என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "College"
- கல்லூரி மாணவி மாயமானார்.
- போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளி க்குடி போலீஸ் சரக்கத்தி ற்குட்பட்ட டி.வலை யங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது 17 வயது மகள் விருது நகரில் உள்ள தனி யார் கல்லூ ரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்ப வி ல்லை. பல இட ங்களில் தே டிப் பார்த்தும், விசாரித்தும் கண்டு பிடிக்க முடிய வில்லை. இதை தொடர்ந்து மகளை கண்டு பிடித்து தரு மாறு தாய் கருப்பாயி கள்ளிக்குடி போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மா ணவியை தேடி வருகின்றனர்.
- அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
- 537 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
திருமங்கலம்
திருமங்கலம் காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்பு அரசு கலைக் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நடை பெற்றது. கல்லூரி முதல்வர் லட்சுமி வரவேற்றார். விருது நகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட துறை களை சேர்ந்த 537 மாணவ, மாணவிகளுக்கு பட்டங் களை வழங்கினார்.அப்போது அவர் பேசு கையில், பட்டம் பெற்றதன் மூலம் அறிவை மேம்படுத்திக் கொண்டு நாட்டிற்கு மாணவ, மாணவிகள் தங்களுடைய செயல்பாடு களை அளிக்க வேண்டும் என்றார்.
பட்டமளிப்பு விழாவில் முன்னாள் முதல்வர் புவனேஸ்வரன், காங்கிரஸ் நிர்வாகி உலகநாதன், வட்டார தலைவர் முருகேசன், கவுன்சிலர் அமுதா சரவணன், நகர மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், நகரச் செய லாளர் ஸ்ரீதர் துணைத் தலைவர் ஆதவன் அதியமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சாகிர் உசேன் கல்லூரி விளையாட்டு விழா நடந்தது.
- தமிழ்த்துறை தலைவர் இப்ராகிம் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள சாகிர் உசேன் கல்லூரியின் 53-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது. முதல்வர் அப்பாஸ் மந்திரி வரவேற்றார். ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாகான் தலைமை தாங்கினார். சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முகமது முஸ்தபா வாழ்த்துரை வழங்கினார்.
உடற்கல்வி இயக்குநர் காளிதாசன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கல்லூரி செயலர் பொன்னாடை அணிவித்தார். சிறப்பு விருந்தினராக இளையான்குடி பாரத ஸ்டேட் வங்கி தலைமை மேலாளர் காயத்ரி கலந்து கொண்டு பேசினார். பல்கலைக்கழக தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பல்கலைக்கழக அளவில் மற்றும் கல்லூரியில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் பரிசு வழங்கினார். ஆட்சிக்குழு பொருளாளர் அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அப்துல் சலீம், அபூபக்கர் சித்திக், சிராஜுதீன், சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர் சபினுல்லாகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழ்த்துறை தலைவர் இப்ராகிம் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.
- 19 வயது கல்லூரி மாணவி சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை,
- இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் அடுத்த கட்டியாங்குப்பத்தை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து திடீரென்று காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
- எஸ்.என்.கல்லூரியில் என்.எஸ்.எஸ்.முகாம் நடந்தது.
- விஜயகுமார் வரவேற்று பேசினார்.
மதுரை,
மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக ஏழு நாள் சிறப்பு முகாம் வலையங்குளம், குசவன்குண்டு மற்றும் சோளங்குருணி கிராமங்களில் நடைபெற்றது.
முகாமின் தொடக்க விழாவில் திட்ட அலுவலர் விஜயகுமார் வரவேற்று பேசினார். முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார்.
வலையங்குளம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தனசேகரன், சித்த மருத்துவர் லதா ராணி, சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி, ரூட்செட் மைய இயக்குநர் சுந்தராச்சாரி, ஒருங்கிணைப்பாளர் கோகிலா, விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் கோபிநாத் பேசினர்.
நிறைவு விழாவில் திருமங்கலம் டி.எஸ்.பி. வசந்தகுமார் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் கண்ணன், கல்லூரியின் சுயநிதிப்பிரிவு இயக்குநர் ஜெயக்கொடி கலந்து கொண்டனர்.
