search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 239589"

    • விநாயகருக்கு பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட 18 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் சக்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பல்லடம் :

    பல்லடம் வடுகபாளையம் ஹாஸ்டல் ரோட்டில் அமைந்துள்ள சக்தி விநாயகர் திருக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி மற்றும் 9-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

    ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சக்தி விநாயகருக்கு பன்னீர், சந்தனம், இளநீர், தேன், பால் உள்ளிட்ட 18 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சக்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் குத்து விளக்கேற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்
    • ஓமியோபதி மருத்துவம் நோய்களுக்கு நல்ல தீர்வளிக்கும் மருத்துவமாக உள்ளது.

    கன்னியாகுமரி :

    குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஓமியோபதி மருத்துவ கல்லூரியின் ஆண்டு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது.

    இந் நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குத்து விளக்கேற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், கலை மற்றும் விளையாட்டுப் போட்டி களில் சிறப்பிடம் பெற்ற மாணவ- மாணவியருக்கு பரிசுகள் வழங்கி அமைச்சர் பேசினார்

    ஒரு நாட்டின் வளர்ச்சியின் குறியீடுகள் கல்வி, மருத்துவமும் ஆகும். இதில் குறிப்பாக ஒரு நாட்டின் ஆரோக்கியம் என்பது அங்கு வாழும் மக்களின் ஆரோக்கியம் என்பது மிக முக்கிய ஆகும். இன்று மருத்துவத் துறை தற்போது வியக்கத்தக்க வகையில் வளர்ச்சி்க் கண்டு வருகிறது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக் தொழில் நுட்பம் போன்றவை பயன்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கும் முறைகளும் வளர்ந்து வருகின்றன. இந்தியாவின் பாரம்பரிய மருத்துவங்கள் புகழ் பெற்றவை. குறிப்பாக மாற்று மருத்துவ முறைகளில் ஒன்றான ஓமியோபதி மருத்துவம் தற்போது இந்தி யாவில் நூற்றுக்க ணக்கான கல்லூரிகளில் பயிற்று விக்கப்படுகிறது.

    என்னுடைய அனுபவத்தில் ஓமியோபதி மருத்துவம் நோய்களுக்கு நல்ல தீர்வளிக்கும் மருத்துவமாக உள்ளது. தற்போது உணவு தானியங்களை விளை விப்பதற்காக உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துவது பெரும் பிரச்சனையாக உரு வெடுத்து வருகிறது. இதில் விவசாயிகளுக்கு முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை. காற்று, தண்ணீர், நிலம் என அனைத்திலும் நாம் நஞ்சைக் கலந்து வருகிறோம். இதனால் மனிதர்களுக்கு பல்வேறு பக்க நோய்கள் ஏற்படுகின்றன. பாரம்பரிய உணவு வகைகளை நாம் மறந்து விட்டோம். குறிப்பாக குமரி மாவட்டத்தில் மர வள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றை நாம் மறந்து வருகிறோம். இது நல்ல ஆரோக்கிய உணவாகும் பிறப்படிப்புகளைப் போன்று மருத்துவப்படிப்பு என்பது ஒரு பட்டப்படிப்பு என்று மருத்துவம் பயிலும் மாணவர்கள் நினைத்து விடக்கூடாது. இது ஒரு அர்ப்பணிப்பான பணியைத் தரும் படிப்பு என்ற எண்ணம் எப்போதும் மாணவர்களுக்கு இருக்க வேண்டும். இது மட்டுமன்றி மருத்துவர்களுக்கு பணியின் மீது மிகுந்த ஆர்வமும், இரக்க உணர்வும் எப்போ தும் இருக்க வேண்டும் என்று பேசினார்.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் டாக்டர் சி.கே. மோகன் தலைமை வகித் தார். கல்லூரி முதல்வர் டாக்டர் என்.வி. சுகதன் ஆண்டறிக்கை சமர்ப்பித் தார். மாவட்ட அரசு சித்தா மருத்துவ அலுவலர் ராபர்ட் சிங் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு உரை யாற்றினார். கல்லூரி ஒழுங்கு குழு தலைவர் கிருஷ்ணபிரசாத், ஐ.எச்.எம்.ஏ. தலைவர் ஷாஜி குட்டி, ஐ.எச்.கே. செயலாளர் கொச்சுராணி வர்க்கீஸ், பத்மநாபபுரம் அரசு மருத்துவமனை துணை மருத்துவ அலுவலர் ருக்குமணி தேவி, முன்னாள் மாணவர் சங்க தலைவர் எபி மோசஸ் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக கல்லூரி முதுநிலை ஒருங்கிணைப்பா ளர் வின்ஸ்டன் வர்க்கீஸ் வரவேற்றார். கல்லூரி பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் அஜெயன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், கல்லூரி

