என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கருத்தரங்கம்"
- கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை மேலாண்மை துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.
கீழக்கரை
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலாண்மை துறை சார்பில் தொழில் முனைவோர் மேம்பாடு எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜ சேகர் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் கள ஒருங்கிணைப்பாளர் அருமை ரூபன் கலந்து கொண்டார். மேலாண்மை துறை தலைவர் அஜ்மல்கான் வரவேற்றார். முடிவில் பேராசிரியர் ரியாஸ் கான் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மேலாண்மை துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.
- பெரம்பலூரில் டிஜிட்டல் தடயவியல், சைபர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது
- பெரம்பலூர் தனலட்சுமி மகளிர் கல்லூரியில், வேந்தர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது
பெரம்பலூர்,
தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரம்பலூர் தடய அறிவியல் துறையின் சார்பாக "டிஜிட்டல் தடயவியல் மற்றும் சைபர் பாதுகாப்பில் எதிர்காலம்" என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ. சீனிவாசன் தலைமை வகித்தார். தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியின் முதல்வர்உமாதேவி பொங்கியா முன்னிலை வகித்தார். தடய அறிவியல் துறை தலைவர் எஸ்.ராணி சந்திரா வரவேற்புரை ஆற்றினார். பெங்களூருவில் உள்ள ஜீரோபாக்ஸ் இன் டேட்டா பிளாட்ஃபார்ம் நிபுணர் தணிகைவேல் பேசும்போது, சைபர் கிரைம் என்பது உலகளாவிய பிரச்சினை. எதிர்கால டிஜிட்டல் தடயவியல்துறைக்கு வலுவான சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படும். இணைய அச்சுறுத்தல்களை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு, சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவதும், எல்லைகளை தாண்டி உளவுத்துறையைப் பகிர்வதும் இன்றியமையாததாக இருக்கும் என்று அவர் பேசினார். இந்நிகழ்வில் புல முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- மதுரையில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஆட்சி மொழி கருத்தரங்கம் நடந்தது.
- ஆசிரியர் சண்முகதிருக்குமரன் மதுரையும் கலைஞரும் எனும் தலைப்பிலும் பேசினர்.
மதுரை
கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடர்ச்சியாக தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முதல் கட்டமாக சென்னை, மதுரை, காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தேனி, சிவகங்கை, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஆட்சி மொழி கருத்தரங்கம் நடக்க ஆணையிடப்பட்டது.
அதனடிப்படையில், மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுத் துறைகள், கழகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களின் பணியாளர்கள்/அலுவ லர்கள், தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 107 பேர் பங்கேற்ற ஆட்சிமொழிக் கருத்தரங்கம் மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்கு நர் (பொ) சுசிலா வர வேற்றார்.
மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் (தன்னாட்சி) முதல்வர் வானதி கருத்த ரங்கை தொடங்கி வைத்து பேசினர்.
மீனாட்சி கல்லூரியின் முதுகலை தமிழாய்வுத் துறைத் தலைவர் சந்திரா கலைஞர் நிகழ்த்தியச் செம்மொழிச் செயற் பாடுகள் எனும் தலைப்பி லும், மதுரை தியாகராசர் கல்லூரியின் உதவி பேராசிரியர் தட்சிணா மூர்த்தி மொழிப்பயிற்சி எனும் தலைப்பிலும், முனிச்சாலை, மாநகராட்சி உயர் நிலைப்பள்ளியின், நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் சண்முகதிருக் குமரன் மதுரையும் கலைஞ ரும் எனும் தலைப்பிலும் பேசினர்.
விருதுநகர் மாவட்டம், ம.ரெட்டியபட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் கவிஞர் முத்துமுருகன் திரைப்படங் களில் தமிழ் வளர்ச்சி எனும் தலைப்பிலும், விருதுநகர் மாவட்டம் ஆவுடையாபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் பாலமுருகன் கணினித்தமிழ் எனும் தலைப்பிலும், மதுரை தியாகராசர் கல்லூரியின் உதவி பேராசிரியர் சங்கீத் ராதா காலந்தோறும் தமிழ் ஆட்சிமொழி சட்டம், வரலாறு எனும் தலைப்பி லும் பேசினர்.
முடிவில் தமிழாய்வு துறைத்தலைவர் சந்திரா நன்றி கூறினார்.
- சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
- ஆலங்குடி வம்பன் அற்புதா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வம்பன் அற்புதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பெண்கள் பாதுகாப்பு கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜான் மார்ட்டின் தலைமை வகித்தார். துணை முதல்வர் பக்சிமெட்டில்டா வரவேற்றார். கருத்தரங்கில் ஆலங்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் நல்லதம்பி, நகர வட்டார போக்கு வரத்து காவல் ஆய்வாளர் பாஸ்கர் இந்தியன் ரெட் கிராஸ் கிளை சேர்மன் மருத்துவர் முத்தையா, பொருளாளர் ஜெயச்சந்திரன், துணைச் செயலாளர் லட்சுமி நாராயணன், துணைப் பொருளாளர் முருகேசன் செயற்குழு உறுப்பினர் சிவ ஆனந்தன், அருட்சகோதரி மார்கரேர் மேரி உட்பட பலர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து சிறப்புரையாற்றினர். இன்னாசிமுத்து நன்றி கூறினார்.
- வான்வழி மிதந்து வரும் மேகக் கூட்டங்களைக் குளிரவைத்து மழையாய் பொழியச் செய்வது மரம், செடி கொடிகள் தாம்.
- திறந்தவெளிக் கிணறுகள் இல்லாத வீடுகளில் மொட்டை மாடியில் இருந்து கொண்டுவரப்படும் மழைநீரை சிறு கால்வாய் மூலம் வடிகட்டும் தொட்டிக்குள் பாய்ச்ச வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட நேரு யுவகேந்திரா தலைவர் அப்துல் காதர் வரவேற்புரை ஆற்றினார். அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் தனபால் கூறுகையில், மரம், செடி, கொடிகள் மழை பெய்வதற்கு முக்கிய காரணிகளாகும்.
வான்வழி மிதந்து வரும் மேகக் கூட்டங்களைக் குளிரவைத்து மழையாய் பொழியச் செய்வது மரம், செடி கொடிகள் தாம்.
மக்கள் தொகை பெருக்கத்தால் அவை இருந்த இடங்கள் மக்கள் வாழும் இடங்களாக மாறி வருகின்றன. அதனால் மழை குறைந்து வருகிறது.
மழைநீரை பல்வேறு வழிகளில் சேகரிக்கலாம்.மொட்டை மாடியில் விழும் மழைநீரை குழாய்கள் மூலம் தரைப்பகுதிக்கு கொண்டு வந்து கிணற்றுக்கும், வீட்டு சுவருக்கும் இடையில் தொட்டி அமைத்துச் சேகரிக்க வேண்டும். அங்கு வடிகட்டிய பின்னர் திறந்தவெளி கிணற்றுக்குள் மழை நீரை விழச்செய்து சேகரிக்கலாம்.
திறந்தவெளிக் கிணறுகள் இல்லாத வீடுகளில் மொட்டை மாடியில் இருந்து கொண்டுவரப்படும் மழைநீரை சிறு கால்வாய் மூலம் வடிகட்டும் தொட்டிக்குள் பாய்ச்ச வேண்டும். அங்கிருந்து சிறு தொட்டிக்குள் மழைநீரைச் செலுத்தி சேகரிக்கலாம்.
மழைநீரைச் சேமிப்போம். வாழ்விற்கு வளம் சேர்ப்போம். விண்ணின் மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி என்பதை உணர்ந்து செயல்படுவோம் என்று பேசினார்.
விழாவில் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி வட்டார கல்வி வளர்ச்சி அலுவலர் வேடியப்பன், நேரு யுவகேந்திரா இளைஞர் நல தலைவர் பிரேம் பாரத்குமார் மற்றும் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவர் வேல்சாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்கள்.
கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெகன் வாழ்த்துரை கூறினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களான ஸ்டீபன், விக்டர், ஆண்டனி, சரவணகுமார் ஆகியோர் மற்றும் கிருஷ்ணகிரி நேரு யுவகேந்திரா, ஏபிஜே அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றம் ஆகியோர் இணைந்து விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவில் முடிவில் பாலாஜி நன்றி கூறினார்.
- சேலம் மாவட்ட பாரா மெடிக்கல் நலச்சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
- சிறிய அளவிலான பரிசோதனை நிலையங்களுக்கு ரூ.1,000-ம் பதிவுக்கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.
