search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seizure"

    • போலீசார் தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
    • பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கடற்கரை வழியாக பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜய அனிதா மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு தூத்துக்குடி கடற்கரை சாலை மீன்பிடி துறைமுகத்தை அடுத்து இனிகோநகர் பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த லோடு ஆட்டோவை போலீசார் மறித்தனர்.

    அப்போது போலீசாரை கண்டதும் வாகனத்தில் இருந்தவர்கள் லோடு ஆட்டோவை நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

    லோடு ஆட்டோவை போலீசார் சோதனை செய்தபோது அதில் 40 மூடைகளில் 2 டன் பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 சரக்கு வாகனத்தில் ஆற்று மணல் கடத்தி வந்ததை தடுத்து நிறுத்தினர்.
    • தப்பியோடிய இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள நெய்வேலி அக்னி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வருவதாக ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின் பெயரில் ஒரத்தநாடு இன்ஸ்பெக்டர் அன்பழகன் மேற்பார்வையில் தனிப்படை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குமாரவேல், தலைமையிலான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது திருவோணம் மேட்டுப்பட்டி கிராம பகுதியில் 2 சரக்கு வாகனத்தில் ஆற்று மணல் கடத்தி வந்ததை தடுத்து நிறுத்தினர்.

    போலீசை பார்த்தும் இரண்டு வாகனத்தில் வந்த மூவரில் 2 பேர் தப்பி ஓடினர்.

    ஒருவரை மட்டும் மடக்கி பிடித்த தனிப்படை போலீசார் திருவோணம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் நெய்வேலி வடபாதி ஆவனா ண்டி கொள்ளையைச் சேர்ந்த கவினேசன் (22) என்பவர் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து இரவு நேரங்களில் அக்னி ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து

    இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கவிநேசனை சிறையில் அடைத்தனர் . மேலும் தப்பி ஓடிய இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • 400 கிராம் எடையுள்ள 129 புகையிலை பொருட்கள் இருந்தது.
    • புகையிலை பொருட்களை கடத்தி வந்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கும்பகோணம்:

    திருச்சி ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவுப்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா ஆகியோர் உத்தரவின் பேரில் போலீசார் கும்பகோணம் வழியாக செல்லும் ரயில்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இந்த நிலையில் புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் சில மர்ம நபர்கள் சாக்கு முட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ரெயில் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த சோதனையில் முன்பதிவு செய்யப்படாத ஒரு பெட்டியில் சந்தேகப்ப டும்படி இருந்த ஒரு சாக்கு மூட்டையை போலீசார் சோதனையிட்டனர். அந்த சாக்குமூட்டை குறித்து அங்கிருந்த பயணிகளிடம் விசாரணை செய்தனர். அப்போது அந்த சாக்கு மூட்டைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து ரயில்வே தனிப்படை போலீசார் கும்பகோணம் ரயில்வே நிலையத்தில் அந்த சாக்கு மூட்டையை இறக்கி திறந்து பார்த்தனர். அப்போது அதில் 400 கிராம் எடையுள்ள 129 புகையிலை பொருட்கள் பொட்டலங்கள் 50 கிலோவுக்கு இருந்தது.

    இதைத்தொடர்ந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 50 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை கும்பகோணம் மாநகராட்சி உணவு பாதுகாப்பு பிரிவு அலுவலரிடம் அரசின் வழிகாட்டுதல் படி அழிக்க ஒப்படைத்தனர். மேலும் புகையிலை பொருட்களை கடத்தி வந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • காரைக்கால் அருகே ஜே.சி.பி. எந்திரத்தை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
    • வீ.விஜய் (என்ற நபர், கடந்த மார்ச் 2022-ல் வாடகைக்கு எடுத்து சென்றுள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே திருநள்ளாறில் ரூ.15 லட்சம் மதிப்பிலான ஜே.சி.பி எந்திரத்தை, ஏமாற்றி கடத்திசென்ற நபரை, ஒரு வருடத்திற்கு பிறகு திருநள்ளாறு போலீசார் கைது செய்து, ஜே.சி.பி எந்திரம் பறிமுதல் செய்து, மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். காரைக்கால் அருகே திருநள்ளாறு சுரக்குடி வடக்குபேட்டையை சேர்ந்தவர் த.விஜய். இவரது ஜே.சி.பி எந்திரத்தை, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரத்தைச்சேர்ந்த வீ.விஜய் (வயது35) என்ற நபர், கடந்த மார்ச் 2022-ல் வாடகைக்கு எடுத்துசென்றுள்ளார்.

