என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 184454"
- இவர் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார்.
- வேலை பிடிக்கவில்லை என தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி:
புதுக்கடை அருகே பார்த்திபபுரம் பகுதியை சேர்ந்தவர் பிபின் ராஜ் (வயது 21). இவர் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ளார். இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பிபின்ராஜ், தான் பார்க்கும் வேலை பிடிக்கவில்லை என தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். பிபின் ராஜை பெற்றோர் சமதானம் செய்துள்ளனர்.
சம்பவத்தன்று இரவு வீட்டில் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். அப்போது வீட்டு மேல் மாடி அறைக்கு சென்ற பிபின் ராஜ் அங்கு தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா முத்தக்குறிச்சியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் சங்கரலிங்கம் (19). வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். கடந்த 22-ந்தேதி சங்கரலிங்கத்தின் சகோதரிக்கு திருமணம் நடந்தது. அப்போது சங்கரலிங்கம் செலவுக்கு பணம் கேட்டு தந்தையிடம் தகராறு செய்தார். ஆனால் ராமச்சந்திரன் பணம் கொடுக்கவில்லை. இதனால் மனவருத்தத்தில் இருந்த சங்கரலிங்கம் சகோதரிக்கு சீர்கொடுக்க செல்லாமல் இருந்து விட்டார்.
இந்த நிலையில் அருப்புக்கோட்ைட அருகே உள்ள செங்குளம் பகுதியில் சங்கரலிங்கம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் மீட்டு அவரை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நிர்வாண போராட்டம் நடத்திய வாலிபரை மடக்கி பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
- சம்பவத்தால் பிற்பகல் வாடிகன் தேவாலயம் சிறிது நேரம் மூடப்பட்டது.
வாடிகன்:
இத்தாலி வாடிகன் நகரில் உலக பிரசித்தி பெற்ற புனித பீட்டர் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் வருகை தருவார்கள்.
இந்நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் தேவாலயத்துக்கு வந்தார். திடீரென அவர் உக்ரைனில் நடந்து வரும் போரை எதிர்ப்பதாக கூறி தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றார். இதைபார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர்.
மேலும் அந்த வாலிபர் தனது உடலில் கைவிரல் நகத்தால் கீறி ஆவேசத்துடன் சத்தம் போட்டார். தனது முதுகு பகுதியில் உக்ரைனில் உள்ள குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என பெயிண்டால் எழுதி இருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி அறிந்ததும் இத்தாலி போலீசார் அங்கு விரைந்து வந்து நிர்வாண போராட்டம் நடத்திய வாலிபரை மடக்கி பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர் யார்? எதற்காக இந்த செயலில் ஈடுபட்டார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் பிற்பகல் வாடிகன் தேவாலயம் சிறிது நேரம் மூடப்பட்டது. வாலிபரின் நிர்வாண போராட்டத்தை சுற்றுலா பயணிகள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூகவலை தளங்களில் வெளியிட்டு உள்ளனர்.
- மாயமான வாலிபர் பிணமாக மீட்கப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் வத்திரா யிருப்பு மாயிருளம்பட்டியை சேர்ந்தர் பொன்ராஜ்(வயது41). இவரது மனைவி பால்பாண்டி யம்மாள். கடந்த 29-ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற பொன்ராஜ் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் அந்தப்பகுதியில் விவசாய நிலத்தில் உள்ள ஒரு கிணற்றில் பொன்ராஜ் இறந்து கிடப்பதாக அவரது சகோதரர் மதுசூதனன் பால்பாண்டி யம்மாளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது பொன்ராஜ் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்புத்துைற மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பொன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மனைவி ஷகிலாவை அனுப்பி வைக்குமாறு சலீம் முகமதுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
- எங்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருப்பூர் :
மதுரையை சேர்ந்தவர் சலீம்முகமது (வயது 45). இவரது மனைவி மும்தாஜ். 3 மகள்கள் உள்ளனர். சலீம் முகமது தனது குடும்பத்துடன் திருப்பூர் போயம்பாளையத்தில் வசித்துக்கொண்டு அதே பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவரது மகள் ஷகிலாவுக்கும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஷபிபுல்லா என்பவருக்கும் திருமணம் நடந்தது. சில நாட்கள் சந்தோஷமாக போய்க்கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து ஷகிலா, கணவர் ஷபிபுல்லாவை விட்டு பிரிந்து திருப்பூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
