என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அறிவிப்பு"
- பெரம்பலூர் அஞ்சலகங்களில் வங்கி கணக்கு தொடங்க மகளிருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
- தபால்காரர் மூலமாக தொடங்கி மகளிர் உரிமை தொகையை பெறலாம் என்று அறிவிப்பு
பெரம்பலூர்,
ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொகை பெற தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு அவசியமாகும். இந்த திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டங்களில் தகுதியானவர்கள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், கிராம அஞ்சல் ஊழியர்கள் மற்றும் தபால்காரர்களை அணுகி இந்திய அஞ்சல் பட்டுவாடா வங்கியில் இ-கே.ஒய்.சி. என்ற முறையில் கணக்கு தொடங்கி உரிமை தொகையை பெற்று கொள்ளலாம்.
மேலும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், முதியோர் உதவித்தொகை மற்றும் பிரதம மந்திரி விவசாயி நிதி உதவித்தொகை பெறும் பயனாளிகளும் இது போன்ற கணக்கு தொடங்கி பயன் பெறலாம். பொதுமக்கள் இந்திய அஞ்சல் பட்டுவாடா வங்கியின் மூலம் மட்டுமே வழங்கப்படும் ரூ.10 லட்சத்திற்கான சிறப்பு விபத்து காப்பீடு திட்டத்தில் ஆண்டிற்கு ரூ.396, ரூ.399 செலுத்தி இணையலாம். இந்த காப்பீடு திட்டத்தில் இணைய இந்திய அஞ்சல் துறை பட்டுவாடா வங்கியின் சேமிப்பு கணக்கு அவசியம். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பான திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
- டாஸ்டாக் கடைகளை அகற்ற கோரி பஞ்சாயத்து தோறும் போராட்டம் நடத்தப்படும் என்று புதுக்கோட்டை பாஜக அறிவித்துள்ளது
- புதுக்கோட்டை பா.ஜ.க அலுவலகத்தில் மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் நிருபர்களுக்கு பேட்டி
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் விஜயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, 9 ஆண்டுகளில் பாஜக மக்களுக்கு செய்துள்ள நல்ல திட்டங்களை மக்களுக்கு புரிய வைக்கிற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் வருகிற 23ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பஞ்சாயத்து, பிரச்சினைகளை முன்வைத்து புதுக்கோட்டையிலும் அனைத்து பஞ்சாயத்துகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும் மத்திய அரசு திட்டங்களை திமுக அரசு இரட்டடிப்பு செய்து வருகிறது. இதை பலமுறை தெரிவித்தும்அவற்றை நிறுத்தவில்லை. திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறிய எதையும் நிறைவேற்றவில்லை. மேலும் குடும்ப பெண்களுக்கு உரிமை தொமை ரூ.1000 தரப்படும் என அறிவித்துவிட்டு தற்போது அதை நிறைவேற்ற பல்வேறு கண்டிசன்கள் போடப்பட்டு வருகிறது. பஞ்சாயத்து வாரியாக டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. எனவே பஞ்சாயத்துகளில் டாஸ்மாக் கடைகளை அகற்ற முக்கியமாக போராட்டம் நடத்தப்படும்.2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 25 இடங்களில் வெற்றி பெறும் என்றிருந்தோம். ஆனால் தற்போதைய நிலையில் 39 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. மீண்டும் மோடி 3வது முறையாக பிரதமராக வருவார்.பாஜக நிர்வாகிகள் மீது திமுக அரசு மற்றும் காவல்துறை பொய் வழக்குகளை போட்டு வருகிறது. பிரதமர் அனைவருக்கும் 15 லட்சம் தருகிறேன் என்பதற்கு ஆதாரம் உள்ளதாக உதயநிதிஸ்டாலின் கூறிவருகிறார். அவர் நீட் ரகசியம் தெரியும்என்றார் அதை தெரிவித்தாரா? என்று கூறினார். பேட்டியின் போது பழ.செல்வம்குருஸ்ரீராம், கார்த்திகேயன், கோவேந்திரன், சுதாகர் மற்றும் பலர் உடன் இருந்தனர் .
- 10,178 குரூப்-4 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டது.
- இதற்கான போட்டி தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ந்தேதி நடத்தப்பட்டது.
சேலம்:
தமிழ்நாடு அரசு துறை களில் காலியாக உள்ள 10,178 குரூப்-4 பணியி டங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டது. இதற்கான போட்டி தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24-ந்தேதி நடத்தப்பட்டது.
