search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 222412"

    • கடலூர் தாலுக்கா அலுவலகத்தில் இணை யவழி குற்றங்கள் தடுப்பது தொடர்பான விழிப்பு ணர்வை ஏற்படுத்தினார்.
    • செல்போன் பயன்பாட்டின் நன்மை தீமைகளை பற்றி விளக்கி கூறினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அறிவுரையின்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (இணையவழி குற்றபிரிவு) சீனிவாசலு மேற்பார்வையில் இணையவழி குற்றபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா கடலூர் தாலுக்கா அலுவலகத்தில் இணை யவழி குற்றங்கள் தடுப்பது தொடர்பான விழிப்பு ணர்வை ஏற்படுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஆன்லைன் பணமோசடி, சமூக ஊடகங்களில் மேற்கொள்ளும் குற்றங்கள் குறித்தும், புதிய செயலிகளை அதன் உண்மை தன்மை அறியாமல் பயன்படுத்த கூடாது எனவும், தேவையற்ற எண்களில் இருந்து வரும் வீடியோ அழைப்பினை தவிர்த்தல், குறுஞ்செய்தியில் வரும் தேவையற்ற லிங்க்யை ஓபன் செய்ய கூடாது, செல்போன் பயன்பாட்டின் நன்மை தீமைகளை பற்றி விளக்கி கூறியும், இணையவழி குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இணை யவழி குற்றம் தொடர்பாக இலவச உதவி எண் 1930 மற்றும் இணையதளத்திலும் புகார் பதிவு செய்யலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது.

    • அரியலூர் மாவட்டத்தில் உலக புகையிலை இல்லா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • நிகழ்ச்சியில் பீடி, சிகரெட், மூக்கு பொடி, மெல்லும் புகையிலை ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துக்கூறப்பட்டது

    அரியலூர்,

    உலக புகையிலை இல்லா தினத்தையொட்டி அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த சுள்ளங்குடி கிராமத்தில் ஏலாக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட புகையிலை தடுப்பு திட்ட சமூகப் பணியாளர் வைஷ்ணவி, திருமானூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல் ஆகியோர் ஹான்ஸ், பீடி, சிகரெட், மூக்கு பொடி, மெல்லும் புகையிலை ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினர்.

    பின்னர் அனைவரும் புகையிலைப் பொருட்களுக்கு எதிராக உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவர் நடராஜன், மக்கள் நல பணியாளர் ஜோதிமணி, பணித்தள பொறுப்பாளர்கள் வெண்ணிலா, சங்கீதா மற்றும் கிராம பொதுமக்கள், மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் சிவராமன் செய்திருந்தார். இதே போல் அரியலூரை அடுத்த சிறுவளூர் கிராமத்தில் உலக புகையிலை இல்லா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் அம்பிகா மாரிமுத்து தலைமை வகித்தார்.

    கருப்பூர் பொய்யூர் சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் புகையிலைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பழனியம்மாள், வார்டு உறுப்பினர் பூங்காவனம், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை, ஆசிரியர் கோகிலா, இளநிலை உதவியாளர் மணிகண்டன், ஊராட்சி செயலர் மாரிமுத்து மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மக்கள் நல பணியாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.

    • மதுரையில் சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
    • உலக மாதவிடாய் சுகாதார தினத்தையொட்டி மதுரை மாவட்ட குடும்ப கட்டுப்பாட்டு நலச்சங்கம் சார்பில் நடந்தது.

    வாடிப்பட்டி

    உலக மாதவிடாய் சுகாதார தினத்தையொட்டி மதுரை மாவட்ட குடும்ப கட்டுப்பாட்டு நலச்சங்கம், மீனாட்சி மில் ஜி.எச்.சி.எல் அறக்கட்டளையுடன் இணைந்து பெண்களுக்கான சுகாதார விழிப்புணர்வு கருத்தரங்கு சமயநல்லூர் அருகே ஊர்மெச்சிகுளம் சமுதாய கூடத்தில் நடந்தது. இந்த கருத்தரங்கிற்கு அறக்கட்டளை தொழில் மேலாளர் நாகராஜ பாண்டியன் தலைமை தாங்கினார். சமூக பொறுப்பாளர் சுஜின் முன்னிலை வைத்தார். குடும்ப கட்டுப்பாட்டு நலச்சங்க மேலாளர் டாக்டர் பிரதீபன், திட்ட அலுவலர் ஆஷீபா ஆகியோர் மாதவிடாய் சுகாதார மேலாண்மை பற்றி விளக்கிப் பேசினார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் 99620 10581 என்ற வாட்ஸ்ஆப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அறிவிப்புப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    அவினாசி :