    அறக்கட்டளை நிர்வாகிகள் சந்திரலேகா மோகன், எம்.சி. பவ்யா, மத்திய அரசின் ஓமியோபதி துறை முன்னாள் ஆலோசகர் ரவி எம். நாயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • மேலூர் அரசு கல்லூரி ஆண்டு விழா நடந்தது.
    • அலுவலக பணியாளர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மேலூர் அரசு கலைக் கல்லூரி ஆண்டு விழா நடந்தது. முதல்வர் மணிமேகலா தேவி தலைமை தாங்கினார். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடந்தன. சிறப்பு விருந்தினராக மேலூர் நகர்மன்ற தலைவர் முகமது யாசின் பங்கேற்று கலை நிகழ்ச்சி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    இதில் இணை பேராசிரியர்கள் கணேசுவரி, அந்தோணி செல்வராஜ், மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடி சரஸ்வதி ஆரம்ப பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
    • ஆசிரியைகள் தமிழ்செல்வி, ஹேமலதா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    காரைக்குடி

    காரைக்குடி முத்துப் பட்டினம் சரஸ்வதி ஆரம்பப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. ஆசிரியை ஜானகி தேவி வரவேற்றார். தலைமை ஆசிரியை மீனாள் தலைமை தாங்கினார்.

    பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் பிரீத்தா, துணை தலைவர் அஜீஸா முன்னிலை வகித்தனர். சிவகங்கை மாவட்ட அளவிலான ரீடிங் மராத்தான் போட்டியில் முதலிடம் பெற்ற இந்த பள்ளியின் முன்னாள் மாணவி மதிசாய்ஸ்ரீ பங்கேற்று பேசினார். இவர் மத்திய அரசின் என்.எம்.எம்.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று கல்வி ஊக்கத்தொகை ரூ.48ஆயிரம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விழாவில் மாணவ மாணவிகளின் நடனம், மாறுவேடப் போட்டி உள்பட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியைகள் தமிழ்செல்வி, ஹேமலதா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • மாவட்ட கல்வி அலுவலர் பேச்சு
    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் சி.ம.புதூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நடந்தது.

    தலைமை ஆசிரியர் நம்பெருமாள், தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி, ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் சந்திரசேகர், கீழ்பெண்ணாத்தூர் ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் வேல்முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அனைவரையும் ஆசிரியர் பயிற்றுனர் தமிழ்நேசன், வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக செய்யாறு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நளினி, கலந்து கொண்டு பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சிறு வயது முதலே நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து படிக்க நல்ல புத்தகங்கள் தான் மாணவர்களின் நல் வழிகாட்டி மேலும் செல்போன் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது, அதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    தொலைக்காட்சி பார்ப்பது நிறுத்த வேண்டும். ஆகியவற்றை நிறுத்தி மாணவர்களுக்கு நல்வழி காட்ட பெற்றோர்கள் முன் வர வேண்டும்.

    படிப்பு தான் மாணவர்கள் எதிர்காலம் ஆகவே படிப்பில் கவனம் செலுத்த மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஒரு வழிகாட்டியாக திகழ வேண்டும் என்று பேசினார்.

