என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 228242"
- 78-வது ஆண்டு சித்திரைத் திருவிழாவையொட்டி முத்துப்பல்லக்கு ஊா்வலம் நடைபெற்றது.
- விழாவுக்கான ஏற்பாடுகளை கேரள சேவா சங்கத்தினா் சிறப்பாக செய்திருந்தனா்.
குன்னூர்,
குன்னூரில் தந்தி மாரியம்மன் கோயில் 78-வது ஆண்டு சித்திரைத் திருவிழாவையொட்டி முத்துப்பல்லக்கு ஊா்வலம் நடைபெற்றது.
குன்னூா் தந்தி மாரியம்மன் கோயில் சித்திரை தோ்த்திருவிழாவை ஒட்டி முத்துப்பல்லக்கு ஊா்வலம் நடைபெற்றது. குன்னூா் வி.பி. தெரு சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து பஞ்ச வாத்தியம், சிங்காரி மேளம் முழங்க, பூ காவடி, பால் காவடி, தேவி ரக்ஷா மற்றும் முத்துக் காளைகளுடன் அபிஷேக பொருள்கள் ஊா்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு மாரியம்மனுக்கு சிறப்புஅபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
மாலையில் அம்மன் திருவீதி உலா நடந்தது. இதில் ஏராளமானோா் அம்மனை வழிபட்டனா். முத்துபல்லக்கு ஊர்வலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மிகவும் கவர்ந்தது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கேரள சேவா சங்கத்தினா் சிறப்பாக செய்திருந்தனா்.
- நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடபட்டு வருகிறது.
- நூர்முகமது ஷா அவுலியா தர்காவிலிருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக வந்தனர்.
கடலூர்:
நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடபட்டு வருகிறது. பண்ருட்டியில் ரம்ஜானை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். பண்ருட்டி கடலூர் ரோட்டிலுள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை இன்று காலை நடந்தது.இதனைமுன்னிட்டு பண்ருட்டி காந்திரோடு நூர்முகமது ஷா அவுலியா தர்காவிலிருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் சென்னை ஜேப்பியார் ஸ்டீல்ஸ் அதிபர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட ஏராளமானமுஸ்லிம்கள் திரளாக கலந்துகொண்டுவழிபாடு செய்தனர். பெரிய பள்ளிவாசல் இமாம் இஸ்மாயில் தொழுகை நடத்தினர் தொழுகை முடிந்து திரும்பிய முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டிதழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். ஏழை, எளியோருக்கு உதவி பொருள்களை வழங்கி உதவினர். ஈத்கா கமிட்டி தலைவர் அனீஸ் மற்றும் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
இதேபோல், திண்டிவனம் நகரில் உள்ள அனைத்து மசூதிகளிலிருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்று செஞ்சி ரோட்டில் உள்ள ஈக்தா மைதானத்தில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் 3000-த்திற்க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.தொழுகையை நியாஸ் அஹமத் தொழ வைத்தார். தொழுகை முடிந்ததும் உலக நன்மை வேண்டியும் மழை பொழிய வேண்டும் என்று ( துஆ) பிரார்த்தனை செய்தனர். அதன் பிறகு ஒருவருக்கு ஒருவர் கட்டி அணைத்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர்.திண்டிவனம் டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- சிவகங்பிகை அருகே பிரான்மலையில் பால்குட ஊர்வலம் நடந்தது.
- விழா ஏற்பாடுகளை பரம்பரை ஸ்தானிகம் உமாபதி சிவாச்சாரியார் செய்திருந்தார்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பிரான்மலை வடுக பைரவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் ஜெயந்தன் பூஜை நடத்தப்படுகிறது. இதையொட்டி பி.மதகுபட்டி ராமர் கோவிலில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் மலைக்கோவிலை நோக்கி புறப்பட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம் மலைக்கோவிலை வந்தடைந்தது. அங்கு வடுக பைரவருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திக்கு திருமஞ்சனம், பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், விபூதி உள்ளிட்ட வாசனாதி திரவியங்கள் மூலம் அபிஷேகங்கள் நடந்தன. விழா ஏற்பாடுகளை பரம்பரை ஸ்தானிகம் உமாபதி சிவாச்சாரியார் செய்திருந்தார்.