    அவிநாசி காவல் துறை, மதுவிலக்கு போலீசாா் சாா்பில் சட்ட விரோதமாக சாராயம், மது விற்பனை குறித்து காவல் துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் 99620 10581 என்ற வாட்ஸ்ஆப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணில் பொதுமக்கள் தொடா்பு கொண்டு கள்ளச்சாராயம், போலி மது, சட்டவிரோதமாக மது விற்பனை ஆகியவை குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

    இது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக அவிநாசி, சேவூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அறிவிப்புப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இது குறித்த துண்டுப் பிரசுரத்தை அவிநாசி மதுவிலக்கு காவல் ஆய்வாளா் அனுராதா தலைமையிலான போலீசார் சேவூா் பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கினா்.இதில் காவல் ஆய்வாளா் சேகா், தனிப் பிரிவு தலைமைக் காவலா் செல்வராஜ், காவலா் பத்மாவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
    • போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், பெண்களின் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது. இதில் 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 8 கிலோ மீட்டர் தூரமும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு 3 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 8 கிலோ மீட்டர் தூர மாரத்தான் போட்டிக்கு தொண்டி செய்யது முகமது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து பழையக் கோட்டை வரையும், 3 கிலோ மீட்டர் போட்டிக்கு காடாங்குடி வரையும், தொண்டி-மதுரை சாலையில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஓடினர்.

    தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவகர் அலிகான், வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி, சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு, மேற்கு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம், நகர காங்கிரஸ் தலைவரும், கவுன்சிலருமான காத்தராஜா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சிறுவர்களுக்கு 2 கிலோமீட்டர் தூர மாரத்தான் ஓட்டம் நடந்தது. முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுத்தொகை, கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • போலி ஆன்லைன் செயலிகளில் கடன் பெற்று ஏமாற வேண்டாம்.
    • பொருட்காட்சிக்கு வந்த பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசார் மற்றும் இந்திரா சுந்தரம் அறக்கட்டளை இணைந்து போலி ஆன்லைன் செயலிகளில் கடன் பெற்று ஏமாற வேண்டாம் என்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன்படி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையில், இந்திரா சுந்தரம் அறக்கட்டளை நிறுவனரும், சமூக சேவகியுமான இந்திராசுந்தரம், சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் சையது ரபீக் சிக்கந்தர் ஆகியோர் முன்னிலையில் திருப்பூர் காங்கயம் ரோடு பத்மினி கார்டனில் நடைபெற்று வரும் பொருட்காட்சிக்கு வந்த பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அப்போது போலி ஆன்லைன் செயலிகள் மூலமாக கடன் பெறும்போது ஏற்படும் பாதிப்புகள் குறித்து சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினார்கள். இதில் இந்திராசுந்தரம் அறக்கட்டளை செயலாளர் ராஜா முகமது, நிர்வாகிகள் சுரேஷ், சித்ரா, சசூரி சி.பி.எஸ்.இ. பள்ளி துணை முதல்வர் சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தற்போது, பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு குறித்து 2-ம் கட்ட பணி நடக்கிறது
    • மாணவர்களுக்கு வழங்கப்படும். அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாவுக்கு உட்பட்ட நகரம், ஒன்றிய குடியிருப்பு பகுதிகளில் 2-ம் கட்ட கணக்கெடுப்பு பணியில், 5 வயது நிறைவடைந்த குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகாவிற்கு உட்பட்ட நகர். ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குக்கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இலவச கட்டாய உரிமை சட்டப்படி அனைத்து குழந்தைகளையும் முறையாக பள்ளியில் சேர்த்து, கல்வி கற்க வழிவகை செய்யும் வகையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிய கணக்கெடுப்பு பணி ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது.