சம்பவத்தன்று மனைவியை வீட்டுக்கு அழைத்து வர ஷபிபுல்லா, அவரது தந்தை முகமது மீரான், தம்பி அயூப்கான், சகோதரி சபீனா ஆகியோருடன் திருப்பூர் போயம்பாளையத்தில் உள்ள மனைவி வீட்டிற்கு வந்தார்.பின்னர் மனைவி ஷகிலாவை அனுப்பி வைக்குமாறு சலீம் முகமதுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஷபிபுல்லாவும் அவரது தம்பியும் சேர்ந்து கிரிக்கெட் மட்டையால் மாமனார் சலீம் முகமதுவை தாக்கினர்.மும்தாஜையும் தாக்கினர். இைதயடுத்து ஷபிபுல்லா உள்ளிட்ட 4 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.இந்தநிலையில் படுகாயமடைந்த சலீம் முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் அனுப்பர்பளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.தனிப்படை போலீசார் திண்டுக்கல்லில் பதுங்கியிருந்த ஷபிபுல்லா மற்றும் அவரது தம்பி அயூப்கான் ஆகிய 2 பேரையும் கைது செய்து அனுப்பர்பாளையத்திற்கு அழைத்து வந்தனர். ஷபிபுல்லாவிடம் நடத்திய விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:- எனக்கும் எனது மனைவி ஷகிலாவுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தொடக்க நாட்களில் நாங்கள் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தினோம். சில நேரங்களில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைக்காக எங்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. சில வாரங்களுக்கு முன்பு ஷகிலா என்னை விட்டு பிரிந்து திருப்பூர் வந்து விட்டார். இதில் நான் மிகவும் மன உளைச்சல் அடைந்தேன். அவருடன் தொடர்ந்து சேர்ந்து் வாழ வேண்டும் என்று விரும்பினேன். இதனால் எனது அப்பா மற்றும் தம்பி, சகோதரியுடன் திருப்பூர் வந்து மாமனார் வீட்டில் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி மனைவி ஷகிலாவை அனுப்பி வைக்குமாறு கூறினேன். இதற்கு மாமனார் சலீம் முகமது அனுப்ப முடியாது என்று வாக்குவாதம் செய்தார். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கடும் கோபம் அடைந்த நான் அங்கு இருந்த கிரிக்கெட் மட்டையால் அவரை தாக்கினேன்.இதில் அவர் உயிரிழந்து விட்டார். நான் அவரை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இதை செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- மோஷின், மனைவி மற்றும் குழந்தையுடன், ஆண்டிபாளையம் முல்லை நகரில் வசித்து வருகிறார்.
- அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.
திருப்பூர் :
மது போதையில் தனக்கு தானே கத்தியால் குத்திக்கொண்ட நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பீகாரை சேர்ந்த மோஷின், (36). மனைவி மற்றும் குழந்தையுடன், ஆண்டிபாளையம் முல்லை நகரில் வசித்து வருகிறார்.
பனியன் தொழிலாளியான அவருக்கு மதுப்பழக்கம் உள்ளது. அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம். நேற்றும் வழக்கம் போல் மது அருந்தி விட்டு வந்த அவர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.
சிறிது நேரத்தில் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து தன்னைத் தானே பல இடங்களில் குத்திக் கொண்டு மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிமருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து திருப்பூர் மத்திய பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபர் வலது காதில் கட்டுடன் தேர்வு அறைக்குள் சென்றார்.
- சிறிது நேரத்தில் வாலிபர் யாருடனோ பேசுவது போல் தெரிந்தது.
வேலூர்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிக்கான தேர்வு நேற்று முன்தினம் நடந்தது.
வேலூரை அடுத்த காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வில் விருதம்பட்டை சேர்ந்த அப்துல் பயாஸ் (வயது 27) என்ற வாலிபர் தேர்வு எழுத சென்றார். அவர் வலது காதில் கட்டுடன் தேர்வு அறைக்குள் சென்றார். அறையின் மேற்பார்வையாளர் கேட்டதற்கு வலது காதில் அடிபட்டதால் கட்டு போடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அவரை தேர்வு எழுத அனுமதித்தனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் யாருடனோ பேசுவது போல் தெரிந்தது. உடனே அறை மேற்பார்வையாளர் அவரது காதில் இருந்த கட்டைப் பிரித்து பார்த்தபோது காதில் புளூடூத் ஏர்பட்ஸ் இருந்தது தெரியவந்தது. அதன் வழியாக அவர் யாரிடமோ கேட்டு தேர்வு எழுதியது கண்டு பிடிக்கப்பட்டது.
