search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவுடிகள் கைது"

    • குட்கா, மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் ரவுடிகளின் நடவடிக்கைகளை முற்றிலுமாக தடுக்கும் பொருட்டு 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த மார்ச் 16-ந்தேதி முதல் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 8 ரவுடிகள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    மேலும் திருச்சி மாவட்டத்தில் மாவட்ட எஸ்.பி.வருண்குமார் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு 22.3 கிராம் கஞ்சா, குட்கா பொருட்கள் 136.6 கிலோ கிராம், மதுபான வகைகள் 276.2 லிட்டர், கள்-346லிட்டரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பல்வேறு கட்சியினர் மீது 11 தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கஞ்சா, குட்கா, மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    மேலும் வாகன விதிமீறல்கள் தொடர்பாக 12,723 வழக்குகளும் ரூ.1,23,64,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் மேற்பார்வையில், நிலையான கண்காணிப்பு குழு-19, பறக்கும்படை குழு-19, சோதனை சாவடிகள்-15 அமைக்கபட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்ட எஸ்.பி வருண்குமார், மேற்பார்வையில் 3 கூடுதல் எஸ்பிக்கள், 11 துணைக்காவல் கண்காணிப்பாளர்கள், 37 இன்ஸ்பெக்டர்கள், 253 எஸ்.ஐ, 1292துணை ராணுவப் படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட உள்ளனர்.

    மேலும் திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர்கள் குறித்த தகவல்களை திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் 9487464651 என்ற எண்ணில் 24மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

    • 2 பேர் அமீரை வழிமறித்து தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • அமீர் கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    சேதராப்பட்டு:

    புதுவை அடுத்த தமிழக பகுதியான சின்ன கோட்டகுப்பத்தைச் சேர்ந்தவர் சையது அமீர். இவர் சம்பவத்தன்று சின்ன கோட்டை குப்பம் கறிக்கடை சந்தில் நடந்து சென்றார்.

    அப்போது எதிரே வந்த 2 பேர் அமீரை வழிமறித்து தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் அமீரிடமிருந்த பணத்தை பறித்துச்சென்ற அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து அமீர் கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராபின்சன் வழக்கு பதிவு செய்து அமீரிடம் பணம் பறித்தவர்களை அடையாளம் காண அந்தப் பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டார்.

    அதில் அமீரிடம் பணம் பறித்தவர்கள் சின்னக்கோட்டகுப்பம் பகுதியைச் சேர்ந்த விஜி என்கிற பிக்க்ஷா (வயது 22), ஆறுமுகம் (26) என்பது தெரிய வந்தது. ரவுடிகளான விஜி என்கிற பிக்க்ஷா மீது சின்னக்கோட்டகுப்பம் பகுதியில் 2021-ம் ஆண்டு நடந்த செல்வகுமார் கொலை வழக்கு, ஆறுமுகம் மீது அவரது அண்ணனையே கொலை செய்த வழக்கும் உள்ளது. இருவரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டிவனம் கிளை சிறையில் அடைத்தனர்.

    • திருச்சி மாவட்டத்தில் 349 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்ளனர்.
    • 11 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள ரவுடிகளின் இருப்பிடங்கள் மற்றும் ரவுடிகளின் கூட்டாளிகளின் இருப்பிடங்களை சோதனை செய்ய உத்தரவிட்டார். அதன்படி 166 ரவுடிகளின் வீடுகள் மற்றும் 3 ரவுடிகளின் கூட்டாளிகளின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

    இதில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த ரவுடி விக்னேஷ், தீன தயாளன், அவரது கூட்டாளி மணிகண்டன் என்கிற மன்னாரு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும் போது, திருச்சி மாவட்டத்தில் 349 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்ளனர். அதில் பல்வேறு வழக்குகளில் 32 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் 11 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். 152 பேருக்கு நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டும், 60 பேருக்கு நன்னடத்தை பிணைய பத்திரம் பெற உதவி கலெக்டருக்கு வேண்டுகோள் கடிதம் கொடுக்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் குற்ற சம்பவங்களை தடுக்க மீதமுள்ள ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகிறோம் என்றனர்.

    • மர்ம வாலிபர் ரமேசிடம் மது குடிக்க பணம் கேட்டு ரகளை செய்தார்.
    • மது குடிக்க பணம் தர மறுத்ததால், ஆத்திரம் அடைந்த வாலிபர் கூட்டாளிகளுடன் வந்து ரமேசை சரமாரியாக தாக்கினர்.