    • கடத்தூர் கிரீன் பார்க் சி.பி.எஸ்.சி. மெட்ரிக் இன்டர்நேஷனல் பள்ளியில் 5-ம் ஆண்டு ஆண்டுவிழா நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளி கள் சங்க மாநில செய லாளர் நந்தகுமார் தலைமை தாங்கினார்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் கிரீன் பார்க் சி.பி.எஸ்.சி. மெட்ரிக் இன்டர்நேஷனல் பள்ளியில் 5-ம் ஆண்டு ஆண்டுவிழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளி கள் சங்க மாநில செய லாளர் நந்தகுமார் தலைமை தாங்கினார்.

    பள்ளி சேர்மன் எவரெஸ்ட் முனிரத்தினம் முன்னிலை வகித்தார். பள்ளியின் நிர்வாக அலுவலர் ராஜா அனை வரையும் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளர் களாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கு விசாரணை உதவி இயக்குனர் சரவண பொய்கை, காட்டு மன்னார் கோவில் தனியார்கல்வி நிறுவன ங்களின் தலைவர் அருண், தன்னம்பிக்கை பேச்சாளர் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

    முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.

    இவ்விழாவில் அரசியல் பிரமுகர்கள் அரசாங்கம், நந்தன், சொல்லின் செல்வம், தகடூர் புத்தக பேரவை தலைவர் சிசுபாலன், ஸ்டாலின், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சம்பத், பத்திரிக்கையாளர் பொம்மிடி முருகேசன், தருமபுரி மாவட்ட சமூக ஆர்வலர்கள் சரவணன், வினோத் நரசிம்மன், சதீஷ்குமார், சசிக்குமார், பிரகாஷ், சுரேஷ்குமார், சுகுமாரன், சோழ பாண்டி யன், வனவி லங்குகள் ஆர்வலர் ராம்குமார், மாஸ்டர் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் துரை, கிருஷ்ணமூர்த்தி, அதியமான் கோட்டை ராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கடத்தூர் துணை தலைவர் வினோத், உழவர் பேரியக்க தலைவர் முத்துசாமி, கடத்தூர் கிளை நூலகர் சரவணன், இப்பள்ளியின் துணைத் தலைவர் பூவிழி முனிரத்தினம் நிகழ்ச்சிகளை ஒருங்கி ணைத்தார்கள். நிகழ்ச்சி யின் முடிவில் கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் சதானந்தம் நன்றி கூறினார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா வித்யாலயா பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
    • பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்பட்டன.

    ஸ்ரீவில்லிப்புத்தூர்

    ஸ்ரீவில்லிப்புத்தூர் பிள்ளையார்குளம் சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. டிரஸ்டி டாக்டர் அக்சயா வரவேற்றார். பள்ளி குழுமத்தலைவர் குமரேசன், மேனேஜிங் டிரஸ்டி டாக்டர் சித்ரா குமரேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். மூத்த முதல்வர் முருகதாசன், முதல்வர் அனுசுயா, துணை முதல்வர் சவுந்திரபாண்டி என்ற கவுந்தரி, ஆலோசகர் பாரதி, நிர்வாக அதிகாரி அமுதா முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ராஜபாளையம் தொழிலதிபர் ராம்சிங்கும், விருந்தினராக ராஜபாளையம் நகர் மன்ற தலைவி பவித்ரா ஷியாமும் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களை ஆங்கிலத்துறை ஆசிரியை இந்திரா ரபீந்திரன் அறிமுகம் செய்தார்.

    பள்ளி குழுமத்தலைவர் குமரேசன் விருந்தினர்களை கவுரவித்தார். சிறப்பு விருந்தினர்கள் பேசினர். முதல்வர் அனுசுயா ஆண்டறிக்கை வாசித்தார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. துணை முதல்வர் சவுந்திரபாண்டி என்ற சவுந்தரி நன்றி கூறினார்.

