search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 234502"

    • விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் முருகன். அதே பகுதி காளியம்மன் கோவில் தெருவில் பழக்கடை நடத்தி வருகிறார். 
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.

    விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் முருகன். அதே பகுதி காளியம்மன் கோவில் தெருவில் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த வாலிபர் இங்கு கடை நடத்த வேண்டும் என்றால் எனக்கு மாதம் தோறும் மாமூல் பணம் தர வேண்டும் என்று கூறி ரகளையில் ஈடுபட்டார். மேலும் வியாபாரி முருகனை கத்தி முனையில் மிரட்டி ரூ.5௦௦-யை பறித்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கைது செய்தனர்.

    • ஆவடி, பூந்தமல்லி சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது.
    • மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென கார்த்திக்கை வழிமறித்து சரமாரியாக தாக்கினர்.

    ஆவடி:

    ஆவடி, பூந்தமல்லி சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு ஊழியராக கார்த்திக் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இன்று மதியம் அவர் ரூ.1 1/2 லட்சத்தை ஆவடி வீட்டு வசதிவாரிய குடியிருப்பு அருகே உள்ள வங்கியில் செலுத்த மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் திடீரென கார்த்திக்கை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.1 1/2 லட்சத்தை பறித்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து உதவி கமிஷனர் புருஷோத்தமன், இன்ஸ்பெக்டர் டில்லிபாபு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மண்டபம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ரூ.5 லட்சம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இதுகுறித்த புகாரின் பேரில் மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் வெளிப்பட்டணம் பகுதியை சோ்ந்தவர் புவனேஸ்வரா் (வயது 39). மண்டபம் அருகே சமத்துவபுரம் பகுதியில் உள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பாா்த்து வருகிறாா்.

    இந்த நிலையில் புவனேஸ்வரா் அங்கு பெட்ரோல் விற்பனையான ரூ.4.89 லட்சத்தை எடுத்துக் கொண்டு ராமநாதபுரத்தில் உள்ள வங்கியில் செலுத்த மண்டபம் அருகே வளையா்வாடி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாா்.

    அப்போது, இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த அடை யாளம் தெரியாத 2 நபா்கள் அவரிடமிருந்த பணப் பையை பறிக்க முயன்றனா். புவனேஸ்வரா் சப்தம் போட்டதையடுத்து அங்கிருந்தவா்கள் ஓடி வந்தனா். இதையடுத்து அந்த நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனா்.

    இதுகுறித்த புகாரின் பேரில் மண்டபம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழிப்பறியில் ஈடுபட்ட அந்த பகுதியை சோ்ந்த சஞ்சய் (23), விக்ரம் (23) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.

    • ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • வாலிபரை கைது செய்தனர்

    திருச்சி:

    திருச்சி எடமலைப்பட்டி புதூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சகாயகுமார் (வயது 44). ஆட்டோ டிரைவர். இவர் எடமலைப்பட்டி புதூர் அரசு காலனி சந்திப்பு ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தி முனையில் இவரிடம் பணத்தைப் பறித்து விட்டு சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி எடமலைப்பட்டி புதூர் கொல்லாங்குளம் பாரதி நகரை சேர்ந்த இப்ராஹிம்(வயது 39) என்பவரை கைது செய்தார். அவரிடமிருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இப்ராஹிம் மீது உறையூர், கே.கே. நகர், கோட்டை, எடமலைப்பட்டி புதூர், கண்டோன்மெண்ட், அரியமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, கீரனூர் ஆகிய காவல் நிலையங்களில் 11 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது




    • பயணிகள் விரட்டி பிடித்தனர்
    • ரூ.1000 பறிமுதல்

    ஜோலார்பேட்டை:

    வாணிய ம்பாடியை அடுத்த ஜாப்ராபாத் பகுதியை சேர்ந்த வர் அப்துல் (வயது 38). இவர் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் டிபன் வியாபாரம் செய்து வருகிறார்.

