search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95362"

    • திருச்சி மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுயர மாலையை மதுரை நிர்வாகிகள் அணிவித்தனர்.
    • 51- வது ஆண்டு விழா என முப்பெரும் விழாவை நடத்தினார்.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தனது பலத்தினை நிரூபிக்கின்ற வகையில் திருச்சி ஜி கார்னர் மைதா னத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ெஜயலலிதா பிறந்த நாள் விழா, அ.தி.மு.க. வின் 51- வது ஆண்டு விழா என முப்பெரும் விழாவை நடத்தினார். மாநாடுபோல் நடந்த இந்த விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வம் திறந்த வாகனத்தில் வந்தார். அப்போது அவர் தொண்டர்களை பார்த்து கையசைத்து வரவேற்பை ஏற்றுக் கொண்டார். அதிகளவில் தொண்டர்கள் திரண்டதால் விழா ேமடைக்கு ஓ.பன்னீர் செல்வம் வர தாமதமானது.

    அவர் மேடை ஏறியவுடன் மதுரை நிர்வாகிகள் இளைஞர் அணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ் மோகன், மாவட்டச் செயலாளர்கள் அய்யப்பன், முருகேசன் ஆகியோர் ஆள் உயர மாலை அணிவித்து வரவேற்றனர். அப்போது தேனி பாராளுமன்ற தொகுதி எம்.பி. ரவீந்திரநாத், மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஆட்டோ கருப் பையா, கண்ணன், கொம் பையா, கிரி, கருந்த பாண்டி, பாரப்பத்தி ஊராட்சி தலை வர் முத்தையா, கமலக் கண்ணன் ஓம் ஜெயபிரகாஷ், ரமேஷ், ஆட்டோ முத்துராம லிங்கம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • எடப்பாடி தரப்பினர் அதிமுகவிற்கு முட்டுக்கட்டை
    • திருச்சியில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

    திருச்சி

    ஓ.பி.எஸ். அணி சார்பில் திருச்சி பொன்மலை ஜி. கார்னர் மைதானத்தில் நாளை முப்பெரும் விழா மாநாடு நடைபெறுகிறது. இதனைப் பார்வையிட்ட அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-இது வரலாற்றை படைக்கும் மாநாடாக இருக்கும்.அ.தி.மு.க.வில் ஒருங்கிணைந்த என்கிற பேச்சுக்கே இடமில்லை. தொண்டர்களை அழைத்து உங்கள் இயக்கத்தை நீங்களே நடத்துங்கள் என கூறுவதற்கு தான் இந்த மாநாடு.ஒரு சிலர் பொதுக்குழுவை அவர்களே நியமித்து தலைமை கழக நிர்வாகிகளை நியமித்தார்கள். தொண்டர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். தேர்தல் கமிஷன் சின்னம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை ஏனென்றால் இங்கு நிர்வாகம் முடங்கவே இல்லை. ஒருங்கிணைப்பாளருக்கு முரணாக செயல்பட்டால் அந்த பொதுக்குழுவை கலைக்க ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் உள்ளது. அ.தி.மு.க.வின் சட்ட விதிகளை புரிந்து கொள்ளாமல் நீதிபதிகள் தீர்ப்பு வழங்குகிறார்கள். அவர்களுக்கு புரிய வைக்கும் அளவுக்கு எங்களுக்கு சக்தி இல்லையோ என தோன்றுகிறது.அ.தி.மு.க.வில் தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கிறதா, ஓ.பி.எஸ்.க்கு இருக்கிறதா என்பதை நாளை மாநாட்டின் மூலம் தெரிந்து கொள்வீர்கள்.எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் எங்கள் மாநாட்டிற்கு மட்டுமல்ல அ.தி.மு.க.விற்கே முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓ.பி.எஸ்.சின் திருச்சி மாநாடு அ.தி.மு.க.வுக்கு திருப்புமுனையாக அமையும் என மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
    • மாநாடு நடைபெறுகிறது.

    மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் திருச்சியில் வருகிற 24-ந்தேதி அ.தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்கும் பிரமாண்ட மாநாடு நடை பெறுகிறது.

    இந்த மாநாட்டிற்கு மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்க வசதியாக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் கூறியதாவது:-

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆசி பெற்ற தொண்டர்களின் காவலர் முன்னாள் முதல்- அமைச்சர், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தலைமை யில் திருச்சியில் வருகிற 24-ந்தேதி 5 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் பிரமாண்ட மாநாடு நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் மதுரை மாநகர் மாவட்டம் சார்பில் 125 வாகனங்களில் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்கி றோம். இதற்காக வருகிற 24-ந்தேதி காலை 11 மணிய ளவில் மதுரை நகர் பகுதி யில் இருந்து அனைத்து வாகனங்களும் ஒத்தக்கடை விவசாய கல்லூரி அருகே ஒன்றிணைந்து திருச்சியை நோக்கி புறப்படுகிறோம்.

    திருச்சி மாநாடு அ.தி.மு.க. வரலாற்றில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு பிறகு அ.தி.மு.க. ஒருங்கி ணைப்பாளர் ஒ. பன்னீர் செல்வம் தலைமையில் கட்சி தொண்டர்கள் அணி வகுத்து விட்டார்கள் என்ற புதிய திருப்புமுனையை நிச்சயம் ஏற்படுத்தும்.

    இந்த மாநாட்டில் மதுரை, விருதுநகர், சிவ கங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இருந்து சுமார் 5 லட்சத்திற் கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாடு மிகப்பெரிய வெற்றி மாநாடாக அமையும் என்பதில் ஐயமில்லை.

    இதை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தொண்டர்களை நேரில் சந்திக்க முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும்

    • முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வலியுறுத்த வேண்டும் என்று பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.
    • சதீஷ், ஆசாத், சோலைமணி கண்டன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    வாடிப்பட்டி

    மதுரையை தொழில் நகரமாக்க முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வலியுறுத்த வேண்டும் என்று பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், கலெக்டர் அனீஷ்சேகரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    வரலாற்று சிறப்பு மிக்க பழமையான நகரமாக மதுரை உள்ளது. மதுரைக்கென்று பல தனிசிறப்புகள் உள்ளன. மதுரையை தொழில் நகர மாகவும் அழைக்கப்பட வேண்டும். மதுரையில் மிகப்பெரிய தொழிற்சாலைகளோ, மிகப்பெரிய தொழில் நிறுவனங்களோ இல்லை.

    இதனால் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வசிக்கும் இளைஞர்கள் வேலைதேடி சென்னை, திருப்பூர், கோவை போன்ற தொழில் நகரங்களை நோக்கி செல்கின்றனர்.

    இன்னும் சில ஆண்டு களில் மதுரை உள்கட்ட மைப்பு அமையப்பெற்ற நகரமாக மாற உள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி மதுரையை தொழில் நகரமாக மாற்றும் வகையிலும் மிகப்பெரிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் முதலீட்டாளர்கள் மாநாடு மதுரையில் நடந்த மாநில அரசை வலியுறுத்த வேண்டும்.

    தற்பொழுது தமிழக அரசால் மாட்டுத்தாவ ணியில் அமைய இருக்கும் டைட்டல் பார்க்கை இதற்கு முந்தைய தி.மு.க ஆட்சியின் போது தகவல் தொழிநுட்ப பூங்காவுக்கு என்று ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்ட வடபழஞ்சியில் அமைக்க வேண்டும்.

    அந்த பகுதியில் டைட்டல் பார்க் அமையும் பட்சத்தில் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வளர்ச்சி பெறும். அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமும் உயரும். அதே போல் மதுரையை சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்க ளிலும் கிரைனைட் குவாரிகள் இயங்கி வருகிறது.

    மதுரையில் மட்டும் அனைத்து கிரைனைட் குவாரிகளும் தடைசெய்யபட்டுள்ளது. இதனால் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கபட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் கிரானைட் குவாரி செயல்படுகிறது. ஆனால் அதன் அருகில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள கிரானைட் குவாரிகள் இயங்கவில்லை. இது மிகவும் வருந்தத்தக்கது.

