search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "district"

    • 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் கலைத்திருவிழா போட்டிகள் பள்ளி, வட்டார அளவில் நடத்தப்பட்டது.
    • பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 1,50,791 மாணவர்கள் கலந்து கொண்டு அதில் முதலிடம் பெற்ற 39,780 மாணவர்கள் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகளில் பங்கு பெற்றனர்.

    சேலம்:

    மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இவ்வாண்டும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் கலைத்திருவிழா போட்டிகள் பள்ளி, வட்டார அளவில் நடத்தப்பட்டது. இதில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 6 பிரிவுகளில் 33 இனங்களிலும் 9 மற்றும் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 9 பிரிவுகளில் 74 இனங்களிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 9 பிரிவுகளில் 81 இனங்களிலும் என மொத்தம் 188 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 1,50,791 மாணவர்கள் கலந்து கொண்டு அதில் முதலிடம் பெற்ற 39,780 மாணவர்கள் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகளில் பங்கு பெற்றனர்.

    தற்போது வட்டார அளவில் முதல் 2 இடங்கள் பெற்ற 11,177 மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

    அதன்படி மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் இன்று முதல் வருகிற 28-ந்தேதி வரை புனித பால் மேல்நிலைப்பள்ளி, பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, ஹோலி ஏஞ்சல் மெட்ரிக்பள்ளி, காமராஜர் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிறுமலர் தொடக்கப் பள்ளி, பத்மாவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சக்தி கைலாஷ் கல்லூரி உள்ளிட்ட 8 இடங்களில் நடைபெறுகிறது.

    தொடக்க விழா கலெக்டர் கார்மேகம் தலைமையில் இன்று மரவனேரி புனித பால் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    • தமிழகம் முழுவதும், தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வு நேற்று நடைபெற்றது.
    • இந்த தேர்விற்காக, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 1,409 பேர் விண்ணப்பம் செய்து ஹால் டிக்கட் பெற்றிருந்தனர்.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும், தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள 33 வட்டார கல்வி அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வு நேற்று நடைபெற்றது.

    தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் இந்த போட்டித் தேர்வு நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 மையங்களில் இந்த போட்டித் தேர்வு நடைபெற்றது.

    இந்த தேர்விற்காக, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 1,409 பேர் விண்ணப்பம் செய்து ஹால் டிக்கட் பெற்றிருந்தனர். ஆசிரியர் தேர்வு வாரிய விதிமுறைப்படி தேர்வு நடைபெற்றது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வு மையத்தை, மாவட்ட கலெக்டர் டாக்டர். உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 4 மையங்களில் நடைபெற்ற தேர்வில், மொத்தம் 1,196 தேர்வர்கள் பங்கேற்றனர். 213 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

    • நான்காம் ஆண்டு மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் தென்காசியில் நடந்தது.
    • தென்காசி மாவட்ட அளவில் 14 அணிகள் பங்கேற்றன.

    வீ. கே. புதூர்:

    தென்காசி கால்பந்து கழகம் மற்றும் வி.டி.எஸ்.ஆர். சில்க்ஸ் இணைந்து நடத்திய சுசில் பிஸ்வாஸ் நினைவு கோப்பை நான்காம் ஆண்டு மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் தென்காசியில் நடந்தது.

    தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த போட்டிக்கு மாவட்ட கால்பந்து கழக தலைவர் இசக்கித்துரை தலைமை தாங்கினார். நகர்மன்றத் தலைவர் சாதிர் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் காமேஷ் வரவேற்றார்.

    இன்ஸ்பெக்டர் பாலமுருகன், மாவட்ட கால்பந்து கழக துணைத் தலைவர்கள் ரஹ்மான், செய்யது அலி பாதுஷா வாழ்த்தி பேசினர். போட்டியில் தென்காசி மாவட்ட அளவில் 14 அணிகள் பங்கேற்றன.

    இதில் முதல் பரிசை ரெட்டியார்பட்டி கால்பந்து அணியும், இரண்டாம் பரிசை ஆலங்குளம் அசுரா கால்பந்து அணியும், மூன்றாம் பரிசை தென்காசி கால்பந்து அணியும், நான்காம் பரிசு ஆலங்குளம் கால்பந்து அணியும் பெற்றனர்.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை விடிஎஸ்ஆர் சில்க்ஸ் இம்ரான்கான், நகர்மன்றத் தலைவர் சாதிர், இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஜேபி கல்லூரி விளையாட்டு அலுவலர் மனோகரன் சாமுவேல் ஆகியோர் வழங்கினர்.

