என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 237932"
- கூலித் தொழிலாளியின் வங்கி கணக்கில் ரூ.100 கோடி டெபாசிட் ஆனதை அடுத்து வங்கி கணக்கு தற்காலிகமாக முடக்கம்.
- முகமது விசாரணைக்காக நேரில் ஆஜராக தேகானா சைபர் செல் சம்மன் அனுப்பியுள்ளது.
மேற்கு வங்காளம், முர்ஷிதாபாத்தில் உள்ள பாசுதேப்பூர் கிராமத்தில் வசிக்கும் முகமது நசிருல்லா மண்டல் என்கிற தினசரி கூலித் தொழிலாளியின் வங்கி கணக்கில் ரூ.100 கோடி டெபாசிட் ஆனதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
இந்நிலையில், திடீரென கூலித் தொழிலாளியின் வங்கி கணக்கில் 100 கோடி ரூபாய் டெபாசிட் ஆனதை அடுத்து, அவரது வங்கி கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரது வீட்டு வசாலிலும் இதுகுறித்து சைபர் செல் துறையினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பை கண்ட பிறகே தனது வங்கி கணக்கில் 100 கோடி ரூபாய் இருப்பது முகமதுக்கு தெரியவந்துள்ளது.
வங்கி கணக்கில் திடீரென பணம் சேர்ந்தது தொடர்பாக விசாரணைக்காக வரும் 30ம் தேதிக்குள் ஆஜராகும்படி முகமதுவுக்கு தேகானா சைபர் செல் சம்மன் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து முகமது நசிருல்லா மண்டல் கூறுகையில், "காவல் துறையினரிடம் இருந்து அழைப்பு வந்ததும் எனக்கு தூக்கம் வரவில்லை. நான் என்ன தவறு செய்தேன். எனக்கு எதுவும் தெரியவில்லை.
எனது வங்கி கணக்கில் ரூ.100 கோடி இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. அது உண்மை தானா என நான் பலமுறை மறுபரிசீலனை செய்தேன். கணக்கு பரிவர்த்தனை பற்றி விசாரிக்க சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு பாஸ்புக்குடன் சென்றேன். வங்கி கணக்கு முடக்குவதற்கு முன்பு ரூ.17 இருந்ததாக கூறப்பட்டது. வங்கி கணக்கில் வெறும் ரூ.17 வைத்திருந்த நிலையில் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வங்கி கணக்கு நிறைந்துள்ளது" என்றார்.
- தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக பொது மக்களை ஏமாற்றும் மோசடி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
- ஆன்லைன் மோசடிகளுக்கு பயன்படுத்தப்படும் செல்போன் சிம்கார்டுகளை தடைசெய்யப்பட்டு வருகிறது.
சென்னை:
ஆன்லைன் மூலமாக பொது மக்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்டும் கும்பல் தொடர்ந்து கைவரிசை காட்டிக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஓராண்டில் நூதன முறையில் பொது மக்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.288.38 கோடி பணம் திருடப்பட்டு உள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக பொது மக்களை ஏமாற்றும் மோசடி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அதன்படி ஒரு வருடத்தில் 288 கோடிக்கும் அதிகமான பணம் பொதுமக்களீன் வங்கி கணக்கில் இருந்து சுருட்டப்பட்டு இருக்கிறது. பொது மக்களின் புகாரின் அடிப்படையில் 106 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.ரூ.27 கோடி உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 மாதத்தில் ஆன்லைன் மூலமாக 12 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன.67 கோடி ரூபாய் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்டுள்ளது. இதில் ரூ.49 கோடி முடக்கப்பட்டுள்ளது. ரூ.6 கோடி பணம் 3 மாதத்தில் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக 29 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆன்லைன் மோசடிகளுக்கு பயன்படுத்தப்படும் செல்போன் சிம்கார்டுகளை தடைசெய்யப்பட்டு வருகிறது. இதன்படி 27 ஆயிரத்து 905 சிம் கார்டுகள் தடைசெய்ய மத்திய அரசால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் 22 ஆயிரத்து 240 சிம்கார்டுகள் தடை செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் தேவையில்லாத நபர்களிடம் இருந்து அழைப்புகள் வந்தால் அதனை கண்டு கொள்ளாமல் உஷாராக இருக்கவேண்டும்.
இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.
- கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 குற்றவாளி
- 54 சதவீத களவாடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் :
நெல்லை சரக டி.ஐ.ஜி.பிரவேஷ்குமார் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டத் தில் 36 குற்றவாளிகளும், தென்காசி மாவட்டத்தில் 20 குற்றவாளிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 53 குற்றவாளிகளும் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத் தில் 17 குற்றவாளிகளும் ஆக மொத்தம் திருநெல்வேலி சரகத்தில் 126 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த ஆண்டு இதுவரை கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி சரகத்தில் 779 எதிரிகளுக்கு நிர்வாக நீதிபதி மூலம் நன்னடத்தை பிணைய பத்திரம் பெற்றும், நன்னடத்தை பிணையை மீறிய 19 எதிரிகள் மீது பிணை முறிவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள் ளனர். 2677 குற்றவாளி களுக்கு எதிரான பிணையில் வெளிவரமுடியாத பிணை ஆணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருநெல்வேலி சரகத்தில் உள்ள மாவட்டங்களில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 1050 பிணையில் விட முடியாத பிணை ஆணை நிறை வேற்றியுள்ளனர். சென்னை மாநகர காவல் சட்டத்தின் கீழ் 226 வழக்குகளும், 105 கஞ்சா வழக்குகளும், 128 குட்கா வழக்குகளும், 63 லாட்டரி சீட்டு வழக்குகளும், 65 சூதாட்ட தடுப்பு வழக்குகளும் மற்றும் 1922 மதுவிலக்கு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கஞ்சா வழக்குகள் இந்த ஆண்டு இதுவரை திருநெல்வேலி சரகத்தில் 106 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 223 எதிரிகள் கைது செய்யப் பட்டுள்ளனர். இதில் 23 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 320 எதிரிகளுக்கு நிர்வாக நீதிபதி மூலம் நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டு, அதில் நன்னடத்தை பிணையை மீறிய 5 எதிரிகள் மீது பிணை மீறியதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். கஞ்சா வழக்கு குற்றவாளிகளின் 120 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை திருநெல் வேலி சரகத்தில் 46 சதவீத குற்ற வழக்குகள் புலன் விசாரணையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, 55 சதவீத களவாடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி சரகத்தில் நடப்பாண்டில் இதுவரை இரண்டு ஆதாயக் கொலை, கூட்டுக் கொள்ளை, 37 வழிப்பறி, 56 வீட்டை உடைத்து திருடிய குற்றம் மற்றும் 136 பெரிய அளவிலான திருட்டு வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி சரகத்தில் உள்ள மாவட் டங்களில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 59 சதவீத குற்றவழக்குகள் புலன் விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு அதில் 54 சதவீத களவாடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆதிதிராவிட மாணவர்களுக்கு வருகிற 31-ந்தேதி வரை சிறப்பு முகாம் நடக்கிறது.
- தங்களது ஆதார் கைபேசி எண்களை மட்டும் பயன்படுத்தி விரல் ரேகை மூலம் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத் தில் 2022-23ம் கல்வியாண் டில் கல்வி பயிலும் ஆதிதிரா விடர், மதம் மாறிய கிறித்தவ ஆதிதிராவிடர், பழங்குடி யினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆதிதிரா விடர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் உதவித் தொகையை பெறுவதற்கு மாணவர்கள் தங்களது ஆதார் எண்ணுடன் வங்கிக் கணக்கு எண்ணை இணைப் பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத் தில் கடந்த கல்வியாண்டில் உதவித்தொகை பெற்றவர்க ளில் 5 ஆயிரத்து 662 மாண வர்களின் வங்கிக்கணக்கு எண்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் உள் ளது.