இதுகுறித்து காட்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தில் வாலிபர் இறந்தார்.
- பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள சோலங்குருணை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(24). இவர் திருப்பூரில் வேலை பார்த்தார். ஊருக்கு வந்த இவர் வலையங்குளத்தை சேர்ந்த இருளப்பன் மகன் மூர்த்தி(24) என்பவருடன் நல்லூர் பகுதியில் உள்ள கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். மோட்டார் சைக்கிளை மூர்த்தி ஓட்டினார். அப்போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் மூர்த்தி படுகாயமடைந்தார். அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜ்குமார் கொடுத்த புகாரின்பேரில் பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மயங்கி விழுந்து இறந்த வாலிபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 24-ந் தேதி மாலையில் பரிதாபமாக இறந்தார்.
மதுரை
மதுரை வெள்ளக்கல் முனியாண்டி கோவில் அருகில் கடந்த 20-ந் தேதி இரவு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் மயங்கி கிடந்தார். தகவலறிந்த அயன்பாப்பாக்குடி கிராம உதவியாளர் செல்லப்பாண்டி மற்றும் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 24-ந் தேதி மாலையில் பரிதாபமாக இறந்தார்.
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. நெற்றியில் கருப்பு மச்சமும், இடது கால் முட்டியில் பழைய காயத்தழும்பும் காணப்படுகிறது. இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- மாரிமுத்துவை கைது செய்தனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கொத்தன்குளத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி ஜெயமணி (27). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. பாலமுருகனுடன் சேர்ந்து பெயிண்டிங் வேலை பார்ப்பவர் மாரிமுத்து (21). இவர் அடிக்கடி பாலமுருகன் வீட்டுக்கு வந்து குழந்தையை கொஞ்சுவது போல் நோட்டமிட்டு கொண்டு இருப்பாராம். இதனை ஜெயமணி கண்டித்துள்ளார். இந்த நிலையில் பாலமுருகன் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்த மாரிமுத்து ஜெயமணியிடம் அத்துமீறி நடக்க முயன்றார். ஆனால் ஜெயமணி வீட்டின் வெளியே வந்து சத்தம் போட்டுள்ளார்.
இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதால் ஜெயமணிக்கு கொலைமிரட்டல் விடுத்து விட்டு மாரிமுத்து அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து வன்னியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஜெயமணி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர்.
- கோயம்புத்தூரில் உள்ள ஒரு கடையில் வெல்டிங் வேலை செய்து வந்தார்.
- அந்த வழியாக சென்றவர்கள் பார்த்த அதிர்ச்சியடைந்தனர்.
கடலூர்:
விருத்தாசலம் அருகே விஜயமாநகரத்தை சேர்ந்த வர் வெங்கடேசன். இவரது மகன் சுகன்ராஜ் (வயது 23). இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு கடையில் வெல்டிங் வேலை செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று விஜயமாநகரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். இதனையடுத்து சுகன்ராஜ் விஜயமாநகரத்தில் இருந்து கோவைக்கு நேற்று இரவு சென்றார்.
இந்நிலையில் இன்று காலை விஜயமாநகரம் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள ஒரு மரத்தில் சுகன்ராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்த அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மங்கலம் பேட்டை போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுகன்ராசின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து சுகன்ராசை யாரேனும் கொலை செய்து தூக்கில் பிணமாக தொங்க விட்ட னரா? அல்லது வேறு யேதேனும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அறையில் தினேஷ்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- இது குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த ஜரத்தல் அடுத்த மேற்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் (55). கருத்து வேறுபாடு கார ணமாக மனைவியை பிரிந்து மகன் தினேஷ்குமா ருடன் (24) வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு தினேஷ்குமார் வீட்டுக்கு வந்து அவரது அறையில் தூங்க சென்றார். கணேசன் அருகில் உள்ள தாய் வீட்டில் தூங்க சென்றார்.
பின்னர் காலை எழுந்த கணேசன் தனது வீட்டிற்கு வந்தார். வீட்டு கதவு பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டினார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த கணேசன் அக்கம் பக்கத்தி னர் உதவியு டன் கடப்பாறை யால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் தினேஷ்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷ்குமார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்