என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 151061"
- மதுபோதையில் இருந்த மணிமாறன் அருண்குமாரை கத்தியால் குத்தினார்.
- சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை சூலூர் அருகே உள்ள புளியமரத்து பாளையத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 25). கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் (40).
சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள மதுரை வீரன் கோவிலில் கிடா வெட்டு போடுவதற்காக இவர்கள் 2 பேரும் மதுபோதையில் கறி வெட்டிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த மணிமாறன் தான் வைத்து இருந்த கத்தியால் அருண்குமாரின் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மனைவிக்கு கத்திக்குத்து; கணவர் கைது செய்யப்பட்டார்.
- வழக்கை வாபஸ் பெறுமாறு சத்யாவை கணவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் சந்தைபேட்டை தெருவை சேர்ந்தவர் சத்யா (வயது 32). கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து மகன் யுவராஜூடன் வாழ்ந்து வருகிறார். விவாகரத்து வழக்கும் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜீவானம்சமாக மாதம் ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கார்த்திக் பிரபுவுக்கு கோர்ட்டு உத்தர விட்டிருந்தது. ஆனால் அவர் கடந்த சில மாதங்களாக பணம் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கை வாபஸ் பெறுமாறு சத்யாவை கணவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் பிரபு நேற்று இரவு சத்யாவிடம் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தினார். படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் பிரபுவை கைது செய்தனர்.
- முன் விரோதம் காரணமாக விபரீதம்
- வாலிபரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்
ஆம்பூர்:
ஆம்பூர் டவுன் சான்றோர் குப்பம் அன்னை மேரி தெரு பகுதியை சேர்ந்த வால்டர் மகன் விஜய் (வயது 27). அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகன் கார்த்தி (33) என்பவருக்கு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கார்த்தி, விஜய்யை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். பொதுமக்கள் விஜயை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர். பின்னர் அவரை ஜெயிலில் அடைத்தனர்.
- வங்கி ஊழியரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர்.
- போலீசார் விசாரணை நடத்தி சதீஷ்குமாைர கைது செய்தனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அப்பயநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அசோக் (வயது 21). கோவையில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளியில் படிக்கும்போது ஸ்ரீவில்லி புத்தூர் அருகே உள்ள குக்குச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுடன் பேசி வந்ததாக கூறப்படு கிறது.
இதை அறிந்த உறவி னர்கள், அந்த பெண் தங்கை முறை என்று அசோக்கிடம் தெரியப் படுத்தினர். இதையடுத்து அந்த பெண்ணுடன் பேசி பழகுவதை அசோக் நிறுத்தி விட்டார்.
இந்த நிலையில் அசோக்கின் சகோதரிக்கு வளைகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அசோக் ஊருக்கு வந்தி ருந்தார். அப்போது ஊர் திருவிழாவும் நடந்து கொண்டிருந்தது.
பாட்டி வீட்டிற்கு செல்வதற்காக அசோக் அந்த வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் இளம்பெண்ணின் உறவினர் சதீஷ்குமார் நின்று கொண்டிருந்தார். அவர் அசோக்கை வழி மறித்து இளம்பெ ண்ணுடன் பேசி பழகுவதை நிறுத்தி யதை கண்டித்து ள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது.
அப்போது சதீஷ்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அசோக்கை கத்தியால் குத்தினார். அருகில் இருந்தவர்கள் திரண்டதால் கொலை மிரட்டல் விடுத்து விட்டு சதீஷ்குமார் தப்பி சென்றார். இதில் காயம் அடைந்த அசோக் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் கொடுத்தபுகாரின்பேரில் ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி சதீஷ்குமாைர கைது செய்தனர்.
- கன்னியப்பன் மகன் கோகுல்ராஜ் (வயது 29) என்ற காண்ட்ராக்டரிடம், கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார்.
- ராமச்சந்திரன் காண்ட்ராக்டர் கோகுல்ரா ஜிடம் வேலை செய்ததற்கான சம்பள பணத்தை கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
சேலம்:
நாமக்கல் மாவட்டம் முத்துகாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாயகம். இவரது மகன் ராமச்சந்திரன் (வயது 27). பெயிண்டரான இவர், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கடமலை பகுதியைச் சேர்ந்த கன்னி யப்பன் மகன் கோகுல்ராஜ் (வயது 29) என்ற காண்ட்ராக்டரிடம், கட்டிடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறார். இவர்கள் தற்போது சேலம் தாத காப்பட்டி மூணாம் கரடு பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ராமச்சந்திரன் காண்ட்ராக்டர் கோகுல்ரா ஜிடம் வேலை செய்ததற்கான சம்பள பணத்தை கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த, கோகுல்ராஜ் கத்தியால் ராமச்சந்திரன் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் படு காயம் அடைந்த ராமச்சந்தி ரனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, இன்று காலை கோகுல்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிகரெட் தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.
- இந்த சம்பவம் குறித்து விஸ்வா அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயாவை கைது செய்தனர்.
மதுரை
மதுரை கரும்பாலை கீழத்தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகன் விஸ்வா (வயது24). கரும்பாலை முனிசிபல் காலனியை சேர்ந்தவர் உதயா (30). இவர்கள் கரும்பாலை ஆட்டோ நிறுத்தத்தில் நின்ற போது விசுவாவின் நண்பரிடம் உதயா சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த உதயா கத்தியால் விஸ்வாவின் நண்பரை குத்தமுயன்றார். இதை தடுக்க முயன்ற விஷ்வாவுக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவம் குறித்து விஸ்வா அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். அதன்ேபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயாவை கைது செய்தனர்.