இது தொடர்பாக கடந்த 10 நாட்களாக பள்ளிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 2 ஆயி ரத்து 639 மாணவர்களுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கப்பட்டது.மீதமுள்ள 3 ஆயிரத்து 423 மாணவர்களுக்கு வருகிற 31-ந் தேதி வரை பள்ளிக ளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று தங்களது ஆதார் எண்ணு டன் வங்கி கணக்கு எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
மேலும் மாணவர்கள் அருகில் உள்ள அஞ்சலகங் கள், கிராம அஞ்சல் ஊழி யர்களிடம் உள்ள கைப்பேசி, பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் தங்களது ஆதார் கைபேசி எண்களை மட்டும் பயன்படுத்தி விரல் ரேகை மூலம் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெரும்பாலான மாணவர்களின் வங்கி கணக்கு நடப்பில் இல்லாமலும் , அவர்களின் வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமலும் உள்ளதை கண்டறியப்பட்டுள்ளது.
- ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவ-மாணவிகளின் வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க பள்ளிகளில் முகாம் நடைபெற்றது.
சேலம்:
2022-2023-ம் கல்வி யாண்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி களில் 9, 10-ம் வகுப்பு மற்றும் 11, 12-ம் வகுப்பு களில் பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவியர்களுக்கான பிரிமெட்ரிக், போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க மாணவ-மாணவிகளின் வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் கட்டாய மாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
பெரும்பாலான மாணவர்களின் வங்கி கணக்கு நடப்பில் இல்லாமலும் , அவர்களின் வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமலும் உள்ளதை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் மூலமாக விவரம் அனுப்பி வைக்கப்பட்டு உரிய நேரத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், வங்கி கணக்கு நடப்பில் உள்ளதை உறுதி செய்திடவும், புதிய அஞ்சல வங்கி கணக்குகள் தொடங்க சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தி கட்டணம் ஏதும் இல்லாமல் மாணவர்களின் ஆதார் அட்டை மற்றும் பெற்றோ ரின் தொலைபேசி எண் கொண்டு அஞ்சலக வங்கி கணக்கு தொடங்கிட அஞ்சல் அலுவலர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே முகாம் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இவ்வசதியினை மாணவர்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
- முதல் கட்டமாக, இறுதியாண்டு, இரண்டாமாண்டு படித்த மாணவிகளின் வங்கிக் கணக்கில் உதவித்தொகை செலுத்தப்பட்டுள்ளது.
- அனைத்து கல்லூரிகளிலும், இப்பணிகளை கண்காணிக்க, நோடல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை,
அரசு பள்ளிகளில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்த மாணவிகள், உயர்கல்வி தொடர, தமிழக அரசால் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டம் செயல் படுத்தப்படுகிறது.
கோவையில் இத்திட்டத்தை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் கலெக்டர் தலைமையில், கல்லூரி கல்வி இணை இயக்குனர், முதன்மை கல்வி அதிகாரி, சமூக நலத்துறை அதிகாரி, முன்னோடி வங்கி மேலாளர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில், முதல் கட்டமாக, இறுதியாண்டு, இரண்டாமாண்டு படித்த மாணவிகளின் வங்கிக் கணக்கில் உதவித்தொகை செலுத்தப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த முதலாமாண்டு மாணவிகளுக்கு வழங்க ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன.
அனைத்து கல்லூரிகளிலும், இப்பணிகளை கண்காணிக்க, நோடல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இறுதியாண்டு, இரண்டாமாண்டு படிக்கும் மாணவிகள் பலருக்கு வங்கிக்கணக்கில் தொகை வரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக நலத்துறைத்துறையினர் கூறியதாவது:-
புதுமைப்பெண் திட்டத்தில், மாணவிகள் தங்களை பற்றிய தகவல்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது.அதில் பல்வேறு தவறுகள் இருந்தன.
தற்போது அந்தந்த கல்லூரி நிறுவனம் தகவல்களை பதிவேற்றும் வகையில், விண்ணப்பம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் தவறு ஏற்படுவதில்லை.
