search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்பிணி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தையை பார்த்ததும், அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
    • டாக்டர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

    பாட்னா:

    பீகார் மாநிலம், சாப்ராவை அடுத்த ஷியாம்சாக் பகுதியை சேர்ந்தவர் பிரசுதா பிரியா தேவி.

    நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரசுதா பிரியா தேவியை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர்.

    இதில் அந்த பெண், அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். குழந்தையை பார்த்ததும், அவருக்கு பிரசவம் பார்த்த டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர். காரணம் அந்த குழந்தைக்கு 4 கால்கள், 4 கைகள், 4 காதுகள் மற்றும் 2 முதுகுகள் இருந்தன. இதுபோல குழந்தையின் உடலை பரிசோதித்தபோது, குழந்தைக்கு 2 இதயங்களும் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த குழந்தையை டாக்டர்கள் அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். என்றாலும் அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பிறந்த 20 நிமிடங்களிலேயே பரிதாபமாக இறந்தது.

    இதற்கிடையே இரண்டு இதயம் மற்றும் 4 கால், கைகளுடன் பிறந்த குழந்தை பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதனை பார்த்த மக்கள், அந்த குழந்தை கடவுளின் குழந்தை என்றும், அதனை பார்க்க வேண்டும் என்றும் கருத்து பதிவிட்டனர். இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து அந்த குழந்தை பிறந்த ஆஸ்பத்திரி முன்பு ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் குழந்தை இறந்த தகவலை டாக்டர்கள் தெரிவித்த பின்னர், அங்கு திரண்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

    • கர்ப்பிணிகளுக்கு அரசு பரிசு பெட்டகத்தை கவுன்சிலர் போஸ் முத்தையா வழங்கினார்.
    • தி.மு.க. வட்ட செயலாளர் பாலா என்ற பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 84-வது வார்டில் புதிய நகர்புற நலவாழ்வு மையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். வார்டு கவுன்சிலர் போஸ் முத்தையா குத்துவிளக்கேற்றி பார்வையிட்டார்.

    பின்னர் இல்லம் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு அரசின் மருந்து பெட்டகப்பரிசுகளை வழங்கினார். இந்த விழாவில் மருத்துவர்கள் அம்பிகா, வினோத், வார்டு உதவி பொறியாளர் முருகன், தி.மு.க. வட்ட செயலாளர் பாலா என்ற பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.

    புதிதாக திறக்கப்பட்டுள்ள நலவாழ்வு மையத்தில் சர்க்கரை நோய் கண்டறிதல், ரத்த அழுத்த பரிசோதனை, பெண்களுக்கு கருப்பை வாய் மற்றும் மார்பகப் புற்றுநோய் ஆகிய பரிசோதனைகள் செய்யப்படும். மேலும் பல்வேறு நோய்களுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி மருந்துகள் வழங்கப்படம். 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இல்லம் தேடி திட்டத்தின் கீழ் மருந்துகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தொழிலாளி திடீரென இறந்தார்.
    • முனியாண்டியின் மனைவி சங்கீதா 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே யுள்ள அச்சம் தவிர்த்தான் கீழத்தெருவை சேர்ந்தவர் முனியாண்டி(வயது28). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தார். அப்போது அவ ருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சிறிது நேரத்தில் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முனியாண்டியின் மனைவி சங்கீதா 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காடையாம்பட்டி கரட்டு கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் மணிகண்டன். டிப்பர் லாரி உரிமையாளர்.
    • கோபிகாஸ்ரீ (வயது 19) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி கரட்டு கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் மணிகண்டன். டிப்பர் லாரி உரிமையாளர்.

    4 மாத கர்ப்பிணி

    இவருக்கும் தாசசமுத்தி ரம் பகுதியை சேர்ந்த சந்திரன்- சத்தியா ஆகியோ ரது மகள் கோபிகாஸ்ரீ (வயது 19) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது. கோபிகா ஸ்ரீ 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த நிலையில் கோபிகாஸ்ரீயின் தந்தை சந்திரனின் பாட்டி மெல்லியம்மாள் என்பவர் நேற்று முன்தினம் இரவு இறந்துவிட்டார். இதற்கு துக்கம் விசாரிக்க தனது தந்தை வீட்டிற்கு செல்ல வேண்டுமென கோபிகாஸ்ரீ கூறியதாக தெரிகிறது.

