என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 223615"
- விபத்தில் இறந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கு தொழிற்சங்க நிர்வாகிகள் நிதி உதவி வழங்கினர்.
- காளிதாஸ் குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
மதுரை
கோவை மாவட்டம் வால்பாறை அரசு ஆஸ்பத்திரி முன்பு 108 ஆம்புலன்ஸ் டிரைவர் காளிதாஸ் (27) நேற்று உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். அவருக்கு மனைவி கீதா (24), மகன்கள் புகழ்அறிவு (3), கவி (1) ஆகியோர் உள்ளனர்.
விபத்தில் கணவனை பறிகொடுத்து நிற்கதியற்று நின்ற குடும்பத்திற்கு தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் முடிவு செய்தது. மாநில பொது செயலாளர் இருளாண்டி, பொருளாளர் கணேசன், துணை செயலாளர் உதய குமார், துணைத்தலைவர் குணா ஆகியோர் உடனடி யாக வால்பாறைக்கு புறப்பட்டுசென்றனர்.
அங்கு கோவை மாவட்ட தலைவர் பொய்யாமொழி மற்றும் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகி களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
விபத்தில் இறந்த காளிதாசுக்கு தர்மபுரி சொந்த ஊராகும். உடலை அங்கு கொண்டு செல்வது என்று குடும்பத்தினர் முடிவு செய்தனர். இக்கட்டான சூழ்நிலையில் காளிதாஸ் குடும்பத்திற்கு, சங்கம் சார்பில் முதல் கட்டமாக ரூ. 37 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.
இதற்கான காசோ லையை நிர்வாகிகள் காளிதாஸ் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதனை காளிதாஸ் குடும்பத்தினர் கண்கலங்க பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தனர்.
- 108 ஆம்புலன்சு டிரைவர் மீது தாக்குதல் நடந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள சவ்வாஸ்புரத்தை சேர்ந்தவர் மருதுபாண்டி (வயது32). இவர் செங்கல்பட்டில் 108 ஆம்புலன்சு டிரைவராக பணிபுரிகிறார். இந்த நிலையில் திருவிழாவிற்காக சொந்த ஊருக்கு வந்தார்.
அப்போது கருப்பசாமி என்பவர் மருதுபாண்டியிடம், உனது மனைவிக்கும், உறவினரான விஜயகுமாருக்கும் பழக்கம் இருக்கிறது என்று கூறினார். பொது இடத்தில் கருப்பசாமி அருகில் இருந்தபோதே விஜயகுமாரிடம் மருதுபாண்டி இதுகுறித்து கேட்டார். ஆனால் விஜயகுமார் அதற்கு பதில் அளிக்காமல் அமைதியாக சென்று விட்டார். தான் கூறியதை விஜயகுமாரிடம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி தனது நண்பர் ராமர் என்பவருடன் சேர்ந்து மருதுபாண்டியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த மருதுபாண்டி அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருச்சுழி போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருவையாறு பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
- இளம்பெண்ணின் குடும்பத்தினர் குறித்து ஆபாசமான முறையில் பதிவிட்டுள்ளார்.
தஞ்சாவூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் அம்மாக்குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 34).
இவர் நெல் அறுவடை எந்திர டிரைவர்.
இவர் அம்மாக்குளத்தூரில் இருந்து நெல் அறுவடைக்காக தஞ்சை பகுதிக்கு வேலைக்கு வந்தார்.
அப்போது அவருக்கும், திருவையாறு பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து அவரை தவறானவர் என்பது போல் சித்தரித்து சமூக வலைதளத்தில் காசிநாதன் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் குறித்து ஆபாசமான முறையில் பதிவிட்டுள்ளார்.
இதனால் மனமுடைந்த அந்த இளம்பெண் தஞ்சை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசிநாதனை தேடி வந்தனர்.
காசிநாதனின் செல்போன் டவர் காட்டிய பகுதி உட்பட பல்வேறு இடங்களில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை செய்தபோது காசிநாதன் அவரது சொந்த ஊரில் ஒரு தோப்பில் மறைந்து இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து தஞ்சை சைபர் கிரைம் போலீசார் அங்கு விரைந்து சென்று காசிநாதனை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின்னர் அவரை கைது செய்து தஞ்சைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து நீதிபதி முன்பு காசிநாதனை ஆஜர்படுத்தி 15 நாட்கள் காவலில் புதுக்கோட்டை கிளை சிறையில் அடைத்தனர்.
- உக்கடம் பஸ் நிலையம் வரும்போது 2 வாலிபர்கள் குடிபோதையில் பஸ்சில் ஏறினர்.
- போத்தனூர் போலீஸ் நிலையத்தில் கண்டக்டர் துரைமுருகன் புகார் செய்தார்.
குனியமுத்தூர்,
கோவை கிணத்துக்கடவு அருகே நாலாட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைமுருகன் (23) இவர் காந்திபுரம் -வெள்ளலூர் செல்லும் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று காந்திபுரத்தில் இருந்து வெள்ளலூருக்கு பஸ் புறப்பட்டது. அப்போது உக்கடம் பஸ் நிலையம் வரும்போது இரண்டு வாலிபர்கள் குடிபோதையில் பஸ்சில் ஏறினர்.