    நேற்று கோவையி லிருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அப்துல், டிபன் வியாபாரம் செய்து கொண் டிருந்தார். அப்போது வாலி பர் ஒருவர் அப்துல் பாக்கெட் டில் வைத்திருந்த 1,000 ரூபாயை திருடிக் கொண்டு ரெயிலிலிருந்து தப்பி ஓடி உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அப்துல் கூச்சல் போடவே பயணிகள் விரட்டி சென்று அந்த நபரை பிடித்து ரெயில்வே போலீஸ் நிலையத் தில் ஒப்படைத்தார். விசார ணையில் அவர் சேலம் மாவட்டம் ஏற்காடு அடுத்த ஒண்டிக்கடை பகுதியை சேர்ந்தவர் தினேஷ் என்கிற தினேஷ்குமார் (31) என்பது தெரியவந்தது.

    அவரை ரெயில்வே போலீ சார் கைது செய்து, அவரிடமி ருந்து ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

    • ரூ.68 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார்.
    • தன்னுடைய பாக்கெட்டில் இருந்து 20 ரூபாய் பணத்தை எடுத்து கீழே போட்டார்.

    கிணத்துக்கடவு

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சங்கராபுரம் புதூரை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 65). பால் வியாபாரி.

    சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள வங்கிக்கு சென்றார். பின்னர் ரூ.68 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார். செல்லும் வழியில் பழைய சோதனை சாவடி அருகே எண்ணை வாங்குவதற்காக மொபட்டை நிறுத்தினார்.

    அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் தன்னுடைய பாக்கெட்டில் இருந்து 20 ரூபாய் பணத்தை எடுத்து கீழே போட்டார். பின்னர் பொன்னுசாமியிடம் உங்களுடைய பணம் கீழே விழுந்து கிடப்பதாக கூறினார். அதனை அவர் எடுக்க முயன்ற போது அந்த மர்மநபர் பொன்னுசாமி ரூ.68 ஆயிரம் பணத்தை வைத்து இருந்த கைப்பையை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

    இதில் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால் வியாபாரியை நூதன முறையில் ஏமாற்றி பணத்தை பறித்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள். 

    • அண்ணாதுரை (வயது 52). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
    • கத்தியை காட்டி மிரட்டல் விடுத்து, தாக்கி அவரிடமிருந்து 3 பவுன் செயின், ரூ.700 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மணியனூர், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 52). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் சீலநாயக்கன்பட்டி, வேலுநகர் பிரிவு ரோடு அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த சில நபர்கள் அண்ணாதுரையை திடீரென வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டல் விடுத்து, தாக்கி அவரிடமிருந்து 3 பவுன் செயின், ரூ.700 பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் வீரன் மற்றும் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட தாதகாப்பட்டி தாகூர் தெரு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜடேஜா என்கிற தியாகராஜன் (32), சந்தியூர் ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த குரு என்கிற குப்பன் தாஸ் (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிமிருந்து செயின், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • ராஜேந்திரன் ( வயது 42). வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
    • அப்போது அங்கு வந்த சில நபர்கள், ராஜேந்திரனை வழி மறித்து, கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கி அவரிடமிருந்து 1 பவுன் செயின், ரூ.500 ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மணியனூர், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் ( வயது 42). வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 12- ந் தேதி மாலை தனது வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி வேலு நகர் பகுதி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டி ருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள், ராஜேந்திரனை வழி மறித்து, கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கி அவரிடமிருந்து 1 பவுன் செயின், ரூ.500 ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா, சப்- இன்ஸ்பெக்டர் வீரன்

    மற்றும் போலீசார், வழிப்பறி யில் ஈடுபட்ட அஸ்தம்பட்டி ஜான்சன்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் (19), கவியரசன் (25) ஆகிய இருவரையும் நேற்று கைது

    செய்தனர். மேலும் தலைமறை வாக உள்ள அவர்களின் கூட்டாளிகளை தேடி வருகின்றனர். போலீசார், கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

