search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209327"

    • கஞ்சா விற்பனை செய்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 4 பேரையும் கைது செய்து 580 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறு வதாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங்குக்னு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைய டுத்து அவரது உத்தரவின் பேரில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கஞ்சா விற்ற வேதாரண்யம் அடுத்த கீழ ஆறுமுக கட்டளையைச் சேர்ந்த கபிலன் (வயது 26), உச்சகட் ( 24), ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி நெடுமாறன் (23) ஆகிய 4 பேரையும் கைது செய்து 580 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • கஞ்சா-கள்ளச்சாராய விற்பனை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்குவதாக மதுரை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
    • நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கஞ்சா, கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழிப்பதற்கு மதுரை மாவட்ட காவல்துறையால் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது போன்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை கைது செய்து, வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

    மேலும் கஞ்சா, கள்ளச்சாராயம், போதை பொருள் விற்பனையை தடுக்கும் நோக்கத்தில் பொதுமக்களிடமிருந்து தகவல் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின் பேரில், மதுரை மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தில் 9498181206 என்ற சிறப்பு தொலைபேசி எண் நிறுவப்பட்டுள்ளது.

    இந்த தொலைபேசி எண்ணுக்கு கஞ்சா, கள்ளச்சாராயம், சட்டத்திற்கு புறம்பான மது விற்பனை, போதை பொருள் விற்பனை குறித்த தகவல் தெரிவித்தால் துரித நடவடிக்கை எடுக்கப்படும். இது போல் தகவல் தருபவர் குறித்த விவரம் ரகசியமாக வைக்கப்படுவதுடன், தகவல் தருபவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வில்லிவாக்கத்தை சேர்ந்த உதயகுமார், சக்திவேல், தமிழ்வாணன் என்பது தெரிந்தது.
    • ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்ததாக தெரிவித்தனர்.

    திருவள்ளூர்:

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து வெளிய சந்தேகத்திற்கிடமாக வந்த 3 வாலிபர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

    அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிந்தது. விசாரணையில் அவர்கள் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த உதயகுமார், சக்திவேல், தமிழ்வாணன் என்பது தெரிந்தது. அவர்கள் ஆந்திராவில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்ததாக தெரிவித்தனர், அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • இரு சக்கர வாகனத்தில் பள்ளி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கஞ்சா விற்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 35 கிராம் எடையுள்ள 7 கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    கன்னியாகுமரி :

    புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடை பெறுவதாக ஏற்கனவே புகார்கள் உள்ளன. இந்த நிலையில் புதுக்கடை அருகேயுள்ள அம்சி, கீழ்குளம் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் நேற்று அந்த பகுதியில் புதுக்கடை சப் - இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் சோதனை நடைபெற்றது. அப்போது கீழ்குளம் அருகே தண்டுமணி பகுதியில் உள்ள கல்குவாரி அருகில் வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் பள்ளி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கஞ்சா விற்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து, வாகனத்துடன் புதுக்கடை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில் அந்த வாலிபர் புதுக்கடை அருகே அம்சி ஒருபிலாவிளைபகுதியை சேர்ந்த விஜயகுமார் மகன் ஜெப்ரின் விஜய் (வயது 19) என தெரிய வந்தது. மேலும் அவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருவதும் தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்து 35 கிராம் எடையுள்ள 7 கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

    • பாமினி எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசார் சோதனை செய்து வந்துள்ளனர்.
    • கழிவறை அருகில் கருப்பு மற்றும் நீலநிறத்தில் 2 பேக்குகள் இருந்துள்ளது.

    மயிலாடுதுறை:

    திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா ஆகியோர் மேற்பார்வையில் திருச்சி இருப்புப்பாதை கஞ்சா தடுப்பு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் திருப்பதி-மன்னார்குடி பாமினி எகஸ்பிரஸ் ரெயிலில் ஆந்திரா மாநிலம் திருப்பதி ரெயில்நிலையத்தில் இருந்து சோதனை செய்து வந்துள்ளனர்.

    சீர்காழி ரெயில் நிலையம் வருவதற்கு முன்னர் வண்டியின் பின்னால் உள்ள முன்பதிவு செய்யப்படாத பயணிகள் பொதுப்பெட்டியில் கழிவறை அருகில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் கருப்பு மற்றும் நீலநிறத்தில் 2 பேக்குகள் இருந்துள்ளது.

    அப்போது அருகில் இருந்த பயணிகளிடம் விசாரித்த போது அது தங்களுடையது இல்லை என அவர்கள் கூறியுள்ளனர்.