    ஒரு சில மாதங்கள் வாடகையை முறைப்படி வழங்கிய வீ.விஜய், அடுத்த சில மாதங்களாக வாடகையை தரவில்லை. மேலும், ஜே.சி.பி எந்திரம் எங்குள்ளது என்ற விவரத்தையும் கூற மறுத்துவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட த.விஜய், தனது ஜே.சி.பி. எந்திரத்தை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், கடந்த மார்ச் 2023ல், திருநள்ளாறு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஸ் உத்தரவின் பேரில், போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவ்ஹால் ரமேஷ் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு, வீ.விஜயை தேடிவந்தனர். இந்நிலையில், வீ.விஜய் வாடகைக்கு எடுத்த ஜே.சி.பி எந்திரத்தை, தனது நண்பர் பாருக்கிடம் விற்றது தெரிவந்தது. தொடர்ந்து, சீர்காழியில் பாருக்கை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், வீ.விஜயை போலீசார் கைது செய்து, ஜே.சி.பி. எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • நாச்சியார்கோவில் இன்ஸ்பெக்டர் ரேகாராணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    கும்பகோணம்:

    திருவிடைமருதூர் அருகே சமர்த்தனார்குடி பெரியகுளம் அருகில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நாச்சியா ர்கோவில் இன்ஸ்பெக்டர் ரேகாராணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது சீனிவா சநல்லூர் அண்ணாநகர் மேலத்தெருவை சேர்ந்த கவுதம் (வயது 18), சமத்தனார்குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த கிஷோர் (19), திருப்பந்துறை மாதா கோவில் தெருவை சேர்ந்த கிறிஸ்டோபர் (19) ஆகியோர் கஞ்சா விற்றது தெரியவந்தது.

    அவர்களிடமிருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர். 

    • 91 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மதுரை

    மதுரை தல்லாகுளம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது செல்லூர் வணிக வளாகம் ஒன்றில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வ விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. அங்கிருந்து 91 கிலோ புகையிலை பொருட்கள், 4 இருசக்கர வாகனங்கள், 4 செல்போன்கள், ரூ.2 லட்சத்து 67 ஆயிரத்து 160 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய ஜலில் இப்ராகிம்(61), எஸ்.ஆலங்குளம் அலமேலு நகர் ராஜேந்திரன் மகன் பாண்டியராஜன்(27), ஒத்தக்கடை அண்ணாமலை நகர் மாரியப்பன் மகன் கணேசன்(39), செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு கருப்புசாமி மகன் முருகேசன் (58), செல்லூர் பூந்தமல்லி மாரியப்பன் மகன் தினேஷ் குமார் (26), மீனாட்சிபுரம் சத்தியமூர்த்தி 5-வது குறுக்கு தெரு திருச்சிற்றம்பலம் மகன் அருண்குமார் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். 

    • விழுப்புரம் அருகே ரூ.4 லட்சம் மதிப்பிலான 260 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
    • காரை நிறுத்தும்படி போலீசார் சிக்னல் காட்டினர்.

    விழுப்புரம்:

    மேல்மருவத்தூரில் இருந்து விழுப்புரத்திற்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி விழுப்புரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளி, பாண்டியன் தலைமையிலான போலீசார் முத்தம்பாளையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த காரை நிறுத்தும்படி போலீசார் சிக்னல் காட்டினர். காரை நிற்காமல் சென்றது.

    காரில் இருந்த 2 பேரிடம் விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குபின் முரணான தகவலை தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் காரை சோதனையிட்டபோது, புகையிலை பொருட்களான குட்கா, பான் மசாலா, பான் பராக், கூல் லீப், விமல், ஆர்.எம்.டி. போன்றவைகள் மூட்டைகளில் இருந்தது. ரூ.4 லட்சம் மதிப்பிலான 260 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை கடத்தி வந்த மேல்மருவத்தூர் பண்டாரம் (வயது 28), திண்டிவனர் பாஸ்கரன் (32) ஆகியோரை கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • கேரளா மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • பொதுபெட்டியில் சீட் எண்-70 -ன் மேலே லக்கேஜ் ஸ்டேண்டில் மாட்டி வைக்கப்பட்டிருந்த கருப்பு கலர் 2 சோல்டர் பேக்கை சோதனை செய்ததில் சுமார் 10 கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றினர்.

