என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 204655"
- பாரதிய ஜனதா பிரமுகர் வீடுகளில் பெட்ரோல் குண்டுவீச்சு எதிெராலி
- கோவில்கள், தலைவர்கள் சிலைகளுக்கு பாதுகாப்பு
நாகர்கோவில்:
கோவையில் பாரதிய ஜனதா பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது.
இதைத்தொடர்ந்து மதுரை, சேலம், பகுதி களிலும் பாரதிய ஜனதா பிரமுகர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப் பட்டு உள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது. இதை யடுத்து தமிழகம் முழு வதும் பாதுகாப்பு பலப்ப டுத்தப்பட்டுள்ளது.குமரி மாவட்டத்திலும் பாது காப்பை பலப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.
இதையடுத்து குமரி மாவட்டம் முழுவதும் போலீ சார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள னர். நாகர்கோவில் கன்னி யாகுமரி குளச்சல் தக்கலை சப் டிவிஷன்களுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு போலீசார் 2 ஷிப்டுகளாக ரோந்து சுற்றி வந்தனர். இன்று காலையிலும் பாது காப்பு பணியில் ஈடு பட்டுள்ளனர்.
நாகர்கோவிலில் முக்கிய சந்திப்புகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரு கிறார்கள். வடசேரி, பார்வதிபுரம், கலெக்டர் அலுவலக சந்திப்பு, செட்டி குளம் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது. வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை, அண்ணா சிலை, ஒழுகினசேரியில் உள்ள பெரியார் சிலை, வேப்பமூட்டில் உள்ள காமராஜர் சிலை உட்பட நாகர்கோவில் நகரில் உள்ள முக்கிய தலைவர்கள் சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நகரில் உள்ள முக்கிய சாலைகளில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.
நாகர்கோவில் நாகராஜா கோவில் உள்பட முக்கிய மான கோவில்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது. நாகர்கோவில் ெரயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யில் ஈடுபட்டனர். கன்னியா குமரியிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிரா மங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில், திருவட்டார் ஆதிகேச பெருமாள் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்பட கோவில்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டது. ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், களியக்கா விளை சோதனை சாவடி களில் போலீசார் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர்.
வெளியூர்களில் இருந்து வந்த வாகனங்களை சோ தனை செய்தனர். மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
- மனைவியை கொலை செய்ய முயன்ற கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள மத்துமடக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி அருள் (வயது26). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஹரிபிரசாத்(1½) என்ற ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் நேற்று குவாகம் பகுதியில் உள்ள சிறைமீட்டார் கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்றுள்ளனர். கும்பாபிஷேகம் முடிந்து 2 பேரும் ஊருக்கு வந்துள்ளனர். அவர்கள் கொடுக்கூர் குவாகம் மருங்கூர் பென்பரப்பி இடையே உள்ள முந்திரி தோப்பு பகுதியில் வரும்போது இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சிலம்பரசன் தனது மனைவி அருள் கழுத்தில் கயிற்றைப் போட்டு முந்திரி மரத்தில் தூக்கு மாட்டி இழுத்துள்ளார். இதனால் அருள் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதில் அவர் இறந்து விட்டதாக நினைத்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த நேரத்தில் அப்பகுதியில் பொக்லைன் ஓட்டிக் கொண்டு இருந்தவர்கள் சத்தம் கேட்டு சென்று பார்த்தபோது, அருள் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே அவர் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கொலை செய்ய முயன்ற கணவனை வலைவீசி தேடி வருகின்றனர்.
- அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
- போலீசார் கதவை தட்டி உள்ளே இருந்தவர்களை அழைத்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக வடக்கு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
விபசாரம் :
இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டருக்கு சென்றனர். அப்போது அங்குள்ள அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. உள்ளே 2 இளம்பெண்கள், 2 ஆண்கள் சென்றதாக அருகில் இருந்த பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் கதவை தட்டி உள்ளே இருந்தவர்களை அழைத்தனர். ஆனால் கதவை திறக்கவில்லை. அப்போது அந்த அறையில் பின்புற கதவு இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று போலீசார் பார்த்தபோது அறைக்குள் யாரும் இல்லை. சொகுசு படுக்கைகள் இருந்தன.