    போட்டியில் தென்காசி கால்பந்து கழக பொருளாளர் இசக்கிராஜ், விஜயகுமார், இசக்கிபாண்டி, ஜோதி, கார்த்திக், திமுக நிர்வாகிகள் ஷேக்பரீத், இலக்கிய அணி ராமராஜ், வக்கீல் ரகுமான் சதாத், இளைஞரணி வெங்கடேஷ், இசக்கிமுத்து, முருகேசன், ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தென்காசி கால்பந்து கழக தலைவர் சிதம்பரம் நன்றி கூறினார்.

    ஏற்பாடுகளை மாவட்ட கால்பந்து கழக செயலாளரும், பயிற்சியாளருமான டாக்டர் பிஸ்வாஸ் செய்திருந்தார்.

    • மழை பொழிவு இல்லாத தால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது.
    • காலை நிலவர ப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 81.28 அடியாக சரிந்தது.

    ஈரோடு,

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டம் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக மழை பொழிவு இல்லாத தால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. அதே நேரம் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 81.28 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு 163 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடியும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதைப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32.65 அடியாக உள்ளது. இதே போல் 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.51 அடியாக உள்ளது.

    இதைப்போல் 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 23.92அடியாக உள்ளது. மாவட்டத்தில் மழை பொழிவு இல்லாததால் அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருவது குறிப்பிட த்தக்கது.

    • பவானிசாகர் அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்ததால் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது.

    ஈரோடு,

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 81.43 அடியாக சரிந்தது. அணைக்கு வினாடிக்கு 368 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடியும், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 32.98 அடியாக உள்ளது. கடந்த சில நாட்களாக குண்டேரி பள்ளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக மழை பெய்ததால் நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது.

    இதேபோல் 30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 22.54 அடியாக உள்ளது. இதேப்போல் 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 24.15 அடியாக உள்ளது.  

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் நடமாடும் நூலகம் செயல்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
    • ஒவ்வொருவரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட் டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவி கள் மற்றும் பொதுமக்களிடம் புத்தகம் வாசிப்பை மேம்படுத்தும் வகையில் நடமாடும் நூலகம் வாகனம் மூலம் கிராமப் பகுதிகளுக்கு நாளை முதல் (2-ந் தேதி) முதல் செல்ல உள்ளன.

    இதன் மூலம் போட்டி தேர்வுகளில் பங்கேற்பதற்கு ஏதுவாக புத்தகங்கள் படிப்பதற்கும் மேலும் மாணவ, மாணவிகள் பொது அறிவுகள் குறித்து தெரிந்து கொள்ளவும், தொழில் துறை தொடர்பான வழிகாட்டி கையேடுகளை படித்து தெரிந்து கொள்ள வும் முடியும்

    பழம்பெருமையையும், பண்பாட்டையும் அறிந்து கொள்ளும் வகையில் வரலாற்று சிறப்புகளை தெரிந்து கொள்ளவும், பெண்களின் சுய முன் னேற்றத்திற்கு தன்னம்பிக்கை வளர்க்கவும், தேவையான நூல்களைப் படித்து அறிந்து கொள்ளவும் மற்றும் கவிதை தொகுப்புகள் கவிதை கட்டுரைகள் போன்ற சிறப்பு வாய்ந்த புத்தகங்கள் இந்த நடமாடும் நூலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது.

