search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223729"

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • 2 விதவைகளுக்கு தலா 3 ஆடுகள் வீதம் வழங்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் திருவட்டார் தெற்கு ஒன்றியம் ஆற்றூர் பேரூ ராட்சிக்குட்பட்ட ஆற்றூர் புளியமூடு முதல் ஞாறாகுளம் பள்ளிக்குழி விளை வரை செல்லும் சாலை மிகவும் மோச மடைந்து காணப் பட்டது.

    அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தமிழக பால்வளத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.89.5 லட்சம் மதிப் பீட்டில் தார் சாலை அமைக்க நிதி பரிந்துரைக்க ப்பட்டது.

    இந்த சாலை பணியை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். ஆற்றூர் பேரூர் செயலாளர் சோழராஜன் தலைமை தாங்கினார். ஆற்றூர் பேரூராட்சி தலைவர் பீனா அமிர்தராஜ், துணை தலைவர் தலைவர் தங்க வேல், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பலீலா ஆல்பன், முன்னாள் ஏற்றக்கோடு ஊராட்சி மன்ற தலைவர் றூஸ், திருவட்டார் ஒன்றிய மீனவரணி துணை அமைப்பாளர் ஆன்றனி, வார்டு கவுன்சிலர்கள் ஜேம்ஸ், பாபுராஜ், கவி, ராஜகுமாரி மற்றும் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து 2 விதவைகளுக்கு தலா 3 ஆடுகள் வீதம் வழங்கப்பட்டது. ஏழை மாணவனுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு கல்வி உதவி தொகையும் வழங்கப்பட்டது.

    • சிவகிரி பேரூராட்சி சார்பில் ஒட்டு மொத்த தூய்மை பணியை முன்னிட்டு வாறுகால்கள் சுத்தம் செய்தல் பணி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    சிவகிரி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அறிவுரையின் படி, சிவகிரி பேரூராட்சி சார்பில் ஒட்டு மொத்த தூய்மை பணியை முன்னிட்டு வாறுகால்கள் சுத்தம் செய்தல், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் பிரித்தல், சுவர்களில் போஸ்டர்களை கிழிக்கும் பணிகள், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, துணைத்தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், வார்டு கவுன்சிலர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் குமார், இசக்கி, தினேஷ் குமார் ஆகியோர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர். இதில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் அலுவலகர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் 1 மற்றும் 2 வார்டுகளில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • இந்நிலையில் பணி நடைபெற்று வருவதை செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் 1 மற்றும் 2 வார்டுகளில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பணி நடைபெற்று வருவதை செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க பணியாளர்களுக்கு அறிவுறு த்தினர். ஆய்வின்போது பேரூராட்சி துணைத் தலைவர் ராஜலக்ஷ்மி செயல்மணி மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கல் குவாரியை தடை செய்ய வலியுறுத்தி நடத்தினர்
    • நள்ளிரவு 1 மணி வரை இந்த போராட்டம் நடந்ததால் பதட்டம் ஏற்பட்டது.

    கன்னியாகுமரி :

    கப்பியறை பேரூ ராட்சிக்குட்பட்ட ஓலவிளை பகுதியில் அரசு அனுமதியுடன் ஒரு கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதனை சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கல்குவாரி செயல்படுவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் கூறி வருகின்றனர். மேலும் குவாரியை தடைசெய்யவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதனை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், பிரின்ஸ் எம்.எல்.ஏ. முன்னிலையில் மறியல் போராட்டம் உட்பட பல போராட்டங்களும் நடைபெற்றன. மேலும் கப்பியறை பேரூராட்சி மன்றத்திலும் குவாரியை தடை செய்ய கேட்டு தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ளனர்.

    இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கப்பியறை பேரூராட்சி தலைவர் அனிஷா கிளாடிஸ் தலைமையில் கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு 1 மணி வரை இந்த போராட்டம் நடந்ததால் பதட்டம் ஏற்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் செயல் அலுவலர் ராஜேந்திரன், கருங்கல் போலீஸ சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.
    • 20 பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் 299 பேர் என மொத்தம் 486 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

    இதற்கான ஊரகப்பகுதி மற்றும் நகர்ப்புறப் பகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னி லையில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.

    பின்னர் அவர் தெரிவித்தாவது:மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 28 பேர், தஞ்சாவூர் மாமன்ற வார்டு உறுப்பினர்கள் 51 பேர், கும்பகோணம் மாமன்ற வார்டு உறுப்பினர்கள் 48 பேர், பட்டுக்கோட்டை நகர் மன்ற வார்டு உறுப்பினர்கள் 33 பேர், அதிராம்பட்டினம் நகர்மன்ற வார்டு உறுப்பினர்கள் 27 பேர், 20 பேரூராட்சிகளின் வார்டு உறுப்பினர்கள் 299 பேர் என மொத்தம் 486 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

    மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கான வரைவு வாக்காளார் பட்டியல் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளான தஞ்சாவூர், கும்பகோணம் மாநகராட்சி அலுவலகங்கள், தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி அலுவலகம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகங்கள், உதவி இயக்குநர் (பேரூரா ட்சிகள்) அலுவலகம், 20 பேரூராட்சி அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.இக்கூட்டத்தில் வட்டாட்சியர் (தேர்தல்) ராமலிங்கம், தி.மு.க ஒன்றியச் செயலர் முரசொலி, அ.தி.மு.க ஒன்றியச் செயலர் முத்துமாறன், காங்கிரஸ் மாவட்டப் பொதுச் செயலர் மோகன்ராஜ், பா.ஜ.க காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சாயல்குடி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • புதிய பைப் லைன்கள் அமைத்து தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் மாரியப்பன் தலைமையில் நடந்தது. துணை சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், செயல் அலுவலர் சேகர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் முத்து ராமலிங்கம் வரவேற்றார்.

    கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

    துணை சேர்மன்: சாயல்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகில் உள்ள இடத்தை சுத்தம் செய்து அந்த பகுதியில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் காமராஜ்: 14-வது வார்டில் உள்ள குடிநீர் பைப் லைன்கள் 40 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டவை. அவை சேதமடைந்துஅந்த பகுதியில் பொதுமக்கள் குடிநீர் பெற முடியாமல் உள்ளனர். புதிய பைப் லைன்கள் அமைத்து தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்.

    சாயல்குடி வி.வி.ஆர். நகர், நொண்டி பெருமாள் ஊரணி பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்க பலமுறை வலியுறுத்தியும் பூங்கா அமைக்கவில்லை. விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் அழகர் வேல் பாண்டியன்: சாயல்குடி பொது மயானத்தை மின்சார மயானமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் மாணிக்கவேல்: 15-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பேவர் பிளாக் மற்றும் தார் சாலை அமைக்க வேண்டும்.

    கவுன்சிலர் குமரையா: சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இருந்து அண்ணாநகர் வழியாக இரு வேலி பகுதிக்கு தார்சாலை அமைக்க வேண்டும்.

    கவுன்சிலர்ச ண்முகத்தாய் சுப்பிரமணியன்: சாயல்குடி சிவன் கோவில் ஊரணியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாயல்குடி பெரிய கண்மாயில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக குளியல் தொட்டி அமைக்க வேண்டும்..

    கவுன்சிலர் ஆபிதா அனிபா: அண்ணா, இருவேலி பகுதியில் இருந்து பெரிய கண்மாய் கரை முதல் கூரான் கோட்டை விலக்கு ரோடு வரை கண்மாய் கரையில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும்.

    கவுன்சிலர் இந்திரா செல்லத்துரை: எனது வார்டில் இதுவரை எந்த பணிகளும் செய்து தரவில்லை எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பேவர் பிளாக் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதேபோல் மாணிக்க வள்ளி பால்பாண்டியன், இந்திராணி பானுமதி, அமுதா உள்ளிட்ட கவுன்சிலர்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களாக அளித்தனர். இந்த கோரிக்கைகள் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிதி பெற்று பணிகள் நடைபெறும் என சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தெரிவித்தார்.

    • முதுகுளத்தூர் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • தரமான பைப்புகளை வாங்கி குடிநீர் குழாய்களை பதிக்க வேண்டும்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் சேர்மன் ஷாஜகான் தலைமையில், உதவி சேர்மன் வயணப்பெருமாள் முன்னிலையில் நடந்தது. செயல் அலுவலர் மாலதி வரவேற்றார். மொத்தம் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மோகன்தாஸ்

    (7-வது வார்டு தி.மு.க.): 2023-24 சொத்துவரி செலுத்துபவர்களுக்கு அெஜண்டாவில் உள்ளபடி ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுமா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சேர்மன், சொத்துவரி 2023-24-க்கு முழுமையாக கட்டினால் 5 சதவீத ஊக்கத்தொகை கழித்தே பெற்றுக்கொள்ளப்படும் என்றார். சேகர் (தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்): முதுகுளத்தூரில் மட்டுமே டெண்டரில் குறைத்து போடப்படுகிறது. சமரசம் பேச வேண்டும் என்றார். சேர்மன்: எல்லா இடத்திலும் அப்படித்தான் நடக்கிறது. காண்ட்ராக்டர்கள் ஒத்துழைத்தால் போகலாம். கவுன்சிலர் மோகன்தாஸ்: தரமான பைப்புகளை வாங்கி குடிநீர் குழாய்களை பதிக்க வேண்டும். சேர்மன்: அரசு விதிமுறைப்படிதான் வாங்க முடியும். இவ்வாறு விவாதம் நடந்தது.

    • செஞ்சி பேரூராட்சியில் 7 இடங்களில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி பேரூராட்சியில் பேரூராட்சி அலுவலகம், காந்தி கடை வீதி, பஸ் நிலையம், விழுப்புரம் சாலை, திருவண்ணாமலை சாலை, திண்டிவனம் சாலை ஆகிய 7 இடங்களில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தந்த பகுதி வார்டு கவுன்சிலர்கள் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயக்குமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர்.

