல் எழிலரசி போராடினார்.

    செயினை அறுக்க முடியாத நிலையில் அவரை கீழே தள்ளிவிட்ட வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தார். அப்போது அப்பகுதியில் கடை வைத்துள்ள குமரேசன் என்பவர் மர்ம நபரை ஓடிச்சென்று பிடித்தார். பின்னர் அப்பகுதி பொதுமக்கள் மர்ம நபரை அங்குள்ள மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்.

    மக்கள் அவனிடம் விசாரித்த போது காரைக்குடி என மட்டும் கூறி பெயர் உள்ளிட்ட மற்ற விபரங்களை கூறவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அப்பகுதி பொதுமக்கள் வாலிபருக்கு தர்மஅடி கொடுத்தனர்.

    இதுகுறித்து மணப்பாறை காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் மர்ம நபரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் கை மற்றும் கழுத்தில் காயம் அடைந்த எழிலரசி மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். காலை நேரத்தில் கோவிலுக்கு சென்று விட்டு வந்த பெண்ணிடம் வாலிபர் செயின் பறிப்பில் ஈடுபட முயன்று பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெரம்பூர் மேம்பாலம் கீழ்பகுதியில் சாமுண்டீஸ்வரி என்ற பெண்ணிடம் இருந்து மர்ம நபர்கள் 2.5 சவரன் தாலி செயின் பறித்து சென்றுள்ளனர்
    • செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர

    கடந்த 7-ம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் தலைமைக் காவலர் சுரேஷ் பாபுவின் மனைவி சுபாஷினி தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இருசக்கர வாகனம் மூலம் வீட்டிற்கு திரும்பினார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு பேர் அவரது கழுத்தில் இருந்த நான்கு சவரன் தாலி செயினை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

    இதுதொடர்பாக சுபாஷினி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், மீண்டும் கடந்த 9ம் தேதி அன்று பெரம்பூர் மேம்பாலம் கீழ்பகுதியில் சாமுண்டீஸ்வரி என்ற பெண்ணிடம் இருந்து மர்ம நபர்கள் 2.5 சவரன் தாலி செயின் பறித்து சென்றுள்ளனர்.

    இந்த செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் ஹரியானாவைச் சேர்ந்த மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஹரியானாவைச் சேர்ந்த சச்சின் குமார் (24), அங்கித் (24), அங்கித் யாதவ் (26) ஆகிய மூவரும் சுற்றுலா செல்வதாக சென்னை வந்து, இரு பைக்குகளை வாடகைக்கு எடுத்து நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

    மேலும் இவர்களை பிடிக்க முயன்ற போது மூவரும் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

    • செயின் பறிப்பு சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
    • பாதிக்கப்பட்ட பெண், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

    உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் சாலையில் ரீல்ஸ் செய்து கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து பைக்கில் வந்த மர்ம நபர் செயின் பறித்து சென்றுள்ளனர்.

    அந்த பெண் வீடியோ எடுக்கும்போது, செயின் பறிப்பு சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவாகியுள்ளது. செயின் பறிக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இன்று நடந்த செயின் பறிப்பு சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

    • மொபட்டில் சென்ற பெண்ணிடம் 10 பவுன் தாலி செயின் பறிக்கப்பட்டது.
    • திருடுபோன நகையின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள நாகாடியை சேர்ந்த வர் சுப்பிரமணியன். இவரது மனைவி கனகம் (வயது45). இவர் சம்பவத்தன்று மொபட்டில் தேவகோட்டை பஜாருக்கு சென்றார். அங்கு ரெடிமேட் ஆடைகளை வாங்கிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார்.

    தேவகோட்டை-சிவ கங்கை சாலையில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவர் அவரை மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்தபோது திடீரென அந்த நபர் கனகத்தை வழிமறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்து வாகனத்தை நிறுத்தினார். அப்போது மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி கனகம் கழுத்தில் அணிந்தி ருந்த 10 பவுன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார்.

