என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 209749"
- கூத்தலூர் அரசு தொடக்கப்பள்ளியில் சமையலறை கட்டிடம் கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- பள்ளி திறப்பதற்குள் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட 52.புதுக்குடி ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் பழுதடைந்த வீடுகள் புதுப்பித்தல் மற்றும் புதிதாக வீடு கட்டும் பணி, மேலபாலையூர் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டும் பணி, 42.அன்னவாசல் ஊராட்சியில் ரூ.4.33 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் சம்பா கட்டளை வாய்க்காலில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணி, கூத்தலூர் அரசு தொடக்கப்பள்ளியில் சமையலறை கட்டிடம் கட்டும் பணி, எரவாஞ்சேரி மணவா ளநல்லூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பள்ளிகளில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பள்ளி திறப்பதற்குள் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் பாஸ்கர், சுவாமிநாதன் (ஊராட்சிகள்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- கோதண்டராஜபுரத்தில், ரூ.23 லட்சத்தில் 2 வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
- பில்லாளி வாய்க்கால் தூர்வாரும் பணியை எம்.எல்.ஏ, ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியை முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜபுரத்தில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிட பணிகள், விற்குடி ஊராட்சியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழலகம் கட்டும் பணி, பில்லாளி வாய்க்கால் தூர்வாரும் பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுரு கன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர், திருமருகல் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், ஒன்றிய பொறி யாளர் செந்தில், ஊராட்சி தலைவர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள், பொது மக்கள் உடன் இருந்தனர்.
- கீழக்கரை பகுதியில் வரத்துவாரிகள் தூர்வாரும் பணிகளை கலெக்டர் கற்பகம் நேரில் ஆய்வு செய்தார்
- நீர் தங்கு தடையின்றி வெளியேறிட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம குட்டைகள், குளங்கள் மற்றும் வரத்து வாரி தூர்வாரும் பணிகளை வேளாண்மை பொறியியல் துறை அலுவலக இயந்திரங்களை கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள தடுப்பணையில் நீர் தங்கும் பரப்பில் உள்ள முட்புதர்கள் அகற்றி வண்டல் மண் தூர்வாரி கரைகளை பலப்படுத்தி செய்யப்பட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் நீர்வள தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி நீர்வரத்து பரப்பினை அதிகப்படுத்திடவும், தடுப்பணையின் கீழ் உள்ள வாரிகளை அகலப்படுத்திடவும், நீர் தங்கு தடையின்றி வெளியேறிடவும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்வுகளில் இணை இயக்குனர் (வேளாண்மை துறை) சங்கர்.எஸ்.நாராயணன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் யுவராஜ், உதவி செயற்பொறியாளர்.அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மூட்டைகளில் கியூ ஆர்கோடு, சிலிப் தைக்கப்பட்டு உள்ளதையும் அதன் செயல்பாட்டினை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
- மூட்டைகளில் கியூ ஆர்கோடு, சிலிப் தைக்கப்பட்டு உள்ளதையும் அதன் செயல்பாட்டினை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
கோவை,
நீலகிரி மாவட்டம் குந்தா வட்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கட்டுப்பாட்டில் இயங்கும் வட்ட செயல்முறை கிடங்கினை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பொது வினியோக திட்டத்துக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு, தரம் ஆகியவற்றினை கேட்டறிந்து மூட்டைகளில் கியூ ஆர்கோடு, சிலிப் தைக்கப்பட்டு உள்ளதையும் அதன் செயல்பாட்டினை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதை தொடர்ந்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு, அத்தியாவசிய பொருட்களின் இருப்பினை அதிகப்படுத்துமாறும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்ரியா, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் முருகானந்தம், துணைப்பதிவாளர் அமீர் அஹசன் முசபர் இம்தியாஸ், உதவி மேலாளர் சுந்தரராமன், கண்காணிப்பாளர் விஸ்வநாதன், குந்தா தாசில்தார் இந்திரா, குந்தா வட்ட வழங்கல் அலுவலர் வேடியப்பன் உள்பட அரசு துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
- உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.26 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
- விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கோவில்வழியில் செயல்பட்டு வரும் தற்காலிக பஸ் நிலையத்தை நிரந்தர பஸ் நிலையமாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கோவில்வழி பஸ் நிலையத்தை நிரந்தர பஸ் நிலையமாக மாற்றி, உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.26 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து கோவில்வழி பஸ் நிலைய கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
கட்டுமான பணிகள் தொடங்கும்போது, பஸ்களை வேறு இடத்தில் இயங்கும் வகையில் மாற்று இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் கோவில்வழி பஸ் நிலையம் அருகே ஆய்வு மேற்கொண்டனர். 2 இடங்கள், தற்காலிகமாக பஸ்களை இயக்குவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு இடத்தை முடிவு செய்து அங்கிருந்து பஸ்கள் இயக்கப்படும். விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின் போது உதவி ஆணையாளர் வினோத், தி.மு.க. பகுதி செயலாளர் குமார் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
- வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- உதவி பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பில் சமையலயறை கட்டும் பணிகளையும், திருவண்ணா மலை ஊராட்சியில் என்.சண்முகசுந்தராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், குழந்தைகள் நேய பள்ளி கட்டிடம் கட்டுதல் திட்டத்தின் கீழ் ரூ.31.30 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கட்டும் பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமையலறை கூடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், பூவாணி கிராமத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழு தேனீ வளர்ப்பில் பயன்பெற்று வருவதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) தண்டபாணி, உதவி பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- தனியார் பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படும் 297 வாகனங்களை மஞ்சக்குப்பம் மைதானத்துக்கு வரவழைத்தனர்.
- டிரைவர்களுக்கும் கண் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கு மாணவர்களை ஏற்றி க்கொண்டு செல்வதற்கு எதுவாக தனியார் பள்ளிகள் சார்பில் வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக கடலூர் வட்டார போக்குவரத்து கழகத்துக்குட்பட்ட 93 பள்ளிக்கூடங்களில் மொத்தம் 297 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் பள்ளி வாகனங்கள், மாணவர்கள் பயணம் செய்வதற்கு ஏற்றவாறு உள்ளதா? என்று ஆய்வு செய்வதற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கடலூர், நெய்வேலி, பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படும் 297 வாகனங்களை மஞ்ச க்குப்பம் மைதானத்துக்கு வரவழைத்தனர். பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு)சபியுல்லா ஆகியோர் முன்னிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சோமசுந்தரம், பிரான்சிஸ், விஜய் ஆகியோர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.
பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுதாகர் கூறுகையில், கடலூர் வட்டார போக்குவரத்து அலுவ லகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 93 தனியார் பள்ளிகள், 297 வாகனங்களை மாணவர்களை பள்ளி களுக்கு ஏற்றி வருவதற்காக பயன்படுத்துகின்றன. இந்த வாகனங்கள் முறையாக தகுதிச்சான்று பெற்றிருக்கின்றனவா? முதலுதவி அளிக்கும் மருந்து பெட்டகம் உள்ளதா? விபத்து சமயங்களில் மாணவர்கள் அவசரமாக வெளியேற வாகனங்களில் அவசர வழி உள்ளதா? மாணவர்கள் வெளியே தலையை நீட்டுவதை தடுக்க ஜன்னல் கம்பிகள் நெருக்கமாக இருக்கிறதா? டிரைவர் கேபின் தனியாக அமைக்கப்பட்டுள்ளதா? கதவுகளுக்கு பூட்டு உள்ளதா?, வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா?, ஜி.பி.எஸ். கருவியுடன் சி.சி.டி.வி. கேமரா பொருத்த ப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்கிறோம். இதில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்ல எவ்வித தகுதியும் இல்லாத வாகனங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்படும். பின்னர் அந்த பஸ் டிரைவர்கள், ஒரு வாரத்திற்குள் மீண்டும் வாகனத்தை ஆய்வுக்கு உட்படுத்தி, தகுதி சான்றிதழை கொடுத்து மீண்டும் இயக்கலாம் என தெரிவித்தார். முன்னதாக அனைத்து வாகன டிரைவர்களுக்கும் கண் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
- ஜல்லிக்கட்டு மைதான பணிகளை முதன்மை செயலாளர் ஆய்வு செய்தார்.