தப்பியோட்டம்
போலீசார் வருவதை அறிந்ததும் 4 பேரும் பின்புறம் வாசல் வழியாக தப்பியது தெரியவந்தது. இதையடுத்து அந்த கட்டிடத்தை வாடகைக்கு விட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
நடவடிக்கை
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், திருப்பூரில் ஸ்பா என்ற பெயரில் சிலர் விபசாரம் நடத்தி வருகின்றனர்.சம்பந்தப்பட்ட மசாஜ் சென்டருக்கு தினமும் இளம்பெண்கள், இளைஞர்கள் வருகின்றனர். அவர்கள் காரை வேறு இடத்தில் நிறுத்தி விட்டு வருகின்றனர். மசாஜ் சென்டருக்குள் செல்லும் அவர்கள் அரை மணி நேரம் கழித்து திரும்புவார்கள். எனவே விபசாரம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- மார்த்தாண்டம் அருகே சினிமா போல சம்பவம்
- அரிசியை கேரளாவுக்கு கொண்டு செல்ல முயற்சி
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட உண்ணாமலைகடை பகுதியில் மார்த்தாண்டம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ்,தலைமை காவலர் ராஜகுமார் மற்றும் போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு ஒரு கார் வேகமாக வந்தது. அதனை நிறுத்தும் படி போலீசார் சைகை காட்டினர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீ சார் பின்னர் சுதாரித்துக் கொண்டு காரை விரட்டிச் சென்றனர்.
சுமார் 5 கி.மீட்டர் தூரம் காரை போலீசார் பின் தொடர்ந்த நிலையில் திக்குறிச்சி வழியாக சென்ற கார் பேரை பகுதியில் சாலை ஓரம் திடீரென நின்றது. அதில் இருந்து 2 பேர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.
போலீசார் அந்தக் காரை சோதனை செய்த போது மூடை மூடையாக ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.விசாரணையில் அந்த அரிசியை கேரளாவுக்கு கொண்டு செல்ல முயற்சித்தது தெரியவந்தது.
இதையடுத்து காரில் இருந்த 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் காருடன் பறிமுதல் செய்தனர். பின்னர் காரை விளவங்கோடு தாலுகா அலு வலகத்திலும், அரி சியை காப்புக்காடு அரசு குடோ னிலும் ஒப்படைத்தனர்.தொடர்ந்து அரிசி கடத்தி யது யார்? எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? தப்பியோடியவர்கள் யார்? என்பது தொடர்பாக போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த ரயில் ராஜாங்கம் மீது மோதியது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜாங்கம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை வெட்டுக்கார தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 85). இவர் இன்று காலை தஞ்சை வண்டிக்கார தெரு பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அந்த நேரத்தில் மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த ரயில் ராஜாங்கம் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட ராஜாங்கம் சம்பவ இடத்திலேயே இறந்தார். ராஜாங்கம் இறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தஞ்சை ரயில்வே இருப்புப் பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன், தனிப்பிரிவு தலைமை காவலர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜாங்கம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 100க்கும் மேற்பட்ட போலீசார் சந்திப்பு விழா பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
- போலீசார் ஒன்றாக குழு புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பல்லடம் :
திருப்பூர் மாவட்டம் முழுவதும் சட்ட ஒழுங்கு, குற்றவியல் போக்குவரத்து, தனிபிரிவு துறைகளில் பணியாற்றும் 2009 ஆண்டு காவல் பள்ளியில் பயிற்சி பெற்று பணியில் சேர்ந்த பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் சந்திப்பு விழா பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இந்த சந்திப்பில் கலந்து கொண்ட போலீசார் பாரம்பரிய உடைகள் அணிந்து ஒன்றாக குழு புகைப்படம் எடுத்தும் பாட்டுகள் பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் பயிற்சி பள்ளியில் தன்னுடன் பயிற்சி பெற்ற நண்பர்களுடன் குழு, குழுவாக "செல்பி"போட்டோ எடுத்து தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த சந்திப்பு நிகழ்வின் மூலம் எங்களது மன அழுத்தம் குறைந்து புத்துணர்வு ஏற்படுவதாக சந்திப்பில் பங்கேற்ற போலீசார் கூறினர்.