    அரசு விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட குவாரிகளை தவிர்த்து மற்ற கிரைனைட் குவாரிகள் இயங்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அப்போது மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சசிக்குமார், ஊடகபிரிவு கோட்ட பொறுப்பாளர் நாகராஜன், முன்னாள் ஓ.பி.சி. அணி மாநில துணை தலைவர் கே.ஆர்.முரளி ராமசாமி, வக்கீல் ரவீந்திரன், வேல்முருகன், வெற்றி கண்ணன், காளிதாஸ் கருப்பையா, சதீஷ்,

    ஆசாத், சோலைமணி கண்டன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநாடு நடந்தது.
    • மானாமதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கிளை மாநாடு துணைத்தலைவர் பொன் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் காந்தி முன்னிலை வகித்தார்.

    துணைத்தலைவர் மோகனசுந்தரம் வர வேற்றார். செயலாளர் முத்துமாடன் அறிக்கை வாசித்தார். பொருளா ளர் திருமாவளவன் வரவு,செலவு அறிக்கை வாசித்தார். மாவட்ட தலைவர் திரவியம், மாவட்ட தணிக்கையாளர் வாழவந்தான், செயலாளர் கணேசன், இணைச் செயலாளர் தங்கவேலு ஆகியோர் பேசினர். மாநில செயலாளர் முத்துராமலிங்கம் சிறப்புரையாற்றினார்.

    கணேசன் செயலாளராகவும், ஞானசேகரன் மாவட்ட பிரதிநி தியாகவும் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில், சென்னையில் இருந்து மானாமதுரை வழியாக செங்கோட்டை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ெரயிலை தினசரி இயக்கவேண்டும்.

    ராமேசுவரம் மார்கத்தில் இருந்து பகலில் ெரயில் வசதி இல்லாத நிலையில் காரைக்குடி வரை வரும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ெரயிலை மானாமதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் 24-ந்தேதி நடைபெறும் ஓ.பி.எஸ். மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது
    • நாளை பிரீஸ் ஓட்டலில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது

    திருச்சி:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஓரங் கட்டப்பட்டார். அதைத் தொடர்ந்து அரசியல் களத்தில் தனியாக இயங்கி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து போராடி வரு–கிறார்.இந்த நிலையில் வரவிருக் கின்ற பாராளுமன்ற தேர் தலை முன்னிட்டு தனது பலத்தை நிரூபிப்பதற்காக திருச்சியில் மாநிலம் தழுவிய மாநாடு நடத்த திட்டமிட்டார். அதன்படி இந்த மாநாடு வருகிற 24-ம் தேதி திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் நடைபெறுகிறது.

    இதற்கான காவல்துறை அனுமதி மற்றும் ரயில்வே துறை அனுமதியை பெற்றுள்ளனர்.இதற்கிடையே நாளை (திங்கட்கிழமை) மாலை திருச்சி பிரீஸ் ஓட்டலில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்துகொண்டு ஆலோ–சனைகள் வழங்குகிறார். மாநாடு முன்னேற்பாடுகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.


    • தன்னார்வலர்களுக்கான 6-வது மாவட்ட மாநாட்டை நேற்று வோர்ட் நிறுவனம், தமிழ்நாடு அல்லியன்ஸ் மற்றும் டான்போஸ்கோ அன்பு இல்லம் இணைந்து நாமக்கல்லில் நடத்தின.
    • புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் 150 கிராமங்களில் வோர்ட் தொண்டு நிறுவனம், டான்போஸ்கோ அன்பு இல்லத்தினர் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்கள் மேம்பாடு-பாதுகாப்பு பணிகள், நூற்பாலைகளில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் நலன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கான 6-வது மாவட்ட மாநாட்டை நேற்று வோர்ட் நிறுவனம், தமிழ்நாடு அல்லியன்ஸ் மற்றும் டான்போஸ்கோ அன்பு இல்லம் இணைந்து நாமக்கல்லில் நடத்தின.

