search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 125869"

    • அனுவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • திர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி :

    கேரள மாநிலம் வெள்ளறடை பகுதியை சேர்ந்தவர் விக்ரமன். இவரது மகன் அனு.

    இவர் கழுவன்திட்டை பகுதியில் செயல்பட்டு வரும் சலூண் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அனுவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அவருக்கு குடி பழக்கம் இருந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப தகராறில் அவரது மனைவி குழந்தையுடன் பிரிந்து சென்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று வேலைக்கு சென்ற அனு, செல்போன் பேசுவதற்காக கடையின் மேல் மாடிக்குச் சென்றுள்ளார். அங்கு மாடி சுவரில் இருந்து செல்போன் பேசும் போது, எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

    இதில் அனுவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அனு இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்போன் பேசிய வாலிபர் கட்டிடத்தின் மேல் இருந்து விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
    • ஒரு மாத காலத்திற்குள் வழங்கவேண்டும் என உத்தர விட்டனர்.

    நாகர்கோவில் :

    பள்ளியாடிவிளையை சேர்ந்தவர் மலர் எடிசன். இவர் நாகர்கோவிலில் உள்ள செல்போன் கடையில் ரூ.9,950 மதிப்புள்ள செல்போன் ஒன்று வாங்கி னார். வாங்கிய ஒரு வாரத்தி லேயே செல்போன் வேலை செய்யாததால் கடைக்காரரிடம் சரி செய்ய கொடுத்துள்ளார்.

    சில நாட்கள் கழித்து செல்போனை வாங்கி செல்லுங்கள் என கடைக்காரர் கூறியுள்ளார். ஆனால் நுகர்வோர் தான் வாங்கிய செல்போனில் உற்பத்தி குறைபாடு உள்ளதால் வேறு புதிய செல்போன் வேண்டு மென வற்புறுத்தி கேட்டுள் ளார்.

    ஆனால் வேறு புதிய செல்போன் கொடுக்க வாய்ப்பில்லை என கடைக் காரர் தெரிவித்துள்ளார். இதனால் நுகர்வோர் பாதுகாப்பு மையம் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் செல்போன் கடையின் சேவை குறை பாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோ ருக்கு ரூ.15 ஆயிரம் நஷ்ட ஈடு மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் ஏற்கனவே செலுத்தப்பட்ட தொகை ரூ.9,950 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்கவேண்டும் என உத்தர விட்டனர்.

    • பஸ்சுக்காக காத்திருந்தபோது அவ்வழியாக வந்தவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 மற்றும் செல்போனை பறித்துச்சென்றார்.
    • இதுகுறித்து தென்கரை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    பெரியகுளம்:

    கோவை சூளுர்பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(28). இவர் தனது நண்பரை பார்ப்பதற்காக பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டிக்கு வந்துள்ளார். பின்னர் பஸ்நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தபோது அவ்வழியாக வந்த ரூபன்(21) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 மற்றும் செல்போனை பறித்துச்சென்றார். இதுகுறித்து தென்கரை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ரூபனை கைது செய்தனர்.

    இதேபோல் கூடலூர் அருகே புலிக்குத்தியை சேர்ந்தவர் முருகன்(52). கவரிங் நகை விற்பனை செய்யும் தொழில் செய்துவருகிறார். அண்ணாநகர் பொதுக்கழிப்பிடம் அருகே நடந்து சென்றபோது அருண்(21), சிராஜ்(24), பிரபாகரன் ஆகியோர் அவரை மிரட்டி பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் கூடலூர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து அருண், சிராஜை கைது செய்தனர். தப்பிஓடிய பிரபாகரனை தேடி வருகின்றனர்.

    • ஒரு வயது குழந்தை கூட செல்போனில் இருக்கும் அப்ளிகேஷன்களை அழகாக கையாள பழகி விட்டது.
    • குழந்தைகள் குனிந்த தலை நிமிராமலேயே கூர்ந்து செல்போனை பார்ப்பது ஆபத்தானது.