பஸ்சில் ஏறியது முதல் இருவரும் ஒருவரை ஒருவர் ஆபாசமாக பேசிக்கொண்டு பிறருக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர். துரைமுருகன் அதை கண்டிக்கும் போது, அவரை இருவரும் சேர்ந்து மிரட்டினர். பஸ் பயணம் செய்பவர்களிடமும் தகாத வார்த்தைகளால் இருவரும் பேசி வந்தனர். போத்தனூர் ஜி.டி.டேங்க் பஸ் ஸ்டாப் அருகே வரும்போது இருவரும் எல்லை மீறி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி டிரைவர் பஸ்சை திருப்பி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தார். போலீஸ் நிலையத்திற்குள் பஸ் செல்வதை கண்டதும் ,ஒரு வாலிபர் இறங்கி தப்பி ஓடிவிட்டார். இன்னொருவரும் இறங்க முயற்சிக்கும் போது பயணிகள் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் கண்டக்டர் துரைமுருகன் புகார் செய்தார்.
போலீஸார் அந்த நபரிடம் விசாரணை செய்தபோது, அவர் சுந்தராபுரம் சில்வர் ஜூப்ளி விதியை சேர்ந்த ராகுல் (18)என்பது தெரியவந்தது. போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய பிரசாந்த் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பயணிகளுடன் பஸ் ஒன்று, போலீஸ் நிலையத்துக்குள் வந்து நின்ற சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
- பிப்ரவரி மாதம் 13-ந் தேதி பண பிரச்சனையில் அவருக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது
- 5 பேரும் தற்பொழுது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி :
தென் தாமரை குளம் அருகே தேங்காய்காரன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பெலிக்ஸ் (வயது 38). கோவையில் உள்ள கொரியர் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். பெலிக்ஸ் ஊருக்கு வந்திருந்த நிலையில் பிப்ரவரி மாதம் 13-ந் தேதி பண பிரச்சனையில் அவருக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பெலிக்ஸை கொலை செய்தனர்.
இதுகுறித்து தென்தாம ரைகுளம் போலீசில் அவரது தந்தை ரெஜி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கொலை யாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. ராஜா தலைமை யில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடு பட்டனர். கொலை வழக்கு தொடர் பாக தென்தாமரைகுளம் அருகே தேங்காய் காரன் குடியிருப்பை சேர்ந்த கண்ணன், சுபாஷ், பொன்னார் விளையைச் சேர்ந்த ஜெகன் கிண்ணிகண்ணன் விளையைச் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணன் மற்றும் வினோத்,சுடர் ஆனந்த் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரும் ஜெயிலில் அடைக் கப்பட்டனர். கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கண்ணன்,சுபாஷ் ,ஜெகன், வினோத், ஸ்ரீகிருஷ்ணன் ஆகிய 5 பேரும் தற்பொழுது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கொலை வழக்கில் தலைமறை வாகி இருந்த முகிலன்குடியிருப்பை சேர்ந்த பிரதீப் (30) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இன்று காலை தனிப்படை போலீசார் பிரதீப்பை கைது செய்துள்ளனர்.
- வீட்டில் இருந்து கரும்புகை வெளியே வந்தது.
- தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
சுவாமிமலை:
கும்பகோணம் திருமஞ்சன வீதி கீழ சந்தில் வசித்து வருபவர் கணேசன் (வயது 59).
இவரது மனைவி சாவித்ரி.
கணேசன் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இன்று காலை இருவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டனர்.
இந்நிலையில் வீட்டில் இருந்து கரும்புகை வெளியே வந்தது.
பின்னர் சிறிது நேரத்தில் வீடு தீபிடித்து எரிந்தது.
உடனே அக்கம் பக்கத்தினர் இது குறித்து கும்பகோணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இதற்குள் வீடு முழுவதும் எரிந்து நாசம் ஆனது.
இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
- எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது பிரகாசின் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
- எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளரிவெள்ளி ஊராட்சி, வேட்டுவப்பட்டி பகுதியைச் சேர்ந்த உத்தரசாமி மகன் பிரகாஷ் (வயது 25). வேன் டிரைவரான இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் எடப்பாடி நோக்கி வந்தார்.
எடப்பாடி - கோனேரிப்பட்டி பிரதான சாலையில் நெசவாளர் காலனி பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது பிரகாசின் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
இதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சிலுவம்பாளையம் தம்பாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த உத்தரசாமி, அவரது மகன் கவின் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
அவர்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு எடப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த எடப்பாடி போலீசார், பிரகாஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- காவலாளியை டிரைவர் தாக்கினார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனர்.
