search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Darshan"

    சேலம், நாமக்கல்லில் ஒரே நாளில் 5 சிவாலயங்களில் சிறப்பு தரிசனம் செய்த பக்தர்கள்.
    ஆட்டையாம்பட்டி:

    ஏற்காடு மலையில் பிறக்கும் புண்ணிய நதி திருமணிமுத்தாறு. இது சேர்வராயன் மலைத்தொடர் மஞ்சவாடி கணவாய் அருகே உற்பத்தியாகி சேலம் மாநகர், நாமக்கல் மாவட்டத்தின் ஊடாக செல்லும் ஓர் ஆறாகும். இந்த ஆறு சேலம் நகரம் வழியாக உத்தமசோழபுரம், ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி வழியாக 75 மைல்கள் ஓடி பரமத்தி வேலூர் அருகே காவிரியில் கலக்கிறது. 
     
    இந்த நதிக்கு மணிமுத்தா நதி, வீர மணிமுத்தாறு என்ற பல்வேறு பெயர்கள் உண்டு. ஒருகாலத்தில் இந்த ஆற்றில் முத்துச் சிப்பிகள் இருந்தன; முத்து எடுக்கப்பட்டது என்பது மக்களின் நம்பிக்கை. 

    பிரசித்திப் பெற்ற செவ் வாய்ப்பேட்டை மாரியம்மன் மூக்கில் அணிந்திருக்கும் மூக்குத்தியின் முத்து திருமணிமுத்தாற்றில் இருந்து எடுக்கப்பட்டது என்பார்கள். அதன் நதிக்கரை எங்கும் ஏராளமான நந்தவனங்களும் அன்னதான சத்திரங்களும் இருந்தன. இன்றும் அணைமேடு அருகில் ஒரு நந்தவனம் இருக்கிறது. சேலம் ஸ்தல புராணத்தில்  ‘சேலம் மணிமுத்தா நதியின் ஒரு திவலை நீர் உண்டால் உடல் பாதகங்கள் அகலும் பரம ஞானம் உண்டாகும்’ என்ற பாடல் இதன் பெருமையை உணர்த்துகிறது.

    திருமணிமுத்தாறு ஆற்றங்கரையில் சுகவனேஸ்வரர் (சேலம்), கரபுரநாதர் (உத்தமசோழபுரம்), வீரட்டீஸ்வரர் (பில்லூர்), பீமேஸ்வரர் (மாவுரெட்டி), திருவேணீஸ்வரர் (நஞ்சை இடையாறு) ஆகிய 5 திருத்தலங்களும் பஞ்ச பாண்டவர்களால் வணங்கப்பட்டவை. இந்த 5 கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டால் அனைத்து பாவங்களும் நீங்கி முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம். பஞ்ச காலத்தில் பீமேஸ்வரரை வழிபட்டால் நல்ல மழை பொழியும் என்பதும் நம்பிக்கை.  

     மன்னராட்சி காலத்தில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் திருமணிமுத்தாற்றின் கரையோரம் இருக்கும் 5 சிவன் கோவில்களையும் மன்னர்கள் ஒரே நாளில் தரிசித்த வரலாறும் உண்டு.  அந்த வழக்கத்தில் சேலம் மாவட்ட மக்கள் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இந்த 5 சிவாலயங்களையும் ஒரே நேரத்தில் தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

    அதன்படி அமாவாசையை முன்னிட்டு நேற்று சேலம் பக்தர்கள் ஒரே நாளில் திருமணிமுத்தாறு கரையோரப் பகுதியில் உள்ள 5 சிவாலயங்களில் சாமி தரிசனம் செய்தனர். முதல் கோயிலாக சேலம் சுகவனேஸ்வரர் ஆலயம், இரண்டாவதாக உத்தமசோழபுரம் கரபுரநாதர் சுவாமி கோயில், மூன்றாவதாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பில்லூர் வீரட்டேஸ்வரர் ஆலயம், நான்காவதாக மாவுரெட்டி பீமேஸ்வரர் ஆலயம், ஐந்தாவதாக நன்செய் இடையார் திருவேலீ ஈஸ்வரர் ஆலயம் ஆகிய 5 சிவாலயங்களில் ஒரே நாளில் 60 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் அபிஷேக ஆராதனை பூஜையில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    • 62 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் வழங்கியது.
    • ரூ.30 கோடி செலவில் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    திருப்பதிக்கு தொலைதூரத்தில் இருந்து வர முடியாத பக்தர்களுக்காக நாட்டின் முக்கிய நகரங்களில் ஏழுமலையான் கோவில் கட்டும் பணியில் திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது.