மேலும் மண்ணால் செய்யப்பட்ட நாய், பன்றி பதுமைகளை பக்தர்கள் தோளில் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் குளக்கரையில் இருந்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
- குண்டத்தில் இறங்கி தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி கிராமத்தில் உள்ள மழை முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.
தொடர்ந்து, மேளதாளங்கள் முழங்க காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் குளக்கரையில் இருந்து ஊர்வலமாக சக்தி கரகம் முன்னால் செல்ல கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர், அங்கு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இன்னும் சில பக்தர்கள் குழந்தைகளுடன் குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். தொடர்ந்து, சிறுவர்- சிறுமிகளின் கோலாட்டம் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
- போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தினர்.
- கூட்டத்திற்கு சிங்கம்புணரி கிராம அம்பலம் சத்தியசீலன் தலைமை தாங்கினார்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற்றது. சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி ஆலயத்தில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. காரைக்குடி ரோடு, கூத்தாடி அம்மன் கோவில் தெரு, நியூ காலனி, கீழகாட்டுரோடு, கீழத்தெரு, செட்டியார் குளம் வடகரை, சந்திவீரன் கூடம், கம்பலிங்கம் தெரு வழியாக அரசு மருத்துவ மனை ரோடு, சுந்தரம் நகர், திண்டுக்கல் ரோடு பஸ் நிலையம் வழியாக பெரிய கடை வீதி வந்து சீரணி அரங்கத்தை சென்றடைந் தது.
இந்த ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிந்து மிடுக்காக வந்தனர். சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் 7 துணை சூப்பிரண்டுகள், 12 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 450- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்திற்கு சிங்கம்புணரி கிராம அம்பலம் சத்தியசீலன் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் சேவா சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜ முருகானந்தம் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் ராமேசுவரம் மண்டல தலைவர் மங்க ளேஸ்வரன், கோட்டச் செய லாளர் பாலசுப்பிரமணியன், மாவட்டத் துணைத் தலை வர் குகன், ஜில்லா பொறுப் பாளர் தினேஷ் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆர்.எஸ்.எஸ். மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பா ளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
- அணிவகுப்பு ஊர்வலம் முடிவில் இந்து கல்லூரி மைதானத்தில் பொதுக் கூட்டம் நடந்தது
நாகர்கோவில் :
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி தமிழகம் முழுவதும் அணிவகுப்பு நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு போலீஸ் அனுமதி கோரி இருந்தது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து கோர்ட்டில் முறையிட்டதை தொடர்ந்து, நவம்பர் 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவு அடிப் படையில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வ லத்துக்கு அனுமதி வழங்க வும் சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டது.
அதன் அடிப்படையில் நேற்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த போலீஸ் அனுமதி வழங்கியது. அதன்படி நேற்று குமரி மாவட்டத்தில் 2 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.
குமரி கிழக்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. பேரணி நாகர் கோவில் நாகராஜாகோவில் திடலில் தொடங்கியது. இதையொட்டி அங்கு காவிக்கொடி ஏற்றப்பட்டு, பிரார்த்தனை பாடல் பாடப்பட்டது. பின்னர் காவிக்கொடிக்கு பெண்கள் கர்ப்பூர ஆராத்தி எடுத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து நாகராஜா கோவில் திடலில் இருந்து பேரணி தொடங்கியது. பேரணியானது மணிமேடை, வேப்பமூடு சந்திப்பு, செட்டிக்குளம் வழியாக இந்து கல்லூரி மைதானத்தில் நிறைவு பெற்றது. வழியில் பொதுமக்கள் மலர் தூவி பேரணியை வரவேற்றனர்.
