என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "bridge"
- போக்குவரத்து சிக்னல்களை அகலப்படுத்த திட்டம் நடந்து வருகிறது.
- மேலமடை சந்திப்பில் பாலம் அமைகிறது.
மதுரை
மதுரை மாநகர் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை மாநகரில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ள போக்குவரத்து நெரி சலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு பல்வேறு முயற்சிகளை போக்குவரத்து போலீ சாரும், மாநகராட்சி மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்டு வருகின்ற னர்.
அந்த வகையில் மதுரை யில் போக்குவரத்து நெரி சல் மிக்க ஒன்றாக சிவகங்கை ரோடு உள்ளது. அண்ணா பஸ் நிலைய சந்திப்பில் இருந்து மேல மடை சந்திப்பு வரை உள்ள பகுதிகளில் உள்ள சாலை யில் சாதாரண நேரங்களில் கூட போக்குவரத்து நெரி சல் அதிகமாக காணப்படு கிறது.
அண்ணா நகர், தெப்பக் குளம், கே.கே.நகர், மாட்டுத் தாவணி போன்ற நகரின் முக்கிய பகுதிகளுக்கான இணைப்பு சாலைகள் சிக்னல்களில் சந்திக் கின்றன. மேலும் அரசு ஆஸ்பத்திரி, கலெக்டர் அலுவலகம், முக்கிய மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பூங்கா மால்கள், கல்லூரிகள் உள்ளன.
மதுரை நகரில் இருந்து திருச்சி, சென்னை, தூத்துக் குடி நான்கு வழிச்சாலை, ரிங்ரோடு செல்லும் வாக னங்களும் இந்த சாலையை பயன் படுத்தி வருகின்றனர். அண்ணா பஸ் நிலையம், ஆவின் பாலகம், மேலமடை சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
தினசரி பல்லாயிரக் கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றன. இதனால் வாக னங்கள் சிக்னல்களில் அதிக நேரம் நீண்ட வரிசை யில் வேண்டி உள்ளது. இந்த நிலையில் இந்த சாலையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்கவும், வாகனங்கள் சிரம மின்றி செல்லவும், இந்த மூன்று சிக்னல் பகுதிகளை அகலப் படுத்தி மேம்படுத்தி நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக நிலம் கையகப் படுத்தும் படுத்தும் பணி களை மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் வருவாய்த் துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிய வருகிறது. அத்துடன் மேலமடை சந்திப்பில் அதிக நெரிசல் இருப்பதால் அங்கு மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அண்ணா பஸ் நிலையம், ஆவின், ேமலமடை ஆகிய 3 சிக்னல்களிலும் 45 முதல் 50 அடி வரை சாலையை அகலப்படுத்தி ரவுண்டானா அமைக்கவும் திட்டமிட்டுள் ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
மதுரை மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிவகங்கை ரோட்டில் உள்ள 3 முக்கிய சிக்னல்களை அகலப்படுத்தி மேம்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் சாலையை சீரமைக்கும் பணிகள் தொடங்கும்.
இதற்காக சுமார் ரூ.160 கோடி திட்ட மதிப்பீட்டில் சாலையை மேம்படுத்தும் பணி மற்றும் பாலம் அமைக்கும் பணி மேற் கொள்ளப்பட உள்ளது. மேலமடை சந்திப்பில் பாண்டிகோவில் ரோடு, ஆவின் ரோட்டை இணைக்கும் வகையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலம் அமைக்கப்பட உள்ளது.
- திருமருகல் முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று உள்ளது.
- பாலத்தில் உள்ள விரிசலால் விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் திருமருகல் முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று உள்ளது.
இந்த பாலம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
இந்த பாலம் வழியாக திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம், மதுரை, விழுப்புரம், சென்னை, வேலூர், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இதனால் இந்த சாலை போக்குவரத்து அதிகம் கொண்ட முக்கிய சாலையாக உள்ளது.
இந்த நிலையில் முடிகொண்டான் ஆற்று பாலத்தில் இணைப்பு பகுதிகளில் உள்ள இரும்பு தகடுகள் சேதம் அடைந்து பாலத்தில் விரிசல் விழுந்து வருகிறது.
இந்த விரிசலால் விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.
இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
எனவே விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் முன்னர் ஆபத்தான நிலையில், பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்ய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரெடிேமடு பாலங்களை பொருத்தி அதிகாரிகள் சாதனை
- அடுத்த நாள் காலையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டது
கோவை,
கோவை மாநகரில் நாளுக்கு நாள் போக்கு வரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனை சமாளிக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் சாலை கட்டமைப்பு வசதிகள், பாலப்பணிகள் ஆகியவற்றை மேம்படுத்தி வருகின்றனர்.