    நாமக்கல் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான விஜயபாஸ்கர் தலைமை தாங்கி, வோர்ட் மற்றும் தொன்போஸ்கோ நிறுவன செயல்பாட்டு புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து, சிறந்த தன்னார்வலர்களுக்கு விருதுகள் வழங்கி பேசினார். இதில் நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கீதா, குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலர் அந்தோணி ஜெனிட், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், சி.எஸ்.சி. மேலாளர் மாணிக்கவாசகம் ஆகியோர் பேசினர். மாநாட்டில் தமிழ்நாடு அல்லியன்ஸ் நிறுவனர் பாலமுருகன், புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தார்.

    இதில் திட்ட ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு அல்லியன்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிபிஜா, வோர்ட் நிறுவனம், தமிழ்நாடு அல்லியன்ஸ் மற்றும் டான்போஸ்கோ அன்பு இல்ல பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வோர்ட் நிறுவன இயக்குனர் ரெனிடா சரளா வரவேற்றார். தொன்போஸ்கோ நிறுவன இயக்குனர் காஸ்மீர் ராஜ் நன்றி கூறினார்.

    • முப்பெரும் மாநாட்டில் மாவட்டத்தில் இருந்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்ள வேண்டும்.
    • அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நிச்சயமாக வரவே முடியாது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தெற்கு, வடக்கு மாவட்ட அ.தி.மு.க (ஓ.பி.எஸ் அணி) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடந்தது.

    மாவட்ட அவை தலைவர்கள் பூண்டி கிருஷ்ணன், ராஜரத்தினம் ஆகியோர் தலைமை தாங்கினர். பேராவூரணி தொகுதி செயலாளர் நத்தியானந்தம், பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சிற்றரசு, கரந்தை பகுதி செயலாளர் அறிவுடைநம்பி, திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் யூனியன் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில் வரவேற்றார்.

    தொடர்ந்து வடக்கு மாவட்ட செயலாளர் எம்.ஜி.எம்.சுப்பிரமணியன் பேசினார்.

    இதையடுத்து தெற்கு மாவட்ட செயலாளரும் இணை ஒருங்கிணைப்–பாளருமான ஆர்.வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கிய போது பொது செயலாளரை தொண்டர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என்று சட்ட விதியை கொண்டு வந்தார். அதை யாராலும் மாற்ற முடியாது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பொதுசெயலாளர் ஜெயலலிதா தான் என்பதால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இன்று கட்சி பேராசைகாரர்கள் கையில் போய்விட்டது.

    திருச்சியில் நடக்க உள்ள முப்பெரும் மாநாட்டில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதா தான். வேறு யாரையும் ஏற்பதில்லை. எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருக்கும் பொது செயலாளர் தேர்தலை வன்மையாக கண்டிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், பொருளாளர் ராஜா, திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினுபாலன், பகுதி செயலாளர்கள் ரமேஷ் , சண்முகபிரபு, சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் நாஞ்சி வ.சத்தியராஜ், திருவையாறு தெற்கு ஒன்றிய செயலாளர் நீலமேகம், முன்னாள் துணை மேயர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், பாவா என்ற ராமசந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் குழந்தைசாமி, கவுன்சிலர் சரவணன், மகளிரணி செயலாளர்கள் அமுதாரவிச்சந்திரன், அனுசியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்டை பகுதி செயலாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.

    பின்னர் வைத்தி லிங்கம் எம்.எல்.ஏ. அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க.வுடன் வருகிற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி கிடையாது என்று அண்ணாமலை கூறிய கருத்து அவரது கருத்து தான். பா.ஜ.க.வின் மேலிட தலைவர்கள் கருத்து கூறவில்லை. இதற்கு நான் பதில் கூற வேண்டியதில்லை.

    தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக இன்னமும் ஓ.பன்னீர்செல்வமே உள்ளார். எனவே எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என நம்புகிறோம்.

