search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Darshan"

    • நாகநாத பிள்ளையார் கோவில் வாசலில் மணிகண்ட ரதம் தொடக்க விழா நடைபெற்றது.
    • தொடர்ந்து ரதத்தில் ஐயப்பனுக்கு விசு கனி தரிசனம் நடந்தது.

    தஞ்சாவூர்:

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விஷூ கனியுடன் மணிகண்ட ரதத்தில் எழுந்தருளிய ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் தஞ்சாவூர் நாகநாத பிள்ளையார் கோவில் அருகே நடந்தது.

    நாகநாத பிள்ளையார் சங்கடஹை சதுர்த்தி சொக்கனாவூர் ஐயப்ப சேவா சங்க கமிட்டியும் அகில பாரத ஐயப்ப சமாஜமும் இணைந்து விழாவை நடத்தின.

    மேலவீதி கொங்கனேஸ்வரர் கோவில் எதிரில் நாகநாத பிள்ளையார் கோவில் வாசலில் மணிகண்ட ரதம் தொடக்க விழா நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து ரதத்தில் ஐயப்ப சுவாமிக்கு விசு கனி தரிசனம் நடந்தது.

    பின்னர் பிள்ளையாருக்கு சிறப்பு அபிசேகமும், அலங்காரமும் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பன், பிள்ளையார் சுவாமிகளை தரிசனம் செய்தனர்.

    • சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள குதிரை சிலைக்கு வண்ணம் பூசபட்டது.
    • கலிதீர்த்த ஐயனார் சுவாமிக்குசிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் கிராமத்தில் உள்ள கலிதீர்த்த அய்யனார் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது.

    இக்கோவிலுக்கு பக்தர்கள் நேர்த்தி கடனுக்கு ஏராளமான குதிரை சிலை வைப்பது வழக்கம்.

    சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள குதிரை சிலைக்கு வண்ணம் பூசபட்டது.

    பின்னர் தங்ககுதிரை எடுக்கும் திருவிழா நடைபெற்றது.

    விழாவில் ஆயக்காரன்புலம் செல்லியம்மன் கோவிலில் இருந்து செண்டை மேளம் முழங்க, குதிரையாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், காவடி, தப்பு, கொம்பு உள்ளிட்ட நாட்டுபுற கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் பெண்கள் பால்குடம் எடுத்து வர 5 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து கலிதீர்த்த அய்யனார் கோவிலை வந்தடைந்தது வழிநெடுகிலும் பக்தர்கள் தங்ககுதிரைக்கு மாலை அணிவித்தனர்.

    இதையடுத்து கலிதீர்த்த ஐயனார் சுவாமிக்குசிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் நடைபெற்றது.

    இரவு வான வேடிக்கையும் அன்னதானமும் நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    • அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூரில் உள்ள வேதநாயகி அம்பாள் உடனுறை மேலமறைக்காடர் கோவிலில் உலக நன்மை வேண்டி ருத்ர யாகம் நடைபெற்றது.

    பின்னர், கடம் புறப்பாடு நடைபெற்று மேலமறைக்காடர், வேதநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருஞானசம்பந்தர் மன்றத்தினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • அம்மாப்பேட்டை கோதண்டராம சுவாமி கோவிலில் ராமநவமி பெருவிழா தொடங்கியது.
    • மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் தவழ்ந்த நவகிருஷ்ணன் அலங்காரத்துடன் எழுந்தருளினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை கோதண்டராம சுவாமி மற்றும் ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி பெருவிழா கடந்த 30ம் தேதி ஏகாந்த சேவையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து தினம் தோறும் பல்லக்கு, சேஷ வாகனம், கருடசேவை, ஹனுமார் வாகனம், யானை வாகனம், திருக்கல்யாணம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெண்ணைத்தாழி நவநீத சேவை நடந்தது.

    மலர்களால் அலங்கரி க்கப்பட்ட பல்லக்கில் தவழ்ந்த நவ கிருஷ்ணன் அலங்கா ரத்துடன் எழுந்தருளினார்.

    கோவில் மண்டபத்தில் நவநீத கிருஷ்ணனுக்கு சோடப உபச்சாரம் நடந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    பின்னர் பல்லக்கு கோவிலை வலம் வந்த நவநீத கிருஷ்ணர் நகரில் வீதி உலா வந்தது.

