என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 136644"
- வாலிபர்கள் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை பஸ்சின் முன் பக்க கண்ணாடி மீது தூக்கி வீசினர்.
- முன் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியதில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து கொண்டல் வழியாக வடரங்கம் கிராமத்திற்கு அரசு நகர பஸ் சென்று கொண்டிருந்தது. சீர்காழி அடுத்த பழைய பாளையத்தை சேர்ந்த ரமேஷ் பேருந்து ஓட்டிச் சென்றார்.
அதில் நடத்துனராக வள்ளுவக்குடியை சேர்ந்த அகோரமூர்த்தி பணியில் இருந்தார்.
பஸ்சை மன்னங்கோயில் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் கையில் வைத்திருந்த பீர் நிறைந்த பாட்டிலை பஸ்சின் முன் பக்க கண்ணாடி மீது தூக்கி வீசி சென்றனர்.
இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்த நொறுங்கியதோடு பாட்டிலில் இருந்த பீர் மற்றும் கண்ணாடி துகள்கள் முழுவதும் ஓட்டுநர் ரமேஷ் மீது கொட்டியது.
நிலை தடுமாறிய ஓட்டுனர் ரமேஷ் சாதுரியமாக ஓடிய பேருந்தை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
பஸ்சின் முன் பக்க கண்ணாடி திடீரென உடைந்து நொறுங்கியதில் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சின் கண்ணாடியை உடைத்த போதை கும்பலை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.
இந்த போராட்டத்துக்கு மாநில அரசு ஊழியர்கள், பஸ் தொழிலாளர்கள், பொதுத்துறை ஊழியர்கள் என பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.
போராட்டம் காரணமாக நேற்று கோவை மாவட்டத்தில் வங்கி சேவை முடங்கியது. கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அரசு ஊழியர் சங்கத்தினர், பி.எஸ்.என்.எல், எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும் கோவை மாவட்டத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல ஓடியதால் பஸ் சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை. அதே நேரம் கேரளாவில் வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரமாக இருந்ததால் அங்கிருந்து கோவைக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
இதனால் பாதுகாப்பு கருதி கோவையில் இருந்து கேரளாவுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. 2-வது நாள் போராட்டம் காரணமாக இன்றும் கேரளாவுக்கு பஸ்கள் இயக்கப்படாததால் உக்கடம் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கோவை ரெயில் நிலையத்தை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்திலும், பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பும், தபால் துறை ஊழியர்கள் வெரைட்டி ஹால் ரோட்டில் தலைமை தபால் நிலையம் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #tamilnews
பெருந்துறை:
பெருந்துறை ஈரோடு ரோடு பகுதியை சேர்ந்த நல்லமுத்து என்பவரது மனைவி ஷர்மிளா (வயது 37). இவர் பெருந்துறைையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு தனுஷ்ராம் (9), மோகபிரசாத் (10) என்ற இரு மகன்கள் உள்ளனர். ஷர்மிளாவின் தாயாரான சேலம் மாவட்டம், ஓமலூர், வி.மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த தாண்டாக் கவுண்டர் என்பவரது மனைவி செல்வம் (55) பெருந்துறையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தார்.
பள்ளியில் தேர்வுகள் முடிந்து விடுமுறை என்பதால் தனது பேரன்கள் இருவரையும் தனது ஊருக்கு கூட்டி கொண்டு திருப்பூரில் இருந்து ஈரோடு செல்லும் ஒரு தனியார் பஸ்சில் ஏறினார்.
இந்த பஸ் பெருந்துறை அடுத்த வெங்கமேடு பகுதியில் சென்ற போது, பஸ்சின் படிக்கட்டு அருகில் நின்று கொண்டிருந்த செல்வம் திடீரென நிலை தடுமாறி பஸ்சில் இருந்து வெளியே தவறி விழுந்தார்.
இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
உடன் வந்தவர்கள் அவரது வீட்டிற்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஷர்மிளா தனது தாயாரின் உடலைக் கண்டு கதறி அழுதார்.
இந்த சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.
