search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer death"

    • சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த விவசாயிகள் மாக்கையா தோட்டத்திற்கு வந்தனர்.
    • மாக்கையா குடும்பத்தினருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திகினாரை ஆதிதிராவிடர் வீதியை சேர்ந்தவர் மாக்கையா (65). விவசாயி. இவருக்கு திகினாரை கிராமத்தில் 4 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. தோட்டத்தில் 2 ஏக்கரில் வாழை, 2 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.

    இவரது தோட்டம் திகினாரை வனப்பகுதியையொட்டி உள்ளதால் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடக்கூடாது என்பதற்காக விவசாய தோட்டத்தில் இரவு நேரங்களில் காவலில் இருப்பது வழக்கம். அதைபோல் மாக்கையா மக்காசோள தோட்டத்தில் நேற்று இரவு நேரத்தில் காவலில் இருந்து உள்ளார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறி காட்டுயானை ஒன்று மாக்கையா தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. சத்தம் கேட்டு வெளியே வந்த மாக்கையா யானை மிதித்துள்ளது. இதில் மாக்கையா சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இந்நிலையில் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த விவசாயிகள் மாக்கையா தோட்டத்திற்கு வந்தனர். அப்போது யானை தோட்டத்தில் இருந்து வனப்பகுதிக்கு சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மாக்கையாவை சென்று பார்த்தபோது அவர் யானை மிதித்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்த தகவல் காட்டு தீ போல் பரவியதால் மாக்கையா தோட்டத்திற்கு 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்தனர்.

    மேலும் இதுகுறித்து தாளவாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் மார்ட்டின் லூதர் மற்றும் போலீசார் வந்தனர்.

    அடிக்கடி யானைகள் ஊருக்குள் புகுந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் வனப்பகுதியையொட்டி உள்ள அகலிகளை ஆழப்படுத்த வேண்டும். வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

    மாக்கையா குடும்பத்தினருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் விவசாயிகள் மாக்கையா உடலை எடுக்க விடாமல் அங்கு திரண்டு உள்ளனர்.

    இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • பலியான மாதையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் வீராணம் சுக்கம்பட்டியை அடுத்த கோனூர் பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 42). விவசாயி. இவருக்கு ஏற்காடு அடிவாரத்தில் விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வளர்த்து வருகிறார். இதனால் மாதையன் தினமும் காலையில் தோட்டத்திற்கு செல்வது வழக்கம்.

    வழக்கம்போல் இன்று காலை 7 மணிக்கு அவர் தோட்டத்திற்கு சென்றார். அப்போது கால்நடைகளுக்கு தண்ணீர் வைப்பதற்கு குடத்தை எடுத்துக்கொண்டு அங்குள்ள வாழை தோட்டத்தில் உள்ள கிணறு பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த காட்டெருமை மாதையனை முட்டி தூக்கி வீசியது. இதில் அவர் தொடை, கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து காட்டெருமையை விரட்டி விட்டு படுகாயம் அடைந்த மாதையனை மீட்டனர்.

    பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்தனர். அதன் ஊழியர்கள் பரிசோதித்து பார்த்து மாதையன் இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வீராணம் போலீசுக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையிலான போலீசார், சேர்வராயன் வனச்சரகர் பழனிவேல் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பலியான மாதையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே காட்டெருமை முட்டி பலியான மாதையன் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் ரூபாய் நிவாரணம் தொகை வனத்துறை சார்பில் வழங்கப்பட்டது. பலியான மாதையனுக்கு சரஸ்வதி (40) என்ற மனைவியும் புவனேஸ்வரன் (13), நவனேஸ்வரன் (5) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

    • பொன்னமராவதி வாரச்சந்தை நடைபெறும் பகுதியில் பலத்த காற்று வீசியதில் அப்பகுதி கடைகளில் இரும்பு கூரை பறந்தது.
    • சூறாவளி காற்றில் பொன்னமராவதி பகுதியில் பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது.

    பொன்னமராவதி:

    தமிழகத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்யும் பருவமழை பருவம் தப்பி சென்றதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்திலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் வழக்கத்துக்கு மாறாக பொன்னமராவதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றைய தினம் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

    பின்னர் மாலை யாரும் எதிர்பாராத விதமாக பலத்த சூறாவளி காற்று வீசியது. அடுத்த சில வினாடிகளில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது.

    இதில் பொன்னமராவதி வாரச்சந்தை நடைபெறும் பகுதியில் பலத்த காற்று வீசியதில் அப்பகுதி கடைகளில் இரும்பு கூரை பறந்தது. இதில் காய்கறி விற்று கொண்டிருந்த சொக்கநாதப்பட்டியைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் (வயது 55) என்பவர் மீது ஒரு இரும்பு கூரை விழுந்து அமுக்கியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் செல்வராஜ் பரிதாபமாக இறந்தார்.

    மேலும் சூறாவளி காற்றில் பொன்னமராவதி பகுதியில் பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது. சாலையோர மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். அதேபோன்று மின்வாரிய பணியாளர்கள் மின் இணைப்புகளை சரி செய்தனர். 

