search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 271734"

    • அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி மஞ்சுநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • பின்னால் வந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள கட்டிக்கான பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது25). இவர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் நிறுவனம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி மஞ்சுநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    அதேபோல் மாடச்சந்திரம் அருகே உள்ள குரள் நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (55). இவர் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற போது பின்னால் வந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது.

    அந்த வழியாக சென்ற வர்கள் பெருமாளை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு பெருமாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த இரு விபத்துகள் குறித்து குருபரப்பள்ளி போலீசார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதேபோல் கிருஷ்ணகிரி, அட்கோ பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் தொடுதே பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வந்த வாகனம் மோதியதில் ரமேஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இது குறித்து அட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் ரோட்டின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதியது.
    • போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை ராமநாதபுரம் ஒலம்பசை சேர்ந்தவர் அருண் (வயது 38). காமாட்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நந்தகுமார் (28). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சுங்கம் ரவுண்டானா அருகே சென்று கொண்டு இருந்தனர்.

    மோட்டார் சைக்கிளை அருண் ஓட்டிச் சென்றார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டுன் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இதில் இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அருண் இறந்து விட்டதாக தெரிவித்தனர். நந்தகுமார் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை- திருச்சி ரோட்டை 70 வது மதிக்கதக்க முதியவர் ஒருவர் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற லோடு வேன் முதியவர் மீது ேமாதியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய முதியவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவைஅரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முதியவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம் அருகே உள்ள திப்பம்பட்டியை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவரது மனைவி மோகன பிரியா (29). சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் கோவைப்புதூர் பிரிவு அருகே சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மோகன பிரியா பரிதாபமாக இறந்தார். இது குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சோணு கீழே விழுந்தார்
    • பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கோழிபதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி கவுரி (வயது32).

    சம்பவத்தன்று இவர் பொள்ளாச்சி வாய்க்கால் பாளையத்தை சேர்ந்த அரவிந்குமார் (20) என்பவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார். மோட்டார் சைக்கிள் பாலக்காடு - பொள்ளாச்சி ரோட்டில் சென்ற போது அந்த வழியாக சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கவுரியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சோணு (23). காளிபட்டியில் உள்ள கயிறு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் பல்லடம்-பொள்ளாச்சி ரோட்டில் சென்றார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சோணு பரிதாபமாக இறந்தார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சர்க்கார் சாமகுளத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (65). சம்பவத்தன்று இவர் தனது சைக்கிளில் கோட்டைபாளையம் - செட்டிப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள், சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மகேஸ்வரி சம்பவத்தன்று தனது கணவருடன் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார்.
    • மகேஸ்வரி தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    கோவை,

    பொள்ளாச்சி அருகே உள்ள மரப்பேட்டையை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 45).

    சம்பவத்தன்று இவர் தனது கணவருடன் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். மொபட் உடுமலை - பொள்ளாச்சி ரோட்டில் சென்ற போது அந்த வழியாக சென்ற லோடு வேன் மொபட் மீது மோதியது.இதில் மகேஸ்வரி தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மகேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூலூர் அருகே உள்ள சித்தநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (35). லோடு மேன். சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் பாப்பம்பட்டி - செட்டிப்பாளையம் ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுப்பிரமணியம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மசக்காளி பாளையத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 42). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் விளாங்குறிச்சி ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அய்யப்பனை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அடுத்தடுத்து 3 பேர் மாடு முட்டியதில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள சென்றாயன் கவுண்டனூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 55). விவசாயி. இவர் ஊர்கவுண்டராக இருந்து வந்தார். இந்த நிலையில் இந்த கிராமத்தின் அருகே உள்ள புலியரசி கிராமத்தில் கடந்த 17-ந் தேதி எருது விடும் விழா நடந்தது. அதை பார்க்க ராமசாமி சென்றார்.

    அந்த நேரம் ஓடி வந்த மாடு ஒன்று ராமசாமியை முட்டி தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி நேற்று இறந்தார். இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த 17-ந் தேதி வேப்பனப்பள்ளி அருகே ராமச்சந்திரம் கிராமத்தில் மாடு முட்டியதில், ராஜி (72) என்ற மூதாட்டி படுகாயம் அடைந்து இறந்தார். அதன் தொடர்ச்சியாக அதே நாளில் வி.மாதேப்பள்ளியில் எருது விடும் விழாவில் மாடு முட்டியதில், நாடுவனப்பள்ளியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவன் பவன்குமார் (11) பரிதாபமாக இறந்தான்.

    அதே போல தற்போது புலியரசியில் மாடு முட்டியதில் விவசாயி ராமசாமி பலியாகி உள்ளனர். வேப்பனப்பள்ளி, குருபரப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் அடுத்தடுத்து 3 பேர் மாடு முட்டியதில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • திருச்சுழி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
    • இந்த விபத்து குறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மானூரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 28). இவர் தனது நண்பர்கள் முத்துக்குமார், நாகூர்கனி ஆகயோருடன் விடத்தகுளத்தில் இருந்து வீரசோழன் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்திசையில் கணேசமூர்த்தி என்பவர் மலைச்சாமி என்பவருடன் மோட்டார்சைக்கிளில் வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக 2 மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் தினேஷ்குமார், கணேசமூர்த்தி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    படுகாயம் அடைந்த முத்துக்குமாரை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இந்த விபத்து குறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாம்பல் ஏற்றிக்கொண்டிருந்த லாரி, கோமங்கலம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • பள்ளி மாணவி உட்பட 3 பேர் ஒரே நேரத்தில் உயிரிழந்தனர்.