உதவித்தொகை கிடைக்காத மாணவிகள் வங்கி கணக்குடன் ஆதார் எண், செல்போன் எண் இணைத்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
கல்லூரி நோடல் அலுவலரை அணுகி, இதற்கு முன் பதிவேற்றம் செய்த தகவல்கள் சரியாக உள்ளதா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
சில மாணவிகள் வங்கிக் கணக்கு தொடங்காமல் உள்ளனர். சிலரிடம் செல்போன் எண் இல்லாமல் உள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
- பொங்கல் பரிசு தொகுப்பு பெற ‘ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கை இணைக்க வேண்டும் என்று எந்தவித உத்தரவும் இதுவரை நமக்கு வரவில்லை.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலமாக 1,129 ரேஷன் கடைகள், மகளிர் குழுக்கள் மூலமாக 14 ரேஷன் கடைகள், நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் 22 ரேஷன் கடைகள் என மொத்தம் 1,129 ரேஷன் கடைகள் உள்ளன. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளது என்றும், இதற்காக ரேஷன் கார்டுதாரர்களின் ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டு வங்கி கணக்கு இணைக்கப்பட உள்ளதாகவும் திருப்பூர் மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் குறுஞ்செய்தி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இவ்வாறு வங்கிக்கணக்கு இணைக்காமல் உள்ள கார்டுதாரர்கள், ரேஷன் கடைகளுக்கு சென்று கார்டில் உள்ள யாராவது ஒருவரின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றை கொண்டு சென்று விண்ணப்பிக்க வேண்டும் என்றும் குறுஞ்செய்தியில் வேகமாக தகவல் பரவியது. அதுவும் வருகிற 10-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் சீனிவாசனிடம் கேட்டபோது, பொங்கல் பரிசு தொகுப்பு பெற 'ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கை இணைக்க வேண்டும் என்று எந்தவித உத்தரவும் இதுவரை நமக்கு வரவில்லை. அது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை என்–றார்.
- விருதுநகரில் புத்தகத் திருவிழாவிற்கு நன்கொடை வழங்க வங்கி கணக்கு தொடக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
- அனைத்துத் தரப்பு பொதுமக்களுக்கும் சென்றடையும் வகையிலும் நிதி ஆதரவினை எங்களுக்கு தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக மாவட்ட நிர்வாகமும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து, விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள பொருட்காட்சி மைதானத்தில் வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 27-ந் தேதி வரை 11 நாட்களுக்கு காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.
இதில் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், பிரபல எழுத்தாளர்களின் கருத்தரங்கு சிறப்புப் பட்டிமன்றங்கள், பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், நாட்டுபுற கலைநிகழ்ச்சிகள், தொல்லியல் துறை அரங்குகள், அரசுத்து றைகளின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெறுவதற்கு திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த புத்தகத் திருவிழாவை மேலும் சிறப்பாக நடத்துவதற்கு ஆக்கமும், ஊக்கமும் அளிக்கக் கூடிய வகையிலும், அனைத்துத் தரப்பு பொதுமக்களுக்கும் சென்றடையும் வகையிலும் நிதி ஆதரவினை எங்களுக்கு தர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்கொடை அளிப்பதற்கு ஏதுவாக புத்தகக் கண்காட்சிக்கென்று கீழ்காணும் விவரப்படி தனி வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. நன்கொடை வழங்கு பவர்கள் கலெக்டரிடம் நேரிலோ அல்லது வங்கி வரைவோலையாகவும் மற்றும் காசோலையாகவும் அளிக்கலாம்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வங்கிக்கணக்கின் பெயர்: District Collector (Book Fair) வங்கிக்கணக்குஎண் - 174801000010896 MICR CODE : 626020304 IFSC CODE : IOBA0001748.
மேலும் விவரங்களுக்கு பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர். செல்போன் எண்.70108 02058, கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன், செல்போன் எண். 75502 46924 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கஞ்சா விற்பனையில் ஈடுபடுபட்ட 296 பேரின் வங்கி கணக்கு-சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
- போலீசார் 10 நாட்கள் தங்கியிருந்து இதில் சம்பந்தப்பட்ட ஜக்கி. கைலாஷ் ஆகிய 2 பேரை கைது செய்து மதுரைக்கு அழைத்து வந்துள்ளனர்.
