என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 203064"
- ரியல் எஸ்டேட் தொழிலில் பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த தாக்குதல் நடந்து இருப்பது தெரிய வந்தது.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சத்யா(40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த சத்யாவை சந்திக்க மேல்நல்லாத்தூரைச் சேர்ந்த நண்பர்களான லோகேஷ், திருவள்ளூர் ஐ.ஆர்.என். பின்புறம் பகுதியைச் சேர்ந்த ரவி ஆகியோர் வந்தனர்.
அவர்கள் வீட்டின் பின்புறம் உள்ள கோழிப் பண்ணை அருகே பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் இது மோதலாக மாறியது.
ஆத்திரம் அடைந்த லோகேஷ் மற்றும் ரவி ஆகியோர் சத்யாவை தாக்கி மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினர். மேலும் வலது கை கட்டை விரல், நடு விரலையும் கத்தியால் துண்டித்து தப்பி சென்று விட்டனர். அலறல் சத்தம்கேட்டு வந்த சத்யாவின் மனைவி புவனேஸ்வரி மற்றும் அக்கம் பக்கத்தினர் சத்யாவை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் தொழிலில் பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த தாக்குதல் நடந்து இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மணவாளநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
- குடும்ப தகராறு காரணமாக கணவரை, மனைவி கடித்து குதறினார்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
திருச்சி,
திருச்சி மாவட்டம் நெம்பர் 1 டோல்கேட் மாருதி நகர், நந்தா நகர் ரெயில்வே கேட் பகுதியைச் சேர்ந்தவர் இனிகோ (வயது 42). இவரது மனைவி டெய்ஸி ராணி (36). திருமணமான ஒரு சில ஆண்டுகளிலேயே தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து பரஸ்பரம் அவர்கள் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். அவர்களது உறவினர்கள் பல்வேறு கட்ட சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சேர்ந்து வாழ அறிவுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து கடந்த ஓராண்டுக்கு பின்னர் பிரிந்து தம்பதியினர் மீண்டும் சேர்ந்து வாழ தொடங்கினர். ஆனாலும் இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் அவ்வப்போது ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்பத்தகராறில் ஆத்திரம் அடைந்த டெய்ஸி ராணி, கணவர் என்றும் பாராமல் இனிகோவை சரமாரியாக அடித்து உடைத்தார். ஆத்திரம் தீராத அவர் இனிகோவின் கைகளில் கடித்தும் வைத்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து இனிகோ கொடுத்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டெய்ஸி ராணியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்பத்தகராறில் கணவரின் கையை மனைவி கடித்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- சுசீல்கோஸ்வாமி, ஹாலோ பிளாக் கல்லை எடுத்து வந்து தீரஜின் தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய சுசீல்கோஸ்வாமியை கைது செய்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், கோச்சாரம் பகுதியை சேர்ந்தவர் சுசீல்கோஸ்வாமி. இவர் தனது நண்பர்களான தீரஜ் மண்டல், சுஜித்விஜய்கோஸ்வாமி, பாலா நிமிஷ்குமார் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு ஒன்றாக அமர்ந்து மது குடித்து உள்ளனர்.
அப்போது சுசீலிடம், தீரஜ் மண்டல் கோழிக்கறி சமைத்து தரும்படி கூறியுள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அனைவரும் அன்று இரவு அதே வீட்டில் ஒன்றாக படுத்து தூங்கினர்.
அப்போது சுசீல்கோஸ்வாமி, ஹாலோ பிளாக் கல்லை எடுத்து வந்து தீரஜின் தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த தீரஜ் மண்டல், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஐடி காரிடார் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய சுசீல்கோஸ்வாமியை கைது செய்தனர். அவரை ஜெயிலில் அடைத்தனர்.