    கொரோனா காலகட்டத்தில் அறிமுகமான ஆன்லைன் வகுப்பு ஏற்படுத்திய தாக்கம் ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் இருந்து மாணவர்களை மீள முடியாமல் வைத்துவிட்டது. தொடக்க கல்வி பயிலும் குழந்தைகளின் கைகளில் கூட சர்வ சாதாரணமாக உலா வந்து கொண்டிருக்கிறது. அவர்களின் சேட்டைகளை கட்டுப்படுத்த பெற்றோரே கையில் ஸ்மார்ட்போனை கொடுக்கும் நிலைமை உண்டாகிவிட்டது

    அதனால் ஒரு வயது குழந்தை கூட செல்போனில் இருக்கும் அப்ளிகேஷன்களை அழகாக கையாள பழகி விட்டது. அப்படி குழந்தைகள் நீண்ட நேரம் செல்போனில் வீடியோ பார்த்தலோ அல்லது வீடியோ கேம் விளையாடினாலோ கழுத்து பகுதியில் அழுத்தம் ஏற்பட தொடங்கிவிடும். அது நாளடைவில் வலியை அதிகப்படுத்திவிடும்.

    குழந்தைகள் குனிந்த தலை நிமிராமலேயே கூர்ந்து செல்போனை பார்ப்பது ஆபத்தானது. அது சட்டென்று கழுத்துவலிக்கு வித்திட்டுவிடும். நாளடைவில் தோள்பட்டை வலி, முதுகுவலி உண்டாகுவதற்கும் வழிவகுத்துவிடும். ஆதலால் குழந்தைகள் அதிக நேரம் போன் பார்ப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. செல்போன் பார்க்கும்போது நேராக அமர்ந்த நிலையில் இருக்கிறார்களா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இப்போது கல்வி சம்பந்தமான அப்ளிகேஷன்கள் ஏராளமான அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. அவை அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதிலேயே அதிக நேரத்தை செலவிடுவது கழுத்து வலிக்கு வழிவகுப்பதோடு மட்டுமில்லாமல் மூளைக்கும் அயர்ச்சியை ஏற்படுத்தி விடும். அதன் தாக்கமாக தேவையற்ற வலி, வேதனைகளை அனு பவிக்க வேண்டியிருக்கும்.

    • நோய்களுக்கு ஆளாகி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
    • இப்பகுதியில் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளது.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள செருப்பங்கோடு கிராம மக்கள் தமிழ்நாடு முதல்-அமைச்சர், மாவட்ட கலெக்டர், கல்குளம் தாசில்தார் மற்றும் குருந்தன் கோடு வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கட்டிமாங்கோடு ஊராட்சி, செருப்பங்கோடு கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் அதிகமான விவசாய நிலங்கள் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    மக்கள் நெருக்கம் மிகுந்த இந்த பகுதியில் செல்போன் டவர் அமைத்தால் குழந்தைகள், பெண்கள் உட்பட பொதுமக்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே விவசாய தோட்டமான தென்னந் தோப்பில் தனியார் நிறுவனம் டவர் அமைக்க அரசு அனுமதி வழங்கக் கூடாது. டவர் அமைக்கும் பணியை அரசு அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தர்கா குழுந்த மண்டபம் அருகே சென்ற போது தனது செல்போனை தவறவிட்டார்
    • காவலாளி அதை கண்டெடுத்து உரிய நபரிடம் ஒப்படைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் தர்காவிற்க்கு பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களை சேர்ந்த வர்கள் வந்து தொழுகை செய்து வருகின்றனர். இதனால் நாகூர் தர்கா எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

    இந்நிலையில் வேலுர் மாவட்டத்தை சேர்ந்த நாகூர் ஆண்டகையின் பக்தர்களுள் ஒருவரான ஜனாப் கரீம் பாசா தனது குடும்பத்துடன் நாகூர் தர்காவிற்கு வந்திருந்தார்.