மதுரை
மதுரை ஆரப்பாளையம் டி.டி.மெயின் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காவலாளியாக இருப்பவர் ஜோசப் (வயது 68). இவர் பணியில் இருந்த போது ஆரப்பாளையம் புட்டு தோப்பு செக்கடி தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவர் தான் ஓட்டி வந்த ஆட்டோவை திருமண மண்டபத்தின் முன்பு நிறுத்தி உள்ளார். அவரிடம் வாகனத்தை சற்று தள்ளி நிறுத்தும்படி ஜோசப் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் அவரை ஆபாசமாக பேசி தாக்கினார். இது குறித்து கரிமேடு போலீசில் ஜோசப் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
மதுரை நடராஜ் நகர் ஜான்சன் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் மகள் சோபிதா அபிதா (வயது 22). இவர் மணப்பெண் அலங்காரம் செய்து வருகிறார். இதனால் பலரிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். ஆண் நண்பர்களுடனும் அடிக்கடி பேசியுள்ளார். இதனை பாஸ்கரன் கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சோபிதா அபிதாவையும், சகோதரி மற்றும் தாயையும் ஆபாசமாக பேசியள்ளார். அதனை சோபிதா அபிதா தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கரன் சோபி ஆபிதாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கரிமேடு போலீசில் சோபிதாஅபிதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனர்.
- ராமகிருஷ்ண ராஜா அரசு போக்குவரத்து கழக புறநகர் டிப்போவில் டிரைவராக பணி புரிந்துவருகிறார்.
- ராமகிருஷ்ண ராஜா மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புதியம்புத்தூர்:
சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரி மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ண ராஜா (வயது39). இவர் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழக புறநகர் டிப்போவில் டிரைவராக பணி புரிந்துவருகிறார். இவர் 22-ந்தேதி இரவு தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு பஸ்சை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது
இதை அறிந்த பயணிகள் அரசு போக்குவரத்து கழக அதிகாரியிடம் செல்போனில் புகார் அளித்தனர். உடனே அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ராமகிருஷ்ண ராஜா ஓட்டிச் சென்ற பஸ்சை, புதியம்புத்தூர் காவல் சரகம் புதூர் பாண்டி யாபுரம் டோல்கேட் அருகே நிறுத்தி ராமகிருஷ்ண ராஜா மீது புதியம்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புதியம்புத்தூர் போலீசார் ராமகிருஷ்ண ராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- நிலை தடுமாறி கீழே விழுந்த நசீரா மீது டாரஸ் லாரி சக்கரம் ஏறி இறங்கியது
- பலத்த காயமடைந்த முகமது இர்பானை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
கன்னியாகுமரி :
வேர்க்கிளம்பி காட்டு விளை பகுதியை சேர்ந்தவர் முகம்மது இர்பான் (வயது 38). துணி வியாபாரி. இவர் நேற்று மாலை அவரது தாயார் நசீரா (55) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
வில்லுக்குறி பாலம் அருகில் சென்ற போது பின்னால் வேகமாக வந்த டாரஸ் லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. நிலை தடுமாறி கீழே விழுந்த நசீரா மீது டாரஸ் லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கிய நசீரா சம்பவ இடத்தில் பலியானார்.
பலத்த காயமடைந்த முகமது இர்பானை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இது குறித்து முகமது இர்பான் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரின் இரணியல் போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற டாரஸ் லாரி டிரைவர் காக்கச்சல் மணியன்குழியை சேர்ந்த மைக்கேல்ராஜ் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதே வேகத்தில் ரோட்டோரமாக இருந்த தடுப்புச்சுவரின் மீது மோதியது
- காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
கன்னியாகுமரி :
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ராக்கி (வயது 34). இவர் இன்று அதிகாலை திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி தனது சொகுசு காரில் வந்து கொண்டிருந்தார்.
கொட்டாரம் அருகே உள்ள பொற்றையடி இலங்காமணிபுரம்பகுதி யில் சென்று கொண்டிருக்கும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி தாறு மாறாக ஓடியது. அதே வேகத்தில் ரோட்டோரமாக இருந்த தடுப்புச்சுவரின் மீது மோதியது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இதில் டிரைவர் ராக்கி படுகாயம் அடைந் தார். படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச் சைக்காக ஆசாரிப்பள்ளத் தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றி தகவல் அறிந்ததும் தென்தாமரை குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- திருப்பூரை சேர்ந்த, ஒன்பது வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
- ராக்கியாபாளையத்தை சேர்ந்த மணிகண்டன், (36) என்பவர் கார் ஓட்டி வந்தார்.
திருப்பூர்:
திருப்பூரில், ஒன்பது வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் முயற்சியில் ஈடுபட்ட கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூரை சேர்ந்த, ஒன்பது வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியின் உறவினர் திருமணம் நடக்கிறது. இதற்காக கார் ஒன்றை வாடகைக்கு எடுத்தனர். ராக்கியாபாளையத்தை சேர்ந்த மணிகண்டன், 36 என்பவர் கார் ஓட்டி வந்தார்.
அப்போது அவர் வீட்டில் இருந்த, ஒன்பது வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி நடந்த விபரத்தை பெற்றோரிடம் கூறினார்.அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்