    போரூர்:

    சென்னை கோடம்பாக்கம், வரதராஜன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(40). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று இரவு அதே பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம வாலிபர் ரமேசிடம் மது குடிக்க பணம் கேட்டு ரகளை செய்தார். ஆனால் ரமேஷ் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் கூட்டாளிகளுடன் வந்து ரமேசை சரமாரியாக தாக்கினர். மேலும் அவரது மோட்டார் சைக்கிளையும் உடைத்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுதொடர்பாக கோடம்பாக்கம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வீராசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ரவுடிகளான சரண், சோகன் ஜோசப், அவினாஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    • ரவுடிகளை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரம் காட்டினர்.
    • ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை தேடி கண்டுபிடித்து கைது செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 10 கொலைகள் நடைபெற்றுள்ளது. இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட முழுவதும் 'ஸ்ட்ராமிங் ஆபரேஷன்' செய்து ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன்படி ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இதில் பழைய குற்றவாளிகள், கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக உள்ளவர்கள் என பல்வேறு வகைகளில் பட்டியல் தயார் செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ரவுடிகளை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரம் காட்டினர். இதில் இன்று ஒரே நாளில் 19 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை தேடி கண்டுபிடித்து கைது செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இன்று மாலைக்குள் சுமார் 50-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
    • குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனை மற்றும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடு பவர்களை போலீ சார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் சர்ச் தெருவை சேர்ந்தவர் காஸ்டின் ராபின் என்ற லக்ஸ் (வயது 22). இவருடைய நண்பர் முருகன்குன்றம் பகுதியை சேர்ந்த ஜெப்ரின் (21). இவர்கள் மீது கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் போலீசாரின் எச்சரிக்கை யையும் மீறி காஸ்டின் ராபின், ஜெப்ரின் ஆகியோர் தொடர்ந்து குற்றச்செ யல்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் இவர்களது பெயர் குமரி மாவட்ட ரவுடிகள் பட்டியிலிலும் இடம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து காஸ்டின் ராபினையும், ஜெப்ரினை யும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி குண்டர் சட்டத்தின் கீழ் ரவுடிகளான காஸ்டின் ராபின், ஜெப்ரின் ஆகியோரை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார். குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

    • ரவுடிகளின் வேட்டையில் கொலை, கஞ்சா மற்றும் கொடூர குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 89 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • ரவுடிகள் மீது இதுபோன்ற கடும் நடவடிக்கை தொடரும் என ஆவடி போலீஸ் கமிஷனர் கே.சங்கர் தெரிவித்துள்ளனர்.

    ஆவடி:

    ஆவடி காவல் ஆணையரகத்தில் இன்று அதிகாலை நடந்த ரவுடிகளின் வேட்டையில் கொலை, கஞ்சா மற்றும் கொடூர குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 89 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களில் கொலை வழக்கில் தொடர்புடைய செங்குன்றம் காவல் மாவட்டத்தில் 14 பேர், ஆவடி காவல் மாவட்டத்தில் 29 பேர், கோர்ட்டு வழக்குகளில் ஆஜராகாமல் இருந்து வந்த பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட 5 பேர் மற்றும் சரித்திர பதிவேட்டில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ரவுடிகள் மீது இதுபோன்ற கடும் நடவடிக்கை தொடரும் என ஆவடி போலீஸ் கமிஷனர் கே.சங்கர் தெரிவித்துள்ளனர்.

    • பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு சந்தேகம் அடைந்த பஸ் நிலையத்தில் இருந்த சக பயணிகள் மற்றும் பொதுமக்கள் புதர் நிறைந்த பகுதிக்கு சென்று பார்த்தனர்.
    • வாலிபர்கள் 2 பேர் இளம்பெண்ணிடம் தவறாக நடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்களை தடுக்க முயன்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் ரெயில் நிலையம் அருகே மாநகர பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மறைமலை நகர், வண்டலூர் உயிரியல் பூங்கா, பெருங்களத்தூர், மாமல்லபுரம், திருப்போரூர், கேளம்பாக்கம், படப்பை, மணிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகரப் பஸ்கள் அதிகாலையில் இருந்து இரவு 11 மணி வரை சென்று வருகின்றன. இதனால் தாம்பரம் ரெயில் நிலையம் அருகே உள்ள இந்த பஸ்நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் அதிகாலை, சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், பஸ் ஏறுவதற்காக இந்த பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்தனர்.