    இதில் மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் அஞ்சலை, சங்கீதா, சுமித்ரா, லட்சுமி, சீனிவாசன், மோகன், பொன்னம்பலம், புவனேஸ்வரி, நூர்ஜகான், மகாலட்சுமி மற்றும் நிர்வாகிகள் தண்டபாணி, தனசேகர், பாஷா, அறிவு, ராம்ராஜ், ராம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 1- வது வார்டு பகுதியில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
    • நான்கு வழி சாலை பணி நடைபெற்று வரும் பகுதிகளில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் பேரூராட்சி யில் மொத்த முள்ள 15 வார்டுகளில் 1,2,9,10,11,12 மற்றும் 14 ஆகிய வார்டுகளில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் இந்த வார்டுகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 1- வது வார்டு பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து விட்டதால் அங்குள்ள மக்கள் அன்றாடம் பயன் படுத்தும் தண்ணீரையும் விலை கொடுத்தே வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நெல்லை - தென்காசி நான்கு வழி சாலை பணி நடைபெற்று வரும் பகுதிகளில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் உடைப்பு சரி செய்யப்படாததால் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் சாலையில் பாய்ந்து வீணாகிறது.

    இது குறித்து பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்திற்கு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடுமையான கோடையில் ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் தட்டுப்பட்டால் தவித்து நிற்கும் வேளையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் சாலையில் பாயும் தண்ணீரைக் கண்டு பொதுமக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். பேரூராட்சியின் 1 மற்றும் 2-வது வார்டுகளில் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து குடிநீரை விலைக்கு வாங்கி பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்து வரும் சூழல் காணப்படுகிறது.

    அதிகாரிகள், வீணாகச் செல்லும் தண்ணீரை தடுத்து நிறுத்தினாலே பொது மக்களுக்கு தாராளமாக குடிநீர் கிடைக்கும் என்பது ஆலங்குளம் பேரூராட்சி மக்களின் எண்ணமாக உள்ளது.

    • சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • 15 அம்ச கோரிக் கைகளை நிறைவேற்ற கோரி கோஷம் எழுப்பினர். இதில், தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க பணி யாளர்கள் 70 பேர் பங்கேற்றனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில செயற்குழு உறுப்பினர் அறிவழகன் தலைமை வகித்தார். இந்திய தொழிற்சங்க மையம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாணிக்கம் முன்னிலை வகித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் திட்ட பராமரிப்பு, துாய்மைப்பணி தனியார் வசம் ஒப்படைப்பு அரசாணை எண்.139-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக் கைகளை நிறைவேற்ற கோரி கோஷம் எழுப்பினர். இதில், தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க பணி யாளர்கள் 70 பேர் பங்கேற்றனர்.

    • நடுவக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.
    • பேரூராட்சி மன்றத் தலைவி பாக்கியலட்சுமி அறவாழி உள்ளிட்ட பலர் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சியில் உள்ள நடுவக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு செபத்தையாபுரம் லயன்ஸ் சங்கம் சார்பில் புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்க மாவட்ட ஆளுநர் விஸ்வநாதன் தலைமை தாங்கி திறந்து வைத்தார். லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவர் ஆலயமணி, சங்கத் தலைவர் ஜெயராஜ் சாயர்புரம் பேரூராட்சி மன்றத் தலைவி பாக்கியலட்சுமி அறவாழி, சாயர்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரபா, கூட்டுறவு பண்டக சாலை தலைவர் எஸ்.வி.பி.எஸ். பண்டாரம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் த.அறவாழி, நகர தி.மு.க. செயலாளர் நா.கண்ணன், பேரூராட்சி துணை தலைவர் பிரியா மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சாயர்புரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜெப தங்கம் பிரேமா ஜெயக்குமார், எஸ்.வி.பி.எஸ். ஜெயக்குமார், முத்துராஜ்,இந்திரா, சுமதி, அமுதா, ப்ளாட்டினா மேரி, மற்றும் சாயர்புரம் வியாபாரிகள் சங்கத் தலைவர் நாகராஜன், பேரூராட்சி மேற்பார்வையாளர் நித்திய கல்யாண் பேரூராட்சி ஊழியர்கள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை லயன்ஸ் சங்க செயலர் சாலொமோன் பொன்ராஜ், செபத்தையாபுரம் ஊர் நலக் கமிட்டி தலைவர் அமிர்தராஜ் மற்றும் எஸ்.வி.பி.எஸ். ஜெயக்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • சோழவந்தான் பேரூராட்சியில் திட்டப் பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.
    • அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

    மூலதன மானியத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் நவீன எரிவாயு தகனமேடை, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் கட்டப்படும் கழிவுநீர் வடிகால் கட்டுமான பணிகள், வளமைப்பு பூங்காவில் நடைபெறும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்தனர்.

    பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, கூடுதல் இயக்குநர் மலையமான் திருமுடிகாரி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சேதுராமன், பேரூராட்சி செயல் அலுவலர், சகாய அந்தோனியூசின், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    ×