    அதேபோல் நடமாடும் நூலகம் செல்லும் பகுதிகளில் மாணவ, மாணவிகள் வாகனத்தி லேயே அமர்ந்து படிக்கும் வகையிலும் குழுவாக மாணவ, மாணவிகள் கருந்துரையாடல் மேற்கொள்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த வாகனத்தில் 2500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. கோடைகாலத்தில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் நடமாடும் நூலகம் உங்களைத் தேடி வருகிறது. நீங்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி அறிவுத்திறனை மேம்படுத்தவும் புத்தகம் வாசிப்பை மேம்படுத்தவும் பயனுள்ள வகையில் ஒவ்வொருவரும் பயன் படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தன்னார்வலர்களுக்கான 6-வது மாவட்ட மாநாட்டை நேற்று வோர்ட் நிறுவனம், தமிழ்நாடு அல்லியன்ஸ் மற்றும் டான்போஸ்கோ அன்பு இல்லம் இணைந்து நாமக்கல்லில் நடத்தின.
    • புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் 150 கிராமங்களில் வோர்ட் தொண்டு நிறுவனம், டான்போஸ்கோ அன்பு இல்லத்தினர் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்கள் மேம்பாடு-பாதுகாப்பு பணிகள், நூற்பாலைகளில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் நலன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கான 6-வது மாவட்ட மாநாட்டை நேற்று வோர்ட் நிறுவனம், தமிழ்நாடு அல்லியன்ஸ் மற்றும் டான்போஸ்கோ அன்பு இல்லம் இணைந்து நாமக்கல்லில் நடத்தின.

    நாமக்கல் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான விஜயபாஸ்கர் தலைமை தாங்கி, வோர்ட் மற்றும் தொன்போஸ்கோ நிறுவன செயல்பாட்டு புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து, சிறந்த தன்னார்வலர்களுக்கு விருதுகள் வழங்கி பேசினார். இதில் நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கீதா, குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலர் அந்தோணி ஜெனிட், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், சி.எஸ்.சி. மேலாளர் மாணிக்கவாசகம் ஆகியோர் பேசினர். மாநாட்டில் தமிழ்நாடு அல்லியன்ஸ் நிறுவனர் பாலமுருகன், புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தார்.

    இதில் திட்ட ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு அல்லியன்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிபிஜா, வோர்ட் நிறுவனம், தமிழ்நாடு அல்லியன்ஸ் மற்றும் டான்போஸ்கோ அன்பு இல்ல பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வோர்ட் நிறுவன இயக்குனர் ரெனிடா சரளா வரவேற்றார். தொன்போஸ்கோ நிறுவன இயக்குனர் காஸ்மீர் ராஜ் நன்றி கூறினார்.

    • இதுவரை ஏக்கருக்கு ரூ.15,000 வரை செலவு செய்துள்ளோம். தற்போது மீண்டும் புதிய நாற்று வாங்கி தான் மீண்டும் பயிர் செய்ய வேண்டும்.
    • தற்போது மழை நின்றால் கூட பாதிக்கு பாதி பயிரை தான் காப்பாற்ற முடியும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தஞ்சை மாவட்டத்தில் 340 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.

    இந்நிலையில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நாற்று நட்டு ஒரு வாரமே ஆன சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில்,

    தஞ்சை மாவட்டம் அன்னப்பன்பேட்டை, திட்டை, மாரியம்மன் கோயில், களிமேடு உள்ளிட்ட பகுதிகளில் நாற்று நட்டு நான்கு நாட்களே ஆன நிலையில் தொடர் மழை காரணமாக சம்பா பயிர்கள் அனைத்தும் வேர்கள் அழுகி மண்ணிலிருந்து எடுத்துக்கொண்டு மழை நீரில் மிதக்கிறது.

    இதுவரை ஏக்கருக்கு ரூ.15,000 வரை செலவு செய்துள்ளோம். தற்போது மீண்டும் புதிய நாற்று வாங்கி தான் மீண்டும் பயிர் செய்ய வேண்டும்.

    தற்போது மழை நின்றால் கூட பாதிக்கு பாதி பயிரை தான் காப்பாற்ற முடியும்.ஆனால் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பயிரை முற்றிலும் காப்பாற்ற முடியாது.

    மீண்டும் புதிதாக செலவு செய்து புதிய நாற்று வாங்கி தான் நாங்கள் சாகுபடி மேற்கொள்ள வேண்டும்.

    எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

    தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் 1000 ஏக்கரில் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடந்தது
    • இக்கல்வி ஆண்டில் உயர்கல்வி தொடராத மாணவர்கள் 14 பேர் கண்டறியப்பட்டனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக உயர்கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கான வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.

    இக்கல்வி ஆண்டில் உயர்கல்வி தொடராத மாணவர்கள் 14 பேர் கண்டறியப்பட்டனர். மாணவர்கள் உயர்கல்வியை தொடரும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம்,தேசிய சுகாதார பணிகள், உயர்கல்வித்துறை முதலான துறையினர்கள் இணைந்து வழிகாட்டுதல் வழங்கினர்.