    திடீரென அவர்கள் பட்டா கத்தியை காட்டி இளம்பெண்ணை மிரட்டினர். பின்னர் அவரை அருகில் உள்ள புதர்கள் நிறைந்த பகுதிக்கு கடத்தி சென்று கற்பழிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக கூச்சலிட்டார்.

    பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு சந்தேகம் அடைந்த பஸ் நிலையத்தில் இருந்த சக பயணிகள் மற்றும் பொதுமக்கள் புதர் நிறைந்த பகுதிக்கு சென்று பார்த்தனர்.

    அங்கு வாலிபர்கள் 2 பேர் இளம்பெண்ணிடம் தவறாக நடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்களை தடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்களும் பொதுமக்களிடம் பட்டாகத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.

    இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்ததும் ரோந்துப் பணியில் இருந்த தாம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தப்பி ஓட முயன்ற 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். இளம்பெண்ணையும் மீட்டனர். விசாரணையில் கைதான வாலிபர்கள் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் வீரமணி (27), மணிகண்டன் (26) என்பதும் அவர்கள் மீது தாம்பரம், சேலையூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிந்தது.

    இதில் மணிகண்டன் மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சென்னை நகரம் முழுவதும் தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
    • சென்னையில் இதுவரை அடிதடியில் ஈடுபட்ட 2,644 ரவுடிகள் மீது போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், சென்னையை குற்றம் இல்லாத நகரமாக மாற்றவும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சென்னையில், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் ஈடுபட்டு பல குற்றவாளிகள் தலைமறைவாக இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள், குற்ற பின்னணி கொண்ட ரவுடிகள், குற்றசெயல்களில் ஈடுபட்டு ஜாமீனில் வெளியே வந்தவர்கள், கொலை, கொலைமுயற்சி, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட குற்றசெயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சென்னை நகரம் முழுவதும் தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஒரே நாளில் இந்த சிறப்பு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டனர்,

    இந்த அதிரடி வேட்டையின்போது சென்னையில் சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபட்டு வந்த 764 ரவுடிகளின் வீடுகளுக்கே சென்று தனிப்படை போலீசார் அதிரடி சோதனை செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அவர்களது நடவடிக்கைகளை கவனித்து வருவதாக எச்சரித்தனர். இனி குற்றசெயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகளையும் வழங்கினார்கள்.

    அப்போது குற்றசெயல்களில் ஈடுபட்டதால் கோர்ட்டு மூலம் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 14 ரவுடிகள் போலீசாரிடம் சிக்கினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர். சென்னையில் இதுவரை அடிதடியில் ஈடுபட்ட 2,644 ரவுடிகள் மீது போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

    • கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்து கட்டியதாக வாக்குமூலம்
    • கைது செய்யப்பட்ட 3 பேரையும் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்

    கன்னியாகுமரி :

    ஆரல்வாய்மொழி கிறிஸ்துநகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன் (வயது 58). இவர் கடந்த 9-ந்தேதி இரவு ஆரல்வாய்மொழி பகுதியில் மோட்டார் சைக்கிள் வந்தபோது ஒரு கும்பல் ஏசுதாசனை வழி மறித்து சரமாரியாக குத்தி கொலை செய்தது.

    இதுகுறித்து ஏசுதாசனின் மனைவி ஜெயா கொடுத்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி கிறிஸ்து நகரை சேர்ந்த அன்பு என்ற அன்பழகன், விஜயன் திருப்பதிசாரத்தை சேர்ந்த மணிகண்டன், மிஷின் காம்பவுண்ட்டை சேர்ந்த தங்கஜோஸ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை         மேற்கொண்டனர். குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே உடலை பெற்றுக்கொள்வோம் என்று கூறி ஏசுதாசனின் மனைவி மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து ஏசுதாசனின் உடலை பெற்று சென்றனர். கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    தனிப்படை போலீசார் தங்கஜோசை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பிறகு அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தலைவறைவாகியுள்ள அன்பு, விஜயன், மணிகண்டன் ஆகியோர் குமரி மாவட்டத்தில் மலைபகுதிகளில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் சிக்கவில்லை. இந்த நிலையில் சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப் படை போலீசார் சென்னை விரைந்தனர். அங்கு இருந்த அன்பு, விஜயன், மணிகண்டன் 3 பேரையும் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட அன்புவிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது கொலை செய்யப்பட்ட ஏசுதாசனுக்கும், எனது உறவுக்கார பெண் ஒருவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும் இதனால் எங்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏசுதாசனும் அவரது மகனும் என்னை தாக்கினார்கள்.