    சேலம்:

    தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சேலம் ரெயில்வே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் இசையரசு, அசோக்குமார் ஆகியோர் ஜோலார்பேட்டையில் இருந்து சேலம் வரை சோதனை செய்தனர். அப்போது, பொதுபெட்டியில் சீட் எண்-70 -ன் மேலே லக்கேஜ் ஸ்டேண்டில் மாட்டி வைக்கப்பட்டிருந்த கருப்பு கலர் 2 சோல்டர் பேக்கை சோதனை செய்ததில் சுமார் 10 கிலோ கஞ்சா இருந்ததை கைப்பற்றினர்.

    இந்த 2 பேக்கை வைத்திருந்த கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அவர், விஜயவாடாவில் இருந்து கஞ்சா வாங்கிக்கொண்டு கேரள மாநிலம் செங்கனூர் பகுதியில் விற்பனை செய்தற்காக கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்தனர். சேலம் ரெயில்வே நிலையத்தில் ரெயில் வந்ததும் போலீசார், அந்த நபரையும் பறிமுதல் செய்த கஞ்சாவை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இறக்கி மேல் நடவடிக்கைக்காக சேலம் என்.ஐ.பி. சி.ஐ.டி யிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • 3 பேரையும் கைது செய்து, ஆட்டை பறிமுதல் செய்தனர்.
    • ஒரு மாத சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    கும்பகோணம்:

    சுவாமிமலை அருகே சுந்தரப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் தனபால்.

    இவர் தனது ஆடு ஒன்றை காணவில்லை என சுவாமிமலை போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டை திருடி சென்ற சுந்தரப்பெருமாள் கோவில் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த திருமேனி மகன் ஸ்ரீதர் (வயது24), அதே பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் சந்தோஷ் (21), தாராசுரம் பேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மாதவன் மகன் சுபாஷ் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து ஆட்டை பறிமுதல் செய்தனர்.

    இந்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

    இந்த தீர்ப்பில் சுபாசுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், ஸ்ரீதர் மற்றும் சந்தோஷ் ஆகியோருக்கு தலா ஒரு மாத சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    மேலும் இவர்கள் அபராதம் கட்ட தவறினால் மேலும் 9 மாத சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    சுபாஷ் வழிப்பறி வழக்கில் ஏற்கனவே திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதி யாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அக்ரஹாரம் திருவேங்கடம் என்பவருக்கு சொந்தமான டிராக்டர் மற்றும் டிப்பர் மூலம் அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்தார்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள காங்கேயம் நகரம், சுள்ளான் ஆற்று கரையில், அதே ஊரை சேர்ந்த மாதா கோயில் தெரு வின்சன்ட் என்கிற ஆரோக்கிய வின்சன்ட் (வயது 30), அக்ரஹாரம் திருவேங்கடம் என்பவருக்கு சொந்தமான டிராக்டர் மற்றும் டிப்பர் மூலம் அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி உள்ளார். ரோந்து பணியில் ஈடுபட்ட குடவாசல் போலீசார் டிப்பர் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்து ஆரோக்கிய வின்சென்டை கைது செய்தனர்.

    • ரூ.1 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • அனுமதியின்றி தயாரித்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்

    சிவகாசி தெய்வானை நகர் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்பட்டுவருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர்.

    அப்போது அங்குள்ள பட்டாசு கடையின் பின்புறம் உள்ள இடத்தில் ஏராளமான அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. போலீசார் அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் பட்டாசுகள் இருந்தன. மொத்தம் 60 பெட்டிகளில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை அனுமதியின்றி தயாரித்து வைத்திருந்த விஜயகுமார் என்பவரை கைது செய்தனர்.

    மேலும் அந்த பட்டாசுகளை தயாரிக்க ஆர்டர் கொடுத்த சித்துராஜபுரம் பால்பாண்டி, சாமிபுரம் காலனி விஜயகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கருந்திரிகள்-பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ஜோதிபுரத்தை சேர்ந்த சதுரகிரி(வயது63), சொக்கலிங்காபுரத்தை சேர்ந்த பாண்டியராஜன்(59), நல்லையன்(59) ஆகியோர் அனுமதியின்றி கருந்திரிகளை பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 115 குரோஸ் கருந்திரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிவகாசி உசேன் காலனியை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவர் அழகாபுரி ரோட்டில் அனுமதியின்றி தகர செட் அமைத்து பட்டாசு தயாரித்துள்ளார். இது தொடர்பாக எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×