- வசந்தி (வயது 55). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
- பகலில் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் பொருள் வாங்குவது போல் நடித்து வசந்தி கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்துள்ளனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகிலுள்ள சிக்கம்பட்டி பகுதியை சேர்ந்த தங்கவேல் மனைவி வசந்தி (வயது 55). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று பகலில் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் பொருள் வாங்குவது போல் நடித்து வசந்தி கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்துள்ளனர். சுதாரித்துக் கொண்ட வசந்தி செயினை பிடித்துக்கொண்டார். ஆனாலும் பாதி செயினை பறித்துக்கொண்ட வாலிபர்கள் பைக்கில் தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி வசந்தி தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளி மாணவன் கடத்தலா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- 9-ம் வகுப்பு படித்து வருகிறார்
புதுக்கோட்டை
அரிமளம் ஒன்றியம் மிரட்டுநிலை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் அருண்பிரபு (வயது 14). இவர் மிரட்டுநிலை அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் அவருடைய தாய் முத்துலட்சுமி திங்கட்கிழமை கண்டிப்பாக பள்ளிக்குச் செல்ல வேண்டும் என கூறி கண்டித்துள்ளார். இந்நிலையில் தனது அம்மாவுடன் நேற்று முன்தினம் மாடு மேய்த்துக் கொண்டிருந்த அருண்பிரபு வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் மாலை வரை அவர் வீட்டிற்கு வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிைடக்கவில்லை. இதுகுறித்து அரிமளம் போலீஸ் நிலையத்தில் முத்துலட்சுமி புகார் கொடுத்தார். அதன்பேரில், அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரை யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 தம்பதிகள் கொலையில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.
- 2 ஆதாய கொலைகள் நடந்து 2 மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வைத்தியநாதபுரத்தை சேர்ந்த ராஜகோபால் (வயது 75), அவரது மனைவி குருபாக்கியம் (65) ஆகியோர் கடந்த ஜூலை மாதம் வீட்டில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இந்த சம்பவம் நடந்த மறு நாளே அருப்புக்கோட்டை எம்.டி.ஆர். நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரிய தம்பதி சங்கரபாண்டியன் (70)-ஜோதிமணி (60) ஆகியோரும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இந்த 2 கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் கொலையாளிகளை பிடிக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், டி.ஐ.ஜி. பொன்னி மற்றும் போலீசார் நேரடி விசாரணை மேற்கொண்ட னர்.
2 ஆதாய கொலைகள் நடந்து 2 மாதத்திற்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால் தற்போது வரை கொலையாளிகள் குறித்து துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்ற னர்.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என தெரிகிறது. எனவே ஐ.ஜி. அஸ்ரா கார்க் நேரடி மேற்பார்வையில் விசா ரணையை துரிதப்படுத்தி கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தி னர் வலியுறுத்தி உள்ளனர்.
- பெரியார் பஸ் நிலையம் அருகில் பயணிகள் ரோட்டை கடக்கும்போது வாகனங்கள் இடதுபுறம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
மதுரை
மதுரை சென்னைக்கு அடுத்து முக்கிய நகரமாக விளங்குகிறது. தென் மாவட்ட மக்கள் அதிக அளவில் மதுரைக்கு வருகை தருகின்றனர். தினமும் 1 லட்சத்துக்கும் அதிகமான வெளியூர் மக்கள் மதுரை வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் மதுரை பெரியார் பஸ் நிலையத்துக்கு பயணிகள் சாலையை கடந்து செல்ல முடியாத அளவுக்கு வாகன போக்குவரத்து உள்ளது. இங்குள்ள சிக்னலில் சிகப்பு விளக்கு எரியும் போதும் வாகன ஓட்டிகள் இடது புறமாக தொடர்ந்து செல்வதால் ரெயில் நிலையத்திலிருந்து வரும் பயணிகள் பெரியார் பஸ் நிலையத்துக்கு செல்ல முடியாத நிலைமை இருந்து வந்தது. அணிவகுத்து வரும் வாகனங்களுக்கு இடையே மக்கள் சாலையை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இது பற்றி மாலைமலரில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் பெரியார் பஸ் நிலையம் அருகில் பயணிகள் சாலையை கடந்து செல்லும் இடத்தில் சிக்னல் நேரத்தில் வாகன ஓட்டிகள் இடது புறமாக செல்ல தடை விதித்து அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இந்த நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் சிரமம் இல்லாமல் பஸ் நிலையத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இருந்த போதிலும் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் பலர் வழக்கம்போல் சிக்னல் நேரத்தில் இடது புறம் செல்கின்றனர். இதனால் இந்த பிரச்சினை முழுவதுமாக தீர்ந்தபாடில்லை.