    இதுகுறித்து அவர் வேலாயுதபட்டிணம் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் பட்டப்பகலில் தாலிச்செயினை பறித்த மர்ம நபரை தேடி வருகின் றனர். திருடுபோன நகையின் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

    • மொபைலை பறி கொடுக்காமல் இருக்க, கீர்த்தி கெட்டியாக பிடித்து கொண்டார்
    • காவல் அதிகாரிகளின் துப்பாக்கி சூட்டில் ஜிதேந்திராவிற்கு காலில் குண்டடி பட்டது

    உத்தர பிரதேச மாநில காசியாபாத் நகரின் ஏபீஈஎஸ் பொறியியல் கல்லூரியில் (ABES Engineering College) முதலாம் ஆண்டு பி.டெக் படித்து வந்தவர் 19 வயதான கீர்த்தி சிங்.

    கீர்த்தி, கடந்த அக்டோபர் 27 அன்று காசியாபாத்தின் மசூரி பகுதியிலிருந்து ஒரு பணிக்காக ஹாபூர் வரை பேருந்தில் செல்ல வேண்டியிருந்தது. இதனால் அங்குள்ள பேருந்து நிலையத்தை அடைய ஒரு ஆட்டோ ரிக்ஷாவில், தனது தோழி தீக்ஷா ஜிண்டாலுடன் தேசிய நெடுஞ்சாலையில் (NH-9) சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர் ஆட்டோவிற்கு அருகில் ஒரு மோட்டார் பைக் வந்தது. அதை பல்பீர் என்பவர் ஓட்டி வந்தார்; ஜிதேந்திரா (28) என்பவர் பின்னால் அமர்ந்திருந்தார். கீர்த்தி சென்ற ஆட்டோவிற்கு அருகில் அந்த மோட்டார் பைக் இணையாக வந்தது.

    அப்போது ஜிதேந்திரா, திடீரென கீர்த்தியின் கையிலிருந்த மொபைல் போனை பறிக்க முயன்றார். இதை எதிர்பாராத கீர்த்தி, மொபைலை பறி கொடுக்காமல் இருக்க அதனை கெட்டியாக பிடித்து கொண்டார். அந்த திருடர்கள் பைக்கை வேகமாக செலுத்தியதால், கீர்த்தி ஆட்டோவிலிருந்து கீழே விழுந்து, விழுந்த வேகத்தில் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டார்.

    இந்த விபத்தில் கீர்த்திக்கு பலமான காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அங்குள்ளவர்கள் உதவியுடன் கீர்த்தி அருகில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    ஆனால் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, சிகிச்சை பலனின்றி துரதிர்ஷ்டவசமாக கீர்த்தி உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளை காவல்துறை தீவிரமாக தேடி வந்ததில் பைக்கை ஓட்டி வந்த பல்பீர் காவலர்களிடம் சிக்கினார்.

    இதற்கிடையே, காவலர்கள் கங்கா நதி சாலையில் வாகன பரிசோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு மோட்டார் பைக்கில் கீர்த்தியை தாக்கிய ஜிதேந்திராவும் மற்றொரு நபரும் சென்றனர். அவர்களை காவல்துறை அதிகாரிகள் நிற்க சொல்லி சைகை செய்தும் நிற்காமல் வேகமாக தப்பித்தனர்.

    உடனடியாக காவல் அதிகாரிகள் அவர்களை பின் தொடர்ந்த போது, இருவரில் ஒருவர் துப்பாக்கியால் காவலர்களை சுட தொடங்கினார். இதில் காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர் காயமடைந்தார். இதனையடுத்து காவல் அதிகாரிகள் பதிலுக்கு துப்பாக்கியால் சுட்டனர்.

    இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் ஜிதேந்திரா, காலில் குண்டடிபட்டு கீழே விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜிதேந்திரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தப்பியோடி விட்ட அவருடன் பயணம் செய்த மற்றோருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    கடந்த 2020ல் குண்டர்கள் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஜிதேந்திராவிற்கு எதிராக பல காவல் நிலையங்களில் 12 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • கணவருடன் சென்ற பெண்ணிடம் தங்க செயின் பறிக்கப்பட்டது.
    • சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை தேடி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபிரபு (வயது 36). இவர் அதே பகுதியில் கம்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இவரது மனைவி பொன்னுத் தாயி (வயது33).

    இவர்கள் இவரும் இருசக்கர வாகனத்தில் நேற்று மதியம் உறவினர் இல்ல திருமண விழா விற்காக ஊமச்சிகுளம் வழி யாக அலங்காநல்லூர் அரு கே உள்ள கல்லணை திருமண மண்டபத்திற்கு வந்தனர்.

    அப்போது இவர்களை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 25 வயது மதிக்கத்தக்க 2 பேர் வாவிடமருதூர் கண்மாய் கரை அருகே வந்தபோது ஜெயபிரபுவிடம் முகவரி கேட்பது போல் பேசினர். அப்போது மர்ம நபர்கள் திடீரென பின்னால் அமர்ந்தி ருந்த பொன்னுத்தா யி கழுத்தில் ணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றனர். உடனே சுதாரித்துக்கொண்ட அவர் செயினை இறுக பிடிக்க தங்க சங்கிலியின் ஒரு பகுதி மட்டும் திருடர்கள் கையில் சிக்கி கொண்டது.

    உடனே கண் இமைக்கும் நேரத்தில் முகமூடி அணிந்த இருவரும் டூவிலரில் தப்பிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்து பொன்னுத் தாயி அளித்த புகாரின் பேரில் அலங்கா நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை தேடி வருகின்றனர்.

    • ஜெயந்தி மாலா சம்பவத்தன்று காய்கறி வாங்கிக் கொண்டு தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டி ருந்தார்.
    • ஜெயந்தி மாலா முகவரி தெரியாது எனக்கூறி அங்கிருந்து செல்ல முயன்றார்.

    கடலூர்:

    வடலூர் என்.எல்.சி. ஆபீசர்ஸ் நகரை சேர்ந்தவர் இளமுருகு. இவரது மாமி யார் ஜெயந்தி மாலா (வயது 62). சம்பவத்தன்று காய்கறி வாங்கிக் கொண்டு தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டி ருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்த ஒரு நபர் ஜெயந்தி மாலாவிடம் முகவரி விசாரித்தார்.

    அப்போது ஜெயந்தி மாலா முகவரி தெரி யாது எனக்கூறி அங்கி ருந்து செல்ல முயன்றார். அப்போது அந்த நபர் திடீரென்று ஜெயந்தி மாலா வின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு கண்ணி மைக்கும் நேரத்தில் தப்பி விட்டார். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இது குறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கீழே விழுந்ததில் படுகாயத்துடன் பெண் படுகாயம்
    • செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள கம்பர் நகரை சேர்ந்தவர் விக்னேஷ்குமார்.

    இவரது மனைவி ஜெயஸ்ரீ(வயது25). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலை முடிந்ததும் மலுமச்சம்பட்டிக்கு மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் அருகே சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள் கண்இமைக்கும் நேரத்தில் ஜெயஸ்ரீ கழுத்தில் அணிந்து இருந்த 3½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

    அப்போது இளம்பெண் மொபட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ஜெஸ்ரீயை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மொபட்டில் சென்ற இளம்பெண்ணிடம் 3½ பவுன் செயினை பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • பிரியா ஷைனி (வயது 28). இவர் குலசேகரத்தில் உள்ள ஒரு வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்
    • கழுத்தில் கிடந்த 13 பவுன் தாலி செயினை பறித்துள்ளனர்.