போரூர்:
அண்ணாநகர் கிழக்கு ஆர்.வி.நகரைச் சேர்ந்தவர் அலமேலு (வயது 65). மதுரவாயலில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று மாலை மாநகர பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அவர் அருகே 2 பெண்கள் அமர்ந்து இருந்தனர்.
பஸ் அமைந்தகரை என். எஸ்.கே. நகர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது அருகில் இருந்த பெண்கள் சில்லறை காசுகள் கீழே கிடப்பதாக அலமேலுவிடம் கூறினார்கள்.
உடனே அவர் கீழே கிடந்த சில்லரைகளை குனிந்து எடுக்கத் தொடங்கினார். அப்போது அந்த பெண்கள் அலமேலு கையில் இருந்த ரூ.86 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து விட்டு பஸ்சில் இருந்து இறங்கி சென்றனர்.
இதுகுறித்து அரும்பாக்கம் போலீசில் அலமேலு புகார் செய்தார். பஸ் நிறுத்தத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பையைச் சேர்ந்தவர் தங்க நகை மொத்த வியாபாரி பாவேஷ், தனது ஊழியர்கள் 2 பேரிடம் 15 கிலோ தங்க நகைகளை விற்பனைக்காக கடந்த 8ம் தேதி கொடுத்து அனுப்பியுள்ளார். அவர்கள் அவற்றை விசாகப்பட்டினத்தில் பெங்களூருக்கு பஸ்சில் கொண்டு சென்றார்.
ஆந்திர மாநிலம். சித்தூர் மாவட்டம் பங்காருபாளையம் அருகே சென்றதும், அங்குள்ள ஓட்டல் ஒன்றில் பயணிகள் உணவு சாப்பிடுவதற்காக பஸ் நிறுத்தப்பட்டது. அப்போது, பஸ்சில் நகைப்பைகளில் 9 கிலோ எடை கொண்ட பை ஒன்று மாயமாகியுள்ளது.
இதானல் அதிர்ச்சியடைந்த அவர்கள், பங்காருபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இதுபற்றி புகார் அளித்தனர். அதன் பேரில், 10 பேர் கொண்ட 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொள்ளையரை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதன் ஒருபகுதியாக பெங்களுர், மும்பை, கடப்பா, விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய ஊர்களுக்குச் சென்ற போலீசார், நகை கொள்ளை கும்பலை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், தனிப்படை போலீசாரில் ஒரு குழுவினர் சம்பவம் நடந்த இடத்ததை பார்வையிட்டு, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கோமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், நகைபையை கும்பல் ஒன்று கொள்ளையடித்து செல்வது பதிவாகி இருந்தது.
அதை முக்கிய ஆதாரமாக கொண்டு போலீசார் தொடர் விசாரணை மோற்கொண்டதில், அந்த கும்பல் பலமனேர் பகுதியில் அறை எடுத்து பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், அந்த கும்பலின் தலைவான சிந்துகூடம் பாசுகாலே உள்பட மகாராஷ்டிராவைச் சேர்ந்த 7 பேரை அதிராடியாக கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 4 கிலோ 372 கிராம் எடையுள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். அந்த கும்பலைச் சேர்ந்த 2 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை விரைவில் கைது செய்து மீதமுள்ள நகைகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். #tamilnews
குமரி மாவட்டத்தில் பந்த் காரணமாக அங்கு பஸ்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நெல்லையில் இருந்து ஏராளமான பஸ்கள் நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினமும் ஏராளமான பயணிகள் பயணம் செய்கிறார்கள். நாகர்கோவில் பகுதியில் இருந்து நெல்லை, மதுரை ஆகிய பகுதிகளில் அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்வோரும், கல்லூரி மாணவ-மாணவியரும் இந்த பஸ்களை பயன்படுத்தியே வருவது வழக்கம்.
இதேபோல் நெல்லையில் இருந்து நாகர்கோவில் உள்ளிட்ட குமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் வேலை செய்வோர், கல்லூரிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளும் இந்த பஸ்களை நம்பியே உள்ளனர். பந்த் காரணமாக நெல்லையில் இருந்து குமரி மாவட்டத்துக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியது. ஊருக்கு திரும்ப முடியாமல் பயணிகள் தவித்தனர்.