    அதுபோல, 5 வயது நிறைவடைந்த குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி, கல்வித்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் 2 வாரங்கள் கிராமங்களில் உள்ள குடியிருப்புகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் வட்டார கல்வித்துறை சார்பில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது.

    இதையடுத்து 2-ம் கட்டமாக பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள், பள்ளியில் இடை நின்ற மாணவர்கள் குறித்து கண்டறிந்து கணக்கெடுக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு குழுவிலும் உள்ள ஆசிரியர், சிறப்பாசிரியர், சத்துணவு பணியாளர், தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

    அதிலும், கிராமப்புறங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு தொடர்ந்து நடக்கிறது. அப்போது ஆசிரியர்கள் பெற்றோர்களை சந்தித்து தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், இலவச கட்டாய உரிமை சட்டப்படி அனைத்து குழந்தைகளையிம் முறையாக பள்ளியில் சேர்த்து, கல்வி கற்க வழி வகை செய்யும் வகையில், பள்ளி செல்லா குழந்தைகளே இல்லை என்ற நோக்கத்தில் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    தற்போது, பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு குறித்து 2-ம் கட்ட பணி நடக்கிறது. இப்பணி வரும் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. அத்துடன், 5 வயது நிறைவடை்ந்த பள்ளி வயதுள்ள குழந்தைகளை, அரசு பள்ளியில் சேர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அரசு பள்ளியில் சேர விருப்பமுள்ள பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை அருகேயுள்ள பள்ளியில் சேர்க்க முன் வர வேண்டும்.

    மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும். அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நடப்பாண்டில், கல்விக்காக தமிழக அரசு அதிகளவு நிதி ஒதுக்கியதுடன், பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகள், அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது என்றனர்.

    • போதைப்பொருள் சம்பந்தமான தகவல்கள் இருந்தால் புகார் தெரிவிக்க வேண்டும்.
    • ெகாடநாடு ஊராட்சி துணைத்தலைவர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அரவேனு,

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், ெகாடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட கெரடாமட்டம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு ஏராளமான பொதுமக்களும் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சோலூர்மட்டம் போலீசார் சார்பில் பொதுமக்கள் மத்தியில் போதைப்பொருட்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் ெகாடநாடு ஊராட்சி துணைத்தலைவர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து சோலூர்மட்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி கூறுகையில் போதைப்பொருளுக்கு ஏராளமான இளைஞர்கள் பலியாகி உள்ளனர். அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டாலும் பொதுமக்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும். எனவே பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். அவர்கள் எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை உற்று நோக்க வேண்டும்.

    உங்கள் பகுதியில் போதைப்பொருள் சம்பந்தமான தகவல்கள் இருந்தால் எங்களிடம் தெரிவிக்க வேண்டும். போதைப் பொருள் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போது போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு கோடநாடு ஊராட்சி சார்பாக பல்வேறு உதவிகள் செய்யப்படுவதாகவும் துணைத் தலைவர் ரவி தெரிவித்தார்.

    • அரியலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    அரியலூர்,

    அரியலூர் ராம்கோ சிமென்ட் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. போக்குவரத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிலைய ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமை வகித்து பேசுகையில், 18 வயது நிரம்பாத சிறுவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது, மீறி ஓட்டினால் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வாகனம் பறிமுதல் செய்து 3 மாத சிறை தண்டணை விதிக்கப்படும்.

    மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதம், கைப்பேசி பேசியபடி வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம், தலை கவசம் அணியாமல் வாகனம் ஒட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினர். முன்னதாக அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஐ.டி.ஐ. மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • தேசிய சேவை தொண்டர் மலைசாமி நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி, திருச்சுழி ஒன்றியங்களில் மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் நேரு யுவகேந்திரா சார்பில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சிலம்ப கலைக்குழு மற்றும் பால் சிலம்பம் கிராமிய கலைக்குழு ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாணவ-மாணவிகளின் சிலம்பம், வாள் வீச்சு, கட்டைக்கால் போன்ற பாரம்பரியமிக்க கலைகளின் வாயிலாக மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இதில் வில்லிபத்திரி இளையோர் மன்றத்தலைவர் கருப்பசாமி, பால் சிலம்பம் ஆசிரியர் வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.தேசிய சேவை தொண்டர் மலைசாமி நிகழ்ச்சியை வழிநடத்தினார்.