    நாகர்கோவில் : மார்த்தாண்டம் நல்லூர், மதுலகம் பகுதியை சேர்ந்தவர் பிரியா ஷைனி (வயது 28). இவர் குலசேகரத்தில் உள்ள ஒரு வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை பணியை முடித்து விட்டு அவரது இருசக்கர வாகனத்தில், பயணம் காக்கர் அரங்கம் பக்கத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள் பிரியா ஷைனியின் கழுத்தில் கிடந்த 13 பவுன் தாலி செயினை பறித்துள்ளனர்.

    இதனால் பதறிப்போன பிரியாஷைனி தாலி செயினை கெட்டியாக பிடித்துள்ளார். அப்போது அவரது கையில் 6½ பவுன் சிக்கி உள்ளது. குற்றவாளியின் கையில் 6½ பவுன் சிக்கி உள்ளது. உடனே பிரியாஷைனி திருடன், திருடன் என கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனடியாக அங்கு கூடிய மக்கள் திருடனை துரத்தி சென்றுள்ளனர். ஆனால் இரவு நேரம் என்பதால் திருடனை பிடிக்க முடியவில்லை, இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • நடந்து சென்ற பெண்ணிடம் 3½ பவுன் செயின் பறிக்கப்பட்டது.
    • சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் கடம்பங்குளம் பொட்டல்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி நாகலட்சுமி(54). இன்று காலை 5.30 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் திடீரென நாகலட்சுமியின் முகத்தில் தண்ணீரை ஊற்றி உள்ளனர். மேலும் நாகலட்சுமி சுதாரிப்பதற்குள் கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். அப்போது நிலைதடுமாறி நாகலட்சுமி கீழே விழுந்தார்.

    இதில் காயமடைந்த அவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின்பேரில் சூலக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜமுனா கவுண்டம்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் மூலம் கல்லூரிக்கு சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை.

    கோவை கவுண்டம்பாளையம் டிவி. எஸ் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி மனைவி ஜமுனா (வயது 55). இவர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்து கல்லூரிக்கு புறப்பட்டார்.

    அப்போது கவுண்டம்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் மூலம் கல்லூரிக்கு சென்றார். இந்த நேரத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ சிலர் ஜமுனாவிடம் 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.இந்த நிலையில் ஜமுனா கல்லூரிக்கு வந்தார்.

    அப்போது அவரிடம் சக ஊழியர்கள், ஏன் செயின் அணிந்து வர வில்லை என்று கேட்டு உள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஜமுனா கழுத்தில் தொட்டு பார்த்தார். அப்போது தான் அணிந்திருந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் ரோந்துயின்போது சிக்கினர்
    • பல இடங்களில் கைவரிசை காட்டி உள்ளதாக தகவல்

    வேலூர்:

    வேலூர் அடுத்த செதுவாலையை சேர்ந்தவர் ஜானகி (வயது 42). இவர் தனியார் ஷூ தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

    நேற்று காலை இவர் வல்லண்டராமம் கூட்ரோடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரை 2 பேர் பைக்கில் பின் தொடர்ந்தனர். யாரும் இல்லாதபோது திடீரென அவர் கள் ஜானகியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி நகையை கழற்றி கொடுக்கு மாறு கூறினர்.

    அதிர்ச்சி அடைந்த அவர் மறுக்கவே அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

    இதுகுறித்து ஜானகி விரிஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து விரிஞ்சிபுரம் போலீசார் ரோந்து சென்ற போது 2 வாலிபர்கள் சந்தே கத்துக்கு இடமளிக்கும் வகை யில் பைக்கில் வந்தனர்.

    அவர்களை போலீ சார் மடக்கி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.

    பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித் தனர்.

    அதில் அவர்கள் விரிஞ் சிபுரம் பகுதியை சேர்ந்த சுதா கர் (29), அஜித் (21) என்பதும், அவர்கள் ஜானகியிடம் செயினை பறித்ததும் தெரிய வந்தது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து, பைக்கையும், செயினையும் பறிமுதல் செய்தனர்.

    இவர்கள் பல இடங்களில் கைவரிசை காட்டி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    ×