மதுரை
மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் குற்ற வாளிகளை கண்டறிந்து, அவர்களை கட்டுப்படுத்தும் வகையில், அவர்கள் வங்கி கணக்குகள் மற்றும் உறவினர்களின் வங்கி கணக்குகள், அசையும், அசையா சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டு வருகிறது.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தொடர்பாக நடப்பு ஆண்டில் 5 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் ரூ. 8 கோடியே 21 லட்சத்து 30 ஆயிரத்து 623 மதிப்புள்ள வங்கி கணக்கு மற்றும் அசையும்-அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
மேலும் 136 வழக்குகளில் தொடர்புடைய 296 பேரின் வங்கி கணக்குகளில் உள்ள ரூ.37 லட்சத்து 62 ஆயிரத்து 531 முடக்கப்பட்டு உள்ளது. கஞ்சா வழக்குகளில் மீண்டும் ஈடுபட்ட 22 பேர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 25 பேரின் பிணை ஆணையை ரத்து செய்து மீண்டும் அவர்களை ஜெயிலில் அடைத்துள்ளோம். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 225 பேரிடம் 'மீண்டும் கஞ்சா விற்பணையில் ஈடுபட மாட்டோம்' என்று பிணை பத்திரம் பெறப்பட்டு, அவர்கள் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கட்டதேவன்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார், முத்துராமன் ஆகியோரின் பிணை பத்திரம் ரத்து செய்யப்பட்டு, அவர்களை மேலும் 10 மாதம் ஜெயிலில் அடைக்க உத்தரவி டப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 8 கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 963 கிலோ கஞ்சாவை அழிப்பதற்கு மண்டல அளவிலான குழுவிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அவை விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகில் உள்ள ஒரு கிட்டங்கியில் வருகிற 17-ந் தேதி அழிக்கப்பட உள்ளது.
மதுரை மாவட்டம் செக்காணூரணியில் கஞ்சா விற்பனை செய்த கோவிலாங்குளம் முத்து (47) என்பவரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 393 மதிப்புள்ள அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
ஒத்தக்கடையில் கஞ்சா வழக்கில் பிரகாஷ், நிஷந்தன், குணசேகரன் மற்றும் அவர்களின் உறவி னர்களின் ரூ.55 லட்சத்து 61 ஆயிரம் மதிப்புள்ள அசையா சொத்துகள், 5 வங்கி கணக்குகளை முடக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் கஞ்சா கடத்தலில் ஈடுபடுவோர், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
கஞ்சா கடத்தல்காரர்கள் மட்டுமின்றி அவர்களின் உறவினர்கள் சொத்துக்க ளும் சட்டப்படி முடக்கப்ப டும். கஞ்சா விற்பனை செய்யும் சிறுவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கூட அளவில் போதை பொருள் விழிப்புணர்வு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மதுரை மாவட்டத்தில் கஞ்சா கடத்தலை தடுக்கும் வகையில் கொரியர் மற்றும் தனியார் பஸ் நிறுவன உரிமையாளர்களின் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
மதுரை மாவட்டத்திற்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் வெளியூர் போக்குவரத்து வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பேரையூரில் 24 கிலோ கஞ்சா பறி முதல் செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை கைது செய்துள்ளோம். அவர்க ளுக்கு கஞ்சா சப்ளை செய்த சென்னை வாலிபரை தேடி வருகிறோம்.
மேலூரில் 95 பவுன் நகை கொள்ளை வழக்கில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 6 பேர் கும்பல் ஈடுபட்டு உள்ளது. அவர்களை பிடிப்பதற்காக தனிப்படை, மத்திய பிரதேசத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது.
அங்கு தனிப்படை போலீ சார் 10 நாட்கள் தங்கி யிருந்து இதில் சம்பந்தப்பட்ட ஜக்கி. கைலாஷ் ஆகிய 2 பேரை கைது செய்து மதுரைக்கு அழைத்து வந்துள்ளனர். அவர்களிடம் இருந்து நகைகள் மீட்கப்படவில்லை. இது தவிர மேலும் 4 பேரை பிடிக்க வேண்டியுள்ளது. இதற்காக தனிப்படை போலீசார் மீண்டும் மத்திய பிரதேசம் செல்ல உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மகாராஷ்டிராவில் 3.16 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் உள்ளன.
- 37 லட்சம் கணக்குகள் செயல்படாமல் உள்ளன.
மும்பை :
பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு வீட்டுக்கு ஒரு வங்கி கணக்கு தொடங்கும் வகையில், ஜன் தன் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் ஆதார் கார்டை வைத்து மக்களுக்கு வங்கி கணக்குகள் தொடங்கி கொடுக்கப்பட்டன. இந்த திட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவில் தொடங்கப்பட்ட 12 சதவீத வங்கி கணக்குகள் செயல்பாட்டில் இல்லை என பேங்க் ஆப் மகாராஷ்டிரா பொது மேலாளர் விஜய் காம்ளே கூறியுள்ளார்.
