என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 95142"
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன் பாளையம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் நடராஜ். விசைத்தறி கூடம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கன்னியம்மாள். இவர்களது மகன் கவின் (11).இவர்கள் மாருதி காரில் பல்லடத்திற்கு மளிகை பொருட்கள் வாங்க வந்தனர். இவர்களுடன் நடராஜ் தம்பி மனைவி பூங்கொடி, மகன் கவுசிக் ஆகியோரும் வந்தனர்.
பல்லடத்தில் மளிகை பொருட்கள் வாங்கி விட்டு காரில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். கிருஷ்ணாபுரம் பிரிவில் சென்று கொண்டு இருந்த போது பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் நோக்கி வந்த சரக்கு வேனும் காரும் நேருக்கு நேர் மோதி கொண்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களுக்கு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் வழியிலே சிறுவன் கவின் பரிதாபமாக இறந்தான். மற்ற 4 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து குறித்து காமநாயக்கன் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கார் மீது மோதிய சரக்கு வேன் ரோடு ஓரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. அதனை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
பு.புளியம்பட்டி:
கோவையில் இருந்து சத்தியமங்கலத்துக்கு ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளி குளம் அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக கார்நாடகா மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு செல்வதற்காக ஒரு கார் புங்கம்பள்ளி அருகே வந்தது. அப்போது புங்கம்பள்ளி குளம் அருகே வந்த போது அரசு பஸ் மற்றும் கார் எதிர் பாராத விதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. அப்போது பஸ்சில் வந்த பயணிகள் அலறினர்.
இதில் கார் அப்பளம் போல் நொருங்கியது. பஸ்சின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த 3 பேர் மற்றும் காரில் பயணம் செய்த 2 பேர் என மொத்தம் 5 பேர் படுகாயம் அடைந் தனர்.
அவர்கள் 108 ஆம்புலன்சு மற்றும் தனியார் ஆம்புலன்சுகள் மூலம் உடனடியாக மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராயக்கோட்டை ரெயில் நிலையம் முன்பு இட்லி கடை வைத்திருந்தவர் கனகா (வயது 55). இவர் ரெயில் நிலையம் அருகில் சாலையை கடக்க முயன்றார். அப்போது ராயக்கோட்டையில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் கனகா மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கனகா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கனகாவின் உறவினர் சந்தானபாண்டி ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் மற்றும் போலீசார் கனகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து விபத்தை ஏற்படுத்திய கணவாய் பகுதியைச் சேர்ந்த சின்ன பெருமாள் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்போரூர்:
புதுச்சேரி பந்துரெட்டி புரத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (21). இவருடைய நண்பர் ரஞ்சித்குமார் (24).
நேற்று இரவு தினேஷ், ரஞ்சித்குமார் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்தை அடுத்த கடும்பாடி அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது.
இரவு 10 மணியளவில் சென்னையில் இருந்து புதுச்சேரியை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 2 வாலிபர்களும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
இதில் படுகாயம் அடைந்த தினேஷ், ரஞ்சித்குமார் இருவரும் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் விரைந்து சென்று விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரியபாளையம்:
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் தர்மேந்திரா (வயது 39). இவரது மனைவி பெயர் ஜோதி பிரியா (34).
பிரியாவின் தாய்வீடு ஆந்திர மாநிலம் நகரியில் உள்ளது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தர்மேந்திரா தனது மனைவியுடன் காரில் சென்று இருந்தார். நிகழ்ச்சி முடிந்த உடன் சென்னை திரும்பினார்கள். தர்மேந்திரா காரை ஓட்டி வர முன்னிருக்கையில் ஜோதி பிரியா அமர்ந்து வந்தார்.
சென்னை தேசிய நெடுஞ் சாலையில் பெரியபாளையத்தை அடுத்த தானா குளம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது கார் தர்மேந்திராவின் கட்டுப்பாட்டை இழந்த தாறுமாறாக ஓடியது. சாலை தடுப்பில் பயங்கர சத்தத்துடன் மோதியது.
இந்த விபத்தில் முன்னிருக்கையில் அமர்ந்து இருந்த ஜோதி பிரியா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தர்மேந்திரா படுகாயமடைந்தார்.
தகவல் அறிந்த பெரியபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தனர்.
ஜோதி பிரியாவின் உடல் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படுகாயமடைந்த தர்மேந்திரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வத்தலக்குண்டு:
மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்தவர் ராமலட்சுமி (வயது21). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. இவரது நண்பர் உசிலம்பட்டி கொக்குளத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (27).
இவர்கள் 2 பேரும் கடந்த 19-ந் தேதியன்று ஒரு மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டு- பெரியகுளம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். எல்.ஐ.சி. அலுவலகம் அருகே சென்றபோது திடீரென பைக் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது.
பலத்த காயம் அடைந்த 2 பேரும் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தொடர் சிகிச்சையில் இருந்த அவர்கள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை ஆர்.எஸ். தங்கமாபுரிப்பட்டணம் பெரியார் நகரை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன், (வயது 48).
இவர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
தற்போது கோபால கிருஷ்ணன் இங்கிருந்து மாற்றுப்பணிக்காக திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
வழக்கம்போல் நேற்று இரவு பணி முடிந்து கோபால கிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார். அவர், பவானி, அம்மாப்பேட்டை, நெருஞ்சிபேட்டை வழியாக வந்து கொண்டிருந்தார்.