- துக்க வீட்டில் தகராறு; 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
- வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை
மதுரை ஜெய்ஹிந்துபுரம் சேதுபதி தெருவை சேர்ந்தவர் முனியசாமி (வயது 38). இவரது சகோதரர் மணிகண்டன்(35). இவர்களுக்கும் உறவினர் சுப்பிரமணி(58) என்பவ ருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று வில்லாபுரத்தில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு முனிய சாமி, மணிகண்டன் சென்றிருந்தனர். அப்போது அங்கிருந்த சுப்பிர மணிக்கும், இவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் ஒருவரை யொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் சுப்பிர மணி, முனியசாமி, மணி கண்டன் ஆகிய 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. படுகாயமடைந்த அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குடிபோதையில் நின்ற வாலிபரை உதயபிரகாஷ் கண்டித்துள்ளார்.
- மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தர்ராஜனை கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள மகாதேவபுரத்தை சேர்ந்தவர் உதயபிரகாஷ்(24). டான்ஸ் மாஸ்டர்.
சம்பவத்தன்று இவரது வீட்டு முன்பு வாலிபர் ஒருவர் குடிபோதையில் நின்ற வாலிபர் ஒருவர் அந்த வழியாக சென்றவர்களிடம் தகராறு செய்தார். இதனை பார்த்த உதயபிரகாஷ் அந்த வாலிபரின் அருகே சென்று அவரை கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் தகாத வார்த்தைகளால் பேசினார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து உதயபிரகாஷை குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த டான்ஸ் மாஸ்டரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டான்ஸ் மாஸ்டரை கத்தியால் குத்திய பத்திரகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சவுந்தர்ராஜன் (23) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து விழுந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
தெற்குவாசலில் உள்ள எலக்ட்ரிகல் நிறுவனத்தின் சூப்பர்வைசர் சையது அப்துல் கபூர் (வயது45). இவர் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தென்றல் நகரைச் சேர்ந்த சைவம் (59) என்பவரிடம் ரூ.5 லட்சம் கடன் பெற்றார். இவர் தி.மு.க. பிரமுகர் ஆவார். பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். அவர்களுக்குள் கடன்தொகையை கணக்கிட்டு செட்டில் செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் முன் விரோதம் இருந்தது.
சம்பவத்தன்று தெற்கு வாசல் பகுதியில் இருந்த சையது அப்துல் கபூரை, சைவம் அவதூறாக பேசி யதுடன் கத்தியால் குத்தினார். காயமடைந்த சையது அப்துல் கபூர் இதுகுறித்து தெற்குவாசல் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து தி.மு.க பிரமுகர் சைவம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணல் குடோனில் சிறுநீர் கழித்ததை, சத்தியாகு கண்டித்துள்ளார்.
- ஆசாரிபள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கீழ ஆசாரிபள்ளம் சானல் கரையை சேர்ந்தவர் சத்தியாகு (வயது 61). இவர் சாக்கு வியாபாரம் செய்து வருகிறார்.
சத்தியாகு நேற்று மேல ஆசாரிபள்ளத்தில் மணல் குடோன் ஒன்றுக்கு சென்றார். அப்போது அங்கு அதேபகுதியை சேர்ந்த மர ஆசாரி சேவியர் (55) வந்துள்ளார். அவர், மணல் குடோனில் சிறுநீர் கழித்ததை, சத்தியாகு கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சேவியர், தான் வைத்திருந்த உளியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், சத்தியாகுவுக்கு தலை, மார்பு மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.
அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் திரண்டதால், சேவியர் அங்கிருந்து ஓட்டம் எடுத்தார். அப்போது ஆசாரிபள்ளத்தை சேர்ந்த அருள்சேவியர் (47) என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரது வாகனத்தில் ஏறி சேவியர் தப்பிச்சென்று விட்டார்.
காயம் அடைந்த சத்தி யாகு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்ற னர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செலவுக்கு பணம் கொடுக்காததால் தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைதானார்.
- பணம் கேட்டு தகராறு செய்து வந்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் காளிமுத்து நகரை சேர்ந்தவர் முருகவேல் (வயது 26). இவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். திருத்தங்கல் ஆலாவூரணி பகுதியைச் சேர்ந்தவர் வைரமுத்து (36), ஆட்டோ டிரைவர். முருகவேலின் சகோதரரான இவர் மனைவியை பிரிந்து தனியே வசித்து வருகிறார் .
மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி தனது தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தாய் மற்றும் சகோதரர் முருகவேலிடம் பணம் கேட்டு தகராறு செய்தார்.
ஆனால் அவர்கள் தங்களிடம் பணம் இல்லை என கூறியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த வைரமுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகவேலை தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். இதில் காயமடைந்த முருகவேல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் முருகவேல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வைரமுத்துவை கைது செய்தனர்.
- மதுரை அருகே டிரைவரை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டார்.
- இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன் விரோதம் உள்ளது.
மதுரை
மதுரை முரட்டன்பத்திரியை சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 45). கால் டாக்சி டிரைவர். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் முன் விரோதம் உள்ளது. இது தொடர்பாக கரிமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பிறகு இரு தரப்பினரும் சமரசம் ஆகிவிட்டனர். சம்பவத்தன்று மாலை செல்லப்பாண்டி புது ஜெயில் ரோட்டில் சென்றார். அங்கு வந்த 2 பேர் அவரிடம் வழிமறித்து தகராறு செய்தனர்.
இதை செல்லப்பாண்டி தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த இருவரும் அவரை கத்தியால் குத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுஜெயில் ரோட்டை சேர்ந்த சிவகுமார் மகன் கட்டாரி கார்த்திக் (23), ராம்குமார் (29) ஆகியோரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்