    முகாமில் உயர்கல்வி தொடராத 11 மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். இணையதள பதிவேற்றத்தில் 9 மாணவர்களுடைய விபரம் பதிவேற்றம் செய்யப்பட்டது.

    5 மாணவர்களில் 2 மாணவர்கள் வேறு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர். 2 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வை எழுதவில்லை. ஒருவர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. ஆகையால் 5 மாணவர்களின் விபரம் பதிவேற்றம் செய்யப்படவில்லை. மேலும் புதிதாக 5 மாணவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    முகாமில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் பாபு, உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிராங்கிளின் ஜேக்கப், உதவி திட்ட அலுவலர்துரைராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அது சமயம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை நடைபெற்றது.
    • தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் பங்கஜவல்லி தாயார் சீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் பங்கஜவல்லி தாயார் சீனிவாசப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி திருவோண ஜேஸ்டாபிஷேகம் என்கிற பெரிய திருமஞ்சனம் நடைபெற்றது.

    அது சமயம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாரதனை நடைபெற்றது. விழாவில் கோயில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார், தக்கார் லட்சுமி, பாபநாசம் இறைப்பணி மன்ற தலைவர் குமார், கோவில் எழுத்தர் முருகபாண்டியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ம.தி.மு.க. புதிய அலுவலகம் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது.
    • வைகோ ‘இளமுகில்’ வளாகம் திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.

    திருப்பூர் :

    ம.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. புதிய அலுவலகம் திருப்பூர் அவினாசி ரோடு, காந்திநகர் ஈ.பி.காலனியில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

    விழாவில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு புதிய அலுவலக கட்டிடத்தை திறந்துவைத்து பேசுகிறார். இதையடுத்து காலை 11 மணிக்கு தாராபுரம் ரோடு வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகிறார். அன்று மாலை 5 மணிக்கு திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர், வழக்கறிஞர் இ.என்.கந்தசாமி, தமயந்தி கந்தசாமி ஆகியோரின் புதிய அலுவலக கட்டிடம் 'இளமுகில்' வளாகம் திறப்பு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் மாலை 6 மணி அளவில் பல்லடம் ரோட்டில் உள்ள எஸ்.ஏ.காதர் சலிமா திருமண மண்டபத்தில் நடைபெறும் 'இளமுகில்' வளாகம் திறப்பு விழா வாழ்த்தரங்க நிகழ்ச்சியில் வைகோ கலந்து ெகாள்கிறார். இதைதொடர்ந்து திருப்பூர் மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் நடைபெறும் செயல் வீரர்கள் கூட்டத்தில், பூர்த்தி செய்யப்பட்ட புதிய உறுப்பினர் படிவங்களை பெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,சிறப்புரையாற்றுகிறார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அரசு விரைவு பஸ்களில் கூரியர், பார்சல் அனுப்பும் திட்டம் துவங்கப்பட உள்ளது.
    • பஸ்சுக்கு மூன்று சரக்கு பெட்டி இணைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அரசு விரைவு பஸ்களில் நாளை 3ம் தேதி முதல் கூரியர், பார்சல் அனுப்பும் திட்டம் துவங்கப்பட உள்ளது. அதற்காக பஸ்சின் பக்க வாட்டில் 2 சரக்கு பெட்டி, பஸ்சுக்கு பின்னால் ஒரு சரக்கு பெட்டி என, பஸ்சுக்கு மூன்று பெட்டி இணைக்கப்படுகிறது. அதன்படி நாள் அல்லது மாத வாடகையில் சரக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    இதற்கு 250 கிராமுக்கு, 50 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் அரசு போக்குவர–த்து கழக வணிகப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ''எஸ்.இ.டி.சி., டிப்போ கோவையில் தான் உள்ளது. திருப்பூரில் இருந்து சென்னை, திருப்பதிக்கு இரண்டு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.நாகர்கோ–வில், மார்த்தாண்டம், திருநெல்வேலி, பெங்களூரு வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள், அந்தந்த கிளையில் இருந்து இயக்கப்படுகிறது. கிளைகளில் பார்சல், கூரியர் முன்பதிவு செய்வது குறித்து விரிவான அறிவிப்பு பின்னர் வரும்'' என்றனர்.

    ×