சேலம், நாமக்கல்
இந்த தேர்வை சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ் ணகிரி மாவட்டங்களை சேர்ந்த பலர் எழுதினர். குறிப்பாக தமிழ்நாடு முழுவ தும் பல லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். இதையடுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்த குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்யுமாறு டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.
தற்போது, சான்றிதழ் பதிவேற்றம் செய்தவர்க ளுக்கு தரவரிசை அடிப்ப டையில் பணி நியமன கவுன்சிலிங் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது.
20-ந்தேதி தொடங்குகிறது
கவுன்சிலிங்குக்கு தேர்வு செய்யப்பட்ட 8,500 பேரின் பதிவெண் பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணை யதளத்தில் வெளியிடப்பட் டுள்ளது. கவுன்சிலிங் வரு கிற 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- திருச்சியில் 4ம் தேதி 28 இடங்களில் மின் விநியோகம் இருக்காது
- செயற்பொறியாளர் முத்துராமன் அறிவிப்பு
திருச்சி,
திருச்சி மன்னார்புரம் மின்சாரத்துறை செயற்பொறியாளர் கா.முத்துராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருச்சி கிழக்கு கோட்டம், திருவெறும்பூர், அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் 4ம் தேதி(செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், அன்று காலை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை, அரியமங்கலம், எஸ்ஐடி, அம்பிகாபுரம், ரயில் நகர், நேருஜிநகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், ராணுவ காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சக்தி நகர், ராஜப்பா நகர், எம்ஜிஆர் நகர், சங்கிலியாண்டிபுரம், பாலாஜி நகர், மேலகல்கண்டார் கோட்டை, கீழகல்கண்டார்கோட்டை, வெங்கடேஸ்வரா நகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னை நகர், அரியமங்கலம் இண்டஸ்ரியல் சிட்கோ காலனி, காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- வருகிற 29-ந் தேதி முதல் வாரச்சந்தை செயல்படும்.
- ஊராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.இங்கு அரசு மருத்துவமனை, வங்கிகள், காவல் நிலையம், யூனியன் அலுவலகம், தொடக்க கல்வி அலுவலகம், வேளாண்மை அலுவலகம் மற்றும் பள்ளிக்கூடம் என பல்வேறு முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
நாள்தோறும் பல்வேறு கிராமங்களில் இருந்து நரிக்குடி பகுதிக்கு ஆயிரக் கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் தற்போது வரை வீரசோழனில் தான் வாரச் சந்தை செயல்பட்டு வருகிறது. இதனால் அங்கு செல்வதற்கு நரிக்குடிக்கு வந்து தான் பேருந்து மாறி செல்ல வேண்டி உள்ளது.
இந்த நிலையில் நரிக்குடி பகுதியிலும் வாரச்சந்தை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்திலும் வாரச்சந்தை அமைப்பது குறித்து 7-வது வார்டு கவுன்சிலர் சரளாதேவி போஸ் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தார்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென நரிக்குடி யூனியன் சேர்மன் தரப்பிலும், அதிகாரிகள் தரப்பிலும் தெரிவிக்கப் பட்டது. இந்த நிலையில் நரிக்குடி மருதுபாண்டியர் சத்திரம் மற்றும் அழகிய மீனாள் ்கோவில் அருகே வருகிற 29-ந் தேதி முதல் வாரந்தோறும் வியாழக் கிழமையன்று வார சந்தை செயல்படுமென நரிக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் முத்துமாரி காளீஸ்வரன் தெரிவித் துள்ளார்.
இந்த வாய்ப்பினை பொது மக்களும், வியா பாரிகளும், விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நரிக்குடி ஊராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
வாரச்சந்தை அமைக்க நடவடிக்கை எடுத்த ஊராட்சி மன்றத்தலைவர் முத்துமாரி காளீஸ்வ ரனுக்கும், வாரச்சந்தை அமைக்க வலியுறுத்தி வந்த கவுன்சிலர் சரளாதேவிக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
- சந்தனக்கூடு திருவிழாவில் குழந்தைகளுக்கு விலை உயர்ந்த ஆபரணங்களை அணிய வேண்டாம்.
- குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என ஊராட்சி தலைவர் தெரிவித்துள்ளார். .