    இதுவரை ஆந்திராவுக்கு வெளியே சென்னை, டெல்லி, ஐதராபாத், புவனேஸ்வர் கன்னியாகுமரி, ஜம்மு ஆகிய நகரங்களில் 6 கோவில்களை தேவஸ்தான நிர்வாகம் கட்டியுள்ளது.

    ஜம்மு பகுதி மஜின் கிராமத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டது.

    இதற்கு தேவையான 62 ஏக்கர் நிலத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் வழங்கியது.

    இங்கு ரூ.30 கோடி செலவில் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு கோவிலை திறந்து வைத்தார். பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    அவருக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து காலை 9.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று மாலை இந்த கோவிலில் சீனிவாச திருக்கல்யாணம் நடக்கிறது.

    மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பையில் 7-வது ஏழுமலையான் கோவில் கட்ட நேற்று காலை பூமி பூஜை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நவிமும்பையில் கோவில் கட்டுவதற்காக ரூ.500 கோடி மதிப்புள்ள 10 ஏக்கர் நிலத்தை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக மகாராஷ்டிரா அரசு வழங்கியுள்ளது. 

    • நேற்று முன்தினம் கணபதி பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், அஷ்டத் பலி, புற்று மண் எடுத்தல், காப்பு கட்டுதல் ஆகியவை நடந்தது.
    • நாளை முதல் மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு மதுரா துண்டுக்காடு கிராமத்தில் அமைந்துள்ளது அழகுமுத்து மாரியம்மன் கோவில். இது மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு கணபதி, முருகன், தட்சணாமூர்த்தி, நொண்டிவீரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா இன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான யாக சாலையில் நேற்று முன்தினம் கணபதி பூஜை, வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், அஷ்டத் பலி, புற்று மண் எடுத்தல், காப்பு கட்டுதல் ஆகியவை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை அனுக்ஞை, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் நடந்தது. மாலைஸ்ரீ லலிதா சகஸ்ரநாம பாராயணம், பஞ்சசூத்ர பாராயணம், நவக்கிரஹ பூஜை. நாடி சந்தானம், திரவிய ஹோமம், தேவாரம் திருவாசகம், மந்தாபுஷ்பம், பூர்ணாஹூதி, மஹாதீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது. இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு கோ பூஜை, லஷ்மி பூஜை, தன பூஜை, சாமிக்கு காப்பு கட்டுதல், தத்துவார்ச்சனை ரக்ஷாபந்தனம், ஸ்பர்ணாஹூதி, யாத்ரா தானம், தீபாராதனை ஆகியவை நடைபெற்று .

    10 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்கஅஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது கூடியிருந்த பக்தர்கள் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி எனவிண் அதிர கோஷம் எழுப்பினர். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.,கன்டோன்மென்ட் சண்முகம், சத்யா பன்னீர்செல்வம், பா.ம.க. மாவட்ட தலைவர் வடக்குத்து ஜெகன், வன்னியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் குபேரன், சாத்திப்பட்டு மதுராவில் உள்ள 16 கிராம மக்கள் ஊர் முக்கியஸ்தர்கள், கோவில் நிர்வாகத்தினர், விழா குழுவினர், இளைஞர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்தது. இரவு வீதி உலா காட்சி நடக்கிறது. நாளை முதல் மண்டல அபிஷேகம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை சாத்திப்பட்டு துண்டுகாடு கிராமவாசிகள், விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு துண்டு காடு கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்காதை முன்னிட்டு காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • 34 ஆண்டுகளுக்கு பிறகு ஏழூர் பல்லக்கு புறப்பாடு நடைபெற்றது.
    • பல்லக்கு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு தங்கியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கரந்தை கருணாசுவாமி கோவில் எனப்படும் வசீடேஸ்வரர் கோவிலில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு ஏழூர் பல்லக்கு புறப்பாடு நடைபெற்றது.

    கண்ணாடி பல்லக்கில் சோமாஸ்கந்தர், பெரியநாயகி அம்மன் ஆகியோரும், வெட்டிவேர் பல்லக்கில் வசிஷ்டர், அருந்ததி அம்மன் ஆகியோரும் எழுந்தருளினர்.

    பின்னர் சுங்கான் திடல், பள்ளி அக்ரஹாரம், திட்டை, குலமங்கலம், கூடலூர், குருங்கலூர் வழியாக சென்ற பல்லக்கு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு தங்கியது.