அவுரங்காபாத்தில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பாகவத் காரட் தலைமையில் நடந்த மாநில பேங்கர்ஸ் கமிட்டி கூட்டத்துக்கு பிறகு அவர் இதை கூறினார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:-
மகாராஷ்டிராவில் 3.16 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் உள்ளன. இதில் 37 லட்சம் கணக்குகள் செயல்படாமல் உள்ளன. அந்த கணக்குகளில் ஒரு ரூபாய் கூட இல்லை. எனவே அந்த கணக்கு வைத்த நபர்களை தொடர்பு கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி, கணக்கை செயல்பாட்டில் வைக்க கூற வேண்டும்.
இதேபோல 18 வயது நிறைவடைந்த இளைஞர்களை கண்டறித்து ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கை தொடங்க வைக்க வேண்டும். மகாராஷ்டிராவில் ஜன் தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளில் 10 ஆயிரத்து 938 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு படி நடவடிக்கை
- கடந்த இரண்டு மாதங்களில் 70-க்கு மேற்பட்டோரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்பவர்களின் வங்கி கணக்குகளை முடக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து குமரி மாவட்டத்தில் கஞ்சா வியாபாரிகளின் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் 70-க்கு மேற்பட்டோரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் பகுதியில் கஞ்சா வழக்கில் வடசேரியைச் சேர்ந்த காட்வின் எட்வர்ட், பெருவிளையை சேர்ந்த சந்திரகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இதை யடுத்து காட்வின் எட்வர்ட் மற்றும் அவரது தாயாரின் வங்கி கணக்குகளும் சந்திரகுமாரின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.
- தேசிய தரவு தளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
- வங்கி கணக்கு புத்தகம் போன்ற விவரங்கள் இருக்க வேண்டும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது-
இந்திய அரசு அமைப்பு சாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கி ணைக்க உச்சநீதிமன்ற உத்தரவின்படி 'அமைப்பு சாரா தொழிலாளர்களின் தேசிய தரவு தளம்"
(National Data Base for UnorganizedWorkers - eSuRAM - NDUW) என்ற ஒரு தரவுதளத்தை உருவாக்கி உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் பணியாளர்கள், சிறு, குறு விவசாயிகள், விவசாயக்கூலிகள். குத்தகைதாரர்கள், மகளிர்குழு உறுப்பினர்கள், தேசிய ஊரக வளர்ச்சி திட்டப் பணியாளர்கள், கேபிள் டிவி ஆபரேட்டர்கள், லேபிள் மற்றும் பேக்கிங் செய்வோர், கட்டுமான தொழிலாளர்கள், தச்சு வேலை செய்வோர், டீக்கடை ஊழியர்கள். கல்குவாரி தொழிலாளர்கள், உள்ளுர்கூலி தொழிலா ளர்கள், மர ஆலை தொழிலாளர்கள், முடி திருத்துவோர், காய்கறி மற்றும் பழ வியாபாரிகள். செய்தித்தாள் போடுப வர்கள்.
ஆட்டோ டிரைவர்கள். பட்டுவளர்ப்பு தொழிலா ளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், நடைபாதை வியாபாரிகள், பால் ஊற்றும் பணியாளர்கள், நெசவாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் போன்ற 379 வகையான அமைப்புசாரா தொழிலாளர்கள் விவ ரங்களை அனைத்து பொது சேவை மையங்களிலும் மற்றும் அனைத்து இ-சேவை மையங்களிலும் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இத்தரவு தளத்தில் தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள வயது 16 முதல் 59-க்குள் இருக்க வேண்டும். எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. பதிவேற்றம் செய்வதற்கு ஆதார்அட்டை, ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண் மூலம் அல்லது கைரேகை மூலம் பதிவு செய்து கொள்ளலாம். வங்கி கணக்கு புத்தகம் போன்ற விவரங்கள் இருக்க வேண்டும்.உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்திய அரசால் உருவாக்கப்படும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இத்தேசிய தரவுதளத்தில் (eSuRAM Portal) அனைவரும் பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்