என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரேஷன் அரிசி கடத்தல்"
- 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- பறிமுதல் செய்யப்பட்ட நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டது.
ஓசூர்:
சேலம் சரக குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி. விஜயகுமார் மற்றும் கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, பெருமாள் மற்றும் போலீசார் தளி ஆனேக்கல் சாலையில் உள்ள உச்சனப்பள்ளி முனியப்பன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் 40 கிலோ எடை கொண்ட, 20 மூட்டைகளில் ரேஷன் அரிசியை கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து வேனை ஓட்டி சென்ற தளி கும்பார் வீதியை சேர்ந்த அல்லாபகாஷ், (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் மற்றும் 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைக்கப்பட்டது.
- காரில் இருந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
- ரேஷன் அரிசியை வாங்கி கள்ளச்சந்தையில் வடமாநிலத்தவர்களுக்கு விற்பனை செய்ய கடத்தி வந்தது தெரியவந்தது.
திருப்பூர்:
திருப்பூர் நல்லிக்கவுண்டன்பாளையம் பிரிவில் அரசால் இலவசமாக வழங்கக்கூடிய ரேஷன் அரிசியை காரில் கடத்தி செல்வதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி, கிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் நல்லிக்கவுண்டன்பாளையம் பிரிவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசால் இலவசமாக வழங்கக்கூடிய 635 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து காரில் இருந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருப்பூரை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 52) என்பதும், அவர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கள்ளச்சந்தையில் வடமாநிலத்தவர்களுக்கு விற்பனை செய்யவும், மாட்டு தீவனத்துக்கு கொடுக்கவும் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை போலீசார் கைது செய்து 635 கிலோ ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- 200 மூட்டை ரேசன் அரசி, பருப்பு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- ரேசன் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு ரெயில் நிலையம், மீஞ்சூர் மற்றும் தடப்பெரும்பாக்கம் ,கிருஷ்ணாபுரம், பகுதியில் பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்கர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 200 மூட்டை ரேசன் அரசி, பருப்பு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவற்றை பஞ்செட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். ரேசன் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ரேஷன் அரிசியை குடோனில் பதுக்கி வைத்து அது கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு சென்று கள்ளச் சந்தையில் விற்க இருந்தது தெரிய வந்தது.
- சுமார் 10 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி கடத்துவதாக குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் வளர்மதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வளர்மதி மற்றும் போலீசார் ஓமலூர் அருகே உள்ள ஆட்டுக்காரனூர் கிராமம் முத்து குமரேசன் என்பவரின் குடோனில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு சுமார் 10 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக சேலம் கிச்சிப்பாளையம் சிதம்பரபிள்ளை காடு பகுதியைச் சேர்ந்த ராஜி என்பவரது மகன் கார்த்திகேயன் என்ற மைனா கார்த்திகேயன் என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
அப்போது ரேஷன் அரிசியை குடோனில் பதுக்கி வைத்து அது கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு சென்று கள்ளச் சந்தையில் விற்க இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து சுமார் 10 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி மொத்தமாக, வெளிமாநிலங்களுக்கு கடத்த வைத்திருப்பது தெரியவந்தது.
- பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே ஒலிமுகமதுபேட்டை ஹாஜி நகர் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், குடிமைப்பொருள் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை ஏ.டி.எஸ்.பி.அருண், கண்காணிப்பாளர் கீதா, துணை கண்காணிப்பாளர் நாகராஜன் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தலை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டனர்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஒலிமுகமதுபேட்டை அருகே ஹாஜி நகர் பகுதியில் உள்ள பிலால் என்பவரது வீட்டிற்கு சென்றனர். வீட்டில் உள்ள அறைகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 50 கிலோ கொண்ட 30 மூட்டைகளில் சுமார் 1,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி மொத்தமாக, வெளிமாநிலங்களுக்கு கடத்த வைத்திருப்பது தெரியவந்தது. எனவே, ஒலிமுகமதுபேட்டையை சேர்ந்த பிலால் (வயது 37), இடைதரகர்களாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த மொய்தீன் அப்துல் காதர் (52), திருக்காலிமேட்டை சேர்ந்த நாராயணமூர்த்தி (35) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கு பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
- சிங்கிரிப்பள்ளி என்ற இடத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் இளங்கோ மற்றும் அதிகாரிகள், நேற்று அதிகாலை கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே உள்ள சிங்கிரிப்பள்ளி என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த டாடா சுமோ காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 24 மூட்டைகளில் 1200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அரிசியை காருடன் பறிமுதல் செய்த அதிகாரிகள், அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்களிலும், டாடா சுமோ கார் மற்றும் அந்த காரை ஓட்டி வந்த கிருஷ்ணகிரி அடுத்த மூங்கில்புதூர் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (வயது24) என்பவரையும், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், மூங்கில்புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடகாவிற்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
- கபிஸ்தலம் காவிரி ஆற்று பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- 19 மூட்டைகளில் 950 கிலோ ரேஷன் புழுங்கல் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.