- கலெக்டர் சங்கீதா, யூனியன் ஆணையாளர் வள்ளி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் கட்டப்பட்டு வரும் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு மைதானம் கட்டுமான பணிகளை பொதுபணித்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, யூனியன் ஆணையாளர் வள்ளி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
- பள்ளிகளின் வாகனங்களை ஆண்டுதோறும் ஆத்தூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
- ஆத்தூர் வட்டாரத்தில் மொத்தம் உள்ள தனியார் பள்ளிகளுக்கான 497 வாகனங்களில் நேற்று 415 வாகனங்கள் ஆய்வுக்கு உட்பட்படுத்தப்பட்டன.
ஆத்தூர்:
ஆத்தூர் வட்டார பகுதியில் உள்ள அனைத்து தனியார், நர்சரி, மெட்ரிக், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் வாகனங்களை ஆண்டுதோறும் ஆத்தூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆத்தூர் வட்டாரத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் பணி மணிவிழுந்தான் கிராமத்தில் உள்ள கல்லூரியில் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா தலைமையில் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மோட்டார் வாகன ஆய்வாளர் தி. செல்வகுமார் மற்றும் பணியாளர்கள் பள்ளி பஸ்களை ஆய்வு செய்தனர் ஆத்தூர் வட்டாரத்தில் மொத்தம் உள்ள தனியார் பள்ளிகளுக்கான 497 வாகனங்களில் நேற்று 415 வாகனங்கள் ஆய்வுக்கு உட்பட்படுத்தப்பட்டன. இவற்றில் 20 பள்ளி வாகனங்கள் தகுதி இழப்பு செய்யப்பட்டன.
- தமிழக அரசு உத்தரவின் படி வரும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
- நாமக்கல் வடக்கு மற்றும் தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலக எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல்:
தமிழக அரசு உத்தரவின் படி வரும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி, நாமக்கல் வடக்கு மற்றும் தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலக எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்ட போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற ஆய்வில், வருவாய் துறை, பள்ளிக்கல்வித் துறை, காவல் துறை, போக்குவரத்து துறை ஆகிய துறைகளின் அலுவலர்களால் பள்ளி வாகனங்கள் அரசு விதிமுறைகளின்படி இயங்குகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் நாமக்கல் தெற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்திற்குட்பட்ட 27 பள்ளிகளை சேர்ந்த 269 பள்ளி வாகனங்களும், வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 23 பள்ளிகளை சேர்ந்த 217 பள்ளி வாகனங்களும் என மொத்தம் 486 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் 458 பள்ளி வாகனங்கள் தகுதியான நிலையில் உள்ளது என கண்டறியப்பட்டது. மீதமுள்ள 28 பள்ளி வாகனங்கள் குறைகள் கண்டறியப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்து, மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே இயக்க வேண்டும் என்று கலெக்டர் அவற்றை திருப்பி அனுப்பினார்.