முன்னதாக பேரணியில் வீரசிவாஜி படம் வைக்கப்பட்ட வாகனமும் அணிவகுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் சிறிது நேரம் அங்கு வாக்கு வாதம் நடந்தது. பின்னர் வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு நிர்வாகிகள் ஊர்வலமாக சென்றனர்.
அணிவகுப்பு ஊர்வலம் முடிவில் இந்து கல்லூரி மைதானத்தில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் யோகாசனம் உள்ளிட்ட பயிற்சிகள் செய்து காண் பிக்கப்பட்டன. கூட்டத்துக்கு குமரி மாவட்ட இந்து ஆதி திராவிடர் அறக்கட்டளை தலைவர் வேலு தாஸ் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ். கிழக்கு மாவட்ட செயலாளர் பிரதீஷ் வரவேற்று பேசினார். கிழக்கு மாவட்ட தலைவர் ரகுபதி ராஜாராம், மாநில செயலாளர் பவீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகர்கோவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட தலைவர் சக்தி சின்னதம்பி ஆசியுரை வழங்கினார். மாநில துணை பொருளாளர் ரமேஷ் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்த அணிவகுப்பு ஊர்வலம் நடத்த 6 மாதமாக சட்ட ரீதியான போராட்டம் நடைபெற்றது. நாம் நாட்டின் சட்டத்திட்டங்களை பின்பற்றி, நீதியின் மூலம் வெற்றி கண்டுள்ளோம்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பாகிஸ்தான் போரிலும், சீனா போரிலும் ராணு வத்துக்கு உதவிசெய்தது. அதைபார்த்து பிரதமர் ஜவகர்லால் நேரு 1963-ம் ஆண்டு டெல்லி குடியரசு தின விழாவில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி கொடுத்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ். பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதுபோல் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் அருமனையில் நேற்று மாலையில் நடந்தது. இந்த அணிவகுப்பு ஊர்வலம் அருமனை அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இருந்து தொடங்கி அருமனை சந்திப்பு, மேலத்தெரு வழியாக குஞ்சாலுவிளை வி.டி.எம். கல்லூரி வளா கத்தில் நிறைவ டைந்தது.
இதில் 1300-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பங்கேற்ற னர். தொடர்ந்து கல்லூரி மைதானத்தில் பொதுக் கூட்டம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். லட்சுமிபுரம் கல்லூரி பேராசிரியர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தென் மண்டல கொள்கை பரப்பு இணை செயலாளர் அய்யப்பன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 1925-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 98 ஆண்டுகளாக தனது பணியை சீராக செய்து வருகிறது. உலக நாடுகள் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பணி தொடர்ந்து நடைபெறுகிறது' என்றார்.
பேரணியை முன்னிட்டு மாவட்ட போலீசார் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன், குளச்சல் துணை சூப்பிரண்டு தங்கராமன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டிருந்தனர்.
- கந்தர்வகோட்டையில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது
- தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதி வழியாக சென்று வெள்ளை முனியன் கோவில் திடலில் நிறைவடைந்தது.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதி வழியாக சென்று வெள்ளை முனியன் கோவில் திடலில் நிறைவடைந்தது. தொடர்ந்து கோவில் திடலில் சங்க மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் சங்கத்தின் தோற்றம், நோக்கம், வளர்ச்சி, சங்க உறுப்பினர்களின் கடமைகள், எதிர்காலத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ( பொறுப்பு) சியாமளா தேவி அறிவுறுத்தலின்படி, டி.எஸ்.பி. ராகவி மேற்பார்வையில், கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் செந்தில் மாறன் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர்.
- குப்பைகள் இல்லா தூய்மையான ஊராட்சியாகவும், மேலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை போன்றவற்றை தனித்தனியாக வீட்டிலேயே பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்கவும்,
- பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன், தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது.
சேலம்:
சேலம், ஏற்காடு அடிவாரத்திலிருந்து ஏற்காடு செல்லும் பகுதியில் உள்ளது கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி.