எனவே காலை, மாலை நேரங்களில் அந்த இடத்தில் போக்குவரத்து போலீசார் நின்று வாகன ஓட்டிகள் விதிமுறைகளை சரியாக கடைபிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமுறைகளை கடைபிடிக்காத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- அரசு போக்குவரத்து கழகம் மூலம் பரமக்குடிக்கு கூடுதல் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
பரமக்குடியில் நாளை இமானுவேல் சேகரன் நினைவு அஞ்சலி செலுத்த வருபவர்கள் போலீசாரின் அறிவுரைப்படி அனுமதி பெற்ற சாலை வழியாக வந்து செல்ல வேண்டும். மாவட்டம் முழுவதும் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எந்த பகுதியிலும் சிறிய பிரச்சினை வராமல் தடுக்கும் வகையில் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அரசு போக்குவரத்து கழகம் மூலம் பரமக்குடிக்கு கூடுதல் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1500 போலீசாருடன் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 3500 போலீசார் வரவழைக்கப்பட்டு 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
நினைவு தின நிகழ்ச்சி அனைவரின் ஒத்துழைப்புடன் எந்த வித இடையூறும் இன்றி அமைதியாக நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2 எலும்புக் கூடுகளையும் மரபணு சோதனைக்கு போலீசார் உட்படுத்தி உள்ளனர்
- மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 எலும்புக்கூடுகள் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நாகர்கோவில்:
நாகர்கோவில் டி.வி.டி. காலனி செந்தூரான் நகரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான இடத்தில் பாழடைந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றில் கடந்த 2-ந் தேதி மனித எலும்புக்கூடு கிடந்ததை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
கோட்டார் போலீசார் விரைந்து வந்து எலும்புக் கூட்டை மீட்டு விசாரணை நடத்தினர். எலும்பு கூடாக கிடந்தது யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது பற்றிய விவரம் கிடைக்காததால், அதனை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் கொல்லங்கோடு அருகே உள்ள வள்ளவிளை எடப்பாடு பகுதியில் கடலுக்கும் ஏ.வி.எம். கால்வாய்க்கும் இடையே தனியார் நிலத்தில் மற்றொரு எலும்புக்கூடு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கொல்லங்கோடு போலீசார் அங்கு சென்று பார்த்த போது, மழை நீர் வடித்துச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஓடையில் தலையில்லாத எலும்புக் கூடு கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் இறந்தவர் ஆணா? பெண்ணா? யாரையாவது கொலை செய்து இங்கு வீசிச் சென்றார்களா? என பல கேள்விகள் எழுந்தன.
மாவட்டத்தில் அடுத்தடுத்து 2 எலும்புக்கூடுகள் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் யார் என்பது தெரியாத நிலையில் மாவட்டத்தில் மாயமானவர்களின் புகார்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் 2 எலும்புக் கூடுகளையும் மரபணு சோதனைக்கு போலீசார் உட்படுத்தி உள்ளனர். அதன் முடிவுகள் சென்னையில் உள்ள ஆய்வகத்தில் இருந்து தான் வர வேண்டி உள்ளது. அது கிடைத்த பிறகு, மாயமானவர்கள் பட்டியலை வைத்து போலீசார் விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு தான் எலும்புக்கூடாக கிடந்தவர்கள் யார்? அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? தற்கொலை செய்தார்களா? அல்லது தவறி விழுந்து இறந்தார்களா? என்பது தெரியவரும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்