மேலும், பள்ளி வாகன சிறப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்றும், எப்சி சர்டிபிகேட், பர்மிட், இன்சூரன்ஸ், புகைச்சான்று, வரி மற்றும் பசுமை வரி ஆகியவை நடப்பில் உள்ளதா என்றும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் பள்ளி வாகன டிரைவர்கள் மற்றும் வாகன பொறுப்பாளர் களுக்கு தீயணைப்பு துறையினரால் வாகனத்தில் உள்ள தீயணைப்பு கருவியை அவசர காலத்தில் எவ்வாறு கையாள்வது என்று செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து 581 பள்ளி வாகன டிரைவர் களுக்கு உடல் மற்றும் கண் பரிசோதனைகள் செய்யப்பட்டது. முன்னதாக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியை கலெக்டர் டாக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, நாமக்கல் ஆர்.டி.ஓ. (பொ) சுகந்தி, ஆர்.டி.ஓ.க்கள் முரு கேசன், முருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- பரவை நல்லார் மாரியம்மன் கோவில் முதல் தெற்குபொய்கை நல்லூர் வரை பணிகள் நடைபெற்று வருகிறது.
- சாலையின் நீளம், அகலம் மற்றும் கனம் உள்ளிட்டவற்றை அளவீடுகள் மூலம் ஆய்வு செய்தனர்.
நாகப்பட்டினம்:
தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை துறையில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளின் தரம் மற்றும் கட்டுமானம் குறித்து ஆண்டுதோறும் தணிக்கை செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி இந்த ஆண்டு நாகை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலை துறை தஞ்சாவூர் வட்ட கண்காணிப்பு பொறியாளர் (திட்டங்கள்) கிருஷ்ணசாமி தலைமையில் என்ஜினீயர் குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதில் நாகை அருகே பரவை நல்லார் மாரியம்மன் கோவில் முதல் தெற்குபொய்கை நல்லூர் வரை சாலையின் தரம் உயர்த்தும் பணியினை தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது சாலையின் நீளம், அகலம் மற்றும் கனம் உள்ளிட்டவற்றை அளவீடுகள் மூலம் ஆய்வு செய்தனர். தொடர்ந்து சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது திருச்சி நெடுஞ்சாலை துறை (திட்டங்கள்) கோட்ட பொறியாளர் முருகானந்தம், நாகை நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்ட பொறியாளர் சிவக்குமார் உள்பட நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர்கள் உடன் இருந்தனர்.
- புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்
- கலெக்டர் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக மெர்சி ரம்யா பொறுப்பேற்ற பின் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் அரசு மருத்துவமனைகளிலும் நேரில் சென்று நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து, ஆய்வு மேற்கொள்கிறார். அந்த வகையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதேபோல மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்திருந்தவர்கள், படுத்திருந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதே போல் அன்னவாசல் ஒன்றியம், எல்லைப்பட்டி, மண்டக குடிநீர் ஊரணி சீரமைப்புப் பணியினையும், ஆன்டி ப்பட்டியில், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின்கீழ், விஜயா, சிதம்பரம், சித்ரா ஆகிய பயனாளிகள் வீடுகள் கட்டுமானப் பணிகளையும், சித்தனவாசல் சமத்துவபுரம் வீடுகள், பிச்சை என்ற பயனாளியின் வீட்டை பழுது பார்க்கும் பணிகள் நடைபெறுவதையும், 30,000 லிட்டர் கொள்ளளவுடைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினைப் பார்வை யிட்டு தூய்மைப்படுத்தும் விபரங்களை கேட்டறிந்தார்.
மேலும் திருவேங்கைவாசல் அக்ரஹாரம் தெருவில் ரூ.6.93 லட்சம் செலவில் நெற்களம் அமை க்கப்பட்டுள்ளதையும், விளத்துப்பட்டி கிராமத்தில், வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தி ன்கீழ், அமைக்க ப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு மற்றும் மின்மோட்டார் பணியினையும் கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த், அரசு மருத்து வக்கல்லூரி முதல்வர் பார்த்தசாரதி, உதவி செயற்பொறியாளர்கள் முத்துக்குமார், கண்ணன், வட்டாட்சியர் விஜய லெட்சுமி, உதவி பொறியா ளர்கள் வேல்சாமி, கௌசல்யா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்