    • மதுரை அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
    • வீடு, வீடாகச் சென்று குப்பைகளை தரம் பிரித்து வழங்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும் கேட்டுக் கொண்டனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வாவிடமருதூர் ஊராட்சியில் ''நம்ம ஊரு சூப்பரு'' மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்கள் முன்னிலையில் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசர், யூனியன் அலுவலர் வடிவு, ஊராட்சி செயலாளர் ஸ்டாலின் முன்னிலையில் வீடு, வீடாகச் சென்று குப்பைகளை தரம் பிரித்து வழங்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும் கேட்டுக் கொண்டனர். இது தொடர்பான விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • விழிப்புணர்வு நடை பயணத்தை அமைச்சர்கள் மூர்த்தி, மதிவேந்தன் தொடங்கி வைத்தனர்.
    • அரிய வகை உயிரினங்கள் இந்த பகுதியில் உள்ளன.

    மதுரை

    மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் இடையபட்டி தெற்கு பகுதி அம்முர் உள்ளடக்கிய வெள்ளிமலை ஆண்டவர் கோவில் பகுதியில் சர்வதேச பல்லுயிர் பெருக்க நாளை முன்னிட்டு இயற்கை நடைபயணம் நடந்தது. இதனை அமைச்சர்கள் மூர்த்தி, மதிவேந்தன் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

    இந்த நடை பயணத்தில் சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், ஒன்றிய தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர் கலாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலகம் முழுவதும் நாளை (22-ந் தேதி) சர்வதேச பல்லுயிர் பெருக்க நாளாக கடைப்பிடிக் கப்படுகிறது. அதனை முன்னிட்டு தமிழ்நாடு வனத்துறை ஒவ்வொரு ஆண்டும் பல்லுயிர் வாழும் இடங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு இடைய பட்டியை தேர்வு செய்து இங்கு இந்த விழிப்புணர்வு பயணத்ைத நடத்துகிறோம். இது கடம்ப மரம் உள்ளிட்ட பல மரங்கள் கொண்ட சமவெளி காடு ஆகும்.

    இங்கே பல்லுயிர்கள் இருக்கிறது. இதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த நடை பயணத்தை தொடங்கி உள்ளோம். இந்த பகுதியில் பல்வேறு மரங்கள், மூலிகை செடிகள் மற்றும் தேவாங்கு உள்ளிட்ட பல்லுயிர்கள் வாழுகின்ற இடமாக இருக்கிறது.

    தமிழ்நாட்டில் சமவெளி காட்டில் கடம்பவனம் என்பது குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் தான் இருக்கிறது. இங்கு கடம்ப மரம் மட்டுமின்றி உசிலை, குறுந்தம், நெய் குறுந்தம், பூவந்தி போன்ற மரங்களும் இருக்கிறது. இங்கு மருத்துவ குணம் கொண்ட காந்தன், விருது விராலி, மருள், சிறு குஞ்சன் போன்ற மூலிகை செடிகளும் உள்ளன.

    இது தவிர தேவாங்கு, முள் எலி, எறும்புத்தின்னி, புள்ளிமான், காட்டுப்பன்றி போன்ற அரிய வகை உயிரினங்களும் இந்த பகுதியில் உள்ளன.

    எனவே இந்த பகுதியை பாதுகாக்க வேண்டும். இதில் உள்ள முக்கியத்துவம் கருதி இங்குள்ள காட்டு பகுதிகள் அழிந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும், இங்குள்ள நீர் நிலைகள், மரங்கள், பூச்சிகள் எல்லாமே நாம் வாழுகின்ற உலகத்தில் அனைத்து உயிர்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×