சேலம்:
சேலம் மாவட்ட பாரா மெடிக்கல் நலச்சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
சங்க தலைவர் காளிதாசன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் துரைசாமி, செயலாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை உயிர் வேதியியல் துறை தலைவர் பமீலா கிறிஸ்துதாஸ்
கலந்து கொண்டு ஆய்வக துறையில் நவீன முறைகள் பற்றி விளக்கம் அளித்து பேசினார்.
இதில், மத்திய அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளால் தமிழகத்தில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய அளவிலான பரிசோதனை நிலையங்கள் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை உள்ளது. எனவே மத்திய அரசின் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்.
பெரிய அளவிலான கார்பரேட் நிறுவனங்களால், சிறிய அளவிலான பரிசோதனை நிலையங்கள் பாதிக்கப்படும் நிலை மாற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறிய அளவிலான பரிசோதனை நிலையங்களுக்கு ரூ.1,000-ம் பதிவுக்கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள ஆய்வக உதவியாளர் காலிப்பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்களை நியமிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர்.
இந்த கருத்தரங்கில் சங்க இணை செயலாளர் செல்வராஜ், மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் கலா, சேலம் மாவட்ட தலைவர் நிஷார் அகமது, செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு வனத்துறை, ஜப்பான் இன்டர்நேசனல் கோப்ப ரேட்டிவ் ஏஜென்சி இணைந்து”நாட்டு வைத்தி யர்கள் கருத்தரங்கம்“ கலெக்டர் கார்மேகம் தலை மையில் ஆத்தூர் கிரீன் பார்க் பள்ளியில் நடை பெற்றது.
- தமிழ்நாட்டின் இயற்கை யுடன் இணக்கமான சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பது கருத்தரங்கின் நோக்கமாகும்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம், ஆத்தூர் வனக்கோட்டத்தின் சார்பில் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு வனத்துறை, ஜப்பான் இன்டர்நேசனல் கோப்ப ரேட்டிவ் ஏஜென்சி இணைந்து"நாட்டு வைத்தி யர்கள் கருத்தரங்கம்" கலெக்டர் கார்மேகம் தலை மையில் ஆத்தூர் கிரீன் பார்க் பள்ளியில் நடை பெற்றது.
தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வாழ்விட மேம்பாடு, காடு வளர்ப்பு மற்றும் நிறுவன திறன் மேம்பாடு ஆகி யவற்றின் மூலம் பல்லுயிர்ப் பாதுகாப்பை மேம்படுத்து வது, அதன். மூலம் தமிழ்நாட்டின் இயற்கை யுடன் இணக்கமான சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பது கருத்தரங்கின் நோக்கமாகும்.
கருத்தரங்கில் தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட பாரம்பரிய வைத்தியர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்ற னர். இதில் ஆத்தூர் மாவட்ட வண அலுவலர் சுதாகர் உள்ளிட்ட தொடர்பு டைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக பாரம்பரிய நெல் ரகங்கள் கருத்தரங்கம் நடைபெற்றது.
- பாரம்பரிய அரிசி சாப்பாட்டால் ரத்தத்தில் சர்க்கரையளவு கூடிவிடும் என்ற பயம் இன்றி சாப்பிடலாம்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக பாரம்பரிய நெல் ரகங்கள் கருத்தரங்கம் நடைபெற்றது.
தலைமை யாசிரியர் (பொறுப்பு) பாலமுருகன் தலைமை வகித்தார்.
ஆசிரியர் சங்க செயலாளர் முகமது ரபீக், ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வி, மீனாட்சி சுந்தரம், சிவராமன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பாஸ்கரன் வரவேற்றார்.
மாராச்சேரிஅருண் யாழினி உழவுக்காடு நிறுவனர் வேணு காளிதாசன், பள்ளி மாணவர்களுக்கு கருப்பு கவுனி கொழுக்கட்டைகளை வழங்கி பேசும்போது, தற்போது பயன்பாட்டில் இருக்கக்கூடிய அரிசியில் சமைக்கும் உணவுகள் அனைத்தும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய அரிசி வகையிலும் சமைக்கலாம்.
பாரம்பரிய அரிசி சாப்பாட்டால் ரத்தத்தில் சர்க்கரையளவு கூடிவிடும் என்ற பயம் இன்றி சாப்பிடலாம். சர்க்கரை யளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிகுந்தவை.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
தசைகளை வலுவாக்கும்.