மாணவர்கள் கிராமங்களில் உள்ள ஊரணிகளை சுத்தம் செய்து பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தனர். திட்ட அலுவலர்கள் ராமகிருஷ்ணன், இருளப்பன் முகாமிற்குரிய ஏற்பாடுகளை செய்தனர்.
- கல்லூரியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
- உதவி பேராசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் சுந்தரேசுவரி கல்வியியல் கல்லூரியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி செயலர் திலீபன்ராஜ் தலைமை தாங்கினார். முதல்வர் மல்லப்பராஜ் வரவேற்றார். ரெட்டியபட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கருணாகரபிரபு போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து பேசினார்.
சமூக நலத்துறை அலுவலர் ஜாஸ்மின், கண் மருத்துவர் அழகர்ராஜ், வட்டாட்சியர் ரங்கசாமி, கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பேசினர். உதவி பேராசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.
- சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
- சுகாதார ஆய்வாளர் ராகவன் பரிசோதனைகளை செய்தார்.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் பயோமெடிக்கல் துறையின் சார்பில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான உடல் மற்றும் ரத்த பரிசோதனை முகாம் நடந்தது.
இந்த முகாமில் பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தொடங்கி வைத்தார். இதில் டாக்டர் செந்தட்டிகாளை, சுகாதார ஆய்வாளர் ராகவன் மற்றும் மருத்துவ குழுவினர் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு உடல், கண், ரத்த பரிசோத னைகளை இலவசமாக செய்தனர்.
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை பயோமெடிக்கல் துறை தலைவர் மணிகண்டன், பேராசிரியர்கள் பபிதா தங்கமலர், கிருத்திகா ஆகியோர் செய்திருந்தனர்.
- கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் 20 வயது கல்லூரி மாணவி சம்பவத்தன்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.
- அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் கல்லூரி மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் பாதிரிக்குப்பத்தை சேர்ந்த தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் 20 வயது கல்லூரி மாணவி சம்பவத்தன்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் கல்லூரி மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆண்டு விழா நடந்தது.
- மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 23-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் பாலமுருகன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி செயலர் அ.பா.செல்வராசன் தலைமை தாங்கினார்.
அவர் பேசுகையில், காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு நிறைவின் பொழுது தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகள் நலன் கருதியும், சுற்று வட்டார கிராமப்புற குழந்தைகளின் நலன் கருதியும் இந்தகல்லூரி உருவாக்கப்பட்டது.
மாணவர்கள் படித்தால் மட்டும் போதாது வேலைவாய்ப்பை பெறுவதற்கான தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அலைபேசியில் நேரத்தை தேவையில்லாமல் செலவு செய்வதை விடுத்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த கல்வியாண்டு முதல் பட்டப்படிப்பின் இறுதியில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர் களுக்கு, அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணம் முழுவதும் திரும்ப வழங்கப்படும் என்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ.வும், அரசன் குழும தலைவருமான அசோகன் பேசுகையில், இன்றைய சூழலில் மாணவர்கள் படிப்புடன் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்துல்கலாம் கூறியது போல கனவு காண வேண்டும். அந்த கனவை நினைவாக்க கடுமையாக உழைக்க வேண்டும்.
தொழில் முனைவோராக உருவெடுத்து பலருக்கு வேலை வழங்கும் நிலைக்கு மாணவர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். தோல்விகளை கண்டு துவண்டுவிடாமல் அந்த தோல்வியை உங்கள் வெற்றியின் படிக்கட்டாக மாற்றி வாழ்வில் முன்னேற வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் மாணவர்கள் மனஉறுதியை கைவிடாமல் பெற்றோரின் நலனை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.
இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு நளினி அசோகன் பரிசு வழங்கினார். விழாவில் ஆங்கிலத்துறை, வணிகவியல் துறை, தமிழியல் துறை பேராசிரியர்கள் எழுதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
முன்னதாக துணை முதல்வர் முத்துலட்சுமி வரவேற்றார். முடிவில் வணிகவியல் (கணினிப்பயன்பாட்டியல்) துறைத்தலைவர் நளாயினி நன்றி கூறினார்.
- விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 11-ந் தேதி நடக்கிறது
- விருதுநகர் மாவட்ட கலெக்டர் பரிசுகள் வழங்க உள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கத்தில் தமிழ் வளர்ச்சித்துறை மூலம் ஆண்டுதோறும் மாவட்ட வாரியாக கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
2022-23-ம் ஆண்டுக்கான பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் வருகிற ஜூன் மாதத்திலும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் வருகிற 11-ந் தேதி (செவ்வாய்கிழமை) அன்றும் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் நடத்தப்பட உள்ளன. பள்ளி மாணவர்க ளுக்கான போட்டிகள், விதிமுறைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
கல்லூரி மாணவர்க ளுக்கான போட்டிகளில் அனைத்து அரசு, தனியார், அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகள், பொறியியல், மருத்துவக் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்கலாம்.
ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் ஒரு கல்லூரியில் இருந்து மொத்தம் 3 மாணவர்கள் பங்கேற்கலாம். கல்லூரி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களைத் முதல்வர் ஒப்புதலுடன் விருதுநகர் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரிலோ, அஞ்சல் முலமாகவோ, மின்னஞ்சல் – (tamilvalar.vnr@tn.gov.in) முலமாகவோ 10.4.2023 - க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
போட்டிகளின் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் பரிசுகள் வழங்க உள்ளார். பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம்பரிசு ரூ.7ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5ஆயிரம், என்ற வீதத்தில் பரிசுத்தொகைகள் வழங்கப்பட உள்ளது.
மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள பரிந்துரை செய்யப்படுவார்கள்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சுசிலா மேற்கொண்டு வருகிறார் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- செய்யது அம்மாள் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.
- ஏற்பாடுகளை செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாக அலுவலர் சாகுல் செய்திருந்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் செய்யதம் மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 10-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா செய்யது அம்மாள் அறக்கட்டளை சேர்மன் டாக்டர் பாபு அப்துல்லா தலைமையில் நடந்தது. தாளாளர் செல்லத்துரை அப்துல்லா முன்னிலை வகித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் டாக்டர் பழனிச்சாமி 821 இளங்கலை பட்டம் முடித்த மாணவ- மாணவிகளுக்கும், 89 முதுகலை பட்டம் முடித்த மாணவ மாணவிகளுக்கும் பட்டங்களை வழங்கி பேசினார்.
செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பி னர்கள் டாக்டர் செய்யதா அப்துல்லா, செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர். முதல்வர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.அழகப்பா பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்ற செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் 5 பேருக்கு தங்கப்பதக்கம் வழங்கி பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டது.
இதேபோல் பல்கலைக்கழக அளவில் முதல் 10 ரேங்குக்குள் பெற்ற 52 மாணவ,மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.விழா ஏற்பாடுகளை செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாக அலுவலர் சாகுல் செய்திருந்தார்.
- கேரள மாநிலத்திற்கு சுற்றுலா செல்ல மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
- நிலைதடுமாறி விழுந்து அருகில் உள்ள ஒரு மரத்தில் மோதியது.
பரமத்திவேலூர்:
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதி அர்பன் பகுதியைச் சேர்ந்தவர் மோடன் வெங்கிட்டு. இவரது மகன் மோடன் கிரண் (26). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்தார்.
இவரது நண்பர் திருப்பதி, அசோக் நகரை சேர்ந்தவர் விஜயபிரதாப்ரெட்டி (25). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் திருப்பதியில் இருந்து புறப்பட்டு கேரள மாநிலத்திற்கு சுற்றுலா செல்ல மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். நாமக்கல் அருகே உள்ள புலவர்பாளையம் சர்வீஸ் ஸ்டேஷன் அருகே கல்லூரி மாணவர் மோடன் கிரண் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலையின் இடது புறத்தில் இருந்த ஒரு பள்ளத்தில் எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி விழுந்து அருகில் உள்ள ஒரு மரத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த மோடன் கிரணையும், அவரது நண்பர் விஜய பிரதாப்ரெ ட்டியையும் அவ்வழியாக வந்தவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கல்லூரி மாணவர் மோடன் கிரண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் விஜயபிரதாப்ரெட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்