    • ஆகாசை வழிமறித்து தாக்கி ரூ.1000-த்தை பறித்து சென்றனர்.
    • மப்பேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் மந்தவெளியம்மன் அம்மன் நகர், பேட்டை தெருவை சேர்ந்தவர் ஆகாஷ். இவர், பேரம்பாக்கம் பஜாரில் உள்ள ஓட்டலுக்கு டிபன் வாங்க சென்றார். அப்போது அங்கு இருந்த திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் பெரிய தெருவை சேர்ந்த அபிமன்யு காஞ்சிபுரம் மாவட்டம் விநாயகபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அரிகிருஷ்ணன் மற்றும் வினோத்குமார் ஆகிய 3 பேரும் ஆகாசை வழிமறித்து தாக்கி ரூ.1000-த்தை பறித்து சென்றனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் மப்பேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து அபிமன்யு, அரிகிருஷ்ணன் ஆகிய 2 பேரை கைது செய்தார். மேலும் தப்பி ஓடிய வினோத்குமாரை தேடி வருகிறார்கள்.

    • கீழே விழுந்ததில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    • 34 வயது வாலிபர் டி.எஸ்.பி. 4-வது பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.

    கோவை,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் 34 வயது வாலிபர்.

    இவர் டி.எஸ்.பி. 4-வது பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் சொந்த வேலை காரணமாக சென்னைக்கு செல்வதற்காக மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு பஸ் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிக்கெட் புக் செய்திருந்தார்.

    சம்பவத்தன்று இரவு 9.45 மணிக்கு போலீஸ்காரர் கோத்தகிரியில் இருந்து ேமட்டுப்பாளையத்திற்கு வந்தார். பின்னர் தான் புக் ெசய்திருந்த பஸ் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சென்றார்.

    அப்போது அவர் புக் செய்த பஸ் 9.30 மணிக்கு சென்று விட்டது. பஸ் இல்லாததால் இதுகுறித்து போலீஸ்காரர் அங்கிருந்தவர்களிடம் கேட்டார்.

    அதற்கு நீங்கள் புக் செய்த பஸ் 9.30 மணிக்கு புறப்படும். ஆனால் நீங்கள் தாமதமாக வந்துள்ளீர்கள் என தெரிவித்தனர்.

    அப்போது போலீஸ்காரர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதனால் ஊழியர்கள் கூறியதை கேட்காமல் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார்.

    இதுகுறித்து அங்கிருந்த வர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த வழியாக ரோந்து சென்ற மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து வந்து போலீஸ்காரரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பஸ் கோவை சென்றிருக்கும். நீங்கள் கோவை சென்று ஏறி செல்லுங்கள். இல்லையென்றால் விடுதியில் தங்கி விட்டு காலையில் செல்லுங்கள் என கூறி விட்டு சென்றனர்.

    ஆனால் போலீஸ்காரர் கோவைக்கும் செல்லாமல் விடுதிக்கும் செல்லாமல், மேட்டுப்பாளையம் பகுதியில் குடிபோதையில் சாலையில் சுற்றி திரிந்துள்ளார்.

    இரவு முழுவதும் அங்கேயே சுற்றி திரிந்ததாக தெரிகிறது. நள்ளிரவு நேரத்தில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள் ேபாலீஸ்காரர் அருகில் வந்து அவர் போதையில் இருப்பதை பயன்படுத்தி, போலீஸ்காரர் வைத்திருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்து விட்டு அவரை கீழே தள்ளிவிட்டு தப்பியோடி விட்டனர்.

    இதில் கீழே விழுந்ததில் போலீஸ்காரருக்கு கை, கால், முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கிடையே அந்த வழியாக வந்த போலீசார், அவரை மீட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    போலீஸ்காரர் போதை யில் இருந்ததால் எவ்வளவு பணத்தை பறிகொடுத்தார் என்பது தெரியவில்லை.

    இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வேலூரில் மர்ம கும்பல் துணிகரம்
    • நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து சிகிச்சைக்காக வருகின்றனர்.அவர்கள் வேலூர் மாநகர பகுதியில் உள்ள தங்கும் விடுதி லாட்ஜிகளில் தங்கி உள்ளனர்.

    பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த முகமது ரசூல் (வயது 34) என்பவர் இன்று காலை தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும் என்பதால் லாட்ஜில் அறை எடுக்க முடிவு செய்தார்.