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி கூறியதாவது:-
பெரியபட்டினத்தில் அடுத்த 10 நாட்களுக்கு சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். திருவிழா என்பதினால் பல்வேறு புதிய நபர்கள் ஊருக்குள் வரக்கூடும். எனவே நமது குழந்தைகளை நாம் பாதுகாத்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு விலை உயர்ந்த ஆபரணங்களை அணிய வேண்டாம்.
கூட்டம் அதிகமாக இருப்பதால் வாகனங்களை மெதுவாக ஓட்டிச் செல்ல வும். தங்கள் குழந்தைகளை தனியாக கேளிக்கை போன்ற விளையாட்டுக்கு தனியாக செல்ல அனுமதிக்க வேண்டாம். பெரியவர்கள் உடன் செல்லவும். எந்த விதமான தேவைகள் இருந்தாலும் பஞ்சாயத்து நிர்வாகத்தை அனுகவும். காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே ஒரு பெண் தலை நசுங்கி உயிரிழந்தார்.
- தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை சொந்த செலவில் அகற்றிக் கொள்ள வேண்டும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நகரத்தின் உள்ளே செல்லும் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 10 வருடங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டு அதில் பலர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுக்கும் விதமாக சாலையின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி 4 வழி சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே ஒரு பெண் தலை நசுங்கி உயிரிழந்தார்.
இந்நிலையில் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பை இன்று வெளியிட்டது. அதில் வருகின்ற 28-ந்தேதி சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன. அதனால் அதற்கு முன்பாகவே தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை சொந்த செலவில் அகற்றிக் கொள்ள வேண்டும். மேலும் 28-ந்தேதி ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு தேசிய நெடுஞ்சாலையோ, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் இதர துறைகள் பொறுப்பல்ல. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
- கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மது விற்பனைகளுக்கு எதிராகவும் சிறப்பு சோதனைகளை நடத்தி குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
- தகவல் கொடுக்கும் பொது மக்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
சென்னை:
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்கும் வகையில் போதைக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும் போலீசாரால் புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மது விற்பனைகளுக்கு எதிராகவும் சிறப்பு சோதனைகளை நடத்தி குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக கள்ளச் சாராயம், போலி மதுபானம், கஞ்சா மற்றும் மெத்தனால் உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள், கடத்தி வருபவர்கள் பதுக்கி வைப்பவர்கள் தொடர்பான புகாரை போலீசாரிடம் பொதுமக்கள் தெரிவிக்க செல்போன் எண்களை சென்னை போலீசார் வெளியிட்டு உள்ளனர்.
மதுவிலக்கு அமலாக்க பிரிவு வடக்கு மண்டலத்தில் பூக்கடை, வண்ணாரப்பேட்டை புளியந்தோப்பு காவல் மாவட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் 8072864204 என்ற செல்போன் எண்ணிலும், மேற்கு மண்டலத்தில் அண்ணா நகர், கொளத்தூர், கோயம்பேடு காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 9042380581 என்ற செல்போன் எண்ணிலும், தெற்கு மண்டலத்தில் அடையாறு, புனித தோமையர் மலை, தி.நகர் காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 9042475097 என்ற செல்போன் எண்ணிலும், கிழக்கு மண்டலத்தில் திருவல்லிக்கேணி, கீழ்பாக்கம், மயிலாப்பூர் காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 6382318480 என்ற செல்போன் எண்ணிலும் பொது மக்கள் தொடர்பு கொண்டு வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என சென்னை காவல் துறை தெரிவித்து உள்ளது.
தகவல் கொடுக்கும் பொது மக்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
- பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அங்கு இயக்கப்படும் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
- செங்கோட்டை-நெல்லை வழித் தடத்தில் இயக்கப்படும் ரெயில்களும் வழக்கமான நேரத்தை விட முன்னதாக இயக்கப்படுகிறது.
மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் மதுரை முதல் திருநெல்வேலி வரையிலான பணி நிறைவடைந்துள்ளது. மேலும், வாஞ்சி மணியாச்சி முதல் தூத்துக்குடி வரையும், திருநெல்வேலி முதல் நாகர் கோவில் வரையும் இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அங்கு இயக்கப்படும் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் இரட்டை ரெயில்பாதை பணி நிறைவு பெறவுள்ள நிலையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி செல்லும் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது கோவை-நாகர் கோவில் விரைவு ரெயில், சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி விரைவு ரெயில்கள் முன்பை விட முன்னதாக வந்து சேருகின்றன. இந்தப் பகுதியில் பணி நிறைவடையும் நிலையில் அனைத்து ரெயில்களும் முன்பை விட 10 முதல் 20 நிமிடங்கள் முன்னதாக வந்து சேரும்.