    நேற்று காலை மீண்டும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் இருந்து பல்லக்கு புறப்பட்டு பக்தர்கள் புடைசூழ சின்ன அரிசிக்கார தெரு, கீழவாசல் ,அரண்மனை உள்பட பல்வேறு இடங்களின் வழியாக சென்று கருணாசுவாமி கோவிலுக்கு இரவில் சென்று அடைந்தது.

    இதனைத் தொடர்ந்து பல்லக்கில் உள்ள சுவாமி, அம்மனுக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கொட்டும் மழையிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆதிகல்ப காலத்தில் இறைவனால் படைக்கப்பட்ட பல தலங்கள் பிரளய கால வெள்ளத்தில் மூழ்கிப் பின் தோன்றின.
    • திருவிளையாடல் நடந்த திருத்தலமே திட்டை ஆகும்.

    தஞ்சை மாவட்டம் திட்டை கிராமத்தில் அமைந்துள்ளது வசிஷ்டேஸ்வரர் கோவில். இங்கு தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ள குரு பகவானுக்கு வருடம் தோறும் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் நாடு முழுவதும் இருந்து ஏராளமாக பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டு குரு பெயர்ச்சியை முன்னிட்டு 12 ராசிக்காரர்களும் பலன்பெற வேண்டி லட்சார்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்கள் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற உள்ளது. ஆதிகல்ப காலத்தில் இறைவனால் படைக்கப்பட்ட பல தலங்கள் பிரளய கால வெள்ளத்தில் மூழ்கிப் பின் தோன்றின.

    ஆனால் அந்த பேரூழிக்காலத்திலும் அழியாத பெருமை உடையது திட்டை ஸ்தலம். கைலாசம் கேதாரம், காசி, ஸ்ரீ சைலம், காஞ்சி. சிதம்பரம் போன்ற சுயம்பு தலங்களில் வரிசையில் இருபத்தி இரண்டாவது சுயம்புத்தலமாக விளங்குவது திட்டை. பிரளய காலத்தில் இவ்வுலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டது.

    மும்மூர்த்திகளும் மாயை வசப்பட்டு நீர் சூழ்ந்தும், இருள் கவிந்தும், இருந்த இந்தப் பிரமாண்ட உலகத்தைக் கண்டு அஞ்சினர். பரம்பொருளை பலவாறு வேண்டி துதித்தனர். அப்போது பார்வதி பரமேஸ்வரனின் அருளாள் ஊழிப்பெரு வெள்ளத்தின் நடுவில் நீண்ட பரப்பளவுள்ள ஒரு மேட்டுப் பகுதியை கண்டு வியந்தனர்.

    அம்மேட்டுப்பகுதியில் ஜோதிமயமான ஒரு சிவலிங்கம் தரிசனம் அளித்தது. அதனை மும்மூர்த்திகளும் கண்டு அதிசயித்து பூஜித்தனர். இந்த லிங்கத்தினின்று காட்சி தந்த இறைவன் மும்மூர்த்திகளிடம் ஏற்பட்ட மயக்கத்தை அகற்றி அபயமளித்து அவர்களுக்கு படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் அதற்கான வேத, வேதாந்த சாஸ்திர அறிவையும் அருளினார்.

    இந்த திருவிளையாடல் நடந்த திருத்தலமே திட்டை ஆகும். இங்கு இறைவன் தானாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என அழைக்கப்பட்டார். வசிஷ்டர் இங்கு வந்து தவம் புரிந்து பிரம்ம ஞானிகளில் தலை சிறந்தவர் ஆனார். அதனால் இத்தல இறைவன் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்பட்டார்.

    இத்திருக்கோவில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் சந்நிதியின் விமானத்தில் சந்திர காந்தக்கல், சூரிய காந்தக்கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. இக்கற்கள் காற்றில் இருந்து ஈரப்பதத்தை தம்முள் ஈர்த்து வேதிவினை ஏற்பட்டு 24 நிமிடங்களுக்கு ஒரு சொட்டு நீரை சுவாமியின் மீது சொட்டுகின்றது. இத்தகைய அமைப்பு வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாது.

    • வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயனார் புறப்பாடு நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பின்னர், வண்ணமலர்களால் சுவாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு தீபா ராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர், வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயனார் புறப்பாடு நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல், தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகிய நாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தி யன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீ ஸ்வரர் கோவில், வெள்ளப்ப ள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வ ரமுடையார் கோவில், அகரம் அழகிய நாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோவில், ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் கோவில், கத்தரிப்புலம் கோவில் குத்தகை காசிநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களில் பிரரோஷ வழிபாடு நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி ஆகிய மாதங்களின் முதல்நாள் விஷ்ணுபதி புண்ணிய காலம்.
    • ஆண்டாள், ஆழ்வார்களும் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே உள்ள வல்லத்தில் புகழ்பெற்ற பெற்ற யோக நரசிம்மப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு உள்ள யோக நரசிங்கப் பெருமாள் மற்றும் தேவராஜ பெருமாள் இருவரும் சுதை வடிவில் இருப்பதால் இவர்களுக்கு ஆண்டு தோறும் விண்ணுபதி புண்ணியம் காலத்தில் தைல காப்பு சாற்றி வழிபடுகின்றனர்.

    வைகாசி, ஆவணி, கார்த்திகை மற்றும் மாசி ஆகிய மாதங்களின் முதல்நாள் விஷ்ணுபதி புண்ணிய காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாட்கள் பெருமாளை வழிபட உகந்த நாட்களாகும்.

    பொதுவாக திதிகளில் சிறந்ததான ஏகாதசி திதியை மஹாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்ததாக சாஸ்திரம் கூறுகிறது. ஏகாதசி அன்று ஒருவர் புரியும் பூஜைகளும், அனுஷ்டிக்கும் விரதமுறைகளும் மற்ற அனைத்திலும் சிறந்த பலன் தருகிறது.

    அதன்படி இன்று வைகாசி மாதம் முதல் தேதி மற்றும் ஏகாதசி விஷ்ணுபதி புண்ணியம் காலத்தை முன்னிட்டு இக்கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களாக அனுமன், இராமர், கோமளவல்லி தாயார், யோக ஐயப்பன், ஆண்டாள் ஆழ்வார்களும் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.

    சங்கு சக்கரம் கூடிய யோக நரசிம்மப் பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பட்டர்கள் மற்றும் சுவாதி கைங்கரிய குழுவினர் செய்து இருந்தனர்.

    • காலபைரவர் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்
    • தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை மெயின் ரோட்டில் வன்மீகநாதர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் காலபைரவர் தனி சன்னிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    இந்த கோவிலில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

    முன்னதாக பைரவருக்கு மஞ்சள்,சந்தனம்,பால், பன்னீர், தயிர்,தேன், இளநீர், மாப்பொடி,திரவியப் பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    பின்னர் சாமிக்கு வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • யோக நரசிம்மர் மற்றும் லெட்சுமி நரசிம்மர் சக்கரத்தாழ்வாரை பார்த்த வண்ணம் இருப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
    • ஏராளமான பக்தர்கள் சித்திரை நட்சத்திர வழிபாட்டில் கலந்து கொண்டு தரிசித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடக்கு வீதியில் ராஜ கோபால சுவாமிகோவில் அமைந்துள்ளது.

    இங்கு மூலஸ்தானத்தில் விஜய வல்லி சுதர்சன வல்லி சமேதராக ஶ்ரீ சக்கரத்தாழ்வார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    தஞ்சாவூர் பகுதியில் சக்கரத்தாழ்வாருக்கு என தனிக் கோவிலாக திகழ்கிறது.

    தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தா னத்தை சார்ந்த 88 கோவில்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

    பொதுவாக சக்கரத்தாழ்வார் பின்புற த்தில் யோக நரசிம்மர் இருப்பது வழக்கம்.

    இக்கோவிவில் சக்கரத்தா ழ்வார் பின்புறத்தில் யோக நரசிம்மர் இல்லை.

    அதற்கு பதிலாக இராஜ கோபுரத்தின் பின்புறத்தில் யோக நரசிம்மர் மற்றும் லெட்சுமி நரசிம்மர் சக்கரத்தாழ்வாரை பார்த்த வண்ணம் இருப்பது இத்தலத்தின் சிறப்பு ஆகும்.

    ஒவ்வொரு தமிழ் மாதமும் சித்திரை நட்சத்திரம் அன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி சித்திரை மாதம் சித்திரை நட்சத்தி ரத்தை முன்னிட்டு இன்று காலை சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பாலாபிஷேகம், சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    மூன்று சக்கரத்தாழ்வார்கள் ஒருசேர பக்தர்களுக்கு காட்சி தந்தார்கள்.

    தஞ்சாவூர் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சித்திரை நட்சத்திரம் வழிபாட்டில் கலந்து கொண்டு சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்தனர்.