    இது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட விரோதத்தில் அவரை நண்பர்களுடன் சேர்ந்து தீர்த்து கட்டியதாக கூறியுள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கைது செய்யப்பட்ட அன்பு, விஜயன், மணிகண்டன் இவரது பெயர்கள் ரவுடிகள் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • பெற்றோர் பிரிந்து வாழ்வதால் மாணவிக்கு கல்லூரி கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
    • ராஜேஷ், ரவீந்திரன் 2 பேரும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரம் போலீசாரிடம் சிக்கினர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். ஆங்கிலோ இந்தியனான இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக அவர் சரவணம்பட்டி பகுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். மாணவியின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியாக வாழ்த்து வருகின்றனர்.

    பெற்றோர் பிரிந்து வாழ்வதால் மாணவிக்கு கல்லூரி கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவி, கல்லூரி மாணவர் ஒருவரிடம் உதவி கேட்டதாக தெரிகிறது. அப்போது அந்த மாணவர் மூலம் கோவை கொண்டயம்பாளையத்தை சேர்ந்த ஜெர்மன் ராஜேஷ் (வயது 22), ரவீந்திரன் (22) ஆகியோர் மாணவிக்கு அறிமுகம் ஆனார்கள்.

    அவர்கள் 2 பேரும், கடந்த 23-ந்தேதி மாணவி தங்கி இருக்கும் அறைக்கு சென்றனர். அங்கிருந்த மாணவியிடம் கல்வி கட்டணம் செலுத்துவதற்கு உதவுவதாக கூறினர். இதையடுத்து மாணவியை அங்கிருந்து ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அங்கு அறை எடுத்து மாணவியை தங்க வைத்தனர்.

    இந்த நிலையில் ஜெர்மன் ராஜேஷ், ரவீந்திரன் ஆகியோர் மாணவியை ஓட்டல் அறையில் அடைத்து வைத்து, 3 நாட்களாக கட்டாயப்படுத்தி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் அங்கிருந்து தப்பிய மாணவி, நடந்த சம்பவம் குறித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓட்டலுக்கு சென்றனர். ஆனால் அங்கிருந்து ஜெர்மன் ராஜேஷ், ரவீந்திரன் இருவரும் தலைமறைவாகி விட்டனர். அதே நேரத்தில் ஓட்டல் அறையில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    இந்தநிலையில், ராஜேஷ், ரவீந்திரன் 2 பேரும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரம் போலீசாரிடம் சிக்கினர்.

    போலீசாரை பார்த்ததும் தாங்கள் வந்த மோட்டர்சைக்கிளை போட்டுவிட்டு தப்ப முயன்றபோது சந்தேகத்தின்பேரில் இருவரையும் போலீசார் பிடித்தனர்.

    விசாரணையில், அவர்கள் 2 பேரும் ரவுடிகள் என்பதும், கல்லூரி மாணவியை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    முன்னதாக போலீசாரிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் கீழே விழுந்ததில் ரவுடிகள் இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக இருவரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    • தருண் குமாரிடம் வெள்ளை நாகராஜ் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வழக்கை வாபஸ் பெறுவது சம்பந்தமாக நேரில் பேசிக் கொள்ளலாம் என்று அழைத்தார்.
    • வெள்ளை நாகராஜ் மற்றும் அடையாளம் தெரியாத 2 ரவுடிகள் திடீரென வந்து தருண்குமாரை வழிமறித்து கத்தியால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

    திருவொற்றியூர்:

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் தருண் குமார் (வயது 26). இவர் எம்.சி. ரோட்டில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளை நாகராஜ் என்பவர் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக கடந்த மாதம் 19-ந்தேதி வடக்கு கடற்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் தருண் குமாரிடம் வெள்ளை நாகராஜ் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வழக்கை வாபஸ் பெறுவது சம்பந்தமாக நேரில் பேசிக் கொள்ளலாம் என்று அழைத்தார். இதனை தொடர்ந்து தருண்குமார் எண்ணூர் கடற்கரை சாலைக்கு சென்றுள்ளார். அப்போது வெள்ளை நாகராஜ் மற்றும் அடையாளம் தெரியாத 2 ரவுடிகள் திடீரென வந்து தருண்குமாரை வழிமறித்து கத்தியால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த தருண்குமார் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து காசிமேட்டை சேர்ந்த ஜெகன் (22), வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சாய்ராம் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள வெள்ளை நாகராஜை தேடி வருகின்றனர்.

    ×