    இதனையடுத்து அந்த பேக்குகளை மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் இறக்கி சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    2 பேக்குகளிலும் மொத்தம் 11 பொட்டலங்கள் இருந்துள்ளது. பின்னர் அந்த கஞ்சா பொட்டலத்தை தனித்தனியாக எடைபோட்டு பார்த்ததில் 11 பொட்டலங்களில் தலா 2 கிலோ வீதம் 22 கிலோ கஞ்சா இருந்தது.

    இதனையடுத்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவை நாகை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவில் போலீசார் ஓப்படைத்தனர்.

    • சேலம் மத்திய ஜெயிலில் இன்று அதிகாலை கஞ்சா கடத்திய சமையல்காரர் பிடிபட்டார்
    • கஞ்சா பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சித்தூர் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன். இவரது மகன் தனபால் (வயது 39). இவர், சேலம் மத்திய ஜெயிலில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் ஜெயில் வளாகத்தில் சமைத்துக் கொண்டிருந்தபோது தனபால், சமையல் வேலைக்கு ஒரு கட்டையும் நூலும் தேவைப்படுவதாக கூறி ஜெயிலை விட்டு வெளியே வந்தார்.

    இதையடுத்து அந்த பொருட்களை வாங்கிக்கொண்டு தனபால் மீண்டும் சிறைக்குள் வரும்போது நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை சோதனை செய்தனர். அப்போது அவரது பாக்கெட்டில் 160 கிராம் கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கஞ்சா பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து சேலம் மத்திய சிறை அலுவலர் மதிவாணன், கொடுத்த புகார் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சமையல்காரர் தனபாலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 8 கிலோ கஞ்சா பறிமுதல்; சகோதரர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • விக்கி, விஜய் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சம்பவத்தன்று எஸ்.எஸ்.காலனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    மாடக்குளம் கண்மாய் பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு ஒரு கும்பல் மறைந்திருந்தது. அவர்கள் போலீசாரை கண்டதும் தப்ப முயன்றனர். இதைப்பார்த்து உடனே போலீசார் அவர்களை துரத்தினர். இதில் 5 பேர் பிடிபட, 2 பேர் தப்பினர்.

    சிக்கிய 5 பேரை சோதனை செய்தபோது அவர்களிடம் 7 கிலோ 700 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசா ரித்தனர். விசாரணையில், அவர்கள் புது ஜெயில் ரோட்டை சேர்ந்த சகோதரர்களான ஜாக்கி என்ற பிரசாத் (வயது22), பாண்டியராஜன் (23) மற்றும் திருப்பாலை அன்பு நகர் முருகன் மகன் முத்துகிருஷ்ணன் (24), வில்லாபுரம் உருவாட்டி மகன் ஈஸ்வரன் 35, ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவில் தெரு ஆறுமுகம் மகன் பாலசுப்பிரமணியன் (24) என்று தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய கல்மேடு பகுதியைச் சேர்ந்த ராகுல் என்ற விக்கி, விஜய் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

    • கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • திருமங்கலம் டவுன் போலீசார் வடகரை சுடுகாடு பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

    திருமங்கலம், மே.31-

    திருமங்கலம் டவுன் போலீசார் வடகரை சுடுகாடு பகுதியில் வாகன சோதனை நடத்தினர் .அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வந்திருந்தனர். சந்தேகத்தின் பேரில் நடத்திய சோதனையில் அவர்கள் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது அவர்களிடம் இருந்து 1.600 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது விசாரணையில் அவர்கள் திருமங்கலம் ஊத்துப்மேட்டை சேர்ந்த தினேஷ் பாண்டி (வயது 19 ), விருதுநகர் மாவட்டம் பாலவ நத்தத்தைச் சேர்ந்த மலையரசன் (53 )என்று தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • மதுரை மாநகர பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் சிக்கினர்.
    • மது விற்ற 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    மதுரை பழங்காநத்தம் பகுதியில் சினிமா தியேட்டர் எதிரே கஞ்சா விற்பனை நடப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த ஒருவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் திடீர்நகர் பாஸ்கரதாஸ் நகர் 2-வது தெருவைச் சேரந்த காஜா மைதீன் (40) என்பது தெரியவந்தது.

    அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா, ரூ.9,740 ரொக்கம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா விற்ற குற்றத்திற்காக காஜா மைதீனையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் திருப்பரங்குன்றம்-அவனியாபுரம் ரோடு சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நாகமலை மேலக்குயில்குடியை சேர்ந்த முருகன் (54) என்பவரை திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவையும், ரூ.14 ஆயிரம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் திருமங்கலம் என்.ஜி.ஓ. நகர் 4-வது தெருவை சேர்ந்த திவ்யதர்ஷன் என்பவர் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்தபோது அவரை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 25 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    மது விற்பனை

    மதுரை அவனியாபுரம், திருநகர், திடீர்நகர், சுப்பிரமணியபுரம், திலகர்திடல், கரிமேடு, அண்ணாநகர் உட்பட பல்வேறு போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விறபணை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று சோதனை நடத்தினர்.அப்போது மது விற்பனை செய்த 26 பேரை பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 105 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
    • புகார்களை 94882 94941 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர மதுவிலக்கு காவல்துறை சார்பில் முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    அதில் திருப்பூர் மாநகர பகுதியில் சாராயம் காய்ச்சுதல், வெளிமாநில மதுபானங்கள் விற்பனை செய்தல், போலி மதுபானம் தயாரித்தல், கஞ்சா பயிரிடுதல், கஞ்சா விற்பனை செய்தல், மதுவிற்பனை போன்ற குற்றங்கள் தொடர்பான புகார்களை 94882 94941 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம். தகவல் தருபவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மதுவிலக்கு போலீசார் மாநகர பகுதிகளில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கஞ்சா போதையில் கொடூர செயல்களில் ஈடுபடும் இது போன்ற நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
    • பட்டினப்பாக்கம் மட்டுமின்றி சென்னையில் பல இடங்களிலும் நள்ளிரவு நேரத்தில் மது மற்றும் கஞ்சா போதையில் பல வாலிபர்கள் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வரும் தம்பதிகளுக்கு 11 மாத ஆண் கைக்குழந்தை ஒன்றும், ஆறு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் தம்பதியினர் தனது குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது பெண் குழந்தை அழுகிற சத்தம் கேட்டு குழந்தையின் தாய் கண் விழித்து பார்த்தார். அப்பொழுது மர்ம நபர் ஒருவர் குழந்தையிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் கூச்சலிட்டார்.

    அவரது கூச்சல் சத்தம் கேட்டு அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். ஊர் பொது மக்களின் உதவியுடன் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவன் கஞ்சா போதையில் இருந்ததால் அவனது கண்ணில் மிளகாய் பொடியை தூவி, கயிறுகளால் கைகளை கட்டி சிறைபிடித்தனர்.

    பின்னர் பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றவர் அதே பகுதியை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (22) என்பதும் இவர் அப்பகுதியில் எந்நேரமும் கஞ்சா போதையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர் என்பதும் தெரிய வந்தது.

    மேலும் இவர் சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 5 வயது ஆண் குழந்தையிடம் கையில் பணம் கொடுத்து ஆசை வார்த்தைகளை கூறி அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாகவும் அந்தக் குழந்தையின் பாட்டி கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    மேலும் கஞ்சா போதையில் கொடூர செயல்களில் ஈடுபடும் இது போன்ற நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

    தற்போது குழந்தைகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பட்டினப்பாக்கம் போலீசார் விக்கி என்ற விக்னேசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பட்டினப்பாக்கம் மட்டுமின்றி சென்னையில் பல இடங்களிலும் நள்ளிரவு நேரத்தில் மது மற்றும் கஞ்சா போதையில் பல வாலிபர்கள் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவல்லிக்கேணியில் ரூ.1,500 பணத்துக்காக போதை வாலிபர் ஒருவர் மூதாட்டியை கொலை செய்தார். அந்த மூதாட்டி சாலையோரத்தில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்தவர். அவர் யார்? அவரது சொந்த ஊர் எது? என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. கஞ்சா மற்றும் மது போதையில் இரவு நேரங்களில் நகை பறிப்பில் ஈடுபடும் ஆசாமிகளை பிடிப்பதற்காகவும் கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்காகவும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இரவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி போலீசார் இரவு நேரங்களில் தீவிரமாக ரோந்து சென்று நகை பறிப்பு சம்பவங்களை தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.

    • போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.
    • அடிக்கடி வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

    அவரது உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்து அதனை விற்பவர்களை கைது செய்து வருகின்றனர். இதற்காக அடிக்கடி வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

    நித்திரவிளை போலீஸ் நிலைய சப்-இன்ஸ் பெக்டர் ஞானசிகாமணி மற்றும் போலீசார் அங்குள்ள பாலாமடம் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்கள் வந்தன. அவற்றை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அதனை ஓட்டி வந்த 2 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களது வாகனங்களை சோதனை செய்தனர். இதில் 3 கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார், 2 வாலிபர்களையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கொல்லங்கோட்டை சேர்ந்த ரோஜர் ஸ்டெயின் (வயது 24), நித்திரவிளை ஆற்றுப்புரம் லிபின் (21) என தெரியவந்தது. அவர்கள் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு செல்வதாக கூறினர்.

    எங்கிருந்து கஞ்சா வாங்கி வந்தனர். சப்ளை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×