    சித்திரை நட்சத்திர சிறப்பு வழிபாட்டிற்காக ஏற்பாடுகளை தஞ்சா வூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்கா வலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    • வரதராஜ பெருமாள் ஆலய சித்தர் திருவிழா கோலகாலமாக நடைபெற்று வருகின்றது,
    • முத்து பல்லாக்கில் சாமி வீதி உலா மற்றும் கரகாட்ட நிகழ்வு நடைபெற உள்ளது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் வலசக்காடு ஊராட்சியில் முத்துமாரியம்மன், வரதராஜ பெருமாள் ஆலய சித்தர் திருவிழா கோலகாலமாக நடைபெற்று வருகின்றது, இந்த திருவிழா நாளை புதன்கிழமை தொடங்கி 10 நாள் நிகழ்வாக நடைபெறுகிறது. முதல் நாள் காப்பு கட்டும் நிகழ்வும் அதனை தொடர்ந்து சாமி வீதி உலாவும் நடைபெறுகின்றது. வருகின்ற 4- ம் தேதி வியாழக்கிழமை 9ம் நாள் விழாவை முன்னிட்டு முத்து பல்லாக்கில் சாமி வீதி உலா மற்றும் கரகாட்ட நிகழ்வு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து 5- ம்தேதி வெள்ளிக்கிழமை 10ம் நாள் அலகு குத்துதல் ,காவடி எடுத்தல் ,தேர் இழுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கடைசி நாளான 11 - ஆம் தேதி வியாழக்கிழமை பக்த பிரகலாத நாடகமும் அதனைத் தொடர்ந்து 12 - ம் தேதி வெள்ளிக்கிழமை அரிச்சந்திரா நாடகம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் கிராம மக்கள் அனைவரும் சுவாமியை பயபக்தியுடன் தரிசித்து வருகின்றனர் இதற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் அறங்காவலர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • சீர்காழி சட்டநாதர் சுவாமி கோவிலில் ரவீந்திரநாத்குமார் எம்.பி. சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார்.
    • அதிமுகவில் என்ன மாற்றங்கள் வேண்டு மானாலும் நிகழலாம்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் சுவாமி கோவிலில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார். கோயிலில் அனைத்து சன்னதிகளிலும் அர்ச்சனை செய்து வழிப்பட்ட ரவீந்திர நாத்குமார், தொடர்ந்து தருமபுர ஆதனத்திடம் ஆசி பெற்றார்.

    பின்னர் செய்தியா ளர்களிடம் அவர் கூறுகையில், திருச்சி மாநாடு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என ஒன்றரை கோடி தொண்டர்கள் என்ன நினைத்தார்களோ அது நடந்துள்ளது.

    அ.தி.மு.க பொதுச்செ யலாளர் பிரச்சனை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதே பொதுக்குழு தான் ஒருங்கிணைப்பாளரையும் தேர்ந்தெடுத்தது.

    அதிமுகவிலிருந்து யார், யாரெல்லாம் வெளியே சென்றார்களோ அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும்.

    இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் நான். எனது காரில் அதிமுக கொடியை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்றால் ஒன்றை கோடி தொண்டர்களும் பயன்ப டுத்தக் கூடாது என்று தான் அர்த்தம். அதிமுக உட்க்கட்சி விவகாரத்தில் மத்தியஅரசு தலையிட வில்லை.

    சீர்காழி சட்டநாதர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் அனைத்தும் தருமையா தினத்தின் பாதுகாப்பில் இருக்க அரசு நடவடிக்கை வேண்டும்பாராளுமன்றத் தேர்தலில் ஓ.பி.எஸ். , இ.பி.எஸ் இணைந்து நிற்பதற்கான சாத்தியம் உண்டா என்ற கேள்விக்கு, பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடங்கள் உள்ளன அதற்குள் அதிமுகவில் என்ன மாற்றங்கள் வேண்டு மானாலும் நிகழலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருகிற மே மாதம் 1-ம் தேதி திருக்கல்யாணமும், 3-ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
    • சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமரு கலில் ரத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை யொட்டி நேற்று முன்தினம் காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம்,நவக்கிரக ஹோமம், தனபூஜை நடைபெற்றது.

    மாலையில் வாஸ்து சாந்தி, அங்கரார்ப்பணம், ரிஷபந்த னம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை பஞ்சமூர்த்தி வீதி உலாவும் அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது குருமகா சன்னிதானம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள், கோவில் செயல் அலுவலர் முருகன்,தக்கார் தனலெட்சுமி ஆலய திருப்பணி குழுவினர், திருமருகல் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மே மாதம் 1-ம் தேதி திருக்கல்யாணமும், 3 -ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.

    ×