    வாக்குவாதம்

    இதற்கு மணிகண்டன், தனது தந்தை மாரியப்பனுக்கு உடல்நிலை சரியில்லை, அவரைப் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மணிகண்டன் தனது மனைவி கோபிகா ஸ்ரீயை அவரது தந்தை வீட்டிற்கு அனுப்பி உள்ளார்.

    தற்கொலை

    இதுபற்றி கோபிகா ஸ்ரீ தனது தந்தை வீட்டாரிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து நேற்று கோபிகா ஸ்ரீயை அவரது கணவர் வீட்டில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

    பின்னர் மதியம் மெல்லி யம்மாள் உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது, கோபிகா ஸ்ரீ உடல்நிலை பாதிக்கப்பட்டு காடை யாம்பட்டி அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு உள்ளதாக அவரது கணவன் வீட்டார், சந்திரன் வீட்டாரிடம் தெரிவித்தனர்.

    இதனை அடுத்து சந்திரன் உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது, கோபிகா ஸ்ரீ இறந்து உள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து கேட்ட போது, கோபிகாஸ்ரீ தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

    மறியல்

    இதனால் ஆத்திரமடைந்த கோபிகா ஸ்ரீயின் தந்தை சந்திரன் மற்றும் அவரது உறவினர்கள் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்ப தாகவும் அவரது சாவிற்கு காரணமான கணவர் மணிகண்டன், மாமனார் மாரியப்பன், மாமியார் அலமேலு ஆகியோரை கைது செய்ய வேண்டும் என கூறி தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையம் முன்பு, சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    போலீசார் விசாரணை

    இதனை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா, இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த தின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, கோபிகாஸ்ரீயின் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் திருமணம் நடந்து 7 ஆண்டுகளுக்கு குறைவாக இருப்பதால் மேட்டூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்தனர். அவர் இதுபற்றி விசாரணை நடத்த உள்ளார். கோபிகா ஸ்ரீ யின் கணவர் மணிகண்டன், மாமனார் மாரியப்பன், மாமியார் அலமேலு ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட இருக்கிறது. 4 மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சிறுமி 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.
    • சாத்தப்பன் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார்.

    கோவை

    கோவை சாந்திமேடு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கு தாய், தந்தை இல்லை. இதனால் இவர் தனது தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த சாத்தப்பன் (வயது 31) என்பவர் மிஸ்டு கால் மூலமாக நண்பராக பழகினார். சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது அங்கு சென்ற சாத்தப்பன் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். பின்னர் அவரை கோவைக்கு அழைத்து வந்து திருமணம் செய்து ஒரு ஆண்டுகளாக கணவன் -மனைவியாக வாழ்ந்து வந்தனர். இதன் காரணமாக சிறுமி கர்ப்பமானார். இதனை அறிந்த ஒருவர் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • பிரசவ வலியால் துடித்ததால் பெண் கண்டக்டரான வசந்தம்மா, பாத்திமாவுக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்தார்.
    • பெண் கண்டக்டர் வசந்தம்மா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் உதவியாளராக பணியாற்றி உள்ளார்.

    பெங்களூரு:

    அசாமை சேர்ந்தவர் பாத்திமா (வயது 22). இவரது கணவர் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேயில் உள்ள காபி தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான பாத்திமா கணவர் வேலை பார்க்கும் இடத்திற்கு பெங்களூருவில் இருந்து சிக்கமகளூரு நோக்கி புறப்பட்ட கர்நாடக அரசு பஸ்சில் சென்றார். அவருடன் மகன் மற்றும் மாமியாரும் சென்றனர்.

    அந்த பஸ்சில் வசந்தம்மா (52) என்ற பெண் கண்டக்டராக இருந்தார். பஸ், ஹாசன் அருகே உதயாபுரா பகுதியில் சென்றபோது, பாத்திமாவுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரது மாமியாரும், பஸ்சில் பயணம் செய்த சக பயணிகளும் செய்வதறியாது திகைத்தனர்.

    பின்னர் அவரை பஸ்சில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால், பிரசவ வலியால் துடித்ததால் பெண் கண்டக்டரான வசந்தம்மா, பாத்திமாவுக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்தார்.