கோவை மாநகர பகுதியில் பகல்நேரத்தில் சாலைப்பணிகளை செய்வது மிகவும் சவாலான விஷயம். இந்தநிலையில் கோவை துடியலூர் பகுதியில் கழிவு நீர் ஓடைப்பாலம் அமைப்பது என மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி மாநகராட்சி 4-வது வார்டு தொழிற் பூங்காவிற்கு செல்லும் முக்கிய சாலையில், ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை பயன்படுத்தி ஒரே நாள் இரவில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. அடுத்த நாள் காலையில் மேற்கண்ட பாலம்பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டது.
கோவை மாநகராட்சியில் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை பயன்படுத்தி ஒரே நாள் இரவில் கழிவுநீரோடை பாலம் கட்டப்பட்டு உள்ளது இதுவே முதல்முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில் இது சிறிய பாலம் ஆகும். தற்போது இதற்கு ரெடிேமடு பாலங்கள் வந்து விட்டன. வேறு ஒரு இடத்தில் தயார் செய்து அப்படியே பொருத்தி விடலாம். அதே போலத்தான் நேற்று இரவும் அந்த இடத்தில் சிறுபாலம் அமைக்கப்பட்டு உள்ளது என்றனர்.
- ஆனைவாரி மேட்டு தெரு இடையிலான சாலையை கடக்கும் பொழுது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
- இது குறித்து தகவல் அறிந்து புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ அருண்மொழி தேவன் நேரில் வந்து பார்வையிட்டார்.
சேத்தியா தோப்பு, ஆக .18-
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த ஆனைவாரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு ஆனைவாரி மேட்டு தெரு இடையிலான சாலையை கடக்கும் பொழுது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இது குறித்து ஆனைவாரி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் அண்ணாதுரை மற்றும் கிராம மக்கள் 100- க்கு மேற்பட்டோர் இந்த இடத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் அல்லது சுரங்க பாதை அமைக்க வேண்டும் என ஒன்று திரண்டு வந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து புவனகிரி தொகுதிஎம்.எல்.ஏ அருண்மொழி தேவன் நேரில் வந்து பார்வையிட்டார். மேலும் இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தொடர்பு கொண்டு பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும் தேசிய நெடுஞ்சாலை நகாய் திட்டஅலுவலரிடம் பேசி மேம்பாலம் அல்லது சுரங்க பாதை அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
- திருச்சி மாரீஸ் பாலத்தை புதிதாக அமைக்க மாநகராட்சி சார்பில் ரூ.35 கோடிக்கு ஒப்பந்தம்
- போக்குவரத்தில் மாற்றம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை
திருச்சி,
திருச்சி மாரீஸ் திரையரங்கம் அருகேயுள்ள சுமார் 150 ஆண்டுகள் பழைமையான ரெயில்வே மேம்பாலம், மிகவும் குறுகலாகவும், உயரமாகவும் இருப்பதால் அதை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தின் ஒருபகுதியில் மழையால் மண் சரிந்ததால் ப ாலம் வலுவிழந்தது. இதனால் கனரக வாகனங்கள் பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்துக்காக அந்தப் பாலம் ரூ.2.90 ே காடியில் சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு புதிய பாலம் அமைப்பது குறித்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இது தொடர்பாக மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன்படி ரூ.35 கோடிக்கான ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக, இந்த வழி போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும். பின்னர் பாலத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய பாலம் அமைக்கும் பணிகள் ஓரிரு மாதங்களில் தொடங்கப்படும் என மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- பெரிய புலியூர் பகுதிக்கு சென்று வர பாலம் அமைத்து தர வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்
- இந்த பகுதியில் விவசாய நிலங்கள், ஏராளமான குடி யிருப்புகள், விசைத்தறி க்கூடங்கள் உள்ளன.
ஈரோடு,
ஈரோடு கலெக்டர் அலு வலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பொது மக்கள் தங்களுடைய பிரச்ச னைகள் குறித்து கலெக்ட ரிடம் மனுக்களை வழங்கினர். அப்போது பெரிய புலியூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் அ வர்கள் கூறியிருப்பதாவது:-எங்கள் பகுதியில் மாருதி நகர், அம்மன் நகர் உட்பட பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் செல்ல பள்ளம் ஓடையின் குறுக்கே பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த பகுதியில் விவசாய நிலங்கள், ஏராளமான குடி யிருப்புகள், விசைத்தறி க்கூடங்கள் உள்ளன. எனவே இப்பகுதி மக்களுக்கு பாலம் அமைத்துக் கொடு த்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.
- மழைக்காலங்களில் தெரு முழுவதும் சகதி காடாக காட்சியளிக்கிறது.
- நயினார்குளம் சாலையில் ஓடையை எடுத்துவிட்டு சிறிய அளவிலான பாலம் அமைக்க வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனிடம் இன்று டவுன் மண்டல சேர்மன் மகேஸ்வரி தலைமையில் கவுன்சிலர்கள் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், உலகநாதன், ரவீந்தர் ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை டவுன் சத்தியமூர்த்தி தெரு, தெப்பக்குளம் கீழத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்வதற்காக ஓடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் கழிவுநீர் சீராக செல்வதில்லை.
மழைக்காலங்களில் தெப்பக்குளம் கீழ தெருவில் கழிவு நீர் ஓடைகளிலிருந்து தண்ணீர் வெளியே வந்து அந்த தெரு முழுவதும் சகதி காடாக காட்சியளிக்கிறது.இந்த நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.
எனவே இதற்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக நயினார்குளம் சாலையில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஓடையை எடுத்துவிட்டு சிறிய அளவிலான பாலம் அமைக்க வேண்டும். அப்போதுதான் மழைக்காலங்களிலும் எவ்வித தடையும் இன்றி தண்ணீர் செல்லும். எனவே அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறியிருந்தனர்.
- பாலத்தை பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
- வெள்ளையாற்றில் படகு குழாம் அமைத்து சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும்.
நாகப்பட்டினம்:
பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவருமான வேல்முரு கன் தலைமையி லான தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழுவில் சட்டமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, அருள், கருணாநிதி, சக்கரபாணி, பழனியாண்டி, மோகன், ராமலிங்கம், ஜெயக்குமார் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி செருதூர் மீனவ கிரா மத்தின் இடையே வெள்ளையாறில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பாலத்தை பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
அப்போது வெள்ளை யாற்றை தூர்வாரி தரைதட்டாமல் படகுகள் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என கிராம மீனவர்கள் கோரிக்கைமனு அளித்தனர்.
மேலும் வெள்ளையாற்றில் படகு குழாம் அமைத்து சுற்றுலா தளமாக மாற்ற வேண்டுமென மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் கோரிக்கை குழுவினருக்கு விடுத்தார்.
தொடர்ந்து வெள்ளப்ப ள்ளம் மீனவ கிராமம், நாகை ஆதிதிராவிட நல விடுதி, நாகை அரசு மருத்துவமனை, நாகை புயல் பாதுகாப்பு மையம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
இதில் நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பஸ் ஏற வெட்டாற்றை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
- தட்டிப்பாலத்தில் ஒவ்வொரு நாளும் ஆபத்தான முறையில் பெண்கள் கடந்து சென்று வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஒக்கூர் ஊராட்சியில் விளா ம்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது.
இக்கிராம த்தில் சுமார் 100- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராமத்திற்கு இதுநாள் வரை அரசு, தனியார் பஸ்களோ கிடையாது. நாகப்பட்டினம் செல்வதற்கு 10 கிலோ மீட்டர் நடந்து வந்து கீழ்வேளூரில்தான் பஸ் ஏற வேண்டும்.
விளாம்பாக்கத்தில் இருந்து கீழ்வேளூர், நாகப்ப ட்டினம், திருவாரூரில் படிக்கும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், வயல் வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் ஆற்றுக்கு அடுத்துள்ள கோகூர் சென்று பஸ் ஏற வெட்டா ற்றை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதற்காக கிராமத்தினரே தட்டிப்பாலம் அமைத்து சென்று வருவதும் மழை, வெள்ளக் காலத்தில் அந்த தட்டிப்பாலம் ஆற்றில் அடித்து செல்வதுமாக தொடர்கதை யாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஆற்றில் தற்போது உள்ள உடைந்த தட்டிப்பாலத்தில் ஒவ்வொரு நாளும் ஆபத்தான முறையில் மாணவர்கள் மற்றும் பெண்கள் கடந்து சென்று வருகின்றனர்.
எனவே உடனடியாக ஒரு ஆம்புலன்ஸ் செல்லும் அளவுக்காவது சிமெண்ட் பாலம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாலத்தில் இருந்து கீழே விழுந்த வியாபாரி பலியானார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை நெல்பேட்டை காயிதே மில்லத் 6-வது தெருவை சேர்ந்தவர் முகமது நாசர். இவரது மகன் முகமது தாஹா (30). இவர் பிளாஸ்டிக் பைகளை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு அபியா பேகம் என்ற மனைவியும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
நேற்று ஏ.வி. மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க வேகமாக பிரேக் பிடித்துள்ளார். இதில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து பால தடுப்பில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முகமது தாஹா பாலத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் முகமது தாஹாவின் மனைவி அபியா பேகம் புகார் செய்தார். போக்குவரத்து புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
- ஆறுமுக நேரி ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரியில் மக்கள் நுகர்வோர் பேரவையின் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
பேரவையின் மாநில தலைவர் செல்வன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் கொம்பையா, அமைப்புச் செயலாளர் தியாகராஜன், பொருளாளர் லட்சுமணன், அலுவலக முதன்மை செயலாளர் செல்வகுமார், துணைச் செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் லட்சுமணன் வரவேற்று பேசினார்.