    வீடுகள் தோறும் பக்தர்கள் பூஜை செய்து வழிப்பட்டனர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • கோவில் பிரகாரங்களில் மேளதாளம் வாத்தியத்துடன் பெருமாள் உலா வந்தார்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த கண்டியூரில் 108 திவ்ய தேசத்தில் 15-வது தலமாக விளங்கி வரும் ஸ்ரீ அரசாப விமோசன பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் 6-வது நாள் விழாவான நேற்று பெருமாள் யானை வாகனத்தில் யாணைபாகன் கொண்டையுடன் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டதனால் வீதி உலா காட்சி நடைபெறாமல் ஐதீக முறைப்படி கோவிலில் பிரகாரங்களில் மேளதாளம் வாத்தியத்துடன் நாதஸ்வரம் வாசித்தும் பெருமாள் உலா வந்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்து வழிபட்டனர். 

    • பங்குனி பெருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சவுந்தரராஜ பெருமாள் திருக்கோவில் பங்குனி பெருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தினந்தோறும் பெருமாள் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    அதன்படி நேற்று 4-ம் நாள் விழாவான கருட சேவையை முன்னிட்டு சௌந்தரராஜ பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் வீதி உலா காட்சி நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டு இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் வருகிற 5ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

    • புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.

    வேதங்கள் பூஜை செய்து மூடிக்கிடந்த கதவை அப்பரும், சம்பந்தரும் தேவார பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாறு.

    அகஸ்தியருக்கு சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி அளித்த இடம்.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் உள்ள ராமநாதருக்கு ராமநவமியை முன்னிட்டு புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது.

    தொடர்ந்து, சிறப்பு பூஜை நடந்தது.

    பின்னர், ராமநாதருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    • பங்குனி மாத பிரமோற்சவ விழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • யானை ஓடும் காட்சியை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுர ஆதீனத்திற்கு உட்பட்ட அருள்மிகு தையல்நாயகிஅம்மன் உடனா கிய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது.

    நவகிரகங்களில் செவ்வாய் பரிகாரஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் முருகபெருமான் செல்வமுத்துக்குமா ரசுவாமியாக தனி சன்னிதியிலும், தன்வந்திரி சுவாமியும் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

    இக்கோயிலில் பங்குனி மாத பிரமோற்ச்சவ திருவிழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

    இவ்விழாவின் போது அருள்மிகு வைத்தியநாத சுவாமியும், தையல்நாயகி அம்மனும் தீர்த்தவாரிக்காக வீதியுலா செல்வார்கள், அதனை தொடர்ந்து நரி ஓட்டம் எனும் யானை ஓடும் ஐதீக நிகழ்ச்சி நடைபெறும், முருகபெருமானின் தந்தையாகிய வைத்தியநாதசுவாமியும், தாயாகிய தையல்நாயகி அம்மனும் தீர்த்த வாரிக்காக வீதியுலா செல்லும் போது ஆலயத்தில் தனியாக இருக்கும் முருக பெருமான் (செல்வவமுத்துகுமரசாமி) க்கு விளையாட்டு காட்டுவதற்காக யானை ஓடிவந்து, ஓடிவந்து வணங்கி விளையாடுவது ஐதீகம்.பங்குனி பிரம்மோற்ச்சவ விழாவின் நான்காம் நாளான வியாழக்கிழமை பரிவாரங்களுடன் அம்பாள் சுவாமி தீர்த்தவாரிக்கு புறப்பட்டனர்.

    சுவாமிகள் வீதியுலா செல்லும் வரை அமைதியாக நிற்கும் யானை, பின்னர் முருக பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளும் போது அதிவேகமாக ஓடி, ஓடி மீண்டும் திரும்பி ஓடிவந்து சப்தம் (பிளிருதல்) எழுப்பியவாறு முருகபெருமானை வணங்கி விளையாடியது.

    நரி ஓட்ட வைபவம் என்று அழைக்கப்படும் யானை ஓடும் இக்காட்சியை திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து அஸ்திரதேவர், விநாயகர், அம்பாள், சுவாமி, சண்டிகேஸ்வரர் வீதியுலா நடைபெற்றது.

    • மதுரை ராம நவமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மதுரை

    ராமபிரான் அவதரித்த தாக நாளாக கருதப்படும் ராமநவமி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பஞ்சாங்க குறிப்புகளின் படி நவமி திதி என்பது நேற்று 29-ந் தேதி இரவு 11.49 மணிக்கு தொடங்கி நாளை (31-ந் தேதி) அதி காலை 1.40 மணி வரை ஆகும்.