மேலும், செங்கோட்டை-நெல்லை வழித் தடத்தில் இயக்கப்படும் ரெயில்களும் வழக்கமான நேரத்தை விட முன்னதாக இயக்கப்படுகிறது. ரெயில்களின் வேக அதிகரிப்பு பற்றி விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படும்.
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
காங்கயம் :
காங்கயம் மின்சார வாரிய செயற்பொறியாளர் வெ.கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்குட்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் ஆகிய துணை மின் நிலைய பகுதியில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காங்கயம் துணை மின் நிலையத்திற்குப்பட்ட காங்கயம், திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்–மங்காளிபாளையம், அர்த்தநாரிப்பாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூர்.
சிவன்மலை துணை மின் நிலையத்திற்குப்பட்ட சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூர், மொட்டர்பாளையம், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயர்வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆர்.பாளையம், ஜி.வி.பாளையம், புதூர், நாமக்காரன்புதூர், ரோகார்டன், கோயம்பேடு, மரவபாளையம், பரஞ்சேர்வழி, ராசிபாளையம், சிவியார்பாளையம், வளையன்காட்டுதோடடம், ஜெ.ஜெ.நகர், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம். ஆலாம்பாடி துணை மின் நிலையத்திற்குப்பட்ட நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டுவலசு, வேலாயுதம்புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்திரெட்டிபாளையம் நெய்க்காரன்பாளையம், ஆலாம்பாடி, கல்லேரி.
முத்தூர் துணை மின் நிலையத்திற்குப்பட்ட முத்தூர்,வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தாராபுரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தாராபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை தாராபுரம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட தாராபுரம், வீராட்சி மங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், வண்ணாபட்டி, உப்பார் டேம், பஞ்சப்பட்டி, சின்னபுத்தூர், கோவிந்தாபுரம், செட்டிபாளையம் மற்றும் இதனை சார்ந்த பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பல்லடம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பல்லடம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், வெங்கிட்டாபுரம், பனப்பாளையம், மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், ராயர்பாளையம், அனுப்பட்டி, அம்மாபாளையம், கள்ளக்கிணறு ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 2022-2023-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையில் கல்வி உதவி தொகை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
- ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள் வங்கி கணக்கு தொடங்கி கொள்ளலாம்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -
2022-2023-ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையில் கல்வி உதவி தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவர்கள் அருகிலுள்ள அஞ்சலகம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம், மாணவர்களின் ஆதார் மற்றும் தொலைபேசி எண்ணை மட்டும் பயன்படுத்தி விரல்ரேகை மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கி கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.
- விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது
- விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று வழிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாவட்ட அளவிலான மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது. மாரத்தான் போட்டிகள் 3 பிரிவாக பிரித்து பள்ளி, பொதுப்பிரிவினர் மற்றும் மாணவ/மாணவிகள், ஆண்கள், பெண்கள் என 4 பிரிவுகளாக 5 கிலோ மீட்டர் தூரமும், திருநங்கைகள் ஒரு பிரிவாக 3 கிலோமீட்டர் ஓட்ட போட்டியும் நடத்தப்ப டவு ள்ளது. இப்போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.1000 மற்றும் 4 முதல் 10 வரை ரூ.500 வீதம் 5 பிரிவினர்களுக்கும் பரிசளிக்கப்படும். இப்போ ட்டியில் கலந்துகொண்டு போட்டி தூரத்தை நிறைவு செய்யும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். மாரத்தான் போட்டிகள் 01.05.2023 அன்று மாலை 3.30 மணியளவில் புதிய பஸ் நிலையம் அருகில் தளபதி திடல் வளாகத்திலிருந்து தொடங்கப்படும். போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயரினை எம்.ஜி.ஆர் உள்விளை யாட்டரங்கில் பதிவு மேற்கொள்ளலாம். இந்த மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டிகளில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ/மாணவி ய ர்கள், பொதுப்பிரிவினர்கள் மற்றும் திருநங்கைகள் பெரு மளவில் கலந்துகொண்டு பயன்பெறவேண்டியும் மற்றும் சுற்றுசூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்