    பின்னர் தர்கா குழுந்த மண்டபம் அருகே சென்ற போது தனது செல்போனை

    தவற விட்டுவிட்டார்.

    அங்கு பணியில் இருந்த தர்கா காவலாளி லாரண்ஸ் தவறவிட்ட தொலைப்பே சியை கண்டெடுத்து அடுத்த ஷிப்ட் தர்கா காவலாளி களான ஷாகுல் மற்றும் அய்யப்பன் ஒப்படைத்தார்.

    இதைத் தொடர்ந்து செல்போனை தவற விட்ட ஜனாப் கரீம் பாசாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நாகூர் தர்கா உள்துறை துணை நிர்வாகி சேக் தாவுத் முன்னிலையில் அவரிடம் செல்போன் ஒப்படைக்க ப்பட்டது.

    சுமார் காலை 7 மணிக்கு தர்காவில் கண்டெடுக்க ப்பட்ட மொபைல் போன் இரவு 10 மணியளவில் உரிய நபரிடம் அன்னாரின் பொருளை பெற்று கொண்ட மைக்கான ரெஜிஸ்டரில் கையொப்பம் வாங்கி கொண்டு ஒப்படைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து ஜனாப் கரீம் பாசா செல்போனை கண்டு பிடித்து கொடுத்த காவலாளிகளுக்கும் நாகூர் தர்கா நிர்வாகத்தி னருக்கும் நன்றி தெரிவித்தார்.

    • ராஜேஷ் விஸ்வாசை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
    • அபராத தொகையை 10 நாட்களுக்குள் நீர்வளத்துறையில் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராய்ப்பூர் :

    சத்தீஸ்கர் மாநிலத்தில் அணைக்கட்டில் தவறிவிழுந்த தனது செல்போனை மீட்க ராஜேஷ் விஸ்வாஸ் என்ற உணவுப்பொருள் ஆய்வாளர் அணை நீரை 'காலி' செய்த சம்பவம் கடந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து அதிகாரி ராஜேஷ் விஸ்வாசை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    அவருக்கு வாய்மொழியாக அனுமதி அளித்த நீர்வளத்துறை அதிகாரிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இந்நிலையில் சத்தீஷ்கர் நீர்வளத்துறை சார்பில் அதிகாரி ராஜேசுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், உரிய அனுமதி பெறாமல் டீசல் மோட்டார்களை பயன்படுத்தி 4 ஆயிரத்து 104 கனஅடி நீரை நீங்கள் வீணாக்கியுள்ளீர்கள். இது சட்டவிரோத செயலாகும்.

    இதற்காக ஒரு கனஅடி நீருக்கு ரூ.10.50 வீதம் மொத்தமாக ரூ.43 ஆயிரத்து 92-ஐ செலுத்த வேண்டும். அத்துடன் அனுமதியின்றி நீரை வெளியேற்றியதற்காக ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். இரண்டையும் சேர்த்து மொத்தமாக ரூ.53 ஆயிரத்து 92-ஐ 10 நாட்களுக்குள் நீர்வளத்துறையில் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உணவகங்கள் மற்றும் கடைகளில், பொது மக்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அரசின் உணவு பாதுகாப்புத்துறை மூலம், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • புதிய வெப்சைட் மற்றும் செல்போன் ஆப்பை, தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தரமற்ற, கலப்பட உணவுகள் குறித்த பொது மக்களின் புகார் நட வடிக்கைகளை எளிதாக்கும் வகையில், விபரங்களை மிக எளிமையாக தேர்ந்தெ டுக்கும் வசதிகளுடன், புதிய வெப்சைட் மற்றும் செல்போன் ஆப்பை, தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

    ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில், பொது மக்களுக்கு தரமான, சுகா தாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அரசின் உணவு பாதுகாப்புத்துறை மூலம், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    தற்போது, உணவு தொடர்பான பொதுமக்க ளின் புகார் நடவடிக்கை களை எளிதாக்கும் வகையி லும், விரைவு நடவடிக்கை எடுக்கவும், புதிய வெப்சைட் மற்றும் மொபைல் ஆப்பை, தமிழக அரசு அறிமுகப்படுத்திள்ளது.