இது போன்ற பல்வேறு பயன்களை கொண்டது பாரம்பரிய அரிசி என்றார்.
இதில் ஆசிரியர்கள் விஜயகுமார், பாலசுப்பிரமணியன், ஆடின் மெடோனா, பிரபாகரன், உமா மகேஸ்வரி, சுந்தர், அறிவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சக்கரபாணி நன்றி கூறினார்.
- சிவகாசியில் காங்கிரஸ் கட்சி கருத்தரங்கம் நடந்தது.
- முன்னாள் இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார்.
விருதுநகர்
காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகாசியில் கருத்தரங்கம் நடைபெற்றது.
முன்னாள் இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார்.
வழக்கறிஞர்கள் முருகானந்தம், குப்பை யாண்டி, ராம்குமார் முன்னிலை வகித்தனர்.
தலைமைப்பண்பு குறித்து பேராசிரியர் சிவனேசன் பயிற்சி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் துணைத்தலைவர் முத்துமணி, வட்டார காங்கிரஸ் தலைவர் தர்மராஜ், நிர்வாகிகள் கணேசன், குருசாமி, ஷேக், பச்சையாத்தான், முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மயிலாடுதுறை மாவட்டத்தில் 3-வது மரபுசார் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.
- பாரம்பரிய நெல் மற்றும் இதர பயிர் சாகுபடி முறைகளை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதி சீரமைப்பு திட்டம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சர்வதேச சிறுதானிய ஆண்டு-2023 மற்றும் மரபுசார் பன்முக தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை கலெக்டர் மகாபாரதி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதுகுறித்து கலெக்டர் மகாபாரதி பேசியதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் 3-வது மரபுசார் பன்முகத் தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் பாரம்பரிய நெல் மற்றும் இதர பயிர் சாகுபடி முறைகளையும், அவற்றை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் முறைகளையும், இங்கு வந்துள்ள விவசாயிகள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
நிகழ்ச்சியில், பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபால், சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- உடுமலை தொழில் வா்த்தக சபை சாா்பில் ஜிஎஸ்டி கருத்தரங்கம் நடை பெற்றது.
- தொழில் வா்த்தக சபை செயலாளா் ஆடிட்டா் கந்தசாமி நன்றி கூறினாா்.
உடுமலை:
உடுமலை தொழில் வா்த்தக சபை சாா்பில் ஜிஎஸ்டி கருத்தரங்கம் நடை பெற்றது. துணைத் தலைவா் வெங்கடேஷ் வரவேற்றாா். கருத்தரங்கில் சிறப்பு விருந்தினா் ஆடிட்டா் சங்கரநாராயணன் பேசும்போது, ஜிஎஸ்டி தணிக்கையின்போது வணிகா்கள், தொழில் நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றியும் சரக்குகளை கையாளும்போது எடுத்துச் செல்ல வேண்டிய படிவங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தாா்.
மேலும், ஜிஎஸ்டி சட்டத்தில் தண்டனை சட்டத்தில் நடவடிக்கை எடுக்கும்போது மேற்கொள்ள வேண்டிய பதில் உரைகளும், மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ள இடங்களில் தாக்கல் செய்ய வேண்டிய படிவங்கள் குறித்தும் விளக்கப்பட்டது.தொழில் நிறுவனங்களைச் சாா்ந்தோா், வரிசட்ட ஆலோசா்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விரிவான விளக்கம் அளித்தாா். தொழில் வா்த்தக சபை செயலாளா் ஆடிட்டா் கந்தசாமி நன்றி கூறினாா்.
- அருப்புக்கோட்டையில் வேளாண் கருத்தரங்கம் நடந்தது.
- ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.
பாலையம்பட்டி
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தேசிய தோட்டக்கலை வாரியத்தின் மானிய திட்டங்கள் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது.
தேசிய தோட்டக்கலை வாரிய துணை இயக்குனர் ராஜா மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு மானிய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
இதில் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.
கருத்தரங்கில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியாரம்மாள், துணை இயக்குனர் வேளாண்மை (மத்திய அரசு திட்டம்) சுமதி, தோட்டக்கலை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், வேளாண்மை அறிவியல் நிலையம் பேராசிரியர் ராஜா பாபு, செல்வி ரமேஷ், தொழில் வல்லுநர் ராகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்