இரவு சுமார் 8.40 மணி அளவில் மேட்டூர் அருகே உள்ள நவப்பட்டி என்ற இடத்தில் வந்தபோது அந்த வழியாக சென்ற ஈச்சர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் கோபால கிருஷ்ணன் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த அடிப்பட்டு, சம்பவ இடத்திலேயே துடித்துடித்து பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து, மேட்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோபால கிருஷ்ணன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார், சம்பந்தப்பட்ட ஈச்சர் லாரியை பறிமுதல் செய்து, அந்த லாரியை ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் கோவிந்தன் (34) என்பவரை கைது செய்தனர்.
விபத்தில் பலியான கோபால கிருஷ்ணனுக்கு சுஜிதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சஞ்சனா என்ற மகளும் உள்ளனர். இருவரும் அங்குள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
பவானி மற்றும் ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சக போலீசார் மத்தியில் இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கவுண்டம்பாளையம்:
கோவை பெரியநாயக்கன் பாளையம் அடுத்துள்ள பிளிச்சி பெட்டதாபுரம் தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 50). இவரது சொந்த ஊர் பொள்ளாச்சியை அடுத்த தொழில்பேட்டையாகும். கணவர் இறந்ததையடுத்து இங்கு வந்து வசித்து வருகிறார். இவருக்கு குழந்தைகள் இல்லை.
இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஒட்டலில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியவில் வீட்டில் இருந்து மளிகை கடைக்கு செல்ல மேட்டுப்பாளையம் சாலையை கடந்துள்ளார். அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவையை நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை தேடி வருகின்றனர்.
கோவை:
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மாயவேல். இவரது மகன் விஜயகுமார் (வயது23). இவர் கே.ஜி. சாவடியில் உள்ள ஒரு பேக்கரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் கோவை- பாலக்காடு ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சிலம்பூர் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 40). இவரது மகன்கள் விஜயராஜ்(14), தர்மேந்திரன்(11). இவர்கள் 3 பேரும் சம்பவத்தன்று ஒரு மோட்டார் சைக்கிளில் சிலம்பூர் பூக்குழி சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த சாலையில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது, எதிரே வந்த சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆண்டிமடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் கொண்டு செல்லப்பட்ட போது விஜயராஜ் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமுகை அருகே உள்ள பெத்திகுட்டையை சேர்ந்தவர் வீரன் (வயது 45). கூலித் தொழிலாளி. இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த முருகன் (40).
சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மேட்டுப்பாளையம்- சத்தி ரோட்டில் நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வேன் 2 பேரும் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே வீரன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிறுமுகை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூலூர் செஞ்சேரிபுதூரை சேர்ந்தவர் குமரேசன் (32). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் பல்லடம்-உடுமலை ரோட்டில் சென்றார்.
அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த லாரி திடீரென பின்னால் வந்தது. இதனை கவனிக்காமல் சென்ற குமரேசன் கண்இமைக்கும் நேரத்தில் லாரி மீது மோதினார்.
இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் ஆனால் செல்லும் வழியிலேயே குமரேசன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூலூரை சேர்ந்தவர் செல்வராஜ் (34). தனியார் நிறுவன ஊழியர்.
சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் சூலூர்- எம்.ஜி.புதூர் ரோட்டில் சென்றார். அப்போது திடீரென நாய் குறுக்கே வந்தது. நாய் மீது மோதாமல் இருக்க செல்வராஜ் பிரேக் போட்டார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த செல்வராஜ் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் சாமிநாதன் (25).
சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் செஞ்சேரி மலை ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சாமிநாதன் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். சுல்தான்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரக்கோணம் அருகே உள்ள பள்ளூர் காலனியை சேர்ந்தவர் ரஜினி (வயது 35) கூலி தொழிலாளி. இவருக்கு ஆகாஷ் (7), தினேஷ் (5). 2 மகன்கள் உள்ளனர். 3 பேரும் நேற்று இரவு பள்ளூர் மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே மணல் கடத்தி வந்த டிராக்டர் பைக் மீது மோதியது. இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி ரஜினி மற்றும் தினேஷ் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தனர். ஆகாஷ் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதனையடுத்து டிராக்டர் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து தகவலறிந்த நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்தவரை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் உடல்களை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
தகவலறிந்த ரஜினியின் உறவினர்கள் அரக்கோணம் காஞ்சிபுரம் செல்லும் சாலையில் நள்ளிரவு மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், டி.எஸ்.பி.விஜயகுமார், தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இந்த பகுதியில் மணல் திருட்டு அதிகளவில் நடைபெறுகிறது இதன் காரணமாக பல உயிர்சேதம் ஏற்படுகிறது.
எனவே மணல் கடத்தலை தடுத்து ரஜி சாவுக்கு காரணமான டிராக்டர் டிரைவரை கைது செய்ய வேண்டும் என்று ஆவேசமாக கூறினர்.
விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதையடுத்து அதே பகுதியை சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் ராஜேஷ் (30) மற்றும் டிரைவர் சதீஷ் (29) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்