தஞ்சாவூர்:
தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அருண், ரேஷன் அரிசி பதுக்கலை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
பொது வினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை பதுக்கி விற்பவர்களை கண்டறிந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவின் பேரில் திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தஞ்சாவூர் உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம்,
சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தஞ்சை அருகே கபிஸ்தலம் காவிரி ஆற்று பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அங்கு 19 மூட்டைகளில் 950 கிலோ ரேஷன் புழுங்கல் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து நடத்திய விசாரணையில் மேலகபிஸ்தலத்தை சேர்ந்த ரகுபதி (வயது 32) என்பவர் மாடுகளுக்கு தீவனம் கொடுப்பதற்காக ரேஷன் அட்டைதாரர்களிடம் புழுங்கல் அரிசியை விலைக்கு வாங்கி அதனை பதுக்கி வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து ரகுபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பதுக்கி வைத்திருந்த 950 கிலோ ரேஷன் அரிசி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உதவ வேண்டும்
திருப்பூர் :
தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் சென்னையில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் டி.ஜி.பி. அருண் உத்தரவுப்படி, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பொதுமக்கள் 18005995950 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்.
இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் சார்பில் திருப்பூர் ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள், கரடிவாவி சோதனை சாவடி, உடுமலை பஸ் நிலையம், குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை அலுவலகம் ஆகிய இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உதவ வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- கட்டணமில்லா தொலைபேசி 1800 599 5950 எண் வழங்கப்பட்டுள்ளது.
- அறிவிப்பு பலகையை தருமபுரி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர் வைத்துள்ளனர்.
தருமபுரி,
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் காவல்துறை இயக்குநர் அருண் உத்திரவுப்படி ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் போலீசாரை எளிதாக தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி 1800 599 5950 எண் வழங்கப்பட்டுள்ளது.
இந்த எண் பொதுமக்களை எளிதில் சென்றடையும் வகையில் கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலையம், பேருந்து நிலையம், தொப்பூர் டோல்கேட், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அலுவலகம் ஆகிய இடங்களில் அறிவிப்பு பலகையை தருமபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினர் வைத்துள்ளனர்.
- 100 கிலோ ரேஷன் அரிசி குவியல், குவியலாக கொட்டப்பட்டு இருந்தது.
- விசாரணை நடத்தி வருகிறோம் என கூறினார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளது. இதன் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? மற்றும் பொருட்கள் முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா? என அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.இந்தநிலையில் ஊட்டி ஆர்.கே.புரம் சாலையில் உள்ள புதரில், பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி கொட்டப்பட்டு கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட வழங்கல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட வழங்கல் துறை அலுவலர் வாசுகி தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில் 100 கிலோ ரேஷன் அரிசி ஆங்காங்கே குவியல், குவியலாக கொட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் வாசுகி கூறுகையில் ரேஷன் அரிசியை மர்மநபர்கள் கடத்தி செல்லும்போது அதிகாரிகளிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க இங்கு கொட்டி விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என கூறினார்.
- வெட்டுகாட்டுப்புதூரில் சிலர் ரேஷன் அரிசியை கடத்தவதாக வந்த தகவல் கிடைத்தது.
- குற்றபுலணாய்வு உதவி ஆய்வாளர் சதீஷ் குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள வெட்டுகாட்டுப்புதூரில் சிலர் ரேஷன் அரிசியை கடத்தவதாக வந்த தகவலை அடுத்து நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றபுலணாய்வு உதவி ஆய்வாளர் சதீஷ் குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பரமத்தி வேலூர், பழைய பை-பாஸ் சாலையில் உள்ள வெட்டுக்காட்டுப்புதூர் மாரியம்மன் கோயில் பகுதியில் இருந்து வந்த லாரியை மடங்கி விசாரணை செய்தனர். இதில், 15 சாக்கு மூட்டைகளில் 750 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ரேஷன் அரிசியை கடத்தி வந்த பரமத்தி அருகே பிராந்தகத்தை சேர்ந்த சங்கர் மகன் மணிகண்டன் ( வயது 39), புதுச்சத்திரம், கல்யாணி பகுதியை சேர்ந்த மருதன் மகன் பழனிவேல் (60), பரமத்திவேலூர் அருகே கோட்டணம்பாளையத்தை சேர்ந்த பெரியசாமி மகன் ராஜேந்திரன்(30), அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன்(23) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்த போலீசார், இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சோதனையில் சரக்கு ஆட்டோவில் 50 கிலோ கொண்ட 30 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 1500 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.
- ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் அருகே உள்ள வெங்கரை பேருந்து நிறுத்தம் அருகே நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையிலான போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் சரக்கு ஆட்டோவில் 50 கிலோ கொண்ட 30 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 1500 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.அதனையடுத்து சரக்கு ஆட்டோவில் ரேசன் அரி சியை கடத்தி வந்த மோகனூர் தாலுகா, கீழ்பாலபட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரஞ்சித்குமார் (வயது 21), அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (42) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும், 1500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்