    கடலூர்:

    விருத்தாச்சலம் அருகே தொரவலூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா அருளரசன். இந்த தம்பதி மகள் ஓவியா (வயது 15). விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஓவியாவின் பெற்றோ ர்கள், மேல்ம ருவத்தூர் கோவிலுக்கு சென்றதினால், பள்ளி யிலிருந்து அவர்களது மகளை, வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக, அதே ஊரை சேர்ந்த, உறவினரான குமாரசாமி (64) என்பவர் தனது பேரனான தருணுடன் (6), மோட்டார் சைக்கிளில் சென்றார். பள்ளியில் மாணவி ஓவியாவை அழைத்து கொண்டு தொரவளுர் கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை குமாரசாமி ஓட்டி வந்துள்ளார்.

    அப்போது நெய்வே லியில் இருந்து சாம்பல் ஏற்றிக்கொ ண்டு, கோயமுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, கோமங்கலம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு லாரியை நிறுத்தாமல் ஓட்டுநர் தப்பி ஓடினார். இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக விருத்தா ச்சலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    தகவல்அறிந்த போலீசார் 3 பேர் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை, வேப்பூரில் ேபாலீசார் மடக்கிப் பிடித்தனர். லாரி ஒட்டி வந்த விருத்தாசலம் அருகே மாத்தூரை சேர்ந்த மணிகண்டன் (34) என்பவரை போலீசார் கைதுசெய்தனர். சாலை விபத்தில் பள்ளி மாணவி உட்பட 3 பேர் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவத்தால் தொரவலூர் கிராமம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி- தாராபுரம் ரோட்டில் சென்றார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை சிவானந்தாபுரம் அருகே உள்ள மணி நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் சுதீஸ் (வயது 19).

    இவர் அந்த பகுதியில் ஓர்ஷாப்பில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பிரவீன் என்பவரது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சுதீசை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நீலாம்பூர் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி நல்லம்மாள் (வயது 60). சம்பவத்தன்று இவர் தனது கணவரின் ெமாபட்டில் பின்னால் அமர்ந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நல்லம்மாள் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    திருப்பூர் மாவட்டம் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (47).

    சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி- தாராபுரம் ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் கணேசன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கணேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ரவி காரில் ஒடக்கால்பாளையத்தில் இருந்து சுல்தான்பேட்டை நோக்கி சென்றார்.
    • கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த முள்வேலி மீது ேமாதியது.

    கோவை,

    கோவை சூலூரை சேர்ந்தவர் ரவி (வயது 58). இவர் சுல்தான்பேட்டை மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது காரில் ஒடக்கால்பாளையத்தில் இருந்து சுல்தான்பேட்டை நோக்கி சென்றார்.

    கார் எஸ்.எஸ். நகர் அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த முள்வேலி மீது ேமாதியது. இதில் படுகாயம் அடைந்த ரவியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர் தொட்டிப்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன் (36). டெய்லர்.

    சம்பவத்தன்று இவர் தனது நண்பரான பரமக்குடியை சேர்ந்த சண்முகநாதன் (25) என்பவரை தனது மொபட்டில் ஏற்றிக்கொண்டு அன்னூர்-கரியம் பாளையம் ரோட்டில் சென்றார்.

    அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் நின்று கொண்டு இருந்த தனியார் பஸ் மீது மொபட் மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாண்டியராஜன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செட்டிப்பாளையம் அருகே உள்ள அருகம்பாளையத்தை சேர்ந்தவர் விஷ்ணு பிரதாப் (24).

    சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் சரவணம்பட்டி சத்தி ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் விஷ்ணு பிரதாப் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • இளங்கோவன் சம்பவத்தன்று கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார்.
    • காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 57). காவலாளி. சம்பவத்தன்று இவர் கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் இளங்கோவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இளங்கோவன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூலுர் அருகே உள்ள அம்மன் நகரை சேர்ந்தவர் தங்கவேலு (41). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் அவினாசி - கோவை ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகிறார்கள்.

    நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் ரங்கசாமி (36). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவை -மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரங்கசாமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கரூர் மாவட்டம் பள்ளபட்டி சந்தை பேட்டை தெருவைச் சேர்ந்தவர் ஷேக்பரீத் (வயது42). இவரது மகள் மவுபியா (12).
    • பண்ணப்பட்டி குடகனாற்றில் மவுபியா இறங்கி குளிக்க முயன்றப்போது நீரில் மூழ்கியுள்ளார்.

    கரூர்,

    கரூர் மாவட்டம் பள்ளபட்டி சந்தை பேட்டை தெருவைச் சேர்ந்தவர் ஷேக்பரீத் (வயது42). தவணை முறையில் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவர் மகள் மவுபியா (12). அங்குள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களது உறவினர் தெற்கு தெருவைச் சேர்ந்த ரியாஜுதீன் (38) ஜவுளித் தொழில் செய்து வருகிறார். இவர்கள் 3 பேர் உள்ளிட்ட 3 குடும்பங்களை சேர்ந்த 4 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் அம்மாபட்டியில் உள்ள கோரித்தோட்டத்தில் உள்ள தர்காவில் நேற்று வழிப்பாடு செய்தனர்.

    அதன்பின் எருமார்பட்டி அருகேயுள்ள பண்ணப்பட்டி குடகனாற்றில் மவுபியா இறங்கி குளிக்க முயன்றப்போது நீரில் மூழ்கியுள்ளார். அப்போது ஷேக்பரீத், ரியாஜுதீன் ஆகிய இருவரும் மவுபியாவை காப்பாற்ற நீரில் இறங்கியப்போது அவர்களும் நீரில் மூழ்கினர்.

    இதையடுத்து அரவக்குறிச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை நிலையத்திற்கு தகவல் அளித்ததை அடுத்து தீயணைப்பு வீரர்கள் வந்து மூவரின் சடலங்களை மீட்டனர்.

    இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து 3 பேரில் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×