    இதையடுத்து டிரைவரிடம் பஸ்சை சாலையோரம் நிறுத்த சொல்லிய வசந்தம்மா, பஸ்சில் இருந்து பயணிகளை கீழே இறக்கிவிட்டார். பின்னர் தான் வைத்திருந்த பெட்சீட்டை வைத்து மற்ற பெண் பயணிகள் உதவியுடன் பஸ்சில் வைத்தே பாத்திமாவுக்கு வசந்தம்மா பிரசவம் பார்த்தார்.

    அப்போது அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே சக பயணிகள் ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்தனர். அந்த பெண், ஏழ்மையில் இருப்பதை அறிந்த வசந்தம்மா, தன்னிடம் இருந்த பணம் மற்றும் சக பயணிகளிடம் இருந்து பணம் வசூலித்து ரூ.1,500-ஐ அவரிடம் கொடுத்தார்.

    இதையடுத்து அந்த பெண்ணும், அவரது பச்சிளம் பெண் குழந்தையும் ஆம்புலன்ஸ் மூலம் சாந்திகிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர் தெரிவித்தனர்.

    பெண் கண்டக்டர் வசந்தம்மா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் உதவியாளராக பணியாற்றி உள்ளார். அதன்பிறகு தான் அரசு பஸ் கண்டக்டராக பணியில் சேர்ந்தார். பிரசவ வார்டில் பணியாற்றிய அனுபவத்தை வைத்து பாத்திமாவுக்கு அவர் பிரசவம் பார்த்தார்.

    கர்ப்பிணி பெண்ணுக்கு மனிதாபிமானத்துடன் பிரசவம் பார்த்த கண்டக்டர் வசந்தம்மாவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

    • அதிகாரிப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தியா (வயது 23) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
    • கதவை திறந்து வெளியே வந்த சந்தியா, வாந்தி எடுத்த நிலையில் அருகில் இருந்த சாக்கடை கால்வாய் தவறி விழுந்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை அதிகாரிப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தியா (வயது 23) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    தற்போது சந்தியா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு வாந்தியுடன், தலை சுற்றல் ஏற்பட்டது. கதவை திறந்து வெளியே வந்த சந்தியா, வாந்தி எடுத்த நிலையில் அருகில் இருந்த சாக்கடை கால்வாய் தவறி விழுந்தார்.

    இதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்தியா பரிதாபமாக இருந்தார். தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    சாக்கடை கால்வாயில் கர்ப்பிணி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்தியாவின் உடலை பார்த்து அவரது கணவர், உறவினர்கள் கதறி அழுதது காண்போர் கண்களை குளமாக்கியது.

    • கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு, கூல்டிரிங்ஸ் பாட்டிலில் விஷம் எடுத்து வந்து குடிக்க முயன்றார்.
    • உடனடியாக அமலாவிடம் இருந்து மருந்து பாட்டிலை பறித்து அவரை மீட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அடுத்த நரவலூரைச் சேர்ந்தவர் அமலா (வயது 25). இவர், நேற்று கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு, கூல்டிரிங்ஸ் பாட்டிலில் விஷம் எடுத்து வந்து குடிக்க முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக அமலாவிடம் இருந்து மருந்து பாட்டிலை பறித்து அவரை மீட்டனர்.

    பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது:-

    எனது முதல் கணவர் நோயால் பாதிக்கப்பட்ட தால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டோம். அதையடுத்து ராஜேஷ் என்பவரை 2-வது திரும ணம் செய்து கொண்டேன்.

    தற்போது நான் 3 மாத கர்ப்பமாக இருக்கிறேன். இந்நிலையில், என் மாமியாரும், அவரது ஆண் நண்பரும் சேர்ந்து, என்னை அடித்து துன்புறுத்துகின்ற னர். மேலும் எனது கணவரின் ஆண் நண்பர் என்னை தவறான தொடர்புக்கு அழைக்கிறார்.

    மேலும், வயிற்றில் உள்ள குழந்தை என்னுடையது இல்லை. அதனால், அதனை கலைத்துவிடும்படி கூறி கணவரும் அடிக்கடி அடித்து துன்புறுத்துகிறார். வேறு சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததால், என் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்னை குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டனர். அதனால் சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்படுகிறேன்.