    டி.டி.வி.தினகரன், சசிகலா என யாராக இருந்தாலும் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்று சேர்த்து அ.தி.மு.க.வை வலுப்படுத்துவோம்.

    அ.தி.மு.க. பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி நிச்சயமாக வரவே முடியாது. பொதுசெயலாளர் தேர்தல் என்பது முறைப்படி அறிவிக்க வேண்டும். ஆனால் எதுவும் முறைப்படி நடைபெறவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தோள் சீலை போராட்ட 200-வது மாநாட்டில் 2 முதலமைச்சர்கள் பங்கேற்பதால் நாகர்கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    • மாநாடு நடைபெறும் நாகர்கோவில் நாகராஜா திடல் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில்:

    இந்தியா முழுவதும் பெண்கள் தோள் சீலை அணியும் உரிமை கடந்த 1822-ம் ஆண்டு தொடங்கிய தோள் சீலை போராட்டம் வாயிலாக கிடைத்தது.

    இந்த போராட்டத்தில் தமிழகத்தில் அய்யா வைகுண்டரும், கேரளாவில் நாராயண குருவும், சீர்திருத்த கிறிஸ்தவ சமய தொண்டராக விளங்கிய சார்லஸ் மீட் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டம் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவடைவதை தொடர்ந்து தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு நிறைவு மாநாடு நடத்தப்படுகிறது.

    நாகர்கோவில் நாகராஜா திடலில் இன்று மாலை 6 மணிக்கு இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பங்கேற்கிறார்கள்.

    மேலும் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ், விஜய்வசந்த் எம்.பி. பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள்.

    நாகர்கோவிலில் நடைபெறும் இந்த விழாவில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

    தோள் சீலை போராட்ட 200-வது மாநாட்டில் 2 முதலமைச்சர்கள் பங்கேற்பதால் நாகர்கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாநாடு நடைபெறும் நாகர்கோவில் நாகராஜா திடல் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

    டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் விழா மேடை மற்றும் மைதானத்தை ஆய்வு செய்தனர்.

    மாநாட்டையொட்டி இன்று நாகர்கோவில் நாகராஜாதிடல் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுபோல முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மாநாடு நடைபெறும் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடல் மின்னொளியில் ஜொலிக்கிறது. கூட்டணி கட்சியினர் அமர தனி இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது.

    இதுபோல விழாவுக்கு வரும் தொண்டர்கள் அமரவும், நிகழ்ச்சிகளை காணவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த விழாவில் பங்கேற்க கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு காரில் வருகிறார்.

    இதுபோல தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரையில் இருந்து காரில் நாகர்கோவில் வருகிறார். தோள் சீலை போராட்ட மாநாடு முடிவடைந்த பின்னர் அவர் இன்று இரவு நாகர்கோவிலில் தங்குகிறார். இதனால் அவர் தங்கும் விருந்தினர் மாளிகையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • ஜெய்ப்பூரில் கடந்த 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் உலகளாவிய மாநாடு நடைபெற்றது.
    • டெல்டா பகுதியில் 2-வது முறையாக இந்த விருதை பெறும் ஆஸ்பத்திரி.

    தஞ்சாவூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இந்தியா சுகாதார வழங்குநர்கள் சங்கம் சார்பில் உலகளாவிய மாநாடு நடைபெற்றது.

    இந்தியா முழுவதும் இருந்து 400-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் பங்கேற்றன.

    அந்தந்த மருத்தவ மனைகள் ஆற்றிய சேவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் சிறந்த செவிலியர் சேவைக்கான விருது தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. ஏ.எச்.பி.ஐ சார்பில் இந்த விருது வழங்கப்பட்டன.

    டெல்டா பகுதியில் இரண்டாவது முறையாக இந்த விருதை பெறும் முதல் மற்றும் ஒரே மருத்துவமனை மீனாட்சி மருத்துவமனை என்பது குறிப்பிடதக்கது.