    சங்கராபுரம் அருகே அதிகமாக மதுகுடித்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகரைச் சேர்ந்த குமார்(வயது 49). விவசாயி. மது அருந்தும் பழக்கம் உடையவர். இவர் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் மயங்கி விழுந்தார். இவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • விவசாயி காசிலிங்கம் நேற்று மாலை தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார்.
    • நிலத்தில் உள்ள வரப்பில் நடந்து சென்றபோது விவசாயி காசிலிங்கம் காலில் ஏதோ கடித்தது.

    சேத்தியாத்தோப்பு:

    சேத்தியாத்தோப்பு அருகே வீரமுடையான்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிலிங்கம் (வயது 60). விவசாயி. இவர் நேற்று மாலை தனக்கு சொந்தமான விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது நிலத்தில் உள்ள வரப்பில் நடந்து சென்றபோது காலில் ஏதோ கடித்தது.

    இதில் நிலத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், பாம்பு கடித்து அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து வந்தனர்.
    • கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து வந்தனர்.

    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குமாரக்குடியை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 70), விவசாயி. இவர் இன்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்திற்கு மனு அளிப்பதற்காக வந்திருந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் மனு எழுதிவிட்டு, அதனை நகல் எடுப்பதற்காக சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார்.

    இது பற்றி அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் உடனே ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ராஜதுரை, கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜதுரை இறந்து விட்டதாக தெரிவித்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த விவசாயி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • மதுரை அருகே பாம்பு கடித்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.
    • இதுகுறித்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை உத்தப்பநாயக்கனூரை அடுத்த திம்மநத்தத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 33). இவருக்கு மனைவி பிரேமா உள்ளார். விவசாயியாக வேலை பார்த்து வந்த ரஞ்சித்குமார் சம்பவத்தன்று மதியம் கொப்பிலிப்பட்டி தோட்டத்துக்கு சென்றார்.

    அப்போது அவரை பாம்பு கடித்தது. இதனால் மயங்கி விழுந்த வரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமாரி விவசாயி, நெல் நடவு பணிகள் நடைபெற்று வருவதை பார்த்துக்கொண்டிருந்தார்.
    • இரவு வெகுநேரமாகியும் அவரை காணாததால் அவரது மனைவி வயலுக்கு சென்று பார்த்துள்ளார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமாரி(வயது 33). விவசாயி. இவரது மனைவி ராமலெட்சுமி.

    முத்துமாரிக்கு சொந்தமான வயல் அப்பகுதியில் உள்ளது. அங்கு நெல் நடவு பணிகள் நடைபெற்று வருவதால் அதனை முத்துமாரி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தடுமாறி விழுந்தார்.

    இந்நிலையில் இரவு வெகுநேரமாகியும் அவரை காணாததால் அவரது மனைவி வயலுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கிணற்றில் முத்துமாரி பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதுதொடர்பாக அவரது உறவினர்கள் ஆலங்குளம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், முத்துமாரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுப்பிரமணி தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி சென்றார்.
    • அப்போது எதிர்பாராதவிதமாக சுப்பிரமணியை பாம்பு கடித்து விட்டது.

    திருச்சி,

    திருச்சி மணப்பாறை கருமலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி சென்றார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக அவரை பாம்பு கடித்து விட்டது. உடனடியாக மனைவி அவரை மீட்டி துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பல அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சுப்பிரமணியன் மனைவி முத்துக்கண்ணு வடநாடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாடசாமி மானூர் பஜார் பகுதிக்கு டீ குடிப்பதற்காக அவர் சைக்கிளில் சென்றார்.
    • அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மாடசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள குப்பனாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாடசாமி (வயது 62). விவசாயி. கடந்த 21-ந் தேதி மானூர் மெயின் ரோட்டில் பஜார் பகுதிக்கு டீ குடிப்பதற்காக அவர் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மாடசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை மாடசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நம்பி களக்காடு வந்து விட்டு தனது மொபட்டில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
    • படுகாயம் அடைந்த நம்பி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழக்கள்ளிகுளத்தை சேர்ந்தவர் நம்பி (வயது60). விவசாயி. இவருக்கு அருணாச்சலம் என்ற மனைவியும், 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

    சம்பவத்தன்று நம்பி களக்காடு வந்து விட்டு தனது மொபட்டில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். கல்லடி சிதம்பரபுரம் ரோட்டில் சென்ற போது எதிரே களக்காடு நோக்கி வந்த அரசு பஸ், நம்பி சென்ற மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நம்பி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுபற்றி அவரது மகன் முப்பிடாதி களக்காடு போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் இதுதொடர்பாக பஸ்சை ஓட்டி வந்த களக்காடு புதுத்தெருவை சேர்ந்த இம்மானுவேல் ராஜாசிங் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தார்
    • மகன் படுகாயமடைந்தான்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் மூர்த்தியான் கிராமத்தைச் சேர்ந்த முருகையனின் மகன் செந்தில்குமார்(வயது 35). விவசாயி. இவர் நேற்று தனது மகன் பாலமுருகனுடன்(6) அருகில் உள்ள நிலத்தில் மேய்ந்து கொண்டு இருந்த மாட்டை ஓட்டுவதற்காக வீட்டில் இருந்து திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையை கடந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பலத்த காயமடைந்த பாலமுருகன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    ×