    இதற்காக ஆற்காடு ரோட்டில் தனியார் ஆஸ்பத்திரி முன்பு நின்று கொண்டிருந்தார். அவரை ஆட்டோவில் இருந்த மர்ம நபர்கள் லாட்ஜில் தங்கும் இடவசதி உள்ளது. எங்கள் ஆட்டோவில் வாருங்கள் என கூறியுள்ளனர். அதனை நம்பி முகமது ரசூல் அந்த ஆட்டோவில் ஏறினார்.

    ஆட்டோவில் அவரை ஏற்றிக்கொண்டு ஆற்காடு ரோட்டில்வேகமாக வந்தனர். காகிதப்பட்டறை டாஸ்மாக் கடை அருகே வந்ததும் அதன் அருகில் உள்ள ஒரு தெருவில் ஆட்டோ நுழைந்தது. அங்கு வைத்து ஆட்டோவில் வந்த நபர்கள் முகமது ரசூலை சரமாரியாக தாக்கினர். அவர் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பி சென்று விட்டனர்.

    பலத்த காயத்துடன் பணத்தை இழந்த முகமது ரசூல் அங்கு நின்று கொண்டு என்ன செய்வது என அறியாமல் தவித்தார். அவருக்கு பொதுமக்கள் உதவி செய்தனர். வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப் போவதாக கூறிவிட்டு அவர் சென்றார்.

    வேலூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் ஆஸ்பத்திரி பெண் டாக்டர் ஒருவரை ஆட்டோவில் கடத்தி சென்று பலாத்காரம் செய்தனர்.

    இந்த நிலையில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை ஆட்டோவில் அழைத்து வந்து பணம் பறித்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தனியார் ஆஸ்பத்திரிக்கு வரும் வெளி மாநிலத்தவர்களை தினமும் காலையில் ஆற்காடு ரோட்டில் மடக்கி பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • மேலும் ஒருவர் தலைமறைவு
    • சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (வயது 24).

    இவர் கருங்கல் பஸ் நிலையம் அருகே உள்ள வேன் ஸ்டாண்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை அஸ்வின் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது போலீஸ் வாகனத்தில் வந்த ஒரு கும்பல் அஸ்வினை வழிமறித்து ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றது.

    இந்த கும்பல் மீது அஸ்வினுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அஸ்வின் போலீஸ் வாகனத்தையும் அதிலிருந்த கும்பலையும் செல்போனில் படம்பிடித்தார். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து போலீஸ் வாகனத்தில் தப்பி சென்று விட்டது. நடந்த சம்பவம் குறித்து அஸ்வின் கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    அஸ்வின் செல்போனில் பதிவு செய்திருந்த அந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அஸ்வினிடம் பணம் பறித்த கும்பல் பயன்படுத்தியது குலசேகரம் போலீஸ் நிலைய வாகனம் என்பது தெரிய வந்தது. குலசேகரம் போலீஸ் நிலையத்தில் உள்ள வாகனத்தை பழுது நீக்குவதற்காக ஒர்க் ஷாப் ஒன்றில் விட்டு இருந்தனர்.

    வேலை முடிந்த பிறகு அந்த வாகனத்தை அங்கு நிறுத்தி இருந்தனர். ‌அந்த வாகனத்தை சிலர் எடுத்து செல்வது போன்ற காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் போலீஸ் வாகனத்தை எடுத்துச் சென்றது காஞ்சிரக்கோடு பகுதியைச் சேர்ந்த போஸ்கோ டைசிங் (38), ரூபன் (38), விஷ்ணு (27), கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஹிட்லர் (45)என்பது தெரியவந்தது. இவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 4 பேரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் போஸ்கோ டைசிங், ரூபன், விஷ்ணு ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் போலீஸ் வாகனத்தை அந்த பகுதியில் இருந்து எடுத்து சென்று கருங்கல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றதாகவும் திரும்பி வரும் வழியில் அஸ்வினிடம் பணம் பறித்ததும் தெரிய வந்துள்ளது.

    தலைமறைவாகியுள்ள ஹிட்லரை தேடி வருகி றார்கள். போலீஸ் வாகனத்தில் சென்று வாலிபரி டம் பணம் பறித்த சம்ப வம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    ×