இந்த ஊராட்சியை குப்பைகள் இல்லா தூய்மையான ஊராட்சியாகவும், மேலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை போன்றவற்றை தனித்தனியாக வீட்டிலேயே பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்கவும், வீதிகளிலும், பொது இடங்களிலும் குப்பை என்பதே இல்லாத நிலையை உருவாக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன், தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அருள் எம்.எல்.ஏ கலந்துகொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் அஸ்தம்பட்டி மண்டலக்குழு தலைவர் உமாராணி, கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் வீரபாண்டி டாக்டர் ஆ.பிரபு, கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன், தாளாளர் மீனா சேது, ஒன்றிய கவுன்சிலர் ராஜா, ஒன்றிய செயலாளர் ராஜா, ஆறுமுகம், ஜி.கே.மணி, செட்டிசாவடி கோவிந்தராஜ், பூவரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
- விரதம் இருந்த பக்தர்கள் அதிராம்பட்டினம் பஸ் நிலையம் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர்.
- அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை யொட்டி நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது.
முன்னதாக மண்ணப்பன் குளக்கரையில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் அதிராம்பட்டினம் பஸ் நிலையம் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர், கோவில் அருகே அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
விழா ஏற்பாடுகளை கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- பால்குடம் எடுத்து மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகளில் வழியாக ஊர்வலமாக வந்தனர்.
- அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த அகரகடம்பனூர் கிராமத்தில் உள்ள கண்ணா கூத்த அய்யனார் பத்திரகாளி அம்மன் கோவிலில் பங்குனி உற்சவ திருவிழா கடந்த 8-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தொடர்ந்து, கணபதி ஹோமம், அம்மன் வீதிஉலா மற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம் மற்றும் காவடி வீதிஉலா சிறப்பாக நடைபெற்றது.
விரதமிருந்த பக்தர்கள் அகரகடம்பனூர் பெரியகுளத்தில் இருந்து அலகு காவடி, மயில் இறகு காவடி, ரத காவடி மற்றும் பால்குடம் எடுத்து மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகளில் வழியாக ஊர்வலமாக வந்தனர்.
பின்னர், பக்தர்கள் எடுத்து வந்த பாலினால் அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
- சிவகங்கை நகர் மன்ற தலைவர் தலைமையில் மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
- துரை ஆனந்த் உறுதிமொழியேற்று தொடங்கி வைத்தார்.
சிவகங்கை
சிவகங்கை நகராட்சி நிர்வாகம் சார்பில் நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
சிவகங்கையில் மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அரண்மனை வாசல் முன்பு நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் உறுதிமொழியேற்று தொடங்கி வைத்தார்.
நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாண்டீசுவரி, துப்புரவு ஆய்வாளர் கண்ணாயிரமூர்த்தி, கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், அயூப்கான், விஜயகுமார், வீனஸ்ராமநாதன்.கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- திருமங்கலம் அருகே சங்கிலி கருப்ப சுவாமி - பராசக்தி காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா நடந்தது.
- விழாவில் பால்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வில்லூர் கிராமத்தில் சங்கிலி கருப்பசாமி - பராசக்தி காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா விமரிசை யாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
மதுரை, விருதுநகர் மற்றும் வில்லூர் சுற்று வட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அழகு செட்டியார் ஊரணியில் இருந்து பராசக்தி அம்மன் கோவில் வரை பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.
மேலும் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியும், காவடி, பறவைக் காவடி எடுத்து வந்தும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். சங்கிலி கருப்ப சுவாமிக்கு பாப்பா ஊரணியிலிருந்து கரகம், சந்தனகுடம் எடுத்து ஊர்வலமாக வந்து சங்கிலி கருப்பு சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
இதைத் தொடர்ந்து பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். பாப்பா ஊரணியிலிருந்து சப்பரம் ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்