- துறையூர் அருகே கறி விருந்தில் ஏற்பட்ட தகராறு சகோதரர்கள் வெட்டிக்கொண்டனர்
- போலீசார் தீவிர விசாரணை
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள செங்காட்டுப்பட்டி காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 65). இவரது மகன்கள் பன்னீர்செல்வம் (48), பாஸ்கர் (40). இருவரும் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்கள். இதில் பன்னீர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவியை விட்டு பிரிந்து வாழ்கிறார். பாஸ்கர் என்பவருக்கு திருமணமாகி மனைவி இறந்துவிட்ட நிலையில் இருவரும் பெற்றோர் வீட்டிலேயே வசித்து வருகின்றனர்.இந்நிலையில் காந்திபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று முடிந்து நேற்று இரவு கறி விருந்து நடைபெற்றுள்ளது. அப்பொழுது சகோதரர்கள் இருவரும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இருவரும் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது பாஸ்கர், தனது தகப்பனாரான மாரிமுத்துவிடம் கறி கேட்டுள்ளார். அதற்கு மாரிமுத்து கறி ஏற்கனவே தீர்ந்து விட்டதாக கூறியுள்ளார்.இதனால் பாஸ்கரின் அண்ணன் பன்னீர்செல்வம் தனது இலையில் இருந்த கறியை எடுத்து பாஸ்கர் இலையில் வைத்துள்ளார். எச்சில் இலையில் இருந்த கறியை எடுத்து எப்படி என்னுடைய இலையில் வைக்கலாம்? என கூறி பாஸ்கர் பன்னீர்செல்வத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வாக்குவாதம் கைகலப்பாகி சகோதரர்கள் இருவரும் காய்கறி நறுக்குவதற்காக வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து மாறி மாறி வெட்டிக்கொண்டனர். இதனால் பதற்றம் அடைந்த மாரிமுத்துவின் உறவினர்கள் சகோதரர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச் சம்பவத்தை அறிந்த துறையூர் போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மாமியார் ராஜகுமாரி மருமகள் அனுசா இடையேயும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
- பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே அனுசா இறந்து விட்டதாக தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் மகன் கோவிந்தராஜ்,(வயது24) . இவருக்கும் மங்கலம் பேட்டை பேரூராட்சியை சேர்ந்த சுபாஷ் மகள் அனுஷாவுக்கும் (19) கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணமாகி ஓரு வருடம் ஆகாத நிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் இடையிலும் மாமியார் ராஜகுமாரி மருமகள் அனுசா இடையேயும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதால் மாமியாரும் மருமகளும் தனித்தனியே சமைத்து சாப்பிட்டு வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் வீட்டின் அருகிலுள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது, மாமியார் கூலி வேலைக்கு செல்ல வேண்டி உள்ளதால் தான் முதலில் தண்ணீர் பிடித்து கொண்டு செல்கிறேன் என கூறிய போது மாமியார்- மருமகள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமானஅனுசா தனது வீட்டில் வெளிக்கதவு மற்றும் உன் கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்டு வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கில் தொங்கினார். குளிக்க சென்ற கணவன் கோவிந்தராஜ் தகவல் கேட்டு ஓடி வந்து கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே சென்று அனுசாவை தூக்கிலிருந்து மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே அனுசா இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்த தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அனுசா உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இது குறித்து தகவலறிந்த திட்டக்குடி டி.எஸ்.பி. காவியா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தார்.அனுசாவுக்கு திருமணமாகி ஒரு வருடம் முடியாத நிலை உள்ளதால் கோட்டாட்சியர் விசாரணை செய்ய பரிந்துரை செய்துள்ளார்.
- பக்கத்து வீட்டுக்காரர் வீட்டு மாடியில் கூண்டு அமைத்து 50-க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்த்து வருகிறார்.
- பக்கத்து வீட்டில் உள்ளவரிடம் சென்று புறாக்களை மூடி வைக்குமாறு கூறினால் மிரட்டும் பாணியில் பேசுகிறார்கள்.
வேலூர்:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த பிராமணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சதீஷ்குமார் புகார் மனு அளித்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது பக்கத்து வீட்டுக்காரர் வீட்டு மாடியில் கூண்டு அமைத்து 50-க்கும் மேற்பட்ட புறாக்களை வளர்த்து வருகிறார். அந்தப் புறாக்கள் எங்கள் வீட்டில் வந்து தினமும் எச்சம் கழிக்கின்றன.
இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு குழந்தைகளுக்கும் அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது.
பக்கத்து வீட்டில் உள்ளவரிடம் சென்று புறாக்களை மூடி வைக்குமாறு கூறினால் மிரட்டும் பாணியில் பேசுகிறார்கள்.
புறாக்கள் எச்சம் கழிப்பதை சுத்தம் செய்யும் போது எனக்கும் எனது மனைவிக்கும் இடையே தினமும் தகராறு ஏற்படுகிறது.
இதனால் நோய் தொற்று ஏற்படும் என பயந்து என் மனைவி குழந்தைகளுடன் என்னைப் பிரிந்து அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இது குறித்து பள்ளிகொண்டா போலீசில் புகார் கொடுத்தேன். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து எனது மனைவியை என்னுடன் சேர்த்து வைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சேகர் குடிபோதையில் முந்திரிக்கு அடிக்க வைத்திருந்த மருந்தை மதுவில் கலந்து குடித்து விட்டார்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த பெரியகாட்டுபாளையத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 48) இவர் தன்னுடைய மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு குடிபோதையில் முந்திரிக்கு அடிக்க வைத்திருந்த மருந்தை மதுவில் கலந்து குடித்து விட்டார். பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்ற போது அவரை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- அன்ன தானப்பட்டி ஆத்துக்கா ரன்காடு பகுதியில் சில்லி சிக்கன் கடை வைத்து நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று இவர்களது கடைக்கு வந்தவர்கள், கடை முன்பாக சாலையை அடைத்தபடி இருசக்கர வாகனங்களை அதிகமாக நிறுத்தி இருந்தனர்.