    அதில், பொதுமக்கள் தங்களது புகார்களை டைப் ஏதும் செய்யாமல், மிக எளிமையாக விபரங்களை தேர்ந்தெடுக்கும் வசதியுடன், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.

    புதிய வெப்சைட் foodsafety.tn.gov.in மற்றும் மொபைல் செயலி Tnfood safety Consumer App டவுன் லோடு செய்து எளிதாக பயன்படுத்தலாம். எனவே வெப்சைட் மூலமாகவும், செல்போன் ஆப் மூலமாகவும், பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கலாம்.

    புகார் செய்பவர்களின் விபரங்கள், ரகசியம் பாது காக்கப்படும். புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள், ஆய்வு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு, புகார்தாரருக்கு ஆய்வ றிக்கை அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • திருட்டுப்போன 75 செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்.
    • சுமார் 1½ ஆண்டுகளில் சுமார் ரூ.55½ லட்சம் மதிப்புள்ள 275 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் பதிவான தொலைந்து போன மற்றும் திருட்டுப்போன செல்போன் வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்கிருஷ்ணன் தலைமையில் கடந்த 2 வாரங்களில் சைபர் கிரைம் போலீசார் மூலம் 75 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை உரிய நபர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நேற்று ஒப்படைத்தார்.

    சுமார் 1½ ஆண்டுகளில் சுமார் ரூ.55½ லட்சம் மதிப்புள்ள 275 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. செல்போன் கண்டுபிடிப்பில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டி வெகுமதி வழங்கினார்.மேலும் செல்போன் சம்பந்தமான புகார்களில் துரித நடவடிக்கை மேற்கொண்டு செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் உடனடியாக ஒப்படைக்க அவர் அறிவுறுத்தினார்.

    • மைவாடியில் மோகனசுந்தரம் என்பவருக்கு சொந்தமான விதை நெல் கிடங்கு உள்ளது.
    • வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

     உடுமலை :

    மடத்துக்குளத்தையடுத்த மைவாடி பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த காவலாளியிடமிருந்து செல்போனை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மைவாடியில் மோகனசுந்தரம் என்பவருக்கு சொந்தமான விதை நெல் கிடங்கு உள்ளது.இங்கு சின்னப்பன் புதூரைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் நெல் கிடங்கின் முன் முத்துச்சாமி கட்டிலை போட்டு தூங்கியுள்ளார்.

    நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சாவகாசமாக அந்த பகுதியை நோட்டம் விட்டு விட்டு,அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடிக்கிறார். பின்னர் முத்துசாமியின் அருகில் சென்று அவர் தலையணைக்கடியில் வைத்திருந்த செல்போனை நைசாக திருடுகிறார்.அப்போது விழித்துக் கொண்ட முத்துச்சாமி அந்த நபரை துரத்துகிறார்.ஆனால் அதற்குள் மின்னல் வேகத்தில் செல்போனுடன் அந்த நபர் தப்பிச்செல்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பவம் குறித்து முத்துச்சாமி அளித்த புகாரின் பேரில் மடத்துக்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • செல்போன்-பணம் திருடியவர்கள் சிக்கினார்கள்.
    • அக்கம் பக்கத்தினர் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    மதுரை

