search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் வசதி"

    • சோழவந்தான் அருகே குடிநீர் வசதி கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
    • கலெக்டர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள முதலைக்குளம் ஊராட்சியில் உட்பட்ட கீழப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் கடந்த 6 மாத காலமாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இந்தநிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடிபாண்டி நிதி ஒதுக்கப்பட்டு போர்வெல் போடப்பட்டது. இதன் மூலம் குடிநீர் சப்ளை செய்வதற்கு ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

    இந்த நிலையில்அந்த ஏற்பாட்டை ஒருசிலர் தடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கீழப்பட்டி கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் குடிநீருக்கு அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    கடந்தஒரு மாதத்திற்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் குடிநீர் கிடைப்பதற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் ஒரு மாதம் கடந்த பின்னரும் குடிநீர் கிடைக்க வழியில்லாமல் கீழப்பட்டி கிராம மக்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் தங்களுக்கு போர்வெல் மூலம் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதாவிடம் மனு கொடுத்துள்ளனர்.

    தனி நபர்களின் நலனை கருத்தில் கொண்டு கிராம மக்களுக்கு குடிநீர் கிடைப்பதை தடுத்து வருகின்றனர். இதுகுறித்து கலெக்டர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய சிறுகுடி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    • ஊராட்சி மன்ற தலைவர் சேதமடைந்த நியாயவிலை கடையை சரி செய்து தரும்படி சார் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய சிறுகுடி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் போதும் பொன்னு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பு கண்ணன் வரவேற்றார்.

    முதுகுளத்தூர் தாசில்தார் சடையாண்டி, ஆணையாளர் ஜானகி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசுல் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். சிறுகுடி ஊராட்சி மன்ற தலைவர் சேதமடைந்த நியாயவிலை கடையை சரி செய்து தரும்படி சார் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார். மேலும் காவிரி கூட்டு குடிநீர் போதிய அளவில் வரவில்லை எனவும், கூடுதலாக தண்ணீர் தேவைப்படுகிறது என கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதில் அளித்த சார் ஆட்சியர் விரைவில் குடிநீர் வசதி செய்து தரப்படும் என உறுதி அளித்தார்.

    • மூங்கில்பள்ளம் ஆதிவாசி கிராமத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடி ப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
    • மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தேக்கப்பட்டு மலைகிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அருகே மேல்மலைகிராமமான மன்னவனூர் பஞ்சாய த்துக்குட்பட்ட மூங்கில்ப ள்ளம் ஆதிவாசி கிராமத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடி ப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு குடிநீர் வழங்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ள கீழானவயல் கிராமத்தில் இருந்து பைப் மூலம் மூங்கில் பள்ளத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அங்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தேக்கப்பட்டு மலைகிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

    வனத்துறையினரின் முயற்சியால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் தங்களுக்கு அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    • பேரூராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
    • வைத்தீஸ்வரன் கோவிலில் சுற்றிலும் நான்கு வீதிகளிலும் போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை தாங்கினார்.

    செயல் அலுவலர் அசோகன், துணைத் தலைவர் அன்புச் செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் இளம் நிலை உதவியாளர் பாமா மன்ற தீர்மானங்களை படித்தார்.

    தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.

    பின்னர் உறுப்பினர்க ளிடையே நடைபெற்ற விவாதம் வருமாறு:-

    கென்னடி (திமுக):-

    எனது வார்டு பகுதியில் உள்ள சாலைகளில் மண்டி கிடக்கும் முற் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பிரியங்கா (அதிமுக):-

    எனது பகுதியில் நிலத்தடி நீர் உப்பு நீராகவும், காவிநீராகவும் மாறியதால் குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    எனவே கை பம்பு அமைத்து தர வேண்டும். சியாமளா தேவி (திமுக):-எனது வார்டு பகுதியில் தினம்தோறும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூடுதலாக குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.

    முத்துக்குமார் (பாமக):-

    வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் தினமும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    ராஜ கார்த்திக் (அதிமுக):-

    பேரூராட்சியில் காலியாக உள்ள மேஸ்திரி பணியிடத்தை நிரப்ப வேண்டும்.

    வித்யா தேவி (சி பி ஐ);-

    வைத்தீஸ்வரன் கோவில் பஸ் நிலையத்தில் பல ஆண்டுகளாக பூட்டி கிடக்கும் தாட்கோ கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மீனா (அதிமுக):-

    எனது பகுதியில் குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

    ஆனந்த் (திமுக):-

    எனது பகுதியில் கூடுதலாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குப்பை த்தொட்டிகளை அமைத்து தர வேண்டும். செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட கிழமைகளில் வைத்தீஸ்வரன் கோவிலில் சுற்றிலும் நான்கு வீதிகளிலும் போக்குவரத்து தடை ஏற்படாத வகையில் போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும்.