சேலம்:
சேலம் அன்ன தானப்பட்டி சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 64). இவரது மகன் விஷ்ணுகுமார் (37). இருவரும் அன்ன தானப்பட்டி ஆத்துக்கா ரன்காடு பகுதியில் சில்லி சிக்கன் கடை வைத்து நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தன்று இவர்களது கடைக்கு வந்தவர்கள், கடை முன்பாக சாலையை அடைத்தபடி இருசக்கர வாகனங்களை அதிகமாக நிறுத்தி இருந்தனர். அப்போது அந்த வழியாக ஆத்துகாரன் காடு பகுதியைச் சேர்ந்த லலித்குமார் (23) என்பவர் காரில் அந்த வழியாக வந்தார்.
வாகனங்கள் வழியில் நின்றதால் காரில் செல்ல முடியாத அவர் வெங்கடேசன் மற்றும் விஷ்ணுகுமாரிடம் ஏன் இப்படி சாலையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்களை நிறுத்தினீர்கள் என கேட்டுள்ளார்.
இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் தந்தை, மகன் இருவரும் சேர்ந்து லலித்குமாரை இரும்பு கரண்டியால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த லலித்குமார், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து வெங்கடேசன், விஷ்ணுகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- பாலமுருகன் மனைவியை மானபங்கபடுத்தியதாக கூறப்படுகிறது.
- போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 39).தொழிலாளி. இவருக்கும் இவரது அண்ணன் ராமனுக்கும் முன் விரோத தகராறு இருந்து வருகிறது. சம்பவத்தன்று அண்ணன் தம்பிக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக ராமன் மற்றும் அவருடன் வந்த 4 ேபர்கள் திடீரென்று பாலமுருகனை தாக்கினார்கள். இதனை தடுக்க சென்ற பாலமுருகன் மனைவி யை மானபங்கபடுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த பாலமுருகன் கடலூர் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்றனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் ராமன் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து, மனைவி ஜெயாவிடம் தகராறு செய்வது வழக்கம்.
- ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
கன்னியாகுமரி :
இரணியல் அருகே உள்ள சுங்கான்கடை பனவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் சாலமன் (வயது 56). மது பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து, மனைவி ஜெயாவிடம் தகராறு செய்வது வழக்கம்.
நேற்று இரவும் சாலமன் மது அருந்தி வந்து வீட்டில் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது 15 வயது மகன், கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து சரமாரியாக தாக்கினாராம். இதில் படுகாயம் அடைந்த சாலமன், ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது குறித்து அவரது மனைவி ஜெயா அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
- நேற்று இரவு பிரகாஷ் இயற்கை உபாதை கழிக்க ரெயில்வே லைன் பகுதிக்கு சென்றுள்ளார்.
- அப்போது அங்கு மது போதையில் வந்த அப்சல், பிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டதுடன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரகாஷை தலை மற்றும் கைகளில் வெட்டினார்.
சேலம்:
சேலம் பொன்னம்மா பேட்டை ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் பிரகாஷ் (வயது 31). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பாஷா என்பவரின் மகன், அப்சல் என்கிற காச்சா (35) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு பிரகாஷ் இயற்கை உபாதை கழிக்க ரெயில்வே லைன் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மது போதையில் வந்த அப்சல், பிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டதுடன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரகாஷை தலை மற்றும் கைகளில் வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த பிரகாஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்சலை வலை வீசி தேடி வருகின்றனர்.
- தனியாக சென்ற வாலிபர் மீது சரமாரி தாக்குதல்
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகினறனர்
திருச்சி,
திருச்சி கல்லக்குடி ஆலம்பாக்கம் பகுதியில் உள்ள கோயிலில் தேர்பவனி நடைபெற்று உள்ளது. அப்போது தேரின் முன்பாக நடனம் ஆடுவது தொடர்பாக இளைஞர்களிடையே சலசலப்பு ஏற்பட்டு, வாக்கு வாதம் நடைபெற்று உள்ளது. இதன் தொடர்ச்சியாக ஆலம்பாக்கம் மேலத்தெருவை சேர்ந்த அடைக்கலராஜ்(வயது 30) என்பவர், பஞ்சாயத்து அலுவலகம் பக்கம் சென்ற போது அதே பகுதியை சேர்ந்த எட்வின்(31), எடிசன்(27), சிம்சன்(26), பாரத்(25) ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அடைக்கலராஜ் பலத்த காயம் அடைந்து லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்