    நாடு முழுவதும் ராமநவமி வழிபாடு இன்று நடந்தது. ஜோதிட சாஸ்திரப்படி ராமர் பிறப்பதற்கு முன்பு உள்ள 9 நாட்கள் ஒரு விரத முறையாகவும், அதன் பிறகு வரும் 9 நாட்கள் ஒரு விரத முறையாகவும் அனுசரிக்கப் பட்டு வருகிறது. அதாவது சித்திரை மாதம் சுக்லபட்ச பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள 9 நாள் 'கர்ப்போஸ்தவம்' விரத காலமாகும். அடுத்த படியாக சித்திரை மாத சுக்லபட்ச நவமி திதி யில் இருந்து அடுத்து வரும் 9 நாட்கள் 'ஜன்மோதீஸவம்' விரத காலமாகும்.

    ராமநவமியின்போது காலை முதல் உணவு அருந்தாமல் விரதம் இருந்து ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்ச நேயரின் அருள் கிடைக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்த வர்கள் ஒன்று சேருவர். குடும்ப நலம் பெருகி, வறுமை, பிணி அகலும் என்பது நம்பிக்கை.

    இன்று ராமநவமியை யொட்டி மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் தென்மாட வீதி கமல ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில், மதனகோபால சுவாமி கோவில், மணி நகரம் இஸ்கான் கோவில் கூடலழகர் பெருமாள் கோவில், திருமோகூர் காளமேகப்பெருமாள் கோவில், ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோவில், தெற்கு கிருஷ்ணன் கோவில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், மதுரை மேலமடை தாசில்தார் நகர் சவுபாக்கியா கோவில், சோழவந்தான் சந்தானகிருஷ்ணன் கோபால்சாமி கோவில், திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ராமநவமி விழா கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது.

    இதில் முக்கிய நிகழ்ச்சியான ராமநவமி விழா இன்று கொண்டா டப்படுகிறது. இன்று கோவில் கொடிமரத்தின் முன்பு ராமர், சீதை, லட்சுமணன், அனுமனுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திருமஞ்சனம் நடந்தது. லட்சுமி நாராயணர், சஞ்சீவி ஆஞ்ச நேயர், யோக நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கருட பகவான் சின்னம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டு, பெருமாள்-தாயாருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • முக்கிய நிகழ்வான கல்கருட சேவை வருகிற 1-ந்தேதி நடைபெற உள்ளது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அடுத்த நாச்சியார்–கோயிலில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் கோவில் உள்ளது.

    108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக உற்சவர் பெருமாள்- தாயாருடன் கொடிமரம் அருகே எழுந்தருளி பட்டாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, மேளதாளங்களுடன் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கருட பகவான் சின்னம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டு, பெருமாள்-தாயாருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இக்கோவிலில், பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவிற்கு பதிலாக பிரகார உலாவாக நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான கல்கருட சேவை வருகிற (ஏப்ரல்) 1-ந்தேதி நடைபெற உள்ளது.

    தொடர்ந்து, 6-ந்தேதி உற்சவர் பெருமாள்-தாயாருடன் கோ ரதத்தில் பிரகார உலா நடைபெறுகிறது.

    8-ந்தேதி விடையாற்றி நிகழ்வுடன் விழா நிறைவடைகிறது.

    • திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான நெல்லையப்பர் சுயம்பு வாக தோன்றும் திருவிளையாடல் காட்சி இன்று நடைபெற்றது.
    • விழாவையொட்டி சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வரலாற்று நிகழ்ச்சி

    11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான சுவாமி நெல்லையப்பர் வேணு வனத்தில் சுயம்பு வாக தோன்றும் திருவிளை யாடல் காட்சி 4-ம் நாளான இன்று நடைபெற்றது.

    இந்த வரலாற்று திருவிளையாடல் நிகழ்ச்சி கோவில் உட்பிரகாரத்தில் தாமிர சபை மண்டபம் அருகே அமைந்திருக்கும் ஸ்தல விருட்சம் முன்பு நடைபெற்றது. தொடர்ந்து சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாரா தனையும் நடைபெற்றது.

    வீதி உலா

    நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    பங்குனி உத்திர திருவிழா வின் 4-ம் நாளான இன்று இரவு சுவாமி நெல்லை யப்பர்- காந்திமதியம்மாள் பஞ்ச மூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதிஉலா நடக்கிறது.

    • மீனாட்சி அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரார் சுவாமி கோவிலில் மாசி மக உற்சவம் கடந்த மாதம் 13-ந் தேதி உற்சவ கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நாள் தோறும் சுவாமி பூத வாகனம் அன்னப்பச்சி,வாகனம், வெள்ளி ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.

    முக்கிய திருவிழாவான திருக்கதவு அடைக்க திறக்கபடுதல் தேரோட்டம் தெப்பம் முதலிய நிகழ்ச்சிகள் நிறைவடைந்த நிலையில்சக்தி திருவிழாவில் மீனாட்சி அம்மன் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×