மாநில செயலாளர் கல்லை சிந்தா அறிமுக உரையாற்றினார். சாகுபுரம் டி.சி.டபுள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன், ஆழ்வை ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜனகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கொம்மடிக்கோட்டை கல்லூரி முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை, சென்னை பேராசிரியர் வனஜா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, தென்திருப்பேரை பேரூராட்சி துணைத் தலைவர் அமுதவல்லி, தனியார் நிறுவன மேலாண்மை இயக்குனர் பாக்கியராஜ் ஆகியோரும் பேசினர்.
விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதன்படி டி.சி.டபுள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன், ஆழ்வை ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜனகர், ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணை தலைவர் கல்யாணசுந்தரம், ஏ.கே.எல். கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வெங்கடேஷ், சமூக சேவகர் அமிர்தராஜ், அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் மகராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், ஊராட்சி மன்ற தலைவர்களான ஆழ்வார்திருநகரி சாரதா பொன்இசக்கி, தென் திருப்பேரை மணிமேகலை ஆனந்த், வரண்டியவேல் வசந்தி ஜெயக்கொடி ஆகியோர் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் தானியங்கி சிக்னல் அமைத்து போக்குவரத்தை சீர் செய்யக் கோரியும், ஆறுமுக நேரி ரெயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்க வலியுறுத்தியும், காயல்பட்டினம் வடபாக வருவாய் எல்லையில் உள்ள ஆறுமுகநேரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளை ஆறுமுகநேரி கிராம வருவாய் என அரசாணை வெளியிட வலியுறுத்துவது. இது தொடர்பாக உண்ணாவிரதம் இருப்பது என்றும் தொழில் நிறுவனங்களுக்கு எதிராக செயல்படும் நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரியும் மூடப்பட்ட தொழிற்சாலைகளை விரைவில் திறக்க வலியு றுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பேரவையின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அப்துல்லா சாகிபு நன்றி கூறினார்.
- ஆத்தூரில் முக்காணி -ஆத்தூரை இணைக்கும் தாமிரபரணி ஆற்றின் கடைசி பாலம் உள்ளது.
- இதையடுத்து விவசாயிகள் அதிக ஆழத்தில் தண்ணீரை மோட்டார் மூலம் எடுத்து பாசனம் செய்து வருகின்றனர்.
ஆத்தூர்:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளமாக்கும் தாமிரபரணி ஆறு தென் மாவட்டத்திலேயே உற்பத்தியாகி தென் மாவட்டத்திலேயே கடலில் கலக்கும் பெருமை பெற்றது.
கடைசி பாலப்பகுதி
இந்த ஆறு நெல்லை மாவட்டம் பொதிகை மலையில் உற்பத்தியாகி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புன்னக்காயல் கடலில் கலக்கிறது. ஆத்தூரில் முக்காணி -ஆத்தூரை இணைக்கும் தாமிரபரணி ஆற்றின் கடைசி பாலம் உள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போது இந்த பாலத்திற்கு மேல் வெள்ளம் ஓடி தூத்துக்குடி மாவட்டத்தை பரபரப்பாக்கும். அப்போது தூத்துக்குடி- திருச்செந்தூர் போக்குவரத்து நிறுத்தப்படும்.
இந்த பாலப்பகுதியில் தற்போது தண்ணீர் முழுமையாக வற்றி தரைகள் வெளியில் தெரிகிறது. இதனால் ஆத்தூர் சுற்று வட்டாரங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதையடுத்து விவசாயிகள் அதிக ஆழத்தில் தண்ணீரை மோட்டார் மூலம் எடுத்து பாசனம் செய்து வருகின்றனர்.
விவசாயிகள் எதிர்பார்ப்பு
மேலும் தண்ணீர் அதிகமான அளவு கீழ் செல்லும் போது அருகில் உள்ள கடல்நீர் ஊருக்குள் வந்து நிலத்தடி நீர் உப்பாக மாற வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே தற்போது மழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் குடிநீர் தேவைக்கு மட்டுமல்லாமல் விவசாயிகளும் பாபநாசம் அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றிற்கு தண்ணீர் திறப்பதை எதிர்பார்த்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்