    பத்மாவதி (திமுக):-

    வைத்தீஸ்வரன் கோவில் மேல வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் கோவில் வரும் பக்தர்களுக்கு ஏதுவாக போலீசார்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

    துணைத் தலைவர்:-

    பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமப்புகளை அகற்றுவது குறித்து முன்கூட்டியே பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    தலைவர்:-

    உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிதி நிலைக்கேற்ப நிறையற்ற ப்படும். குடிநீர், தெருவிளக்கு, சாலை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

    கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்பத்தினருக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    • குடிநீர் வசதி கேட்டு கடந்த சில ஆண்டுகளாக பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
    • புதிதாக போர்வெல் அமைத்து குடிநீர் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அடுத்த கோ.பொன்னேரி கிரா மத்தில் மேட்டுத்தெருவில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு காலி குடங்களுடன் இன்று சாலை மறியல் செய்தனர். அவர்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் வசதி கேட்டு கடந்த சில ஆண்டுகளாக பலமுறை மனு கொடுத்தும், அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் அப்பகுதி யில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் விருத்தா சலம்- சிதம்பரம் சாலையில் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் இன்னும் சில நாட்களில், அந்த பகுதியில் புதிதாக போர்வெல் அமைத்து குடிநீர் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியலால் விருத்தாசலம்- சிதம்பரம் சாலை யில் போக்குவரத்து சுமார் அரைமணி நேரம் பாதிக்கப்பட்டது.

    • பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    உடுமலை :

    உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி வெளி மாவட்ட பஸ்களும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கிறது.

    இதன் காரணமாக காலை முதல் இரவு வரையிலும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது .இந்த நிலையில் பஸ் நிலையத்தில் பொது மக்களுக்கான அடிப்படை அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஏழை எளிய மக்கள் தாகத்தோடு திரும்பி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அடிப்படை அத்தியாவசிய தேவைகளில் குடிநீரின் பங்கு முக்கியமானதாகும்.ஆனால் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. பொது மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு தண்ணீர் வழங்கக்கூடிய எந்திரம் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து உள்ளது. அதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வருகை தருகின்ற பொதுமக்கள் குடிநீர் வசதி இல்லாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். கோடை வெப்பம் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில் உடலின் இயக்கத்திற்கு தண்ணீரின் பங்கு முக்கியமானதாகும்.அதை உணர்ந்தாவது நிர்வாகம் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருவதற்கு முன் வர வேண்டும்.

    அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் தண்ணீர் வழங்கும் எந்திரம் பழுதடைந்தும் காட்சி பொருளாகவும் மாறி வருகிறது. எனவே உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் செயல்படாமல் உள்ள குடிநீர் வழங்கும் எந்திரங்களை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    • நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தாலுக்கா மாடப்பள்ளி ஊராட்சி களரூர் கிராமத்தில் சாலை மற்றும் குடிநீர் வசதி கேட்டு திருப்பத்தூர் நல்லதம்பி எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதனை தொடர்ந்து தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாடப்பள்ளி மெயின் ரோட்டில் இருந்து களரூர் வரை ரூ.10 லட்சத்தில் பேவர் பிளாக் மற்றும் வீடுகளுக்கு குடிநீர் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள பூஜை செய்து தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி களரூர் கிராமத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் பி. திருமலைவாசன் தலைமை வகித்தார்.

    அனைவரையும் சர்க்கரை ஆலை இயக்குனர் வேங்கையன் வரவேற்றார். பாலாஜி ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். சாலை மற்றும் குடிநீர் பணிகளை பூஜை போட்டு நல்லதம்பி எம்எல்ஏ தொடங்கி வைத்து பேசினார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன், ஒன்றிய கவுன்சிலர் ரகு, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வடிவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்ராமச்சந்திரன், ‌ கண்ணன் தனபால் கோவிந்தராஜ், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • காடந்தேத்தியில் அரசு மீள் குடியிருப்பில் உள்ள குடியிருப்புகளுக்கு இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை.
    • குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என பேச்சுவார்த்தையில் உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியத்தில் உள்ள காடந்தேத்தியில் அரசு மீள் குடியிருப்பில் 190 வீடுகள் உள்ளது. இந்த குடியிருப்புகளுக்கு இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. மேலும் மயான கட்டிடம், மயான சாலை வேண்டியும், வேலைவாய்ப்பற்ற மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கிட வேண்டடியும்ஊ ராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்து வந்த தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், ராஜூ, வேதாரண்யம் துணை கண்காணிப்பாளர் முருகவேல் , கிராம நிர்வாக அலுவலர் கணேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர் உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததன் பேரில் ஒரு மணிநேரம் நடந்த சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.இந்த சாலைமறியலால் ஒரு மணி நேரம் தலைஞாயிறு- திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×