    மதுரை மணி நகரம் மணி அய்யர் சந்தை சேர்ந்த கண்ணன் மகன் ராஜசேகர் (வயது33). இவர் தமிழ் சங்கம் ரோட்டில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார்.அப்போது அவரிடம் இருந்த செல்போனை ஒரு வாலிபர் திருட முயன்றார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் கையும் களவுமாக பிடித்து போலீ சில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், தேனி மாவட்டம் ஆண்டிப் பட்டி கொண்டமநாயக்கன் பட்டி என்.ஜி.ஓ. நகரைச் சேர்ந்த ரத்தினம் மகன் பிரசாந்த் (26) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தம்பிபட்டி கிழக்கு தெருவை சேர்ந்த தங்கமணி மகன் காளி (20).இவர் மதுரை புதூர் 20 அடி ரோட்டில் நின்று கொண்டி ருந்தார். அந்த வழியாக வந்த 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் காளியை கல்லால் தாக்கி செல்போனை பறித்து தப்பினர். இது குறித்த புகாரின்பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    செல்போன் பறித்த 17 வயது சிறுவனுடன் சம்பக்குளம் மச்சக்காளை மகன் சக்திவேல் (22), வைரவன் மகன் ஊர்க்காவலன் என்ற பாண்டி (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.இதில் தொடர்புடைய மலைச்சாமியை தேடி வருகின்றனர்.

    மதுரை கீழ வைத்திய நாதபுரம் 5-வது தெருவை சேர்ந்த அழகுவேல் மகன் தினேஷ் குமார் (29). இவர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.அவரிடம் இருந்த ரூ.500-ஐ ஒரு வாலிபர் திருடிக்கொண்டு தப்ப முயன்றார். தினேஷ்குமார் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அவரை விரட்டிப்பிடித்து கரிமேடு போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பருத்தி கன்மாய் ரோட்டை சேர்ந்த சேதுபாண்டியன் மகன் முருகன்(36) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    செல்லூர் முத்துராம லிங்கபுரம் முதல் தெரு 60 அடி ரோட்டை சேர்ந்த ராஜசேகர பாண்டியன் மகன் விஜய் சுதர்சன் (26). இவர் தல்லாகுளம் பிள்ளை யார் கோவில் தெருவில் செ ன்று கொண்டி ருந்தார்.

    அவரை 4 பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் மிரட்டி ரூ.3 ஆயி ரத்தையும், செல்போ னையும் பறித்து தப்பியது. இதுகுறித்த புகாரின்பே ரில் தல்லா குளம் போ லீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளின் அடிப்படையில் நிலையூர் கைத்தறிநகர் செந்தில் மகன் கார்த்திக் என்ற சுள்ளான் கார்த்திக் (26), நெல்லை மாவட்டம் நான்குநேரி தேன்ராஜ் மகன் அலெக்ஸ் பாண்டியன் (23), மீனாம்பாள்புரம் பள்ளிவாசல் தெரு சங்கர் மகன் பிரவீன் குமார் என்ற சிரிப்பு பிரவீன் (26), செல்லூர் மீனாட்சிபுரம் வ.உ.சி.தெரு முனியாண்டி மகன் பிரவீன் என்ற மிட்டாய் பிரவீன் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • கேரளாவில் ஒரே மாதத்தில் நடந்த 3-வது சம்பவம் இதுவாகும்.
    • இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    திருச்சூர் :

    கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் மரோட்டிச்சல் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் 76 வயது முதியவர் ஒருவர் டீ குடித்துக்கொண்டிருந்தார்.

    அப்போது அவரது சட்டைப்பையில் இருந்த செல்போன் திடீரென வெடித்து தீப்பிடித்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர் உடனடியாக எழுந்து அந்த செல்போனை எடுத்து கீழே போட்டார். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி தப்பினார்.

    இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கேரளாவில் ஒரே மாதத்தில் நடந்த 3-வது சம்பவம் இதுவாகும். முன்னதாக கடந்த மாதம் 24-ந்தேதி இதே திருச்சூர் மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒருவர் செல்போன் வெடித்து உயிரிழந்தார்.

    இதைப்போல கோழிக்கோட்டை சேர்ந்த ஒருவர் தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து காயமடைந்தார்.

    இவ்வாறு அடுத்தடுத்து செல்போன் வெடிக்கும் சம்பவங்கள் நடைபெறுவதால் கேரளாவில் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

    ×