    இந்த விருதை மருத்துவமனையின் பொது மேலாளர் டாக்டர் பாலமுருகன், செவிலியர் பிரிவின் கண்காணிப்பாளர் மகேஸ்வரி ஆகியோர் மருத்துவமனையின் சார்பில் பெற்று கொண்டனர்.

    அமைச்சர் மனோதங்கராஜ் தகவல்

    நாகர்கோவில்,பிப்.26-

    நாகர்கோவிலில் தோள் சீலை போராட்ட 200-வது ஆண்டு விழா மாநாடு வருகிற 6-ந்தேதி நடக்கிறது.

    இந்த மாநாடு குறித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் ஒழுகின சேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத் திற்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில்அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசினார். முன்னாள் எம்.பி. பெல்லார்மின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லசாமி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் திருமாவேந்தன், மாத்தூர் ஜெயன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், மண்டல தலைவர் ஜவகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தோள் சீலை போராட்ட 200-வது ஆண்டு மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மேயர் மகேஷ் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது:-

    இந்திய துணை கண்டத்தின் ஏற்றத்தாழ்வு மற்றும் அடக்குமுறைக்கு எதிரான சமூக நீதி போராட்டம் கடந்த 1822-ம் ஆண்டு முதல் திருவி தாங்கூர் சமஸ்தானத்தில் தொடங்கி யது. அதன்பிறகு பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களை போற்றுகிற வகையிலும், அவர்களது பெருமைகளை இளைஞர்களுக்கு எடுத்துரைக்கும் வகை யிலும் தோள் சீலை மாநாடு வருகிற 6-ந் தேதி மாலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடக்கிறது.

    இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். மேலும் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சி சார்பில் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பால கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் முத்தரசு மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலை வர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

    இதைத் தொடர்ந்து மறுநாள் 7-ந்தேதி காலை மாநகராட்சி கட்டி டத்தையும், ஒழுகின சேரியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் கருணாநிதி சிலையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். முன்னதாக 6-ந் தேதி இரவு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வு எடுக்கிறார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதைத் தொடர்ந்து நாகர்கோவில் நாகராஜா கோவில் மைதானத்தை அமைச்சர் மனோ தங்க ராஜ், மேயர் மகேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    • நாகர்கோவிலில் தோள் சீலை போராட்ட 200-வது ஆண்டு விழா மாநாடு வருகிற 6-ந்தேதி நடக்கிறது.
    • 7-ந் தேதி காலை மாநகராட்சி கட்டிடத்தையும், கருணாநிதி சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் தோள் சீலை போராட்ட 200-வது ஆண்டு விழா மாநாடு வருகிற 6-ந்தேதி நடக்கிறது.

    இந்த மாநாடு குறித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் ஒழுகின சேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில்அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பேசினார். முன்னாள் எம்.பி. பெல்லார்மின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்லசாமி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் திருமாவேந்தன், மாத்தூர் ஜெயன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், மண்டல தலைவர் ஜவகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தோள் சீலை போராட்ட 200-வது ஆண்டு மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மேயர் மகேஷ் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    இந்திய துணை கண்டத்தின் ஏற்றத்தாழ்வு மற்றும் அடக்குமுறைக்கு எதிரான சமூகநீதி போராட்டம் கடந்த 1822-ம் ஆண்டு முதல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தொடங்கியது. அதன்பிறகு பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற வீரர்களை போற்றுகிற வகையிலும், அவர்களது பெருமைகளை இளைஞர்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும் தோள் சீலை மாநாடு வருகிற 6-ந் தேதி மாலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடக்கிறது.

    இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். மேலும் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சி சார்பில் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் முத்தரசு மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

    இதைத் தொடர்ந்து மறுநாள் 7-ந் தேதி காலை மாநகராட்சி கட்டிடத்தையும், ஒழுகின சேரியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் கருணாநிதி சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். முன்னதாக 6-ந் தேதி இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஒய்வு எடுக்கிறார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதைத் தொடர்ந்து நாகர்கோவில் நாகராஜா கோவில் மைதானத்தை அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ×