search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "College"

    • திருவாதவூர் சிபெட் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் மதுரைவெங்கடேசன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் மத்திய அரசின் சிபெட் கல்லூரி உள்ளது.

    இங்கு 2022-23 ம் ஆண்டுக்கான புதிய மாணவ-மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் மதுரைவெங்கடேசன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இதில் மேலூர் நகராட்சி தலைவர் முகமது யாசின், திருவாதவூர் ஊராட்சி மன்ற தலைவர், இளவரசன், சிபெட் கல்லூரி இயக்குநர் மற்றும் தலைவர், டாக்டர் பிரகலாதன், மூத்த சிபெட் அதிகாரிகள், அலுவலர்கள்், அனைத்து மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கல்லூரியில் நன்கு படித்து முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளை வெங்கடேசன் எம்.பி. வழங்கினார்.

    அவர் மாணவர்க ளிடையே பேசும்போது, தொழில் கல்வியின் முக்கியத்துவத்தையும், சிபெட் கல்லூரியின் வளர்ச்சி மற்றும் மாணவர்க ளுக்கான பங்களிப்பு, அவர்களுக்கான வேலைவாய்ப்பு, திறன் மேம்பட சிபெட் கல்லூரி உதவுகிறது என்று தெரிவித்தார்.

    • நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் திசையன்விளை பகுதி பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.
    • கூட்டப்புளி புனிதஜோசப் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும் பெற்றனர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் திசையன்விளை பகுதி பள்ளி மாணவர்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. 14 வயதிற்கு உட்பட்டோர் ஆண்கள் பிரிவில் திசையன்விளை டேனியல் தாமஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி 3-வது இடத்தையும், இடிந்தகரை பிஷப் ரோஜ் மேல்நிலைப்பள்ளி 2-வது இடத்தையும், கூட்டப்புளி புனிதஜோசப் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும் பெற்றனர்.

    19 வயதிற்கு உட்பட்டோர் ஆண்கள் பிரிவில் மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி 2-வது இடத்தையும், இடிந்தகரை பிஷப் ரோஜ் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கானகோப்பையை ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் லாரன்ஸ், கல்லூரியின் முதல்வர் சுரேஷ், தங்கராஜ் தாம்சன் ஆகியோர் வழங்கி பாராட்டினார்கள். போட்டியினை விஜய அச்சம்பாடு செந்தில் ஆண்டவர் அருள்நெறி உயர்நிலைப்பள்ளியும், ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து நடத்தினர்.

    • பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக புறப்பட்டனர்.
    • மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் பேரணியாக சுற்றி வந்து நிறைவடைந்தது.

    தஞ்சாவூர்,

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று மனநல மருத்துவத்துறை சார்பில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்தப் பேரணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில் மருத்துவக் கல்லூரி மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தற்கொலை எண்ணம் வராமல் தடுப்பது எப்படி என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக புறப்பட்டனர்.

    மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் பேரணியாக சுற்றி வந்து நிறைவடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருது துரை, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் நமச்சிவாயம், நிலையை அலுவலர் செல்வம், கண்காணிப்பாளர் மத்தியாஸ், சென்னை மனநலத்துறை பேராசிரியர் டாக்டர் அசோகன், மனநலத்துறை தலைவர் மீனாட்சி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர்(பொறுப்பு) ரா.முத்துக்கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட அலுவலர் அபுல்கலாம் ஆசாத் செய்திருந்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில், தேசிய குடற்புழு நீக்க நாளினை முன்னிட்டு, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சோனகன்விளை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் குடற்புழு நீக்க மாத்திரைகள் மாணவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர்(பொறுப்பு) ரா.முத்துக்கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    இதில் ஆரம்ப சுகாதார செவிலியர்கள் ஜெபா கிறிஸ்டி, சண்முகலட்சுமி, அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை,பேராசிரியர் மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட அலுவலர் அபுல்கலாம் ஆசாத் செய்திருந்தார்.

    • இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது.
    • முதல்வர் அப்பாஸ் மந்திரி மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி விதிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா நடந்தது. தமிழ்த்துறை தலைவர் இப்ராஹிம் வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாகான் தலைமை தாங்கினார்.

    முதல்வர் அப்பாஸ் மந்திரி மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி விதிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். ஆட்சிக்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், சுயநிதி பாடப் பிரிவு இயக்குநர் ஷபினுல்லாகான், சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா, உடற்கல்வி இயக்குநர் காளிதாசன் ஆகியோர் பேசினர்.

    இதில் ஆட்சிக்குழு பொருளாளர் அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சிராஜுதீன், அப்துல் சலீம், உஸ்மான் அலி மற்றும் முதலாமாண்டு மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். துணைமுதல்வர் ஜஹாங்கிர் நன்றி கூறினார். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் அப்துல் ரஹீம் ஒருங்கிணைத்தார்.

    • முக்கிய நிகழ்வான அன்னையின் பிறந்தநாள் விழா வரும் எட்டாம் தேதி நடைபெறுகிறது.
    • இதனை ஈடுசெய்யும் விதமாக வரும் 24-ம் தேதி சனிக்கிழமை அன்று அலுவலர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு வேலை நாள்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா 29ஆம் தேதி முதல் வரும் 8 தேதி வரைநடைபெறுவதை முன்னிட்டு அதன் முக்கிய நிகழ்வான அன்னையின் பிறந்தநாள் விழா வரும் எட்டாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு அலுவலர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது எனவும் இதனை ஈடு செய்ய விதமாக வரும் 24ஆம் தேதி சனிக்கிழமை அன்று அலுவலர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு வேலை நாளாக அறிவித்தும் விடுமுறை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

    • இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் முகாம் நடந்தது.
    • முகாமில் 750 மாணவ-மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முதல்வவர் அப்பாஸ் மந்திரி வழிகாட்டலின் படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் சிறப்பு முகாம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளையான்குடி, தாலுகா அலுவலகத்துடன் இணைந்து நடத்தியது.

    இதில் தாசில்தார் அசோக்குமார், மண்டல துணை தாசில்தார் முத்துவேல், சாலைகிராமம் துணை வட்டாச்சியர் பிரபாகரன், கிராம நிர்வாக அலுவலர்கள் சதீஷ் குமார், ராமகிருஷ்ணன் மற்றும் லதா ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் 750 மாணவ-மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர். முகாமினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது, அப்ரோஸ், சேக் அப்துல்லா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். ஆதார் எண்ணைவாக்காளர் அட்டையுடன் இணைக்க வேண்டியதன் அவசியம் குறித்த கருத்தரங்கமும் நடந்தது.

    • காயகல்ப பயிற்சி, எளிய உடற்பயிற்சிகள் மாணவிகளுக்கு கற்பிக்கப்பட்டன.
    • கல்பம் மற்றும் யோகாசன பயிற்சிகளால் மனது ஒருநிலைப்படும்.

    உடுமலை :

    உடுமலை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை மற்றும் அரசு கலைக்கல்லூரி இணைந்து கல்லூரி மாணவிகளுக்கு யோகாசன பயிற்சிகளை நடத்தினர். இதில் காயகல்ப பயிற்சி ,எளிய உடற்பயிற்சிகள் மாணவிகளுக்கு கற்பிக்கப்பட்டன. உடுமலை மனவளக்கலை அறக்கட்டளை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்கள் பயிற்சியை நடத்தினர். கல்பம் மற்றும் யோகாசன பயிற்சிகளால் மனது ஒருநிலைப்படும் .படிக்கும் மாணவிகள் மனநிலை ஒருமைப்படுவதற்கு இந்த யோகாசனம் மற்றும் காயகல்ப பயிற்சிகள் உதவும் என பயிற்சி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

    4 நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில் கல்லூரி மாணவ மாணவிகள்ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் படிக்கும் மாணவர்கள் அதன் பலனை உணர முடியும் என தெரிவித்தனர்.