    இது குறித்து, நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் இதுவரை எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. அதனால், நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன் என்று கூறினார். தொடர்ந்து, அந்த இளம்பெண்ணை, போலீசார், சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகம் முன், பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி யில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஜம்மு காஷ்மீரில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
    • இந்திய ராணுவ வீரர்கள் சிலர் கர்ப்பிணியை கொட்டும் பனிக்கு நடுவே சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் தங்கள் தோள்களில் தூக்கிச் சென்றனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் குப்வாரா மாவட்டத்தில் உள்ள பதாகிட் என்ற கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர் மருத்துவ உதவிக்காக காத்திருந்தார்.

    ஆனால் வாகனங்கள் வராததால் அவரால் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாமல் தவித்தார்.

    இதையறிந்த இந்திய ராணுவ வீரர்கள் சிலர் கர்ப்பிணியை கொட்டும் பனிக்கு நடுவே சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் தங்கள் தோள்களில் தூக்கிச் சென்றனர்.

    பின்னர் அங்குள்ள பாலத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் ஏற்றி அருகே உள்ள சுகாதார மையத்தில் சேர்த்தனர். அங்கு கர்ப்பிணிக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அந்த பெண் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர். அந்த பெண்ணின் குடும்பத்தினர், கர்ப்பிணியை தோளில் சுமந்து வந்து உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

    ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே குப்புவாராவில் உள்ள தாங்கர் என்ற பகுதியில் மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட கர்ப்பிணியை கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் ராணுவ ஹெலிகாப்டரில் ஏற்றி மேல் சிகிச்சை அளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    • முறையான அனுமதியின்றி மருந்தகம் நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.
    • மருந்தகங்களில் மருந்து சீட்டு இல்லாமல் சில மருந்துகளை வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது,

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே தனியார் மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கி சாப்பிட்ட அமுதா என்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அசகளத்தூர் கிராமத்தில் கருக்கலைப்பு செய்ததாக கூறப்பட்ட மருந்தகத்தில் மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கள்ளக்குறிச்சி அருகே விளாந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த வடிவேல் (45) என்பவர் அமுதாவிற்கு ஸ்கேன் செய்து பார்த்து கருக்கலைப்பு மாத்திரை வழங்கியதும், அவர் முறையான அனுமதியின்றி மருந்தகம் நடத்தியதும் தெரியவந்தது. மேலும், கடந்த செப்டம்பர் மாதம் மலைக்கோடட்டாலம் பகுதியில் அனுமதியின்றி கருக்கலைப்பு கண்டறியும் மையம் நடத்தியதாக கைது செய்யப்பட்டு பிணையில் தற்போது வெளியில் வந்ததும் தெரியவந்தது.

    உயிரிழந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து வடிவேலை கைது செய்தனர். செய்து வடிவேலிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

    கருக்கலைப்புக்கான மாத்திரை சாப்பிட்ட பெண் உயிரிழந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை தொடர்பாக அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்தார்.

    மேலும், மருந்தகங்களில் மருந்து சீட்டு இல்லாமல் சில மருந்துகளை வழங்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது, மருத்துவர்களின் ஆலோசனை, பரிந்துரைகளின் அடிப்படையில் மருந்துகளை பெற வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.

    • தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம்
    • கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் நலத்திட்ட உதவி

     தாராபுரம்:

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் அலங்கியம் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.முகாமுக்கு வட்டார மருத்துவர் டாக்டர் தேன்மொழி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.மகேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் தேவிகுப்பு, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் எஸ்.வி.செந்தில்குணர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்‌.

    முகாமில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    • கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், காய்கறி பிரியாணி போன்றவை வழங்கபட்டது.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், தமிழக அரசின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

    தி.மு.க. மாவட்ட செயலா ளரும், சட்டமன்ற உறுப்பி னருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில் 286 கர்ப்பிணி பெண்களுக்கு இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார், தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், கமுதி நகர செயலாளர் பாலமுருகன், அபிராமம் நகர செயலாளர் முத்து ஜாகிர்உசேன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மணிமேகலை, ராஜ கோபால், ஒன்றிய கவுன்சி லர்கள் முத்துக்கிளி, உதயகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகரத்தினம், நாகமணி, காவடிமுருகன் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    அனைவரும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினர். பின்னர் தமிழக அரசின் சார்பில் வளையல், குங்குமம், சேலை, அனைத்து வகை பழங்களுடன் கொண்ட சில்வர் தட்டு வழங்கப்பட்டது.

    பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், காய்கறி பிரியாணி போன்றவை வழங்கபட்டது.

    ×