அரசு, தனியார் துறைகளில் பணிபுரிவோர் பஸ் ஓடாததால் திரும்பி சென்றனர். மேலும் பலர் ரெயில் நிலையம் சென்று ரெயிலில் பயணம் செய்தார்கள். இதனால் ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நெல்லை பஸ் நிலையத்தில் பயணிகள் சிலர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
நெல்லை பஸ் நிலையத்தில் நகர்கோவில் பஸ்கள் செல்லும் பிளாட்பார்மில் எப்போது கூட்டம் அதிகமாக காணப்படும். பஸ்கள் ஓடாததால் பிளாட் பார்ம் வெறிச்சோடி காணப்பட்டது. எனினும் பயணிகள் தவித்தபடி நின்றனர். சில பஸ்கள் வள்ளியூர், பணகுடி, காவல்கிணறு விலக்குவரை இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதேபோல் குமரி மாவட்டத்தில் இருந்து வள்ளியூர், பணகுடி, வடக்கன்குளம், ராதாபுரம், திருச்செந்தூர், தூத்துக்குடிக்கும் இன்று பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். மேலும் டவுண் பஸ்கள் ஓடாததால் நெல்லை-குமரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். #tamilnews
சென்னை:
நீண்ட தூரம் பயணம் செல்லும் பயணிகள் வசதிக்காக அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, கோவை, சேலம், தஞ்சை, நாகப்பட்டினம் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுபோல் போக்குவரத்து கழகங்கள் மூலம் இயக்கப்படும் அரசு பஸ்களும் மற்ற மாவட்ட தலை நகரங்களுக்கு செல்கின்றன.
இதனால் பகலில் இயக்கப்படும் அரசு விரைவு பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாக உள்ளது. இதன் காரணமாக 300 கிலோ மீட்டர் தூரத்துக்கும் குறைவாக செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழகங்களில் வருமான இழப்பு ஏற்படுகிறது.
எனவே இந்த வருமான இழப்பை சரி கட்டுவது எப்படி என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து கழகங்கள் சார்பில் வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வழித்தடங்களில் அரசு விரைவு பஸ்களை இயக்கு வதை தவிர்க்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் அரசிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து 300 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீண்ட தூர வழித்தடங்களில் மட்டும் அரசு விரைவு பஸ்களை இயக்கலாம். மற்ற வழித்தடங்களை அந்தந்த போக்குவரத்து கழகங்களுக்கே விட்டுக் கொடுக்கலாம் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டது.
இதன்படி குறைந்த தூரங்களில் இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து பஸ்களை நிறுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. போக்குவரத்து கழக பஸ்கள் இந்த வழித்தடங்களில் இயக்கப்படுவதால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
அரசு விரைவு போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் வருமான இழப்பும் தவிர்க்கப்படும். எனவே வருமான இழப்பு ஏற்படும் 33 வழித்தடங்களில் அரசு விரைவு பஸ்கள் நிறுத்தப்படும். இதற்கு பதிலாக அந்தந்த பகுதியில் உள்ள போக்குவரத்து கழகங்கள் மூலம் இந்த வழித்தட பஸ்கள் இயக்கப்படும
அரசு விரைவு பஸ்கள் நீண்ட தூரங்களுக்கு மட்டும் இயக்கப்படும். வெளி மாநிலங்களுக்கும் கூடுதலாக 50 அரசு விரைவு பஸ்களை இயக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்று போக்குவரத்து கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் மாநகர பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. நகரின் விரிவாக்க பகுதிகளுக்கும் தனி பஸ்கள் செல்கின்றன. இதில் பல இடங்களுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
எனவே சென்னை நகரில் 40 மாநகர பஸ் வழித் தடங்களில் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான சாத்தியகூறுகள் குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது. இது பற்றிய முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. #TNGovtBus #Bus
தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் தங்கி இருக்கும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகிறார்கள்.
ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் ஏற்கனவே முடிந்து விட்டதால் பஸ்களை பொதுமக்கள் நாடி வருகிறார்கள். இதனால் அரசு சிறப்பு பஸ்கள், ஆம்னி பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ரெயில்களில் முன்பதிவு செய்யாத பெட்டிகளில் நின்று கொண்டே பயணம் செய்யும் நிலையும் உள்ளது.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில ஆம்னி பஸ்களில் ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் டிக்கெட் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏராளமான பயணிகள் விமான பயணத்துக்கு மாறி உள்ளனர். போக்குவரத்து நேரம் குறைவு, சொகுசு பயணம் என்பதால் விமான பயணத்தை ஏராளமானோர் தேர்வு செய்து இருக்கிறார்கள்.
சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவை, சேலத்துக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தூத்துக்குடிக்கு 5 முறையும் மதுரை-10, திருச்சி-6, கோவை-14, சேலம்-2 முறையும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
தற்போது இந்த விமானங்கள் அனைத்திலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. தென் மாவட்டங்களுக்கு செல்லும் எந்த விமானங்களிலும் டிக்கெட்டுகள் இல்லை.
சில விமானத்தில் மட்டும் உயர் வகுப்பு டிக்கெட்டுகள் உள்ளன. அவை ரூ.19 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதிலும் சிலர் பயணம் செய்கிறார்கள்.
எனவே வரும் பண்டிகை காலங்களில் பஸ், ரெயிலில் செல்வதை விட விமான பயணத்தை பெரும்பாலானோர் தேர்வு செய்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம் ஆரணிக்கு ஆவடி பஸ் டொப்போ மூலம் 10 பஸ்கள் தடம் எண்-580 இயக்கப்பட்டு வந்தது.
இந்த வழித்தட பஸ்சில் பயணம் செய்ய கடந்த புதன்கிழமை மாலை ஏறிய ஒரு பயணிக்கும் கண்டக்டர் ராஜ்குமாருக்கும் இடையே டிக்கெட் எடுப்பதில் வாக்கு வாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று கூறி போக்குவரத்து துறை ஊழியர்கள் ஆரணி வழி தடத்தில் கடந்த இரண்டு நாட்களாக பஸ்களை இயக்க வில்லை.
வள்ளளார் நகரில் இருந்து சிறுவாபுரி வழியாக பெரியபாளையம் வரையில் தண்டையார்பேட்டை பஸ் டொப்போ மூலம் 5 பஸ்கள் வழி தடம் எண்-547 இயக்கப்பட்டு வந்தது.
இந்த பஸ்கடந்த சில நாட்களாக எப்.சி என்றும், கண்டக்டர், டிரைவர் பற்றாக்குறை என்றும் கூறி மூன்று பஸ்சை இயக்கவில்லை.இரண்டு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.
மேலும் அண்ணாநகர் பஸ் டொப்போ மூலம் கோயம்பேட்டில் இருந்து சிறுவாபுரி வழியாக ஆரணிக்கு மூன்று பஸ்கள் இயக்கி வந்தனர். ஆனால், ஏதோ காரணத்தால் ஒரு பஸ்சை கடந்த சில நாட்களாக குறைத்து விட்டனர். இந்த வழித்தடத்தில் தற்போது இரண்டு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.
நேற்று கிருத்திகை என்பதால் சிறுவாபுரிக்கு செல்லும் மாநகர பஸ் குறைக்கப்பட்டதால் பயணிகள் பல்வேறு அவதி அடைந்தனர்.
மாதாந்திர பயணச்சீட்டு பெற்ற தனியார் மற்றும் அரசுதுறை ஊழியர்கள் வியாபாரிகள், பள்ளி மாணவர்கள் மாநகர பஸ்கள் இயக்காததால் குறித்த நேரத்தில் பணிக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளானார்கள்.
எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு ஆரணி வழித்தடத்தில் இயங்கிய அணைத்து பஸ்களையும் உரிய நேரத்தில் இயக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பெங்களூருவில் இருந்து செய்யாறுக்கு இன்று காலை பயணிகளுடன் அரசு பஸ் வந்துக் கொண்டிருந்தது. செஞ்சி சாலையில் சேத்துப்பட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அருகே வந்தபோது சாலையோரமாக நின்றிருந்த லாரியின் பின்னால் அரசு பஸ் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பஸ்சின் முகப்பு கண்ணாடி உடைந்து சுக்கு நூறாக சிதறியது. டிரைவர் ராமு, கண்டக்டர் சிவலிங்கம் மற்றும் பயணிகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சேத்துப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
மாதவரம்:
ஆந்திராவில் இருந்து செங்குன்றம் வழியாக சென்னைக்கு வாகனங்களில் குட்கா புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக காஞ்சீபுரம் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து டி.எஸ்.பி. ஜூலியஸ் சீசர் உள்ளிட்ட போலீசார் இன்று காலை செங்குன்றம், ஜி.என்.டி. சாலையில் பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் பஸ்சில் திடீர் சோதனை நடத்தினர்.
பஸ்சில் இருந்த விஜயவாடா, பாவக்காபுரம் பகுதியை சேர்ந்த துர்க்கா ராவ் என்பவரது பையை திறந்து பார்த்தனர். அதில் கட்டு, கட்டாக பணம் இருந்தது.மொத்தம் ரூ. 1 கோடியே 5 லட்சம் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பணத்திற்கான ஆவணம் துர்க்கா ராவிடம் இல்லை.
இதையடுத்து ரூ. 1 கோடியே 5 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை செங்குன்றம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக துர்க்கா ராவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர், தான் நகை வியாபாரி என்றும், சென்னையில் நகை வாங்குவதற்காக பணத்தை எடுத்து வந்ததாகவும் தெரிவித்தார்.
பணத்திற்கான ஆவணம் அவரிடம் இல்லாததால் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. பிடிபட்ட பணம் யாருடையது? எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆந்திரா பஸ்சில் ரூ. 1 கோடியே 5 லட்சம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் மூவாற்றுப்புழாவில் இருந்து நேற்று மாலை அதிவிரைவு அரசு பஸ் 44 பயணிகளுடன் கோட்டயத்துக்கு புறப்பட்டது. பஸ்சை டிரைவர் ராஜூ பேபி ஓட்டினார். கண்டக்டராக டின்சன் இருந்தார். பஸ்சின் கதவு டிரைவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் இருந்தது.பஸ் மாரடி ஏ.சி. ரோட்டில் வந்து கொண்டிருந்தது.
அப்போது கொட்டாரக்கரை நெல்லிக்குளம் பகுதியை சேர்ந்த அனுப் (வயது 18) என்பவர் மற்ற 2 நண்பர்களுடன் தனித்தனி மோட்டார் சைக்கிளில் அதே ரோட்டில் எதிரே வந்தனர். அப்போது எதிரே சென்ற காரை முந்திச்செல்ல நண்பர்களிடையே போட்டி நடந்தது. அதன்படி 2 நண்பர்கள் காரை முந்திச்சென்றனர்.
காரை அனுப் முந்திச்செல்ல முயன்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அதிவிரைவு பஸ் மீது மோதியது. மோதிய உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். ஆனால் மோட்டார் சைக்கிளுடன் அனுப் பஸ்சுக்கு அடியில் சிக்கினார்.
இதில் அவர் படுகாயம் அடைந்தார். மோட்டார் சைக்கிளில் உரசிய வேகத்தில் தீப்பொறி கிளம்பியது. மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் உடைந்ததால் மோட்டார் சைக்கிள் உடனே தீ பிடித்தது.
தகவல் அறிந்ததும் கோட்டயம், மூவாற்றுப்புழா தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் வாகனத்தில் விரைந்து வந்தனர். கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர். எனினும் பஸ், மோட்டார் சைக்கிள் எரிந்து எலும்பு கூடானது.
இந்நிலையில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய அனுப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சமயோசிதமாக செயல்பட்ட பஸ் டிரைவர் ராஜூ பேபி, கண்டக்டர் டின்சன் ஆகியோர் 44 பயணிகளை காப்பாற்றியது அதிகாரிகள் மற்றும் பயணிகள் பாராட்டினர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்