    • பள்ளிகளில் ஆண்டு விழா நடந்தது.
    • உதவியாளர்கள் மலர்விழி, சரசுவதி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் ஷாஜகான் தலைமை தாங்கினார்.

    கல்வி அலுவலர் அகிலத்து இளவரசி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை ஜெயசாந்தி வரவேற்றார். தலைமையாசிரியை பூங்கொடி ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி மேலாண்மை குழு நிர்வாகி, பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சோழ வந்தானில் உள்ள சி.எஸ்.ஐ. தொடக்கப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவுக்கு தாளாளர் எபினேசர் துரைராஜ் தலைமை தாங்கினார். பெற்றோர்- ஆசிரியர் கழக கவுரவ ஆலோசகர் ஆதி பெருமாள் முன்னிலை வகித்தார்.

    பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், கவுன்சிலர் சத்தியபிரகாஷ், துணை சேர்மன் லதாகண்ணன் ஆகியோர் பரிசுவழங்கினர்.தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமார். வரவேற்றார். ஆசிரியை பிரேம்குமாரி ஆண்டறிக்கை வாசித்தார்.

    கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வட்டார கல்வி அலுவலர்கள் ஷாஜகான், அகிலத்து இளவரசி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் தமிழ்செல்வி ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வழங்கினர். உதவி ஆசிரியை திவ்யா நன்றி கூறினார்.

    ராயபுரம் ஆர்.சி. பள்ளி தலைமை ஆசிரியை பணி மாதா, சோழவந்தான் ஆர். சி. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராணி ஆசிர், பிர பாகர், மணிமேகலை, ஜாஸ்மின் ஜெனிபா ஆகியோர் பேசினர். உதவி ஆசிரியைகள் பிரேமா, அன்ன புஷ்பம், வனிதா, சாந்தகுமாரி, கிறிஸ்டிஜெய ஸ்டார் நிர்வாக ஆசிரியை அனிதா, இல்லம் தேடி கல்வியாசிரியைகள் ராக்கு, ரேகா, சத்துணவு அமைப்பாளர் முருகேசுவரி, உதவியாளர்கள் மலர்விழி, சரசுவதி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • மெட்ரிக் பள்ளியின் ஐந்தாம் ஆண்டு விழா நாளை நடைபெறுகிறது.
    • விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூரில் இயங்கி வரும் கிரீன் பார்க் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக் பள்ளியின் ஐந்தாம் ஆண்டு ஆண்டு விழா நாளை நடைபெறுகிறது.

    நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள்சங்க மாநில செயலாளர் நந்தகுமார் தலைமை தாங்குகிறார்.

    கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் ராஜா வரவேற்புரை ஆற்ற உள்ளார். கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சேர்மன் எவரெஸ்ட் முனிரத்தினம் முன்னிலை வகிக்கின்றார்.

    சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி தருமபுரி மாவட்ட அரசு வக்கீல்களின் உதவி இயக்குனர் சரவணப் பொய்கை மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர் டாக்டர் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

    இந்த நிகழ்ச்சியில் தகடூர் புத்தக பேரவை தலைவர் சிசுபாலன், உதவி செயற்பொறியாளர் சுரேஷ், விஜயகுமார், கல்வியாளர்கள் அருண், டாக்டர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேச உள்ளனர். கிரீன் பார்க் கல்வி நிறுவனத்தின் துணை தலைவர் பூவிழிமுனிரத்தினம் நிகழ்ச்சி களை ஒருங்கிணைக்கிறார்.

    விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    பள்ளி முதல்வர் சதானந்தம் நன்றியுரை ஆற்ற உள்ளார். பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொள்வதற்காக பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் இயக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என சேர்மன் முனிரத்தினம்அழைப்பு விடுத்துள்ளார். 

    • பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.
    • கலை நிகழ்சியில் பங்குபெற்ற மாணவ, மாணவி களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்சி பேசினார்கள்.