    • கல்லூரி பேராசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடுபுகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அகத்தியர் நகரை சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 58). இவர் உசிலம்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் மாமனார் வீட்டிற்கு சென்றிருந்தார்.

    அவர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் முன் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் வீட்டில் இருந்த 1 பவுன் தங்க நகை, ரூ. 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டான்.

    இதுபற்றி அர்ஜுனன் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடுபுகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • கல்லூரியில் மோதலில் 2 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
    • அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவர்களை அரிவாளால் வெட்டிய 17 வயது மாணவரை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தனியார் கலைக்கல்லூரி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கல்லூரியில் படிக்கும் குப்ப நத்தத்தைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் ஜெகதீஸ் (வயது 19),திருநகர் சொர்ணம் காலனியை சேர்ந்த ஆண்டி மகன் முனீஸ்வரன் (19)ஆகியோருக்கும், அதே கல்லூரியில் படிக்கும் காமராஜர் புரம், முத்து ராமலிங்கத் தேவர் நகரை சேர்ந்த 17 வயது மாணவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 17 வயது மாணவர், தன்னுடன் தகராறு செய்த ஜெகதீஷ், முனீஸ்வரன் ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.இதுபற்றி அறிந்த கல்லூரி முதல்வர் வெங்கடே ஸ்வரன் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவர்களை அரிவாளால் வெட்டிய 17 வயது மாணவரை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 5 பேர் மாயமானார்கள்.
    • அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள எட்டக்காபட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 38). இவரது மகள் கஸ்தூரி (19). இவர் நாகர்கோவிலில் உள்ள என்ஜினீயர் கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கஸ்தூரி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை முருகன் ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். அதில் மகள் மாயமானது தொடர்பாக கல்லூரியில் படிக்கும் கடலூர் மாவட்டம் அரசன்குடியை சேர்ந்த கருப்பையா என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிபிட்டுள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை அண்ணாநகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி காளீஸ்வரி (29). இவர்களுக்கு கனிஷ்கா என்ற மகளும், சர்வேஷ்வரனும் என்ற மகனும் உள்ளனர். சம்பவத்தன்று காளீஸ்வரி தனது 2 குழந்தைகளுடன் மாயமானார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பழைய ஏழாயிரம் பண்ணை பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பெண் மாயமானார். இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதில் கார்த்திக் என்பவர் மைனர் பெண்ணை கடத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்காத மாணவ- மாணவியர்கள் கல்லூரி அலுவலகத்திற்கு நேரடியாக வந்து விண்ணப்பித்து சேர்க்கை பெற்றுக் கொள்ளலாம்.
    • கலந்தாய்வி–ன் போது 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பல அசல் மற்றும் மூன்று நகல்களுடன் கொண்டு வர வேண்டும்.

    குத்தாலம்:

    குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான 3ம் கட்ட கலந்தாய்வு பி.எஸ்.சி., கணிதம், கணினி அறிவியல், பிகாம்., வணிகவியல், பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம் ஆகிய அனைத்து பாடப்பிரிவுகளுக்கு மாணவ, மாணவியர் சேர்க்கை 25-ந்தேதி நடைபெற இருப்பதால் மேற்கண்ட பாடப்பிரிவுகளுக்கு சேர விரும்பும் பிளஸ்2 தேர்ச்சி பெற்று இதுவரை இக்கல்லூரிக்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்காத மாணவ, மாணவியர் கல்லூரி அலுவலகத்திற்கு நேரடியாக வந்து விண்ணப்பித்து சேர்க்கை பெற்றுக் கொள்ளலாம்.

    கலந்தாய்வி–ன் போது 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 உள்ளி–ட்டவற்றை அசல் மற்றும் மூன்று நகல்களுடன் கொண்டு வர வேண்டும்.

    சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அன்றே கல்லூரியில் கட்டணம் ரூ.3350 செலுத்தி கல்லூரியில் சேர்க்கை பெற்றுக் கொள்ளுமாறு கல்லூரி முதல்வர் முனைவர் வெ.விஜயேந்திரன் தெரிவித்துள்ளார்.

    ×