    ராயக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கல்வி மாவட்டம் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் கோவிந்தப்பா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணப்பா அனைவரையும் வரவேற்று பேசினார். பட்டதாரி ஆசிரியர் மகாதேவன் பள்ளி ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக ஒசூர் கல்வி மாவட்ட தொடக்ககல்வி அலுவலர் முனிராஜ், வட்டார கல்வி அலுவலர்கள் வேதா, கிருஷ்ணதேஜஸ் ஆகியோர் கலந்துக்கொண்டு கலை நிகழ்சியில் பங்குபெற்ற மாணவ, மாணவி களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்சி பேசினார்கள்.

    நிகழ்சியில் பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், இருபால் ஆசிரியர்கள் பொதுமக்கள் கலந்துக்கொண்டார்கள்.

    • பாரத் பள்ளியின் செயலர் டாக்டர் செண்பக விநாயகம் வரவேற்று பேசினார்.
    • பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார்.

    சிவகிரி:

    சிவகிரி பாரத் பள்ளியில் 21-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் உள்ள செல்ல ம்மாள் கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் மாறுவேட போட்டிகள், யோகா, கராத்தே, மாணவ - மாணவியர்களின் கவியரங்கம், பேச்சுப்போட்டி, பரத நாட்டியம், நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தர வடிவேலு, வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர். பாரத் பள்ளியின் செயலர் டாக்டர் செண்பக விநாயகம் வரவேற்று பேசினார். செல்லம்மாள் கல்வி அறக்கட்டளை இயக்குநர்கள் டாக்டர் சுசித்ரா என்ற ஆர்த்தி, டாக்டர் சூர்யா ஆகியோர் தொகுத்து வழங்கினர். செல்லம்மாள் அறக்கட்டளை சேர்மன் டாக்டர் சாந்தி சரவணபாய் குத்துவிளக்கு ஏற்றினார். பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார்.

    சிறப்பு விருந்தினர்களாக தனுஷ்குமார் எம்.பி. , தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட தி.மு.க. துணைச்செயலாளர் மனோ கரன், சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி செயலர் தங்கேஸ்வரன், சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா, செல்லம்மாள் கல்வி அறக்கட்டளை சுசித்ரா என்ற ஆர்த்தி, ராஜகுணசீலன், ராஜேந்திர கணேசன், தனிஸ்சுலாஸ், சுகதேவ் பேராசிரியர், வனச்சரக அலுவலர் மவுனிகா, துணை த்தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீத கிருஷ்ணன், மருதுபாண்டியன், பெற்றோர் ஆசிரியர் சங்க செயலாளர் ராமச்சந்திரன், தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் போது பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உருவப் படங்களை தனுஷ் குமார் எம்பி, யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், டாக்டர் செண்பகவிநாயகம், டாக்டர் சாந்தி சரவணபாய் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். கலைவாணி நன்றி கூறினார்.

    ஏற்பாடுகளை செல்லம்மாள் கல்வி அறக்கட்டளையின் செயலர், முதல்வர், சேர்மன் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழகள் வழங்கப்பட்டன.
    • மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    பர்கூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியின் ஆண்டு விழா "ப்ரெடிக்டர் 2047" என்ற தலைப்பில் நடந்தது.

    இந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கூத்தரசன் தலைமை தாங்கினார். பள்ளியின் முதல்வர் மஞ்சுளா வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் அறங்காவலர் லாசியா தம்பிதுரை, பர்கூர் முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ஆகியோர் விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, 12-ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு தங்க நாணயங்களை பரிசாக வழங்கினர்.

    மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழகள் வழங்கப்பட்டன. இதில் அசாரின் மிமிக்கிரி நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    இந்த விழாவில், ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியின் அறங்காவலர் சுரேஷ்பாபு, வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் இயக்குனர் விஜயலட்சுமி, வேளாங்கண்ணி குழும பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், பொறியாளர் சரவணன், தொழிலதிபர்கள் வேலாயுதம், ரகுராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    ×